திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
"===அதிகாரம் 22 ஒப்புரவறிதல்==..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
;அதிகார முன்னுரை: அஃதாவது, உலகநடையினை அறிந்து செய்தல். உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந்தன்மைத்து ஆகலின், ஒப்புரவு அறிதல் என்றார். மேல் மனமொழிமெய்களால் தவிரத்தகுவன கூறினார். இனிச் செய்யத்தகுவனவற்றுள் எஞ்சிநின்றன கூறுகின்றார் ஆகலின், இது தீவினையச்சத்தின்பின் வைக்கப்பட்டது.
 
 
==திருக்குறள் 211 (கைம்மாறு)==
 
;கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
;டென்னாற்றுங் கொல்லோ வுலகு.
 
::கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரி மாட்டு
::என் ஆற்றும் கொல்லோ உலகு.
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): மாரிமாட்டு உலகு என் ஆற்றும்= தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யாநின்றன?
:கடப்பாடு கைம்மாறு வேண்டா= ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவனவல்ல.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: என்னாற்றும் என்ற வினா யாதும் ஆற்றா என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிருந் தன்மைய அல்ல என்பது கடப்பாடு என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.
 
 
==திருக்குறள் 212 (தாளாற்றித்)==