கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/தடிதாண்டும் போட்டி

80. தடி தாண்டும் போட்டி

ஆட்டத்திற்குரிய அமைப்பு முன் போலவே தான், நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுக்கள், வரிசை வரிசையாக, ஓடத் தொடங்கும் கோட்டின் முன்னே நிற்க வேண்டும். (படம் 77ல் உள்ளது போல)

ஒவ்வொரு குழுவுக்கும் எதிரே, நேராக, முடிவெல் லைக் கோடும், அங்கு ஒரு அடையாளப் பொருளும் உண்டு, ஒவ்வொரு குழுவின் முதலாட்டக்காரரிடமும் ஒவ்வொரு கைத்தடி இருக்கும். கைத்தடி குறைந்தது 2.அடிநீளமாவது இருக்கவேண்டும்.

‘ஒடுங்கள்’ என்று போட்டியைத் தொடங்கி வைத்ததும் முதலாட்டக்காரர் அடையாளப் பொருள் வரை ஓடி, அதனைச் சுற்றித் திரும்பி வந்து, தன் இடத்திற்கு வந்ததும், தன் பின்னால் நின்றிருந்தவரிடம் தடியின் ஒரு முனையை நீட்ட வேண்டும்.

இருவரும் தடியின் ஆளுக்கொரு முனையைப் பிடித்துக் கொண்டு, தங்கள் குழுவினரின் கால்களுக்குக் கீழே கொண்டு வரவேண்டும்.

உடனே, தங்கள் கால்களில் படாதவாறு, குழுவினர் அனைவரும் தாண்டிக் குதிக்கும்போது, தடியைக் கீழாகக் கொண்டு வந்து, தங்கள் குழுவின் பின் பகுதிக்கு வந்து விட வேண்டும்.

வந்ததும், ஒடிச் சென்ற முதல் ஆட்டக்காரர் அங்க்ே வந்ததும் நின்று விடவேண்டும்.

தடி வைத்திருக்கும் இரண்டாவது ஆட்டக்காரர். அங்கிருந்து அப்படியே நேராக அடையாளப் பொருளிருக்கும் இடத்திற்குத் தடியுடன் ஓடி, சுற்றித் திரும்பி வந்து, மூன்றாம் ஆட்டக்காரரிடம் தடியின் முனையை நீட்ட, இருவரும் தடியின் ஆளுக்கொரு முனையைப் பிடித்துக் கொண்டு முன்போலவே, குழுவினரின் கால்களுக்குக் கீழே கொண்டு வந்து, முன் மாதிரியே பின்னே சென்று அங்கே தங்கிக் கொள்ள, இப்பொழுது மூன்றாம் ஆட்டக்காரர் ஓடிவர இவ்வாறு ஆட்டம் தொடர்கிறது.

குழுவின் கடைசியில் இருப்பவர் தடியை வாங்கிக் கொண்டு, அடையாள எல்லைக்கு ஒடித் திரும்பி வந்து, முன்னால் நின்ற முதலாம் ஆட்டக்காரருடன் சேர்ந்து, தடியைப் பிடித்து, அதனைத் தாண்டச் செய்து, குழுவின் கடைசிக்கு வர, கடைசி ஆட்டக்காரர் அங்கே நின்றுவிட வேண்டும்.

அவரிடமிருந்து தடியை விடுவித்துக் கொண்டு முதல் ஆட்டக்காரர் ஓடிவந்து, தன் குழுவின் முன்னால் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதலில் ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்ற குழுவாகும்.