பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/562: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:54, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552. புதிதாக ஆகிறவன் என்ற பொருள் தராமல் என்றும் உள்ள நிலையைச் சுட்டியது; அதை வற்புறுத்தவே என்றும் என்ற சொல்லைப் பெய்தார். என்றும் பிரானவான்’ என்க. அம்ப வளம்-காண்பதற்கு அழகாக உள்ள பவளம். மைத்து-மை நிறம் பெற்று; இருண்டு. அமர்ந்த-தங்கிய. என்றும் உள்ளவனைச் சேர்ந்தமையால் அந்தக் கரிய நிறம் அங்கே தங்கியது. கறை நிறுத்திய கண்டன்” என்று திருவிளையாடற் புராணம் கூறும். மற்று அசை. மெய்த்து-மெய்த்தன்மை யைக் கொண்டு. மெய்யாக என்றபடி, மெய் என்பதனடி யாக மெய்த்து என்ற எச்சம் வந்தது. அமர்ந்து-பொருந்தி; , அலேயாமல் பொருந்தி என்றபடி, அன்பாய்-அன்பே வடிவ மாய்; குணம் வேறு, குணி வேறு என்ற பேதம் தோன்ருமல் அன்பு வடிவமே ஆகி என்றபடி. விரும்பு-விருப்பம் கொள். பிறவற்றை விரும்பினல் அந்த விருப்பமே பிறவிக்கு ஏதுவாகி விடும். அவனே விரும்பினுல் பிறவியைப் போக்கி விடலாம்.) இறைவனிடம் மெய்யன்பு பூண்டு வாழ வேண்டும் என்பது கருத்து. அற்புதத் திருவந்தாதியில் வரும் 93-ஆவது பாட்டு இது.