திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 140:
 
; உரை விளக்கம்: ஒடு- மேல்வந்த பொருண்மைத்து. யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கு அன்று, நீ கூறுகின்றதற்கு என்பதாம்.
 
 
===குறள் 1237 (பாடுபெறு ) ===
வரி 155 ⟶ 156:
 
 
; இதன்பொருள்: நெஞ்சே= நெஞ்சே;
:கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து= இவள் கொடியார் என்கிறவர்க்கு, நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி;
:பாடு பெறுதியோ= ஒரு மேம்பாடு எய்த வல்லையோ, வல்லையாயின் அதனை ஒப்பது இல்லை, எ-று.
 
; உரை விளக்கம்:
 
; உரை விளக்கம்: கொடியார்க்கு என்பது, கொடியரல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடுதோள்' என்பதும் அவை தாமே வாடா நின்றன என்பது தோன்றநின்றது. பூசல்- ஆகுபெயர். அஃது அவள் தோள்நோக்கி இயற்பழித்தன்மேலும், அதனல் தனக்கு ஆற்றாமை மிகன்மேலும் நின்றது. நின்னுரை கேட்டலும் அவர் வருவர், வந்தால் இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற் செய்த நன்றியாம் ஆகலின், அதன்பயன் எல்லாம் எய்துதி என்னும் கருத்தால் 'பாடுபெறுதியோ' என்றாள்.
 
===குறள் 1238 (முயங்கிய ) ===