திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/35.துறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
";பார்க்க: :[[திருக்குறள் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
=துறவறவியல்=
 
==பரிமேலழகர் உரை==
 
==அதிகாரம் 35.துறவு==
 
 
;அதிகாரமுன்னுரை: அஃதாவது, புறமாகிய செல்வத்தின் கணணும் அகமாகிய யாக்கையின்கணணும் உளதாம் பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி விடுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.
 
 
;குறள்: 341 (யாதனின்)==
 
 
;யாதனின் யாதனி னீங்கியா னோத
;லதனி னதனி னிலன் (01)
 
 
 
:பதப்பிரிப்பு: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
:அதனின் அதனின் இலன்.
 
 
;இதன்பொருள்: யாதனின் யாதனின் நீங்கியான்= ஒருவன் யாதொருபொருளின் யாதொருபொருளின் நீங்கினான்; அதனின் அதனின் நோதல் இலன்= அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.
 
 
;உரைவிளக்கம்: அடுக்குக்கள் பன்மை குறித்து நின்றன. நீங்குதல்= துறத்தல். ஈண்டுத் 'துன்பம்' என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கட் பாவத்தான் வருவனவுமாகிய இருவகைத் துன்பங்களையுமாம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலை. அஃதன்றி ஒரோவொன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.
 
 
 
;குறள்:342 (வேண்டின் உண்டாக)==
 
 
;வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி
;னீண்டியற் பால பல (02)
 
 
 
;பதப்பிரிப்பு: வேண்டின் உண்டாகத் துறக்க துறந்த பின்
:ஈண்டு இயற்பால பல.
 
 
 
;இதன்பொருள்: துறந்தபின் ஈண்டு இயற்பால பல= எல்லாப் பொருள்களையும் துறந்தால் ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல; வேண்டின் உண்டாகத் துறக்க= அவ்வின்பங்களைவேண்டின் அவற்றைக் காலம் பெறத் துறக்க.
 
 
;உரைவிளக்கம்: அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனமொழிமெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறி்க்கட் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். 'இன்பங்கள்' என்பதும் 'காலம் என்பதும்' வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
;பார்க்க: