சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/003-010


26. மாண்புமிகு அய்யா

கொள்ளையடிக்க கொள்ளையர்கள் ஒரு வீட்டில் நுழைந்தபோது, கொள்ளைக் கும்பலின் தலைவனின் மனத்தைக் குளிர்விக்க, “மேன்மைக்கு உரியவரே, தளபதி அவர்களே, விடுதலை வீரரே “என்றெல்லாம் போற்றித் துதித்தான் வீட்டுக்காரன். ஆனால் கொள்ளையர் தலைவனோ அவற்றுக்குச் சற்றும் மசியவில்லை. சோர்ந்து போன வீட்டுக்காரர், “ஐயா தங்களை நாங்கள் எப்படி அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார். அதற்கு அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் “என்னை நீங்கள் மாண்புமிகு அய்யா” என்று அழையுங்கள் என்றான். ‘ஏன்?’ என்று கேட்டபோது அவன் சொன்னான் “நம் நாட்டில் அரசுத் துறை பொறுப்பு அதிகாரிகள் அவ்வாறு தான் அழைக்கப்படுகிறார்கள்” என்று.

27. ஒரு நீர் முந்திரி மரம்

மலைவாசி ஒருவன் ஏரிகள் நிறைந்த ஏரி வட்டாரத்திற்கு வந்தான். நடந்து வந்த களைப்புத் தீர ஏரிக்கரையில் நின்ற ஒரு மரத்து நிழலின் ஓய்வுக்காக அமர்ந்தான். பக்கத்தில் ஒரு நீர்முந்திரி கிடப்பதைக் கண்டு, அதனையெடுத்து உண்டான். அது மிகவும் அரிய சுவைமிகுந்திருப்பதை உணர்ந்தான். பின்னர் எழுந்து நின்று அந்த மரத்தின் தண்டினையும் கிளைகளையும் உலுக்கினான். ஆனால் ஒன்றும் விழவில்லை. “இத்தனைப் பெரிய மரத்தில் ஒரே ஒரு முந்திரிப் பருப்புதானா?” என்று தனக்குள்ளே வியந்து கேட்டுக் கொண்டான்.

★ குறிப்பு : நீர் முந்திரி என்பது நீருக்குள் படர்ந்து வளரும் ஒருவித முட்கொடி என்று அவன் அறியான். அவன் கரையில் நின்ற மரத்தை முந்திரிமரம் என்று நினைத்துக் கொண்டான்.

28. கடனைத் தவிர்க்க

கடன் வாங்கிய ஒருவன், ஏற்கனவே தனக்குக் கடன் கொடுத்தவனுக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல், மேலும் கடன் வாங்கி அவனை ஏமாற்ற நினைத்தான். கடன் கொடுத்தவனிடம் அவன் “ஐயா, தற்போது நான் பணக்கார விதவை ஒருத்தியை மணமுடிக்கப் போகிறேன். அவளுக்குத் திருமணப் பரிசு கொடுக்க என்னிடம் தற்போது போதிய பணம் இல்லை. தாங்கள் அந்தப் பணத்தைத் தந்து உதவினால், எங்கள் திருமணம் நடந்து முடிந்ததும் உங்கள் கடனைமட்டும் திருப்பித்தராமல், மேற்கொண்டும் நான் தங்களுக்குக் கடன் தந்து உதவுவேன்” என்று ஆசைமொழிகளைச் சொன்னான். அவனது இந்த சொற்களை நம்பிய அவனும் கடன் கொடுத்தான்.

கடனைப் பெற்றுக் கொண்ட அந்த மனிதன் அதில் ஒரு பகுதியைக் கொண்டு தன் வீட்டைப் புதுபித்து,

வண்ணம் தீட்டினான். கடன் கொடுத்தவன் திருமணத்திற்காக ஏற்பாடுகள் நடக்கின்றன என்று நம்பும்படிச் செய்யவே இவ்வாறு செய்தான்.

சில நாள்களுக்குப்பின் அந்த வீட்டின் வழியாகக் கடன் கொடுத்தவன் சென்றான். பின் அவ் வீட்டு வாசலில் நின்று கடன் வாங்கியவன் இருக்கிறானா? என்று விசாரித்தான். வீட்டின் உள்ளிருந்து “எனது கணவர் வெளியில் சென்றிருக்கிறார்” என்று பெண் குரல் கேட்டது. இவ்வாறே கடன் கொடுத்தவன் பல நாள் கடன் வாங்கியவனைத் தேடிச் சென்றான். ஒவ்வொரு முறையும் அதே பெண்குரல் வழக்கமான பதிலையே தந்தது. சந்தேகமுன்ற கடன் கொடுத்தவன் அந்த வீட்டின் கண்ணாடிப் பலகணி வழியாக உள்ளே எட்டிப்பார்த்தான். பெண்கள் யாரும் உள்ளேயில்லை. கடன் வாங்கியவனே தன் விரல்களால் மூக்கைப் பொத்திக் கொண்டு பெண் குரலில் அந்த விடையைச் சொல்வதைக் கண்டான். சினம் கொண்ட அவன் பலகணியை உடைத்து உள்ளே சென்று கடன் வாங்கியவனை நையப் புடைத்தான். அப்போதும் அவன் அடியை வாங்கிய வண்ணம் “என் கணவர் கடன் வாங்கியதற்கு என்னை அடிக்கிறீர்களே?” என்று மூக்கைப் பொத்தியவாறு பெண் குரலில் மெல்லக் கேட்டான்.

29. பரபரப்பாக

சிற்றுண்டிச் சாலையை அடைந்ததுமே, “எனக்கு நான் கேட்ட பத்து முட்டை வறுவலை ஏன் இதுவரையிலும் தரவில்லை” என்று கேட்டான் ஒருவன். கடைக்காரனோ அவை ஓர் ஏனத்தில் கொண்டு வந்து கொடுத்து “விரைந்து சாப்பிடு. ஏனத்தை நான் கழுவிவைக்க வேண்டும். விரைந்து; விரைந்து என்று துரிதப்படுத்தினான். இதனைக் கேட்டுச் சினத்தோடு அந்த மனிதன் வீடு திரும்பினான். நடந்ததைத் தன் மனைவியிடம் “நான் சினத்தில் தலைகீழாய்க் கவிழ்த்துவிட்டேன்; மிகவும் வேதனைக்குரியது அவன் செயல்” என்றான். இதனைக் கேட்ட அவன் மனைவி தன் கைப் பையை எடுத்துக் கொண்டு, “நன்று, நீங்கள் சாகப்போவது உண்மையானால் நான் மறுமணம் செய்து கொள்கிறேன்” என்றாள்.

இரண்டாவது கணவனுடன் ஓர் இரவு கழித்தப்பின், அவன் அவளை அனுப்பி விட்டான். ஏன் என்னை அனுப்புகிறாய் என்று அவள் அவனை கேட்டபோது அவன் சொன்னான் “நீ இப்போதே ஒரு மகனை ஈன்றெடுப்பாய் என்று எதிர்பார்த்தேன்” என்று.

30. என்னை ஆய்ந்து கொள்ளுங்கள்

மாவட்ட பொறுப்பு அதிகாரியிடம் தன் மாடு திருடு போய்விட்டதாக முறையீடு செய்தான் ஒரு மனிதன். அதிகாரி கேட்டார் “எப்போது?” என்று. “நாளை” என்றான் அந்த மனிதன். அதிகாரி அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார். இதனைக் கவனித்த மாவட்ட அதிகாரி சட்ட அதிகாரியைப் பார்த்து “நீ தான் திருடியுள்ளாய். அப்படித்தானே? அதை எங்கே மறைந்து வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்.


 அதற்கு அந்தச் சட்ட அதிகாரி தன் மேலாடையை உதறிக் காண்பித்து ‘என்னை வேண்டுமானால் சோதித்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

31. சிவப்புக்கால் சட்டை

ஆய்வுக்காகப் பயணம் மேற்கொண்டபோது அதிகாரி ஒருவர் வீதியில் ஓர் இளைஞன் மிகவும் பொறுமையாக நடந்து போய் கொண்டிருப்பதைக் கண்டார். திடீரென்று காற்றுப் பலமாக வீசியதால் அந்த இளைஞனின் மேலாடை மேலெழுந்து கீழே அவன் அணிந்திருந்த சிவப்பு வண்ண பட்டுக் கால்சட்டை அதிகாரியின் கண்ணில் பட்டுவிட்டது. விலை உயர்ந்த பட்டினைக் கால்சட்டையாக அணிந்து

ஊதாரித்தனமாகப் பணத்தைச் செலவிட்டதால் அதிகாரி அவனுக்குப் பத்துச் சவுக்கடித் தண்டனை வழங்கினார். ஐந்து அடிகள் விழுந்ததுமே அந்த இளைஞன் தான் தன் இடுப்பிற்கு மேலே உள்ளாடையாக அணிந்திருப்பது எளிய மட்டமான துணியாதலால் ஐந்து அடிகள் போதுமானது என்று சொல்லி மேற்கொண்டு அடிப்பதை அவ் இளைஞன் எதிர்த்தான்.

32. சாப்பாட்டு ஆசை

‘பசிக்கிறது’ என்று அழுதுகொண்டே தன் தந்தையிடம் முறையிட்டது ஒரு குழந்தை. மகனின் முதுகை வருடியவாறு தந்தை “மகனே, உண்பதற்கு உனக்கு என்ன வேண்டும். கடல் அரசன் வருணனின் ஈரல் வேண்டுமாயினும் நீள்விலங்கும் பறவையின் விலாக்கறி வேண்டுமாயினும், எது வேண்டுமாயினும் சொல்; அதை உனக்கு நான் தருவேன்” என்றான். “எனக்கு எளிய சாப்பாடு போதும்” என்று கேட்டான் மகன். “மடையனே” கத்தினான் தந்தை “எப்போதும் நீ, எது நம்மிடம் இல்லையோ அதைத்தான் கேட்கிறாய்” என்று சினந்து கொண்டான் தந்தை.

33. கடினமானது எது

உலகத்தில் கடினமான பொருள் எது என்பது பற்றி இரண்டு மனிதர்கள் தருக்கித்துக் கொண்டிருந்தனர். இரும்புதான் கடினமானது என்றான் ஒருவன். “இல்லை, இரும்பு நெருப்பில் உருகிவிடும். எனவே அது கடினமானது அன்று” என்று மறுத்தான் மற்றவன். “அப்படியானால் கடினமானதுதான் எது?” என்றான் முதலாமானவன். “மனிதனின் தாடிதான்” என்றான் இரண்டாவது பேர்வழி. அவன் தொடர்ந்தான் "ஏனெனில் எவ்வளவு தான் முகத்தின் தோல் கடினமாக இருந்தாலும் அதில் தாடி முளைத்து விடுகிறதே” எனறான்.

குறிப்பு : சீன நாட்டில் தன்மான உணர்வற்றவனை முகம் தடித்தவன் என்று அழைப்பதுண்டு. நம் நாட்டில் கூட சூடுசொரணையற்றவனை தடித்த தோலன் என்பர்.

34. வெறும் காக்காப் பொன்

வைக்கோற் துரும்பினைக் காக்காப் பொன்னென்று விற்றுப் பணம் சேர்த்தான் முட்டாள் ஒரு காகிதப்பொன்வணிகன். அவனுடைய முட்டாள் மகனோ அவனுடைய இந்தத் தொழில் கமுக்கத்தைச் சிலரிடம் சொல்லி வந்தான். இதையறிந்த தந்தை மகனிடம் “யாராவது, எப்பொழுதாவது இதுபற்றிக் கேட்டால் இது காக்காப்பொன் என்று மட்டும் சொல்; வேறு எதுவும் சொல்லாதே” என்று அறிவுரை வழங்கினான்.

ஒரு நாள் அதிகாலையில் தந்தை எழுந்து அவருடைய நண்பர் ஒருவருடன் வெளியில் சென்றார். வைக்கோற் துரும்பொன்று தந்தையின் தாடியில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட மகன் “அப்பா, அப்பா உமது தாடியில் ஒரு காக்காப் பொன்” என்று வியப்பில் கூவினான்.



35. பொய்யரசர்

திருமணம் ஒன்றினால் இரண்டு குடும்பங்கள் இணைக்கப்பட்டன. மணமகனின் தந்தை பெரும் செல்வர். அவர்(தன் சம்பந்தி) மணமகளின் தந்தையை வீட்டிற்கழைத்துத் தன் வீட்டிலுள்ள விலையுயர்ந்தப் பொருள்களையெல்லாம் காட்டிப் பெருமை பாராட்டிக் கொண்டார். பின்னர் “இதைப் போன்ற விலைமதிக்க முடியாத பொருள்கள் ஏதேனும் உங்களிடம் உண்டா?” என்று கேட்டார். “உங்களிடத்தில் உயிரற்றப் பொருள்கள் தான் இருக்கின்றன. இங்கு நான் வியப்படையும்படியாக ஒன்றுமில்லை. எங்கள் வீட்டில் விலையேறப் பெற்றதும் உயிருள்ளதுமான இரண்டு அற்புதமான கருவூலங்கள்

வைத்திருக்கிறோம்” என்றார் மணமகளின் தந்தை. “அவை யாவை?” என்று வினவினார் மணமகளின் தந்தை.

“ஒரு தெய்வீக கொக்கும், மிக வியக்கத்தக்க கடற் குதிரையும்” என்று மறுமொழிப் பகர்ந்தார் மணப் பெண்ணின் தந்தை. “எனக்கு அவற்றை ஒரு முறை காட்டுங்கள்” என வேண்டினார் பிள்ளையின் தந்தை. பெண்ணின் தந்தை நாள் ஒன்றைக் குறித்துப் பின் விடைபெற்றுச் சென்றார்.

வீட்டையடைந்து பெண்ணின் தந்தை மிகவும் சோர்ந்து காணப்பட்டார். வாடியத் தந்தையிடம் மகன் விளக்கம் கேட்டார். தந்தை சொன்னார் “நேற்று நான் நம் பெண்ணின் வீட்டாரிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன்.

நம்மை அவர்கள் உயர்வாக எண்ண வேண்டும் என்ற நோக்கத்தில். நம்மிடம் தெய்வீகக் கொக்கு ஒன்றும், கடற் குதிரையொன்றும் இருப்பதாகச் சொல்லிவிட்டேன். அவர்களும் அவற்றைக் காண வரவிருக்கிறார்கள். என்ன செய்வதென்றே தோன்றவில்லை” என்று “கவலையை விடுங்கள் நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்றான் மகன்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. பிள்ளையின் தந்தையும் வந்தார். பெண்ணின் தந்தையை அரசர் உடையை அணியச் செய்து, தலையில் மணி மகுடத்துடனும், கையில் வாளுடனும், கூடத்தின் நடுவில் ஒரு மேடையமைத்து அதில் அமரச் செய்தான் அவரின் மகன். “உங்கள் புகழ்மிக்க தந்தை யெங்கே?” என்றார் ஆவலுடன் பணக்கார மாமனார். “அப்பா அவசர அலுவல் காரணமாக எதிர்பாரத நிலையில் வெளியே சென்றுள்ளார் என்றான் மருமகன். “உங்கள் தந்தை தெய்வீகக் கொக்கினையும், கடற்குதிரையையும் எனக்குக் காட்டுவதாகச் சொல்லி என்னை அழைத்தார். அவற்றைப் பார்த்துவிட்டுச் செல்லத்தான் வந்தேன்” என்றார் அவர். மருமகன் சொன்னான் “அடடா, போகூழ் நிலையில் இரண்டுமே இப்போது இங்கு இல்லையே. எங்கள் கடற்குதிரையை இப்போது தான் கடல் அரசன் பவனி வர இரவல் வாங்கிச் சென்றான். விண்ணகத்தில் நடக்கும் விருந்தொன்றில் கலந்து கொள்ள கொக்கினை இரவலாக அழைத்துச் சென்றுள்ளது தேவதை” என்று. இதனைக் கேட்டு வியப்பு இன்னும் அதிகமாகக் கூடத்தின் இடையில் அரச பாவனையில் வீற்றிருக்கும் பெண்ணின் தந்தையைச் சுட்டிக் காட்டி “இதன் தெய்வீகத் தன்மையென்ன?” என்றார் பிள்ளையின் தந்தை. மருமகன் “அதுவா, இவர் எங்கள் உறவினர் வணக்கத்திற்குரிய பொய்யரசர்” என்றான். வந்தவர் திகைத்து நின்றார். 

36. மனிதனின் வலிமையின்மை

தனக்குப் பொருத்தமில்லாத கணவனுக்கு தக்கப் பயிற்சியளித்து தாய்வீடு அழைத்து வந்தாள் பெண்ணொருத்தி. “என் பெற்றோர்களிடம் இரண்டு சிறந்த ஓவியங்கள் உள்ளன. அவை எங்கள் குடும்பத்தின் பழங்காலச் சொத்து. அந்த ஓவியங்கள் ஒன்றில் காட்டோடை ஒன்றின் அருகில் ‘சேரர்’ காலத்துக் குதிரை ஒன்று நின்று கொண்டிருப்பதைப் போலவும், மற்றொன்றில் அழகுணி மரங்கள் நிறைந்த வனாந்தரத்தில் ‘சோழர் காலத்து’ ஒன்று நின்று கொண்டிருப்-

பது போலவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று அவள் தன் கணவனுக்குக் கற்பித்தாள். வீட்டை அடைந்ததும் மாமனார் மருமகனிடம் அவ் இரு ஓவியங்களையும் காட்டி, அவை என்ன? என்று கேட்டான். மனைவி ஏற்கனவே கற்பித்த வண்ணம் விடை சொன்னான். மருமகனின் விடையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார் மாமனார். சற்று நேரத்துக்குப் பின் பதினெட்டு அறிஞர்களின் உருவங்கள் தீட்டப்பட்ட ஓவியத் திரையொன்றைக் காட்டி மருமகனிடம் அவ்வோவியம் பற்றிக் கேட்டார். மருமகனோ தன் மனைவி ஏற்கனவே கற்றுக் கொடுத்த முன்பு சொன்ன பதிலையே கிளிப்பிள்ளைபோல் சொன்னான்.

இதனைக் கேட்டு அங்குக் குழுமியிருந்தோர் நகைத்தனர். மாமனாரோ மருகமணிடம் “உனக்கு மாட்டினையும், குதிரையினையும் தெரிகிறது. ஆனால் மனிதர்களைத்தான் அடையாளம் காணத் தெரியவில்லை” என்றார்.

37. காலமுள்ளபோதே நற்பணி

வாள் கொண்டு இரு கூறாய் உடலை வெட்டி நெருப்பில் வீசப்படும் கொடிய நரகத் தண்டனையிலிருந்து ஒருவன் விடுபட, புத்தரைத் தெய்வமாகத் தொழுது, பெளத்த மடங்களுக்கு நன்கொடைகள் அளித்து, பெளத்த துறவிகளுக்குத் தருமம் தந்து அவர்களைப் போற்றி வருதல் வேண்டும் என்று போதித்து வந்தார் பெளத்த துறவி ஒருவர்.

விரைவிலேயே அந்த பெளத்த துறவியும்; அவரையும் அவருடைய போதனைகளையும் போற்றிக் காப்பாற்றி வந்த அவருடைய தலையாயத் தொண்டனும் மடிந்தனர். உலகில் தான் செய்த பாவங்களுக்காக உடலை இரு கூறாக்க நரகத்தின் பலிபீடத்துக்குக் கொண்டு வரப்பட்டார் துறவி. இதனைக் கண்டு அவரது தொண்டன் ஓடிச்சென்று துறவியிடம் விளக்கம் கேட்டார். விளக்கம் தந்தார் துறவி. "உனக்குப் புரியாது மண்ணுலகில் பெளத்த மடங்களும், துறவிகளும் நாளுக்கு நாள் குறைந்து வருவதை உணர்ந்த, நரக உலகின் அதிபதி, இறந்துபோன ஒவ்வொரு துறவியையும்

இரண்டாக வெட்டி, துறவிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்க ஆசை கொண்டு என்னை இவ்வாறு இரண்டாகப் பிளக்கப் போகிறார் என்றார். துறவி விளக்கம் கேட்டும், அவர் வெட்டப்படுவது கண்டும் விழி பிதுங்க வியப்புடன் நின்றார் தொண்டர். 

38. மனைவிக்குப் பயந்த மாவட்ட நீதிபதி

மனைவிக்கு அஞ்சிய மாவட்ட நீதிபதி ஒருவர் இருந்தார். ஒருநாள் தனது வீட்டின் மதிற்சுவருக்கு வெளியே யாரோ சிலர் சண்டையிட்டும் இறைச்சல் கேட்டது. உடனே தன் ஏவலனைக் காரணம் கண்டுவர அனுப்பினார் நீதிபதி. ஏவலன் திரும்பி வந்து, “நமது காவலர் அறையின் முன் ஒரு கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மனைவி கணவனை அடித்துக் கொண்டிருக்கிறாள்”


என்றான் நீதிபதி. அதுகேட்டு பற்களை ‘நறநற’வென்று சினத்தில் கடித்தார். நான் மட்டும் அவனிடத்தில் இருந்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா?...என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய மனைவியின் தலை தெரிந்தது. மனைவியின் தலை தெரிந்ததும் அச்சத்தில் நீதிபதி “உடனே நான் முழங்காற் படியிட்டுக் கொடுக்கின்ற அடி உதைகளை ஆடவன் போல் அடக்கத்தோடு பெற்றுக் கொள்வேன்” என்றார்.

39. விலைமதிக்க முடியாத சரக்கு

தந்தையும் மகனும் மது நிறைந்த ஒரு பானையைத் தூக்கிக் கொண்டு வந்தனர். வழியில் அடி பிறண்டதால், (கால் தடுமாறியதால்) பானை கீழே விழுந்து நொறுங்கி, மதுவெல்லாம் சிந்தியது. உடனே மகன் தரையில் மண்டியிட்டு சிந்திய மதுவை எவ்வளவு விரைவாகக் குடிக்க முடியுமோ

அவ்வளவு விரைவாகக் குடித்தான். சற்று நேரத்திற்குப் பின் தலைதூக்கித் தந்தையைப் பார்த்து “நீங்கள் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாராவது வந்து இந்திய மதுவை கிண்ணங்களில் வழித்தெடுத்துச் சென்றுவிடுவர்” என்றான்.

40. அடையாளம் காணமுடியாது

அண்ணாமலையான் உண்பதில் ஆர்வமிக்கவன். அவன் ஒவ்வொரு விருந்தின் போதும் இடைவெளியின்றி

தொடர்ந்து உண்பது பழக்கம். ஒருநாள் ஒரு விருந்தின் போது எதிரேயிருந்த விருந்தினர்களில் ஒருவரை நோக்கி, “இப்படிப்பட்ட விருந்துவொன்றில் முன்னமே உங்களை நான் பார்த்தது போல் தோன்றுகிறதோ” என்றான். “இல்லை; இல்லை நீங்கள் வேறு யாரையோ பார்த்துவிட்டு நான் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றான் அந்த மற்ற விருந்தினன்.

அடுத்து வேறு வகை உணவுகள் பரிமாறப்பட்ட போது, மீண்டும் அந்த அண்ணாமலை உணவுண்ண பயன்படுத்தப்படும் கரண்டிகளை இங்குமங்கும் விரைவாக அசைத்து உண்ணத் தொடங்கினான். கவிழ்ந்த தலை நிமிராமல் அவன் தொடர்ந்து உண்பதைக் கண்ட மற்றொரு

விருந்தினன் ஆமாம், நாம் முன்பே ஒரு முறை சந்தித்திருக்கிறோம். உண்மையென்னவெனில் அந்த விருந்தின்போது நீங்கள் எதிரில் இருப்பவர்களை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் உணவு வகைகளில் வைத்த கண் வாங்காமல் குனிந்த வண்ணம் சாப்பிட்டதால், உங்கள் திருமுகத்தை என்னால் காணமுடியாமல் போய்விட்டது. மன்னிக்க வேண்டும்” என்று மறுமொழி பகர்ந்தான். அந்த மற்றுமொரு விருந்தினன்.