கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/குரங்காட்டம் (ஆ)
16. குரங்காட்டம் (ஆ)
அமைப்பு:
15வது குழு விளையாட்டுப் போலவே இந்தவிளையாட்டையும் வியையாட வேண்டும் ஆனால், இதில் சிறிது மாறுபாடு உண்டு.
ஆடும் முறை: வட்டத்திற்கு உள்ளேயிருந்து கொண்டு, கைமாற்றி எறிகின்ற பந்தைப் பிடிப்பதற்குப் பதிலாக, உள்ளே நிற்பவர், இந்த ஆட்டத்தில் வட்டத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்க வேண்டும்.
வட்டத்தின் உட்புறமாகவே பார்த்துக் கொண்டு, பந்தைக் கை மாற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு, வெளிப் புறத்தில் நிற்கும் ஆட்டக்காரர் எங்கு நிற்கிறார் என்பது தெரியாதாகையால் பந்தைப் பிடிக்கவோ தொடவோ வெளியில் நிற்பவருக்கு வாய்ப்பு இருக்கிறது.
அகவே, பந்தைப் பிடிப்போருக்கு சாதகமான சூழ்நிலையும், பந்தை எறிவோருக்கு கவனமாக ஆடக்கூடிய தன்மையும் அமைந்துவிடுகிறது. மற்றும், விதிகள் எல்லாம் முன் ஆட்டம் போலவேதான்.