திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: ===திருக்குறள் பரிமேழகர் உரை=== ===திருக்குறள் நான்காவது அதிகார...
 
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
:''அறன்வலியுறுத்தல்:''
 
:அஃதாவது,அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள், ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும். "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்/ அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல" ''(புறநானூறு- 31.)'' என்றார் பிறரும்.
:அஃதாவது,
 
 
===திருக்குறள்: 31 (சிறப்பீனுஞ்)===
 
 
:'''சிறப்பீனுஞ் செல்வமுமீனு மறத்தினூஉங்''' // // சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
:'''காக்க மெவனோ வுயிர்க்கு. (01)''' // // ஆக்கம் எவனோ உயிர்க்கு.
 
 
'''பரிமேலழகர் உரை:'''
 
:(இதன் பொருள்) ''சிறப்பு ஈனும்'' = வீடு பேற்றையும் தரும்;
: '' செல்வமும் ஈனும்'' =துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்:
:''உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன்'' = ஆதலான் உயிர்கட்கு அறத்தின்மிக்க ஆக்கம் யாது?
 
 
'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
 
:எல்லாப்பேற்றினும் சிறந்தமையின் வீடு 'சிறப்பு' எனப்பட்டது.
 
:ஆக்கந் தருவதனை 'ஆக்கம்' என்றார்.
 
:ஆக்கம் 'மேன்மேலுயர்தல்'.
 
:ஈண்டு 'உயிர்' என்றது மக்கள்உயிரை, சிறப்பம் செல்வமும் எய்தற்குரியது அதுவேயாகலின்.
 
:இதனால் '''அறத்தின்மிக்க உறுதி இல்லை'''யென்பது கூறப்பட்டது.