கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நரியும் வாத்துக்களும்

42. நரியும் வாத்துக்களும்

அமைப்பு:

ஆடுவோர்களில் ஒருவரை நரியாகவும், மற்றவர் களை வாத்துக்களாகவும் உருவகப்படுத்தியவாறு இவ்விளையாட்டை ஆடலாம்.

ஆடுவதற்கு அதிகமானவர்களைச் சேர்க்காமல் 10 அல்லது 12 பேர் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளவும்.

வாத்துக்கள் எல்லாம், தாய் வாத்தாக இருப்பவரின் இடுப்பை ஒவ்வொருவரும் பற்றியவராக வரிசையாக நிற்க, கடைசியில் நிற்கும் இளைய வாத்தையே குறிபார்த்து நரி சுற்றிச் சுற்றி வரவேண்டும்.

ஆடும் முறை:

தாய் வாத்துத் தன் குஞ்சினைக் காப்பாற்ற நரியையே பார்த்து தடுக்கும்போது, வரிசையிலுள்ள வாத்துக்களும் இப்படி அப்படியுமாக நகர்ந்து ஓடி, இணைப்பும் பிடிப்பும் தொடர்பும் அறுந்து போகாதவாறு ஓடித் தப்பிக்க வேண்டும்.

நரி கடைசி வாத்தைப் பிடித்து விட்டால் ஆட்டம் முடிவு பெறும்.

பிறகு, குழுவில் உள்ள மூன்று பேர்களைத் தேர்ந்தெடுத்து ஒருவரை நரியாகவும், அடுத்தவரை தாய் வாத்தாகவும், மூன்றாமவரை இளைய வாத்தாகவும் மாற்றி ஆடச் செய்யலாம்.