வாருங்கள், Ravidreams!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிமூலம் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணற்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிமூலத்திற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமூலம் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-

வருக ரவி:)-Sivakumar 11:06, 10 மே 2007 (UTC)Reply

நிர்வாக அணுக்கம்

தொகு

ரவி இங்கு நீங்கள் நிர்வாக அனுக்கத்தைப் பெற முன் வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். விக்சனரியில் வேலைப்பழு அதிகம்தான்!!!!!!!!!! ஆனாலும் இங்கு ஆரம்ப வேலைகளுக்கு உங்களைப் போன்றவர் தேவை. உங்கள் விருப்பத்தைக் கூறினால் உங்களை முன் மொழியலாம். --Trengarasu 07:19, 11 மே 2007 (UTC)--Trengarasu 07:21, 11 மே 2007 (UTC)Reply

format

தொகு

ரவி, திருக்குறள் பழைய விக்கிமூலத்தில் சிறுபகுதியே இருந்தது. விக்கிநூல்களிலிருந்து நகர்த்துவதே இங்கு பொருந்தும். முப்பாலுக்கும் மூன்று பக்கங்கள் தரலாம் என நினைக்கிறேன். வாசிப்பனுபவம் இலகுவானதாக எது இருக்குமோ அதனைப் பின்பற்றுவது பொருத்தமானது. மதுரைத்திட்டத்தினர் pdf கோப்புக்களைத் தந்துள்ள நூல்களுக்கு மீண்டும் செய்ய வேண்டியதில்லை. வெளி இணைப்புக்கள் கொடுப்பதே போதுமானது, --கோபி 21:51, 11 மே 2007 (UTC)Reply

மதுரைத்திட்ட pdf கோப்புக்கள் திஸ்கியில் உள்ளன என்றே நினைக்கிறேன். மேலும் ஒருங்குறி pdf கோப்புக்களில் தேடல் முழுமையான சாத்தியமானதா? நாம் pdf கோப்புக்களை வழங்குவது குறித்த பக்கங்கள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டுப் பூட்டப்பட்ட பின்னர் என்றால் பொருத்தமானதாக இருக்கும். பெயரை இறுதிசெய்யும்வரை விக்கிசோர்ஸ் என்றே பயன்படுத்தலாம். இங்கே விரைவாக ஒரு 100 நூல்களை எட்ட வேண்டும். மதுரைத்திட்டம், சென்னைநெட்வேர்க், நூலகம் திட்டம் போன்றவற்றின் காப்புரிமைச் சிக்கல்களற்ற நூல்களைப் பயன்படுத்தலாம்தான். இது தொடர்பில் அவர்களது நிலைப்படு/மனநிலை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆதலால் மூலப்பிரதிகளை எங்கிருந்து பெற்றோம் என்பதைக் குறிப்பிட்டு வெளி இணைப்பு வழங்குவது அவசியமென்று படுகிறது. --கோபி 22:10, 11 மே 2007 (UTC)Reply

நான் pdf இல் தேடுவது என்று தவறாக விளங்கிக் கொண்டேன். திருக்குறளை ஒரே பக்கத்தில் இடுவது நல்லதே. ஆனால் நீளமான நூல்களைப் பகுதிகளாக/ அத்தியாயங்களாக இடல் வேண்டும். நம் விக்கிபீடியர்கள் பலர் இந்த ஆரம்ப உரையாடல்களில் பங்கெடுப்பது பயனுள்ளதாயிருக்கும். கோபி 22:19, 11 மே 2007 (UTC)Reply

நிர்வாக அணுக்கம்

தொகு

ரவி, சில நாட்கள் இந்தப் பக்கம் வராமலிருந்து விட்டேன். நூலகம் திட்டப் பணிகள் சிலவற்றை முடிப்பதில் மும்முரமாக உள்ளேன். விரைவில் இங்கும் பணிகளைத் தொடர்கிறேன். நிர்வாக அணுக்கம் தொடர்பாக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு நன்றி. விக்கிப்பீடியா, விக்சனரி ஆகியவற்றுக்கு அடுத்தபடியான பெரிய திட்டமாக விக்கிமூலத்தை முன்னெடுக்கலாம் என்று தோன்றுகின்றது. மேலும் விக்கிமூலம் - கட்டற்ற நூலகம் என்றே பயன்படுத்துவோமே? --கோபி 16:42, 22 மே 2007 (UTC)Reply

திருவிவிலியம் இடுகை தொடர்பான துப்புரவுப் பணி

தொகு

இரவி, தொடக்கத்தில் மிக நீண்ட அளவில் பதிவுசெய்யப்பட்ட பக்கங்களை பின்னர் சிறுசிறு பிரிவுகளாகப் பதித்தாயிற்று. அந்த நீண்ட பக்கங்களை "delete" என்று குறிப்பிட்டு, உரையாடல் பக்கத்திலும் தெரிவித்திருந்தேன். கனக்சு கேட்டபடி தாங்கள் நீண்ட பக்கங்களை அகற்றிக்கொண்டிருப்பது கண்டேன். நன்றி! விவிலிய நூல்களில் இதுவரை 40% இடுகை செய்தாயிற்று. பணி தொடர்கிறது... பவுல்-Paul

விக்கிநூலில் இருந்து விக்கிமூலத்திற்கு இறக்குமதி

தொகு

இரவி. விக்கிநூலில் இருந்து விக்கிமூலத்திற்கு விக்கிமூலத்திற்கு மாற்ற வேண்டிய பக்கங்கள் என்ற பகுப்பில் இருப்பவற்றை இறக்குமதி செய்யலாம் என்று நினைக்கிறேன். --Inbamkumar86 (பேச்சு) 16:38, 7 ஜூலை 2012 (UTC)


உங்களுடைய வாக்கை பதியுங்கள்

தொகு

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:24, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்களுடைய வாக்கை பதியுங்கள்

தொகு

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:09, 8 மார்ச் 2016 (UTC)

நினைவூட்டல்

தொகு

விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் என்பதில் நீங்கள் மேலான பங்களிப்புகளைச் செய்துள்ளதால், அதன் பங்களிப்பாளர்கள் பிரிவில் ஒப்பமிட கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 06:39, 23 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்

தொகு

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தில் தங்கள் பங்களிப்பும் உதவியையும் வேண்டுகிறேன்.பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:09, 23 மே 2016 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ravidreams&oldid=1405461" இலிருந்து மீள்விக்கப்பட்டது