சத்திமுத்தப் புலவர் தனிப்பாடல்கள்
பாடல்கள் இரண்டு
பக்கம் 79
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
- நாராய் நாராய் செங்கானாராய்
- பழம்படு பனையின் கிழங்கு பிளந்தென்ன
- பவளக் கூர்வாய்ச் செங்கானாராய்
- நீயுநின் மனைவியுந் தென்றிசைக் குமரியாடி
- வடதிசைக் கேகுவீராயின்
- எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
- நனைசுவர்க் கூரைக் கனைகுரல் பல்லி
- பாடுபார்த் திருக்கும் எம்மனைவியைக் கண்டு
- எங்கோன் மாறன் வழுதி கூடலில்
- ஆடையின்றி வாடையின் மெலிந்து
- கையது கொண்டு மெய்யது பொத்திக்
- காலது கொண்டு மேலது தழீஇப்
- பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
- ஏழையாளனைக் கண்டனம் எனுமே. (1)
- வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
- எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
- குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
- தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே. (2)