கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/புதையல்
95. புதையல்
போட்டியில் பங்கு பெறுவோரை, ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் நிறுத்தியிருக்க வேண்டும்.
அவர்களுக்கு எதிரே 30 கெச தூரத்தில் தீக்குச்சிகளை (Matches) நிறையப் போட்டிருக்க வேண்டும்.
விசில் சப்தத்தின் மூலம் அவர்களை ஓடவிட்ட உடனே, தமக்கு எதிரே உள்ள தீக்குச்சிக் குவியலை நோக்கி ஓடி, குனிந்து, கீழே கிடக்கும் தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கிச் சேர்க்கவேண்டும்.
பிறகு விசில் ஒலி கேட்ட உடனேயே, முன்னிருந்த இடத்தை நோக்கி ஓடிவந்துவிட வேண்டும்.
முதலிலே வந்தவர்தான் வெற்றி பெறுவார் என்றாலும், அவர் கொண்டுவந்த தீக்குச்சிகளின் எண்ணிக்கையிலும், மற்றவர்களைவிட அதிகம் எடுத்திருக்கவேண்டும்.
குறிப்பு: தீக்குச்சிகளுக்குப் பதிலாக, குண்டூசி களைக் கூடவைக்கலாம்.