கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/குருட்டுப் பூனை

65. குருட்டுப் பூனை


எல்லோரையும் அவரவர் இடத்திலே அமரச் செய்து விட்டு, முதலில் இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவர்களில் ஒருவர் பூனையாகவும், இன்னொருவர் எலியாகவும் இருந்து, ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

விளையாடத் தொடங்குவதற்கு முன், இருவரது கண்களையும் கைக்குட்டையால் கட்டிவிட வேண்டும்.

இப்பொழுது, குருட்டுப் பூனை, குருட்டு எலியைப் பிடிக்கப் போகிறது.

எலியாக இருப்பவர் சப்தம் செய்யாமல் நகரலாம், முடிந்தால் சப்தம் செய்யலாம், சப்தம் செய்யாவிடில், அவரது காலடி ஓசையைக் கேட்டு, பின் தொடர்ந்து சென்றே பூனை பிடிக்க வேண்டும்.

பூனை எலியைப் பிடித்தால், வெற்றிபெற்றது பூனையென்றும், இல்லையென்றால் பூனை தன் தோல்வியை ஒப்புக் கொள்வேண்டும்.

பிறகு - வேறு இருவர் இந்த விளையாட்டைத் தொடர்ந்து ஆட, ஆட்டம் தொடரும்.