பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/573: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:55, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

563 சீர்வல்ல தாயத்தால் நாமும் தனிகெஞ்சின் உள்ளடைத்து மாயத்தால் வைத்தோம்.மறைத்து. 'இவனை மறைத்து வைத்த தல்ை யாரும் இவனைக் காண முடியாது. உள்ளே அடைத்து வைத்ததனுல் இவன் எங்கும் போகவும் முடியாது என்று எண்ணும்படி அடைத்து வைத்தோம், மறைத்து வைத்தோம் என்கிருர். எம் நெஞ்சில் வேறு ஒன்றும் இல்லை. அங்கே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற தீய பொருள்கள் இருந்தால் இந்த அருமையான பொருளே அவற்ருேடு சேர்த்து வைக்க இயலாது. எம் நெஞ்சில் அத்தகைய அழுக்குகள் இல்லை, சுத்தமான தனி நெஞ்சு அது. இதுதான் யாரும் புகாத இடம் என்று எண்ணி, யாரும் அறியாத மாயமான முறை யில்ை அந்தப் பரம்பொருளை உள்ளே வைத்து வெளியே போகாமல் அடைத்துவிட்டோம் என்று சொல்கிரு.ர். ஆர்வல்லார் காண அரனவனே? அன்பு என்னும் போர்வை யதளுலே போர்த்துஅமைத்துச்-சீர்வல்ல தாயத்தால் நாமும் தளிநெஞ்சின் உள்அடைத்து மாயற்தால் வைத்தோம் மறைத்து. 'அரனை அன்பு என்னும் மூடுதுணியினலே போர்த்து உள்ளே அமையச் செய்து, சிறப்பு மிக்க உரிமையால் நாம் வேறெதுவும் தன்னிடம் இல்லாத எம்முடைய தனி நெஞ்சின் அந்தரங்கத்திலே அடைத்துப் பிறருக்குத் தெரியாத மாய மான முறையிலுலே மறைத்துவைத்துவிட்டோம்.ஆகையால் அவனை ஆர் கான வல்லார்?"