மனோன்மணீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 56:

:முற்காலத்தில் மதுரைமாநகரில், சீவகன் என ஒருபாண்டியன் அரசுபுரிந்து வந்தான். அவன், பளிங்குபோலக் களங்கமில்லாத நெஞ்சினன். அவன் மந்திரி குடிலன் என்பவன், ஒப்பற்ற சூழ்ச்சித் திறமை யுடையவனாயினும், முற்றும் தன்னயமொன்றே கருதும் தன்மையனாயிருந்தான். அதனால், அரசனுக்கு மிகவும் உண்மையுடையவன்போல நடித்து, அவனை எளிதிலே தன் வசப்படுத்திக்கொண்டான். அங்ஙனம் சுவாதீனப்படுத்திய பின்பு, தன்மனம் போனபடி யெல்லாம் அரசனையாட்டித் தன்செல்வமும் வளர்த்துக் கொள்ளத் தொன்னகராகிய மதுரை இடங்கொடாதென உட்கொண்டு, அந்நகரின்மேற் பாண்டியனுக்கு வெறுப்புப் பிறப்பித்து, திருநெல்வேலி என்னும் பதியிற் கோட்டை கொத்தளம் முதலிய இயற்றுவித்து, அவ்விடமே தலைநகராக அரசன் இருந்து அரசாளும்படி செய்தான். முதுநகராகிய மதுரை துறந்து, கெடுமதியாளனாகிய குடிலன் கைப்பட்டு நிற்கும் நிலைமையால் சீவகனுக்கு யாது விளையுமோ என இரக்கமுற்று, அவனுடைய குலகுருவாகிய சுந்தரமுனிவர், அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து ஆதரிக்க எண்ணித் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஆச்சிரமம் வந்தமர்ந்தருளினர். முனிவர் வந்து சேர்ந்தபின் நிகழ்ந்த கதையே, இந்நாடகத்துட் கூறப்படுவது.

<width="50%; height=40%; align=right;bgcolor:lightgreen;"

ஜீவகன்: பாண்டியமன்னன். மனோன்மணியின் தந்தை. சீவகவழுதி என்றும் அழைக்கப்படுபவன்.

மனோன்மணி: நாடகத்தலைவி. பாண்டியமன்னன் ஜீவகனின் அருமைப்புதல்வி.

குடிலன்: பாண்டியமன்னன் ஜீவகனின் அமைச்சன். சூதுமனம் கொண்டோன். பாண்டியஅரசினை ஆளச் சமயம் பார்த்துக் கொண்டிருப்பவன்.

வாணி: மனோன்மணியின் தோழி. புதுமைப்பெண்.

:முனிவர் எழுந்தருளியிருப்பதை உணர்ந்து, சீவகன், அவரைத் தன் சபைக்கழைப்பித்து. தனது அரண்மனை கோட்டை முதலியவற்றைக் காட்டி, அவை சாசுவதம் என மதித்து வியந்துகொள்ள, அவ்விறுமாப்பைக் கணணுற்ற முனிவர், அவற்றின் நிலையாமையைக் குறிப்பாகக் கூறியும் அறியாதொழிய, அவன் குடும்பத்திற்கும் கோட்டை முதலியவற்றுக்கும் க்ஷேமகரமாகச் சில கிரியா விசேஷம் செய்யும்பொருட்டு, அவன் அரண்மனையில் ஓரறை தம் சுவாதீனத்து விடும்படி கேட்டு, அதன் திறவுகோலை வாங்கிக்கொண்டு, தம் ஆச்சிரமம் போயினர். ஜீவக வழுதிக்குச் சந்ததியாக, மனோன்மணி என்னும் ஒரே புத்திரிதான் இருந்தனள். அவள், அழகிலும் நற்குண நற்செய்கைகளிலும் ஒப்புயர்வற்றவள். அவளுக்கு அப்போது பதினாறாக இருந்தும், அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர் நெஞ்சமும்போல, யாதொரு பற்றும் களங்கமுமற்று நின்மலமாகவே யிருந்தது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவள், வாணி. இவள், ஒழுக்கம் தவறா உள்ளத்தள்;தனக்கு நன்றெனத் தெள்ளிதின் தெளிந்தவற்றையே நம்புந் திறத்தள்; அல்லவற்றை அகற்றும் துணிபுமுடையள். இவ்வாணி, நடராஜனென்ற ஓர் அழகமைந்த ஆனந்த புருஷனை யிறிய, அவர்களிருவர் உள்ளமும் ஒருவழிப்படர்ந்து காதல் நேர்ந்தது. அதற்கு மாறாக, இவ்வாணியினது பிதா மிகப் பொருளாசை யுடையோனாதலால், குடிலனுடைய மகன் பலதேவன் என்னும் ஒரு துன்மார்க்கனுக்குந் தன் மகளை மணம்புரியின் தனக்குச் செல்வமும் கௌரவமும் உண்டாமென்ற பேராசை கொண்டு, அவ்வாறே அரசன் அநுமதிபெற்று விவாகம் நடத்தத் துணிந்தனன். அதனால் வாணிக்கு விளைந்த சோகம் அளவற்றதாயிருந்தது. இச்சோகம் நீங்க, மனோன்மணி, பலவாறு ஆறுதல் கூறும் வழக்கமுடையவளாயிருந்தாள். இவ்வாறிருக்கும்போது, முனிவர் கோட்டை காண வந்த நாள் இரவில், ஈடும் எடுப்புமற்ற சேரதேசத்தரசனாகிய புருடோத்தவர்மனைப் பூருவ கருமபரிபாகத்தால் மனோன்மணி கனாக்கண்டு மோஹம் கொள்ள, அவட்குக் காமசுரம் நிகழ்ந்தது. அச்சுரம் இன்ன தன்மையதென்றுணராது வருந்தும் சீவகனுக்குத் தெய்வகதியாய்த் தம் அறைக்கு மறுநாட் காலமே வந்த முனிவர், மனோன்மணி நிலைமை காமசுரமே எனக் குறிப்பாலுணர்ந்து அவள்நோய் நீங்கு மருந்து மணவினையே எனவும், அதற்கு எவ்விதத்திலும் பொருத்தமுடையோன் சேரதேசத்துப் புருடோத்தமனே எனவும், அவ்வரசனது கருத்தினை நன்குணர்ந்து அம்மணவினை எளிதில் முடிக்கவல்லோன் நடராஜனே யெனவும் உபதேசித்தகன்றார். வாணியினது காதலனாகிய நடராஜன்மேல் அவள் பிதா ஆரோபித்திருந்த அபராதங்களால் வெறுப்புக் கொண்டிருந்த பாண்டியன், அக்குருமொழியை உட்கொள்ளாதவனாய்க் குடிலனுடைய துன்மந்திரத்தை விரும்பினன். குடிலனோ, தன்னயமே கருதுவோனாதலால், சேரதேசத்தரசன் மருமகனாக வருங்காலத்தில் தன் சுவாதந்திரியத்திற்கு எங்ஙனம் கெடுதிவருமோ என்ற அச்சத்தாலும், ஒருகால் தன்மகனாகிய பலதேவனுக்கே மனோன்மணியும், அவட்குரிய அரசாட்சியும் சித்திக்கலாகாதா என்ற பேராசையாலும், முனிவர் மனத்தைத்தடுப்பதற்குத் துணிந்து தொடக்கத்திற் பெண்வீட்டார் மணம்பேசப் போதல் இழிவென்னும் வழக்கத்தைப் பாராட்டிப் புருடோத்தமன் மனக்கோள் அறிந்தே அதற்கு யத்தனிக்க வேண்டுமென்றும், அப்படியறிதற்குப் பழைய சில விவாதங்களை மேற்கொண்டு ஒரு தூது அனுப்பவேண்டுமென்றும், அப்போது கலியாணத்திற்குரிய சங்கதிகளையும் விசாரித்துவிடலாமென்றும் ஒரு சூதுகூற, அதனை அரசன் நம்பி, குடிலன் மகன் பலதேவனையே, இவ்விஷயத்திற்குத் தூதனாக அனுப்பினான்.

"https://ta.wikisource.org/wiki/மனோன்மணீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது