திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary

=== குறள் 454 (மனத்துளது) ===

:மனத்துளது போலக் காட்டி யொருவற் மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு
:கினத்துள தாகு மறிவு (04) இனத்து உளது ஆகும் அறிவு.

;இதன்பொருள்: அறிவு= அவ்விசேட உணர்வு; ஒருவற்கு மனத்து உளது போலக்காட்டி= ஒருவற்கு மனத்தி்ன்கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும்= அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம்.

;விளக்கம்: மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும்,பின் நோக்கியவழிப் பயின்ற இனத்து உளதாயும் இருத்தலின், காட்டி என இறந்தகாலத்தால் கூறினார். விசேட உணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றே உளதாவது என்பார் நோக்கி, ஆண்டுப்புலப்படும் துணையே உள்ளது, அதற்கு மூலம் இன்னதென்பது இதனால் கூறப்பட்டது.

=== குறள் 455 (மனந்தூய்மை) ===

:மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு =மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
:மினந்தூய்மை தூவா வரும் (05).= இனம் தூய்மை தூவா வரும்.

;இதன்பொருள்: மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்= அவ்விசேட உணர்வு புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையுமாகிய இரண்டும்;
:இனம் தூய்மை தூவா வரும்= ஒருவற்கு இனம் தூயனாதல்தன்மை பற்றுக்கோடாக உளவாம்.

;விளக்கம்: மனம் தூயனாதலாவது, விசேடஉணர்வு புலப்படுமாறு இயற்கையாய் அறியாமையி்ன் நீங்குதல். செய் வினை தூயனாதலாவது, மொழி மெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல், "தூவறத் துறந்தாரை" என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சிவயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேடஉணர்வு புலப்பட்டு அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என இதனால் இனத்துள்ளவாமாறு கூறப்ப்டது.

=== குறள் 456 (மனந்தூயார்க்கு) ===

;மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு =மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
;கில்லைநன் றாகா வினை (06) =இல்லை நன்று ஆகா வினை.:

:இதன்பொருள்: மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்= மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்;
: இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை= இனம் தூயர் ஆயினார்க்கு நன்றாகாத வினை யாதொன்றும் இல்லை.

;விளக்கம்: காரியம் காரணத்தின் வேறுபடாமையின் எச்ச நன்றாகும் என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செயல்படுதலின் எல்லாவினையும் நல்லவாம் என்றும் கூறினார்.

=== குறள் 457 (மனநலமன்னு) ===

;மனநல மன்னுயிர்க் காக்க மினநல = மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இனநலம்
;மெல்லாப் புகழுந் தரும் (07). = எல்லாப் புகழும் தரும்.

;இதன்பொருள்: மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் தரும்= நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்;
:இனநலம் எல்லாப் புகழும் தரும்= இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.

;விளக்கம்: 'மன்னுயிர்' என்றது, ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. மனம் நன்றாதல்தானே அறமாகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும், புகழ்கொடுத்தற்குரிய நல்லோர் தாமே இனமாகலின் 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார், மேல் மனநன்மை, இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு.
:அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின் நன்மை வேண்டா என்பாரை நோக்கி, அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும் என அவர்க்கும் அதுவேண்டும் என்பது இவ்விரண்டுபாட்டானும் கூறப்பட்டது.

=== குறள் 458 (மனநலநன்கு) ===

;மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் = மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
;கினநல மேமாப் புடைத்து (08) = இன நலம் ஏமாப்பு உடைத்து.

;இதன்பொருள்: மன நலம் நன்கு உடையராயினும்= மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
:சான்றோர்க்கு இன நலம் ஏமாப்பு உடைத்து= அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலிமையாதலை உடைத்து.

;விளக்கம்: 'நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந்நல்வினை உள்வழியும், மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்புடைத்து ஆயிற்று.

=== குறள் 459 (மனநலத்தின்) ===

;மனநலத்தி னாகு மறுமைமற் றஃது = மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃது
;மினநலத்தி னேமாப் புடைத்து (09). =இன நலத்தின் ஏமாப்பு உடைத்து.

;இதன்பொருள்: மன நலத்தின் மறுமை ஆகும்= ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;
:மற்று அஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து= அதற்கு அச் சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து.

;விளக்கம்: 'மனநலத்தின் ஆகும் மறுமை' என்றது, மறுமை பயப்பது மனநன்மைதானே பிறிதொன்றன்று என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. 'மற்று' வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும், நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச்செயயுமாறு கூறப்பட்டது.
:இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.

=== குறள் 460 (நல்லினத்தி) ===

;நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி = நல் இனத்தின் ஊங்குத் துணை இல்லை தீ இனத்தின்
;னல்லற் படுப்பதூஉ மில் (10). = அல்லல் படுப்பதூஉம் இல்.

;இதன்பொருள்: நல்இனத்தின் ஊங்குத் துணையும் இல்லை= ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை;
:தீயினத்தின் ஊங்கு அல்லல் படுப்பதூஉம் இல்= தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.

;விளக்கம்: ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயருறாமல் காத்தலின் அதனைத் துணை என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் பகையென்றும் கீறினார். அல்லற்படுப்பது என்பது ஏதுப்பெயர்.
:இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.

17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/14529" இருந்து மீள்விக்கப்பட்டது