கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வாத்து நடை
97. வாத்து நடை
முன் ஆட்டம் போல், குழுக்கள் வரிசையாக நிற்கவேண்டும். குழுவின் முன்னோட்டக்காரர் கோட்டிற்குப் பின்னால், இடுப்பின் இருபுறமும் கைகளை ஊன்றிக்கொண்டு குதிகாலில் இடுப்பின் பின் பகுதி (Buttock) இருப்பது போல அமர்ந்து, பாதத்தின் முன் புகுதியால் உட்கார்ந்து தயாராக இருக்க வேண்டும்.
போட்டி தொடங்கியதும், 10 கெச தூரம் உள்ள முடிவெல்லைக் கோட்டைக் கடந்து, உட்கார்ந்த நிலையிலே நடந்து பிறகு வாத்து போல அசைந்து அசைந்து ஆனால் விரைவாக நடந்து தன் இடத்தை அடைந்து, 2ம் வாத்தை அனுப்ப வேண்டும்.
எக் காரணத்தை முன்னிட்டும் இடுப்பைவிட்டுக் கைகளை எடுப்பதோ, நிமிர்ந்து நிற்பதோ கூடாது. முழங்கால்கள் மடிந்திருக்கும் நிலையில்தான் நடக்க வேண்டும்.
முதலில் வருகின்ற குழுவே வெற்றி பெறுகிறது.