திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/13.அடக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 31:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உயிர் என்பது சாதிஒருமை. அஃது ஈண்டு மக்களுயிர்மேல் நின்றது; அறிந்தடங்கிப் பயன் கொள்வது அதுவேயாகலின்.
 
==திருக்குறள் 123 (செறிவறிந்து)==
 
;செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
;தாற்றி னடங்கப் பெறின்
 
::செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
::ஆற்றின் அடங்கப் பெறின்
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்= அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப்பெறின்;
:செறிவு அறிந்து சீர்மை பயக்கும்= அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: இல்வாழ்வானுக்கு அடங்கு நெறியாவது, மெய்ம்முதன் மூன்றும் தன்வயத்தனாதல்.
 
 
==திருக்குறள் 124 (நிலையிற்)==
 
;நிலையிற் றிரியாது அடங்கியான றோற்ற
;மலையினு மாணப் பெரிது
 
::நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
::மலையினும் மாணப் பெரிது.
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்= இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி;
:மலையினும் மாணப் பெரிது= மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'திரியாது அடங்குதல்' பொறிகளாற் புலன்களை நுகராநின்றே அடங்குதல். மலை ஆகுபெயர்.
 
 
==திருக்குறள் 125 (எல்லார்க்கும்)==
 
;எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
;செல்வர்க்கே செல்வந் தகைத்து
 
::எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
::செல்வர்க்கே செல்வம் தகைத்து
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): பணிதல் எல்லார்க்கும் நன்றாம்= பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே யெனினும்;
:அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து= அவ்வெல்லாருள்ளுஞ் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வமாஞ்சிறப்பினையுடைத்து.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியுங் குடிப்பிறப்பும் உடையார், அஃதின்றி அவை தம்மானே அடங்கியவழி அவ் அடக்கம் சிறந்து காட்டாதாகலின், 'செல்வர்க்கே செல்வந் தகைத்து' என்றார்.
:செல்வத்தகைத்து என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு.
:இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.
 
==திருக்குறள் 126 (ஒருமையுள்)==
 
;ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
;னெழுமையு மேமாப் புடைத்து
 
::ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
:: எழுமையும் ஏமாப்பு உடைத்து
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின்= ஆமைபோல ஒருவன் ஒருபிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லனாயின்;
:எழுமையும் ஏமாப்பு உடைத்து= அவ்வன்மை அவனுக்கு எழுபிற்ப்பின்கண்ணும் அரணாதலை உடைத்து.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறுபோல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்கவேண்டும் என்பார் 'ஆமைபோல்` என்றார். ஒருமைக்கட் செய்த வினையின்பயன் எழுமையுந் தொடருமென்பது இதனான் அறிக.
;இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.