உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''அரிஅரவேலன்''' சமூக - கல்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:27, 19 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்


அரிஅரவேலன் சமூக - கல்விச் செயல்பாட்டாளர். சின்னமனூரில் பிறந்த இவர் தற்பொழுது மதுரையில் வாழ்கிறார். குழந்தைகளுக்கும் இளையோருக்குமான வாழ்க்கைத் திறன் கல்விக்குரிய கலைத்திட்டத்தை வகுத்து அதனை காணொளிப்படங்களாக உருவாக்கும் திட்டத்தில் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். விக்கிப்பிடீயாவின் பயனாளியாக இருந்த இவர், வே. தில்லைநாயகம் என்னும் கட்டுரையில் இருந்த பொருட்பிழைகளை 23.12.2011 ஆம் நாள் திருத்தத் தொடங்கினார். 11.6.2012ஆம் நாள் எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சியைப் பற்றி கட்டுரையின் வழியாக விக்கிப்பீடியா பங்களிப்பாளராக மாறினார். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ்நூல்கள் ஆகிய பிரிவுகளில் பங்களித்து வருகிறார்.

நூலகவியல், சமூகவியல், இலக்கியம் ஆகியவற்றை மொழிபெயர்த்தல் இவரது மகிழ்வுவினைகளில் ஒன்று. அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட சமூகவியல் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்னும் நூலாக ஏக்தாபரிசத் என்னும் நிலவுரிமைக்கான காந்திய இயக்கம் வெளியிட்டு இருக்கிறது.

இவர் உருவாக்கிய வாழ்க்கைத்திறன் கல்விப் பாடங்களும் பாடல்களும் ஆங்கிலம், இந்தி, குசராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:அரிஅரவேலன்&oldid=19313" இலிருந்து மீள்விக்கப்பட்டது