கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/தொடு பந்தாட்டம்
100. தொடு பந்தாட்டம்
அமைப்பு: இரண்டு குழுக்களாக ஆட்டக்காரர் களைப் பிரிக்க வேண்டும்.
40 அடி விட்டம் இருப்பதுபோல ஒரு வட்டம் ஆட்டத்திற்கு வேண்டும்.
முதலில் ஒரு குழு ஆட்டக்காரர்களை வட்டத்திற்குள்ளே வரச் செய்து, அவர்களுக்கிடையே ஒரு பந்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
அடுத்த குழுவைச் சேர்ந்த இருவர், வட்டத்திற்குள் நுழைய, போட்டி ஆட்டம் தொடர்கிறது.
ஆடும் முறை: வட்டத்திற்குள் உள்ள குழுவினர் தங்களுக்குள்ளேயே அந்தப் பந்தை வழங்கியும் வாங்கியும் விளையாட வேண்டும். உள்ளே நுழைந்த இரண்டு எதிர்க் குழு ஆட்டக்காரர்கள் அவர்கள் விளையாடும் பந்தைத் தொட்டு விடவேண்டும்.
தொட்டுவிட்டால், 1 வெற்றி எண் கிடைக்கும். தொட்டவர் வட்டத்தைவிட்டு வெளியேற, அவரது குழுவைச் சேர்ந்த இன்னொருவர் உள்ளே வருவார் எப்பொழுதும் 2 பேர் உள்ளிருந்து ஆட வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தைத் தொட்டு அக்குழுவினர் முடித்துவிட வேண்டும்.
நேரங் கடந்துவிட்டால் அந்த ஆட்டமுறை முடியும். அடுத்த குழுவினருக்குத் தொடுகின்ற வாய்ப்பு போய் சேரும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக முறை பந்தைத் தொட்டு, அதிக வெற்றி எண்கள் எடுத்திருக்கின்ற குழுவே வெற்றிபெறுகிறது.
குறிப்பு: பந்து வட்டத்தைவிட்டு வெளியே சென்றால், பந்து வெளியே போவதற்குரிய சூழ்நிலையில் அருகிலிருந்த எதிர்க் குழுத் தொடும் ஆட்டக்காரரே ஓடிச்சென்று எடுத்து வந்து தரவேண்டும்.
யாரையும் வலிந்து தள்ளி பந்தை தொடக்கூடாது. ஆடுவோர் அனைவரும் ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து, உற்சாகத்துடன் ஆட வேண்டும்.
நிதமும் கூடி விளையாடி, இதமான வாழ்வில் ஏற்றமுறத் திகழுங்கள், மகிழுங்கள்.