விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→கணியம் திட்டம்: புதிய பகுதி |
|||
வரிசை 61:
:{{ping|Balajijagadesh}} நல்ல முயற்சி. தமிழ் விக்கிமூலத்துக்கு என யூடியூபில் ஒரு ஓடை தொடங்கி அங்கும் இந்தக் காணொளிகளைப் பதிவேற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 02:34, 18 டிசம்பர் 2018 (UTC)
== கணியம் திட்டம் ==
இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய [http://www.kaniyam.com/foundation/ கணியம் அறக்கட்டளை] தமிழ் விக்கிமூலம் திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் நேரடியாகப் பங்களிக்க முன்வந்துள்ளது. நாம் பலரும் நன்கு அறிந்த [[பயனர்:Tshrinivasan]] இந்த அறக்கட்டளை நிறுவனர்களுள் ஒருவர். [https://github.com/tshrinivasan/OCR4wikisource OCR4Wikisource] என்ற கருவி மூலம் தமிழ் விக்கிமூலத்தில் பல இலட்சம் பக்கங்களைப் பதிவேற்ற உதவிய கணியம் அறக்கட்டளைச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக இதனைக் காணலாம். சில முக்கியக் குறிப்புகள்:
* கணியம் திட்டத்தில் இணைந்து பங்களிப்போர் kaniyam என்று முடியுமாறு பயனர் பெயர் கொண்டிருப்பார்கள்.
* ஒரே பயனர் அவருடைய சூழ்நிலைக்கு ஏற்ப தன்னுடைய வழமையான கணக்கில் இருந்தும் kaniyam தொடர்புடைய செயற்பாடு காரணமாக இன்னொரு கணக்கில் இருந்து பங்களிக்கலாம். இது sockpuppet என்று கருதப்பட மாட்டாது.
* கணியம் திட்டத்தில் பங்களிப்போர் விக்கிமீடியா அறக்கட்டளை [[:en:w:Wikipedia:Paid-contribution disclosure|கட்டணத் தொகுப்புகள் பற்றி வகுத்திருக்கும் கொள்கை]]க்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். அதாவது, தாங்கள் கணியம் திட்டத்தில் இணைந்து செயற்படுகிறோம் என்பதையும் இதற்காகக் ஊக்கத் தொகை பெறுகிறோம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
* கணியம் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:கணியம் திட்டம்|இந்தப் பக்கத்தில்]] இற்றைப்படுத்தி வர வேண்டும்.
* '''நிர்வாகிகள் தேர்தல், விக்கிமூலம் தொடர்பான பயண உதவித் தொகை வாய்ப்புகள் போன்ற சூழ்நிலைகளில், ஒருவர் தன்னார்வமாகப் பங்களிக்கும் கணக்கின் பங்களிப்புகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.''' இந்தப் புரிதல், விக்கிமூலம் திட்டம் தொடர்ந்து தன்னார்வமான தலைமைத்துவத்துடன் இயங்குவதை உறுதி செய்யும் நோக்கில் முன்மொழியப்படுகிறது.
* ஏற்கனவே வழமையாகப் பங்களித்து வரும் பயனர்கள் கணியம் திட்டத்தில் சேர்ந்து பங்களிக்க விரும்பினால் [[பயனர்:Tshrinivasan|சீனிவாசனைத்]] தொடர்பு கொள்ளவும். * தற்போதைய நிலையில், இது முழு நேர சம்பளப் பணி கிடையாது. ஒவ்வொரு நூலும் வெளியிடப்படும் அடிப்படையில் பகுதி நேர வாய்ப்பு மட்டுமே. எந்தப் பயனர்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பது கணியம் அறக்கட்டளையின் முடிவே. இத்தகையோ முடிவுகளிலோ கணியம் அறக்கட்டளை ஊக்கத் தொகை அளிப்பது தொடர்பான தொடர்பாடல்களிலோ விக்கிமூலம் திட்டம் பொறுப்பு ஏற்காது.
* தமிழ் விக்கிமூலத்துக்குப் பங்களிக்க விரும்பும் இதர நிறுவனங்களும் இதே போன்ற முன்மாதிரியுடன் செயற்பட வரவேற்கிறோம்.
வேறு ஏதேனும் ஐயங்கள், கேள்விகள் இருந்தால் தெரிவியுங்கள். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:10, 21 டிசம்பர் 2018 (UTC)
|