கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/புலிகளும் புள்ளிமானும்

3. புலிகளும் புள்ளிமானும்

அமைப்பு:

ஆட இருக்கின்ற அனைவரும் முன் ஆட்டம் போலவே வட்டமாக நிற்க வேண்டும். வட்ட அமைப்பும் முதல் ஆட்டம் போலவே கைகளைக் கோர்த்து, பிறகு கையை விட்டு நிற்க வேண்டும். அவர்கள் வளைத்துக் கொண்டு வட்டமிட்டிருக்கும் உட்பகுதியில் ஒருவர் மட்டும் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆட்டத்தின் நோக்கம்:

புலிகளின் மத்தியிலே புள்ளிமான் போல, உள்ளே நிற்கும் அவர், ஒடிக்கொண்டிருக்க, வட்டத்தில் நிற்பவர்கள் தங்களிடம் உள்ள பந்தினால், அவரைத் தாக்கும் பணியைச் செய்ய வேண்டும். முழங்கால்களுக்குக் கீழே பந்து பட்டு விட்டால், அவர் ஆட்டமிழக்கின்றார்.

ஆடும் முறை:

முழங்கால்களுக்கு மேலே பந்துபட்டால், அவர் ஆட்டம் இழக்காமல் மீண்டும் விளையாடுவார். முழங்கால்களுக்குக் கீழே பந்து தொட, அவர் ஆட்டமிழக்க, அந்த ஆட்டம் முடிவுபெறுகிறது. மீண்டும் ஒருவர் மானாக துள்ளியோட மற்றவர்கள் புலிகளாக இருந்து விளையாட மீண்டும் ஆட்டம் தொடரும்.