கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பேச்சுப் போட்டி
67. பேச்சுப் போட்டி
மாணவர்கள் பொதுமக்கள் போல் பார்வையாளர் களாக எதிரில் அமர்ந்திருக்க, விளையாட்டை நடத்து வோர் சோதனையை நடத்திக் கொண்டிருக்க, பேச்சுப் போட்டி தொடங்குகிறது.
மாணவர்களில் ஒருவர் பங்கு பெறுகிறார். எந்தத் தலைப்பாக இருந்தாலும் சரி, அவர் இடைவிடாமல், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
கைகால்களை அசைப்பதோ, நடிப்பதோ, பாவனை செய்வதோ கூடாது. அதே சமயத்தில், வாய் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.
இடையிலே யோசிப்பதற்காக நிறுத்தினாலும் சரி, சிரித்தாலும் சரி, அவர் பேசும் வாய்ப்பை இழப்பதுடன், ஆட்டத்தையும் இழந்து விடுகிறார்.
அதிகநேரம் பேசுபவரே வெற்றிபெற்றவராகிறார்.