முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
 
 
:நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு // 01 // நன தலை உலகம் வளைஇ,நேமியொடு
:வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை //02 // வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
:நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் // 03 // நீர் செல்நிமிர்ந்த மாஅல் போல
:பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு //04 //பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு
:கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி // 05 //கோடு கொண்டு எழுந்த கொடு செலவு எழிலி
 
:பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை// 06 // பெரு பெயல் பொழிந்த சிறு புல் மாலை
:யருங்கடி மூதூர் மருங்கிற் போகி // 07 // அரு கடி மூதூர் மருங்கில் போகி
:யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு //08 // யாழ் இசை இனம் வண்டு ஆர்ப்ப நெல்லொடு
:நாழி கொண்ட நறுவீ முல்லை // 09 // நாழி கொண்ட நறு வீ முல்லை
:யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது // 10 // அரும்பு அவிழ் அலரி தூஉய் கை தொழுது
 
:பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச் // 11 // பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப
:சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி // 12 // சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
:னுறுதுய ரலமர னோக்கி யாய்மக // 13 // உறு துயர் அலமரல் நோக்கி ஆய் மகள்
:ணடுங்குசுவ லசைத்த கையள் கைய // 14 // நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய
:கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர // 15 // கொடு கோல் கோவலர் பின் நின்று உய்த்தர
 
:வின்னே வருகுவர் தாய ரென்போள் // 16 // இன்னே வருகுவர் தாயர் என்போள்
:நன்னர் நன்மொழி கேட்டன மதனா // 17 // நன்னர் நல் மொழி கேட்டனம் அதனால்
:னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர் // 18 // நல்ல நல்லோர் வாய் புள் தெவ்வர்
:முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து / 19 /முனைகவர்ந்துகொண்டதிறையர் வினை முடித்து
:வருத றலைவர் வாய்வது நீநின் // 20 // வருதல் தலைவர் வாய்வது நீ நின்
 
== ==
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது