விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், அரிஅரவேலன்!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:21, 16 அக்டோபர் 2013 (UTC)

உங்களுடைய வாக்கை பதியுங்கள்தொகு

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:22, 16 அக்டோபர் 2013 (UTC)

பகுப்புகள் குறித்துதொகு

ரங்கோன் ராதா பக்கத்தில் புதிதாக [[புதினங்கள்]] என்ற பகுப்பை இணைத்துள்ளீர்கள்; இது தேவையற்றது. ஏற்கனவே, [[பகுப்பு:அண்ணாதுரையின்_புதினங்கள்]] என்ற பகுப்பு உள்ளது. அப்பக்கத்தினை நீங்கள் பார்த்தால், அண்ணாதுரை மற்றும் புதினங்கள் என்ற பகுப்புகள் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே இது தேவையில்லை. நீங்கள் செய்த மாற்றத்தினை மீள்விக்கிறேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:06, 18 அக்டோபர் 2013 (UTC)

நூலகத்தில் நூல்களை நூலின் தலைப்பு (Title) நூலின் பொருள்/வகை (Subject), நூலாசிரியரின் பெயர் (Author's Name) என மூன்று வகையில் பிரிப்பர். அவ்வகையிலேயே ரங்கோன் ராதா என்னும் நூலை நூலின் பொருள்/வகை என்னும் அடிப்படையில் புதினங்கள் பக்கத்தில் பதிந்தேன். ரங்கோன்ராதா என்னும் புதினத்தை எழுதியவர் யார் எனத் தெரியாதவர், அதனைப் புதினங்கள் என்னும் பக்கத்தில்தான் தேடுவார்; அண்ணாவின் புதினங்கள் என்னும் பக்கத்தில் தேடமாட்டார். எனவே கல்கி. மு.வ. எழுதிய புதினங்களின் பெயர்கள் புதினங்கள் பக்கத்தில் இடம்பெற்றிருப்பதைப் போலவே, ரங்கோன்ராதா என்னும் புதினத்தின் பெயரும் அப்பக்கத்தில் இடம்பெற வேண்டும். நன்றி--அரிஅரவேலன் (பேச்சு) 12:09, 18 அக்டோபர் 2013 (UTC)
அதிகமான நூல்கள், நூலகத்தில் வரும்பொழுது இன்னும் சிக்கல் அதிகமாகும். கல்கி, மு.வ. போன்றோர் எழுதிய புதினங்களும் விரைந்து அவர்களுடைய பெயர்களில் நகர்த்தப்படும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:57, 18 அக்டோபர் 2013 (UTC)
நண்பரே!எழுத்தாளரின் பெயரை மட்டும் அறிந்து அவர் எழுதிய புதினங்கள் யாவை என அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு எழுத்தாளரின் புதினம் (எ.கா. அண்ணாவின் புதினம்) என்பது பயன்படும். மாறாக புதினத்தின் பெயரை மட்டும் தெரிந்த எழுதியவரின் பெயரை அறியாதவருக்கு அப்புதினத்தை அடைய புதினம் என்னும் பதிப்புதான் உதவும். இப்பகுப்பு எப்படிச் சிக்கலை உருவாக்கும் என எனக்குப் புரியவில்லை. விளக்குங்கள்!--அரிஅரவேலன் (பேச்சு) 11:16, 20 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம் நண்பரே, நீங்கள் சொல்ல விரும்புவது, நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற நூல் வேண்டும், எழுதியவர் யாரென்று தெரியாது. எவ்வாறு கண்டுபிடிப்பது ? நமது விக்கிமூலத்தில் உள்ள தேடுதல் பெட்டியில் இப்பெயரை இட்டால் அப்பக்கத்திற்கே கொண்டுபோய் விடும். ஆசிரியர் அல்லது பிற தகவல்கள் தேவையில்லை. இப்போது, புதினம் என்ற பகுப்பிற்கு சென்றால் ஆசிரியர் வாரியாக புதினங்கள் காட்டப்படும். நாம் ஒருவேளை ஒரே பகுப்பில் அனைத்து கட்டுரைகளையும் இணைக்கும் போது, தேடுவதற்கு சற்று கடினமாக இருக்கும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:29, 21 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம் நண்பரே! தேடுபொறியின் வழியாக வேண்டிய பக்கத்தை தேடியெடுத்துவிட முடியும் என்பதனை நானும் அறிவேன். தேடுபொறி இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் பகுப்புகளை ஏன் இட வேண்டும்? ஒரே பகுப்பின் கீழ் உள்ள எல்லாப் பக்கங்களையும் ஒரு சேரப் பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே! //நாம் ஒருவேளை ஒரே பகுப்பில் அனைத்து கட்டுரைகளையும் இணைக்கும் போது, தேடுவதற்கு சற்று கடினமாக இருக்கும்// இந்தக் கூற்றை ஏற்பதற்கு இல்லை குமார். பட்டியலில் பெயர்கள் அகரவரிசையில் தோன்றும்பொழுது எப்படி தேடுவற்குக் கடினமாக இருக்கும்? மேலும் நீங்கள் கூறும் தேடுபொறி வேறு இருக்கிறது! :-) எனவே, ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றிற்கு மேற்பட்ட பகுப்புகளைக் கொடுக்கலாம்; கொடுக்க வேண்டும்; (விக்கிப்பீடியாவில் உள்ள வே. தில்லைநாயகம் பற்றிய கட்டுரையில் 7 பகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. காண்க) கொடுக்கப்போகிறேன். நன்றி!
வணக்கம் நண்பரே! // அகரவரிசையில் தோன்றும்பொழுது எப்படி தேடுவற்குக் கடினமாக இருக்கும்?// சுமார் இரண்டாயிரம் புதினங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், எவ்வளவு கட்டுரைகளும், துனைப்பகுப்புகளும் புதினங்கள் பக்கத்தில் இருக்கும். எவ்வாறு 'சி' (1650-வது கட்டுரை) என்னும் எழுத்தில் தொடங்கும் கட்டுரையை கண்டறிவீர்கள்? தேடுவதற்கு எளிமையாக இருப்பதற்காகவே துனைப்பகுப்புகள் உருவாக்குகிறோம். நாம் இருவருமே கூறவிளைவது ஒரே கருத்துதான், ஆனால் புரிதலில்தான் வேறுபாடு. //ஒன்றிற்கு மேற்பட்ட பகுப்புகளைக் கொடுக்கலாம்; கொடுக்க வேண்டும்; // ஒரு கட்டுரைக்கு ஒரு பகுப்பு தான் வேண்டுமென்று நான் சொல்லவே இல்லை. விக்கிப்பீடியாவில் மட்டுமல்ல, விக்கிமூலத்திலும் உள்ளது. நானே உருவாக்கியுள்ளேன்; தேவைப்படும் இடங்களில் மட்டும். கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. உரையாடல் முடிந்த பிறகு, உங்கள் பணியை தொடரவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:41, 21 அக்டோபர் 2013 (UTC)
//தேவைப்படும் இடங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.// தேவைப்படும் இடம் எது என்பதை எதனைக்கொண்டு முடிவுசெய்கிறீர்கள் நண்பரே? --அரிஅரவேலன் (பேச்சு) 12:47, 21 அக்டோபர் 2013 (UTC)
//தேவைப்படும் இடம் எது என்பதை எதனைக்கொண்டு முடிவுசெய்கிறீர்கள்// உங்களுடைய (எடுத்துக்காட்டில்) உள்ள கட்டுரையில்,
 1. 1925 பிறப்புகள்,
 2. 2013 இறப்புகள்,
 3. தமிழக எழுத்தாளர்கள்,
 4. இந்திய எழுத்தாளர்கள்,
 5. தமிழ்நாடு அரசு அதிகாரிகள்,
 6. தமிழ் நூலகவியலாளர்கள்,
 7. தமிழறிஞர்கள்,
 8. தேனி மாவட்ட எழுத்தாளர்கள்,
 9. தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் என்று ஒன்பது பகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்தாளர்கள் என்ற பகுப்பு சேர்க்கப்படவில்லை, அரசு அதிகாரிகள் என்ற பகுப்பு சேர்க்கப்படவில்லை, நூலகவியலாளர்கள் பகுப்பு சேர்க்கப்படவில்லை. ஏன் சேர்க்கவில்லை என்று சிந்தித்து பாருங்கள், உங்களுக்கு எங்கு, என்ன சேர்க்க வேண்டுமென்பது எளிதில் விளங்கிவிடும். பொறுமையுடன் கேட்டுத் தெரிந்தமைக்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:21, 22 அக்டோபர் 2013 (UTC)
குமார், விடுபட்டவைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! அவற்றையும் அப்பக்கத்தில் சேர்த்துவிடுகிறேன். (எழுத்தாளர்கள், நூலகவியலாளர்கள் என்னும் பகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் பல பக்கங்கள் காட்டப்பட்டு உள்ளன.) உங்களின் விளக்கங்கள் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே, புதினங்கள் உள்ள பக்கங்களில் [[பகுப்பு:புதினங்கள்]] என்னும் பதிவை இட உள்ளேன். இப்பகுப்பால் தாங்கள் குறிப்பிடும் குழப்பங்கள் வந்தால் அதன்பின்னர் மீளாய்வு செய்வோம். பொறுமையுடன் விளக்கியமைக்கு நன்றி!--அரிஅரவேலன் (பேச்சு) 07:26, 6 நவம்பர் 2013 (UTC)

தானியங்கி வரவேற்புதொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:17, 29 ஜூன் 2015 (UTC)

ஆக்கங்களின் மூல நூல்கள், மின் மூலங்கள்தொகு

வணக்கம். தமிழ் விக்கிமூலத்தில் தாங்கள் ஆற்றி வரும் அரும்பணிக்கு நன்றி. தங்கள் பங்களிப்புகள் தொடர்பாக பின்வரும் விவரங்கள் தேவைப்படுகின்றன:

 • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்களின் மூல நூல்கள் பற்றிய விவரங்கள் தேவை. ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பகத்தின் முகவரி, வெளியிட்ட ஆண்டு, எத்தனையாவது பதிப்பு, ISBN எண் (இருந்தால் மட்டும்) போன்ற விவரங்கள் உதவும். இந்த விவரங்களைச் சேர்ப்பதன் வழி மூல நூலின் நம்பகத்தன்மை, அவை திரிபுகள், பிழைகள் இன்றி மின்னாக்கம் பெற்றுள்ளன என்பதை வாசகர்கள் உறுதி செய்யலாம்.
 • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்கள் தாங்களே கைப்பட தட்டச்சு செய்ததா அல்லது இணையத்தில் ஏற்கனவே உள்ளவற்றைப் படியெடுத்து இடுகிறீர்களா? படியெடுத்து இடுகிறீர்கள் என்றால் அப்படிகள் முதலில் இடம்பெற்ற தளங்களின் விவரங்கள் தேவை. எடுத்துக்காட்டுக்கு, மதுரைத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம் முதலிய தளங்களில் பல சங்க இலக்கியங்கள் ஏற்கனவே தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தகைய தளங்களுக்கு இணைப்பு தந்து நன்றி நவில்வதன் மூலம் உறவு நிறுவனங்களுடன் இணக்கத்தைப் பேணலாம்.

இந்த விவரங்களை அந்தந்த ஆக்கங்களின் முதன்மைப் பக்கங்களின் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடலாம்.

ஒரு வேளை, நீங்கள் கைப்படவே தட்டச்சு செய்கிறீர்கள் என்றால், அதனைத் தவிர்த்து கூகுளின் ஒளிவழி எழுத்துணரிக் கருவியைக் கொண்டு தானியக்கமாகப் பெருவாரியான பக்கங்களைப் பதிவேற்றலாம். இதன் மூலம் உங்கள் நேரமும் உழைப்பும் மிச்சப்படும். இது தொடர்பாக உதவி தேவையெனில் உதவக் காத்திருக்கிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:24, 19 ஏப்ரல் 2016 (UTC)