சிலம்போ சிலம்பு/புகுவாயில்

புகுவாயில்

சிலப்பதிகாரம்

கழகக் காலத்தை அடுத்தவரும் சமண சமயப் பற்று உடையவருமாகிய இளங்கோவடிகள், மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் வாயிலாகக் கேட்டறிந்த கண்ணகியின் வரலாற்றில் கண்ணகியின் சிலம்பு முதன்மை பெற்றிருப்பதால் சிலம்பு தொடர்பான சிலப்பதிகாரம் என்னும் பெயரிட்டு நூல் இயற்றினார். இரும்பு+பாதை=இருப்புப் பாதை, கரும்பு+வில் = கருப்புவில் என்பனபோல, சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் என்றாயிற்று. அதிகரிப்பது அதிகாரம். அதிகரித்தல் என்பது, தொடர்ந்து வளர்தல் — விருத்தியடைதல் எனப் பொருள்படும். அதிகாரம் என்னும் சொல்லுக்கு நூல் என்னும் பொருள் பிங்கல நிகண்டில் கூறப்பட்டுள்ளது. எனவே, சிலம்பு தொடர்பான நூல் சிலப்பதிகாரம் எனப் பெயர் சூட்டப் பெற்றது. இது, சிலம்பு எனச் சுருக்கமாகவும் பெயர் வழங்கப் பெறும்.

இந்நூல் தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும். இவற்றுள், தமிழ்நாட்டில் நடந்த வரலாறு பற்றியவை சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்களே. இவ்விரண்டனுள் சிலப்பதிகாரம் முதன்மை உடையது. சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கோயிலைக் கட்டினான் – இளவல் இளங்கோ இந்தச் சொல் கோயிலைக் கட்டினார்.

சிலம்போ சிலம்பு

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று சுப்பிரமணிய பாரதியாரால் பாராட்டப் பெற்ற இந்நூல் ஒலி நயமும் உணர்ச்சியைப் பெருக்கும் ஆற்றலும் உடையது.

பெண்மைப் புரட்சியாகிய இந்நூல், இன்பியலாகத் தொடங்கப் பெற்றிருப்பினும் இறுதியில் துன்பியலாகவே முடிக்கப்பெற்றுள்ளது. இருப்பினும், வாழ்த்துக் காதை போன்ற பகுதிகளால் இளங்கோ அடிகள் ஓரளவு செயற்கை யான மங்கல முடிவு தந்துள்ளார்.

ஆசிரியர் கூற்றாக வரும் இடங்கள் சில அரிய நடையில் இருப்பினும், கதை மாந்தர்களின் கூற்றாக வரும் இடங்கள் அவர்கட்கு ஏற்ற நடையில் நடைபோடுகின்றன. நாடகக் காப்பியம் ஆயிற்றே - நடையின் சுவைக்குச் சொல்லவா வேண்டும்!

பல காலங்களில் நடைபெற்ற பல்வேறு கதைச் செய்திகள் சூழ்நிலைக்கு ஏற்ப இடம் பெற்றிருப்பதால், பொய்க் கற்பனைகள் கொண்டது சிலம்பு எனச் சொல்லத் தோன்றினாலும், எத்தனையோ வேறு காப்பியங்களை நோக்க, சிலம்பில் பொய்க் கற்பனைகள் குறைவே. முற்றிலும் கற்பனை கலவாது காப்பியம் எழுதுவது அரிது. அவ்வாறு எழுதின் அது காப்பியமாகாது - வரலாற்று நூலாகும்; ஆனால் இது காப்பியம்.

குடிமக்கள் காப்பியமாகத் திகழும் சிலம்பில் இலக்கிய நயத்திற்குக் குறைவே இல்லை. கலைகள் பற்றித் தனி நூல் எழுதுதல் வேண்டும். -=

நூல்வடிவம்

முன்னமேயே சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வு நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. காலம் கடந்து இப்போது இந்நூலை யான் எழுதியது ஏன்? பல ஆண்டுகட்கு முன், யான் தமிழ் எம்.ஏ. தேர்வுக்குப் படித்த போது, இரண்டு குறிப்புச் சுவடிகள் (Note Books) நிறையக் குறிப்பெடுத்து வைத்தேன். இடையில் பல ஆண்டுகள் மூளைக்கட்டிப் பிணியால் யான் படுக்கையில் கிடந்ததாலும், இந்தக் குறிப்புச் சுவடிகள் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மறைந்து கிடந்ததாலும், குறிப்புகட்கு நூல் வடிவம் தர இயலவில்லை. அண்மையில் வேறொன்றைத் தேடும் முயற்சியின்போது, பரண்மேல் இருந்த தாள் கட்டு ஒன்றிலிருந்து இக் குறிப்புச் சுவடிகள் தற்செயலாகக் கிடைத்தன. இந்தக் குறிப்புகளை ஓரளவு சுருக்கியும் புதிய கருத்துகள் சில சேர்த்தும் இந்நூல் வடிவைப் படைத்தேன். குறிப்புகளை வீணாக்கக் கூடாதல்லவா?

தமிழ் வித்துவான், தமிழ் எம்.ஏ. ஆகிய தேர்வுகட்குப் படித்த போதினும், கல்லூரியில் பாடம் நடத்திய போதினும், இப்போதே, சிலப்பதிகாரத்தை ஓரளவாவது முறையாகப் படித்ததான உளநிறைவு ஏற்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் கடக்க அரிதாகிய பெருங்கடல். அதிலிருந்து சில முத்துகளே இந்நூலில் அறிமுகம் செய்யப் பெற்றுள்ளன. பக்கக் கட்டுப்பாடும் நினைவிருக்கிறது.

திறனாய்வு

என் திறனாய்வுக் கருத்துகள் சில, வேறு சிலருடையனவற்றோடு மாறுபட்டிருக்கலாம். யான் தமிழ் எம்.ஏ. தேர்வில் விருப்பப் பாடமாக இலக்கியத் திறனாய்வை எடுத்துக் கொண்டேன். திறனாய்வு பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சில நூல்களைப் படித்துள்ளேன். இதுதான் திறனாய்வு - இவ்வாறு செய்வதுதான் திறனாய்வு என எவரும் வரையறுத்துக் கூறுவதற்கில்லை. ஒவ்வொருவரின் கோட்பாட்டிலும் வேறுபாடு இருக்கலாம். எனவே, எனது திறனாய்வும் ஏதோ ஒருவாறு இருக்கலாம்.

தித்திக்கும் திறனாய்வு எனச் சுருக்தமாகப் பெயர் தரப்பட்டுள்ளது. இதனைத் தித்திக்கச் செய்யும் திறனாய்வு என விரித்துக் கொள்ள வேண்டுகிறேன். அதாவது, சிலப்பதிகார்த்தைத் தித்திக்கச் செய்யும் திறனாய்வு என்பது இதன் கருத்தாகும். சிலப்பதிகாரத்தைத் தித்திக்கச் செய்ய, எனக்குத் தெரிந்த அளவு — என்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறேன் — அவ்வளவுதான்.

மற்றும் இளங்கோ சிலப்பதிகாரத்தைத் தித்திக்கும்புடிச் செய்திருக்கும் திறனை ஆய்வு செய்தல் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

என் கருத்துதட்கு அரணாக, இலக்கிய மேற்கோள்களும் உலக வழக்குத் தொடர்களும் செய்திகளும் ஓரளவு தந்துள்ளேன். நகைச்சுவைக்காகச் சில தொடர்களும் செய்திகளும் இந்துள்ளேன். அவற்றைத் கொச்சையாக எண்ணாதிருக்க வேண்டுகிறேன். இடையிடையே மாற்றுச் சுவை வேண்டுமல்லவா?

கூறியது கூறல்

பலரோடு – பலவற்றோடு தொடர்புடைய ஒரு கருத்தே, அவரவரைப் பற்றியும் – அவையவை பற்றியும் கூறியுள்ள பகுதிகளில் திரும்பத் திரும்ப வரலாம். ‘கூறியது கூறினும் குற்றம் இல்லை - வேறொரு பொருளை விளைக்குமாயின்’ என்னும் கோட்பாட்டின்படி, இத்தகைய கூறியது கூறலை அன்புகூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன். மூளைக் கட்டிப் பிணி தொடர்பான தொல்லையோடு எழுபதாம் அகவையைக் கடந்துவிட்ட அடியேன் இயன்றதைச் செய்துள்ளேன். ஏற்றருள்க.

இந்நூலை நன்முறையில் அழகாக வெளியிட்ட புத்தக வித்தகர் மதிப்புமிகு ஏ. திருநாவுக்கரசு அவர்கட்கு மிக்க நன்றி செலுத்துகிறேன். சபாநாயகர் அச்சகத்தாருக்கும் நன்றி. வணக்கம்.

புதுச்சேரி-11
15 – 9 – 1992

சுந்தர சண்முகன்


பிழை திருத்தம்


பக்கம் வரி பிழை திருத்தம்
12 20 பாடியுள்ளார் பாடியுள்ளனர்
12 23 தொன்குலமே தொல்குலமே
13 16 மூன்றெரிந்த மூன்றெறிந்த
15 5 வாண் கோட்டால் வான் கோட்டால்
15 8 பணந்தோடு பனந்தோடு
17 11 மன்ன நல்லது மன்ன ரல்லது
18 10 ஓன்றித் ஒன்றித்
28 10 மணிமேகலை கேல் மணிமேகலை மேல்
31 26 இருமுறை-இயப்பினின் இறுமுறை-இயல்பினின்
34 16 கோவலன் கண்ணகியுடன் கோவலனும் கண்ணகியும்
35 24 சிவவரன் சினவரன்
37 8 போற்றினர் போற்றினார்
42 23 ஓடித்தாளாம் ஒடித்தாளாம்
44 5 மாலையை மாலையைத்
44 5 பின்னர் பின்னர்த்
44 17 சொண்டதாகவும் கொண்டதாகவும்
52 3 செய்திருப்யின் செய்திருப்பின்
57 6 வல்விணை வல்வினை
64 7 அமைத்து அமைத்துப்
76 17 புறப்பொருள் புறப்பொருள்
80 14 காட்டும்போலும்” (3) காட்டும்போலும்” (12)
83 அவுணரும் முசுகுந்தனும் கடலாடு காதை அவுணரும் முசுகுந்தனும் (கடலாடு காதை)
85 4 இந்திரன் மகனும் இந்திரன் மகனும் அவளும்
86 4 மாமாலை மாமலை
86 31 அளகில் அலகில்
88 9 விளிம்பில் விளிவில்
96 11 எட்டு கோல் எட்டுக்கோல்
98 9 பொருமுக எழினி பொருமுக எழினிப்
98 12 ஒருமுக எழினி ஒருமுக எழினிப்
109 28 கெடிா கொடி
111 8 அடுக்கத்துப் அடுக்கத்து
115 4 வணங்கி வணங்கிச்
118 5 வைத்து வைத்துப்
118 7 வைத்து வைத்துக்
118 14 திருமணமும் திருமணம்
118 30 வைத்து வைத்துத்
120 29 கடைப்ப கடைப்படு
127 26 என்று என்றும்
131 24 வரழத்தினாளாம் வாழ்த்தினாளாம்
137 21 கதையின் காதையின்
145 27 காத்திருந்த தார்களாம் காத்திருந்தார்களாம்
151 13 பாண்டியர் வையை பாண்டியர்
168 12 புனிறு நீர் புனிறு தீர்
168 13 கரவிரி காவிரி
171 22 காவலற் காதலற்
174 2 கொண்மன கொண்மென
184 9 பசுத்துணிப் பசுந்துணிப்
378 19 ஒட்டக்கூத்தரும் ஜெயங்கொண்டார்

(குறிப்பு: இந்நூல் அச்சானபோது கண் அறுவை மருத்துவம் செய்து கொண்டிருந்ததால் சில அச்சுப் பிழைகள் ஏமாற்றி விட்டன. பொறுத்தருள்க, அருள்கூர்ந்து பிழைதிருத்திப் படிக்கவும்)