சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/9.கனாத்திறமுரைத்த காதை
9. கனாத்திறம் உரைத்த காதை
தொகு- (கலி வெண்பா)
- அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
- நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
- மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
- கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:
- மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப்
5
- பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
- பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
- ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
- அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
- புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் 10
- உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
- வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
- நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
- தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
- பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு, 15
- ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
- செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
- பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
- படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
- சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20
- இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
- மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
- மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
- அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
- உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர் 25
- குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
- மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
- தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், துய
- மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
- துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும் 30
- தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
- தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
- தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
- பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
- மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து 35
- நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி
- ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
- தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
- மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
- கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் 40
- கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
- எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
- அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
- பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன்
- கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை 45
- பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
- பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
- இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
- கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
- காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு 50
- ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
- தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
- உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
- நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ
- கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு 55
- பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
- கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
- மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
- சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
- காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு 60
- தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
- போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
- ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
- பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய
- காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம் 65
- கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
- பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
- வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
- சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
- குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த 70
- இலம்பாடு நாணுத் தரும்எனக்கு என்ன,
- நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
- சிலம்புஉள கொண்மின் எனச்சேயிழை கேள்இச்
- சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு
- உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர் 75
- மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
- ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
- வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
- கனைசுடர் கால்சீயா முன்.
- (வெண்பா)
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
- பார்க்க
- [[]] :[[]]