சிலப்பதிகாரக் காட்சிகள்/மாதவி நடனம்

4. மாதவி நடனம்

இசை–நடனம் நாடகம்

காவிரிப்பூம்பட்டினத்தில் நாடக அரங்கம் நடன அரங்கம், இசை அரங்கம் எனப் பலவகை அரங்கங்கள் இருந்தன. அவற்றில் அடிக்கடி நாடகங்கள், நடன வகைகள், இசைவிருந்து என்பன நடைபெற்று வந்தன. பூம்புகார் நகரம் சோழ நாட்டின் தலைநகரம் ஆதலால் அங்கு நாடகம் முதலிய இன்பக் கலைகளில் வல்லவர் பலர் நிலையாக வாழ்ந்து வந்தனர். இந்த இன்பக் கலைகளில் ஈடுபட்டிருந்தவர் ‘நாடகக் கணிகையர்’ எனப்பட்டனர். அவர்கள் ஓர் ஆடவரை மணந்து கொள்வதும் உண்டு; மணந்து கொள்ளாமல் தனி வாழ்க்கை நடத்துதலும உண்டு. அம்மகளிர்க்கு நாடகம் கற்பிக்க நடன ஆசிரியர் பலர் இருந்தனர் நடனம் பயிற்றுவிக்க நடன ஆசிரியர் பலர் இருந்தனர்; இசையைக் கற்பிக்க இசை ஆசிரியர் பலர் இருத்தனர். இந்தப் பலவகைக் கலைகளைப் போதிக்கும் ஆசிரியர்கள் பரம்பரையாகவே இக் கலைகளில் பண்பட்ட புலமை பெற்றவர் ஆவர்.

சித்திராபதி

பூம்புகாரில் கணிகையர் தெருக்கள் சில இருந்தன. அவற்றில் ஒன்று முதல்தர நாடகக் கணிகையர் தெருவாகும். அத்தெருவில் இருந்த கணிகையருள் புகழ்பெற்று இருந்தவள் சித்திராபதி என்பவள். அவள் ஆடல் பாடல்களில் வல்லவள்; அவற்றில் நீண்ட காலம் பயிற்சி உடையவள், சாத்திர முறையில் அணுவளவேனும் தவறாதபடி நடிக்க வல்லவள். அவள் நடனத்தைப் பார்க்க பூம்புகார் மக்கள் பெருங் கூட்டமாகக் கூடுவர். அவளைப் பற்றி சோழ நாடு முழுவதிலும் இருந்த மக்கள் நன்கு அறிந்திருந்தனர். சோழ அரசன் அவளது நடனத் திறனைப் பல முறை பாராட்டி மகிழ்ந் தான.

மாதவி

இவ்வாறு ஈடும் எடுப்பும் அற்ற நடிக மாதாக விளங்கிய சித்திராபதிக்குத் தவமகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் மாதவி என்பது. அவள் தன்னைப் போல நடனக் கலையில் பெரும் புலமை பெறவேண்டும் என்பது சித்திராபதியின் விருப்பம். அதனால், அவள் பண்பட்ட நடன ஆசிரியரை வைத்து மாதவிக்கு நடனப் பயிற்சி அளிக்கத் தொடங்கினாள். இப்பயிற்சி மாதவியின் ஐந்தாம் வயதிலிருந்தே தொடக்கம் ஆயிற்று. மாதவி ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்றாள்; நடனக் கலைத்தொடர்பான நுட்பங்கள் எல்லாவற்றையும் தெளிவாகத் தெரிந்து கொண்டாள்.

மாதவி-பேரழகி

மாதவிக்கு வயது பன்னிரண்டு ஆனது. அவள் கட்டழகுடன் காணப்பட்டாள். அவளது கூந்தல், திறத்தில் கருநாவல் பழத்தை ஒத்திருந்தது. அவளுடைய கண்கள் அகன்று சிவந்த ரேகைகளைப் பெற்றிருந்தன; புருவம் வான் வில்லைப் போல வளைந்து மயிர் அடர்ந்து இருந்தது. அம் மங்கையின் முகம் அகன்று மலர்ந்த தாமரை மலரை ஒத். திருந்தது. அவள் மூக்குக் குமிழம் பூவைப் போல இருந்தது; பல் வரிசைகள் முத்து வரிசைப் போலக் காணபபட்டன. அவளுடைய உதடுகள் கொல்வைக் கனிபோலச் சிவந்து இருந்தன. அவள் பேச்சு கிளிகொஞ்சுவதுபோல இருந்தது. அவளது நடை அன்னப் பறவைகளின் அழகிய நடையை ஒத்திருந்தது .

அரங்கேற்றம்

நடனப் பயிற்சி பெற்று முடிந்தபிறகு, பயிற்சி பெற்ற கணிகை அரசன், பிரபுக்கள் முதலிய பெரு, மக்கள் முன்னிலையில் முதல்முதல நடனம செய் தல ஒரு வழக்கம ஆகும். அது மிக்க சிறப்புடன் கொண்டாடப்படும் அஃது அரங்கு ஏற்றம்’ எனப்படும். அன்றைய நடனம் சிறநத முறையில் ஆடப் படின், அக்கணிகைக்கு அரசன் பரிசளிப்பான்; பிரபுக்களும் பரிசளிப்பர்; அவள் பெயர் நல்ல முறையில் நகரம் எங்கும் பரவும். அரசர், பிரபுக்கள் இவர்கள் வீட்டு விசேடங்களில் வந்து நடிப்பதற்கும் அவளுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படும். சுருங்கக்கூறின், அரங்கேற்று விழா அக் கணிகையது எதிர்கால வாழ்வினைத் தீர்மானிப்பது என்னலாம்.

இத்தகைய முறையில் மாதவியும் தனது தடணத் திறமையை உலகத்திற்குக் காட்ட வேண்டியவள். ஆனாள். அரங்கேற்றத்திற்கு ஒரு நாள் குறிக்கப்பட்டது. “புகழ்பெற்ற நடிகப் பெண்மணியான சித்திராபதி மகளான மாதவி நடனம் ஆடப் போகிறாள்” என்ற செய்தி நகரம் எங்கும் பரவியது.

நடன அரங்கம்

மாதவியின் நடன அரங்கேற்றத்திற்காகப் பெரிய நடன அரங்கம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு நடனமேடை தனிச்சிறப்புச் செய்யப்பட்டது. நீங்கள் இக்கால நாடக மேடைகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா; அது போலவே அந்த நடன அரங்கமும் இருந்தது. மேடையில் கணிகை நடிப்பதற்கு அகன்ற இடம் இருந்தது. நடிப்பவளுக்குப் பின்பக்கம் நடன ஆசிரியர்களும் இசை ஆசிரியர்களும் நின்று துணை செய்ய வசதியாக இடம் இருந்தது, மேடைக்கு எதிரில் அரசர், அமைச்சர், பிரபுக்கள் அமரத்தக்க உயர்தர ஆசனங்களும் அவற்றுக்குப் பின்புறம் அலுவலர், பொது மக்கள் முதலியோர் இருக்கத் தக்க ஆசனங்களும் முறைப்படிப் போடப் பட்டிருந்தன.

நடன மண்டபம்

அரங்கேற்றத்திற்கு உரியநாள் வந்தது. அன்று, முன் சொன்ன நடன அரங்கம் சிறந்த முறையில் ஒப்பனை செய்யப்பட்டது. நகரம் எங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன. ஊர்ச் சிறுவர் அரங்கின் ஒப்பனையைக் காணக் காலை முதல் அணியணியாக வந்து கொண்டிருந்தனர். அன்று நகரம் எங்கும் ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது. கணிகையர் தெருக்களில் இருந்த கணிகையர் அனைவரும் நடன மண்டபத்திற் கூடிவிட்டனர். குறித்த நேரத்திற்கு முன்பே நகரத்தில் இருந்த பிரபுக்கள். அரசியல் அலுவலர்கள், வணிகப் பெருமக்கள் முதலியோர் மண்டபத்தில் குழுமி இருந்தனர்.

மாதவி அலங்காரம்

அந்த நல்ல நாளில் சித்திராபதி தன் குல தெய்வத்திற்குப் பூசையிட்டாள்; தன் தவமகளான மாதவி அன்று அவையிற் சிறப்புப் பெற வேண்டும். என்று தெய்வத்தை வேண்டினாள்; மாதவியை மங்கல நீரில் நீராட்டினாள்; நடிக மாதர் அணியத் தக்க நவமணி மாலைகளையும் பிற உயர்ந்த நகைகளையும் அணிவித்தாள்; உயர்ந்த பட்டாடையை இடையிற் சுற்றினாள்; இவ்வாறு கண்டார் வியந்து பாராட்டத்தக்க முறையில் சிறந்த ஒப்பனை செய்வித்தாள்.

நடன மேடை

அரங்கேற்றத்திற்குக் குறித்த நேரம் வந்தது சோழ வேந்தன் தலைமையில் பேரவை கூடியது. யாவரும் ஆவலோடு மேடையை நோக்கினர். அங்குப் புகழ்பெற்ற சித்திராபதி தோன்றினாள். அவளுடன் இசை ஆசிரியன், மத்தளம்,யாழ், குழல் முதலிய பல வகை வாத்தியம் வல்லுநர் காட்சி அளித்தனர். மாதவிக்கு ஆடல் பயிற்றுவித்த ஆடல் ஆசிரியனும் அங்கு இருந்தான். அவையினர் இமை கொட்டாது மாதவி வருகையை எதிர் நோக்கினர்.

அரங்கேற்றம்

நடிப்புக்கேற்ற நேரம் வந்தது. பேரழகியான மாதவி அவையோர் கண்டுகளிக்க மேடைமீது தோன்றினாள்; பலவகை இன்னிசை வாத்தியங்கள் ஒலித்தன: இசையாசிரியர் இனிய குரல் எடுத்துப் பாடினர்; மாதவி ஒழுங்குமுறை தவறாது கண்டார் வியக்குமாறு அற்புதமாக நடனம் செய்தாள். அவள் ஆடிக் காட்டிய நடன வகைகளைக் கண்ணுற்ற அவையோர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

நடன அரசி

சோழர் பெருமான் எழுந்து மாதவியின் நடனத் திறமையைப் பாராட்டிப் பேசி, ‘நடண் அரசி’ என்பதற்கு அடையாளமான ‘தலைக்கோல்’ என்ற மணிகள் பதித்த கோல் ஒன்றை அவளுக்குத் தந்தான்; ஆயிரத்து எண் கழஞ்சு பொன்னையும் பரிசாக அளித்தான்; பசும்பொன் மாலை ஒன்றையும் பரிசளித்தான். யாவரும் மாதவியின் நடனச் சிறப்பைப் பாராட்டி மகிழ்ந்தனர். அன்றுமுதல் மாதவி ‘நடன அரசி’ என மாநகரத்தாரால் பாராட்டப்பட்டாள்.