சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள்
***
இத் தொகுப்பில் உள்ளவை மொத்தம் 16 பாடல்கள்
அவற்றில் ஒன்று இவரது அண்ணன் வேலைய சிவாமிகள் பாடியது
மற்றொன்று சிவப்பிரகாச சுவாமிகளின் தந்தை பாடியது
நூலில் பக்கம் 75 முதல் 78
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
1-3
தொகு- ஐயநின் சென்னிமிசை யுறைகின்ற மடமங்கை யாரென்ன வமைவினவவும்
- அன்னதொரு மடமங்கை யன்றுவெண் டிரைகொழித் தழகொழுகு தண்புனலெனத்
- துய்யவொளி யான்னங் கரியவிழி காதுவாய் தோயத்தில் உண்டோவெனச்
- சொல்லருங் கமலமலர் காவிமலர் கொடிவள்ளை தூயசெங் குமுதமென்னப்
- பொய்யென நினைத்து நற்கொங்கையும் கூந்தலும் புனலிடை யுண்டோவெனப்
- புற்புதஞ் சைவலம தெனவே மறுத்துப் புகன்றிடுதி நங்காயெனத்
- தையலவளே னென்ன நாணொடு வணங்கியென் றன்பிழை பொறுத்திடென்றே
- சங்கரன் உரைத்திடத் திருவுள மகிழ்ந்த சிவசங்கரி உமைக்காக்கவே. (1)
- அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான் ஐயவென் செவியைமிகவும்
- அறுமுகன் கிள்ளினா னென்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
- விரைவுடன் வினவவே யண்ணனென் சென்னியில் வளங்குகண் எண்ணினனென
- வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ யப்படிவிகடம் ஏன்செய்தாயென
- மருவுமென் கைந்நீள முழமளந்தா னென்ன மயிலவன கைத்துநிறக
- மலையரையனு தவவரும் உமையவளை நோக்கிநின் மைந்தரைப் பாராயெனக்
- கருதரிய கடலாடை யுலகுபல வண்டங் கருப்பமாய்ப் பெற்றகன்னி
- கணபதியை யருகழைத்து அகமகிழ்வு கொண்டனள் களிப்புடனுமைக் காக்கவே.(2)
- அம்பிகை யரன்தன்னை நோக்கியுன் னாபரண மரவமென உமையைநோக்கி
- அரியரவ சயனத்தை யரவுருவ மானத்தை அறியாய்கொல் சிறிதுமென்ன
- நம்பிமனை தொறுமிரந் துணுமாண்டி நீயென்ன நான்றாத னறிவேனென
- நவையுறும் பொய்புகன்றீ ரெனப்பாரத நடந்ததே கரியாமென
- வெம்பியொருவன் பிரம்பால் அடித்தானென விளங்கிழை யொருத்தி தாம்பால்
- வீசினதுசொல் லென்ன வெண்ணாயிரம் பெண்கள் மிகுகற்பை நீக்கினையெனப்
- பம்புகற்பினிலோ ரிரட்டிப்பு நீக்கினது பதறாமல் நீகேளெனப்
- பரமருடன் இவ்வாறு விளையாடு பச்சைப் பசுங்கொடி உமைக்காக்கவே. (3)
4-6
தொகு- அச்சுதனளிப்ப னிலமுமது நேயன்வித்தை யருளுவன் பலபத்திரன்
- அலமுதவு வன்சமன் பகடீவனந் தமக்காள தோரெருது முண்டே
- முச்சிரவயிற் படையினைக் கொழுவதாக்குவோ மொய்ம்புடன் இழுத்திறுக்க
- முந்திய வடக்கயிற்றுடன் மற்றுநம தன்பர்முன் போயிரந்து கொள்வோம்
- இச்சையுடை நமதிளைய தனயனாகிய கந்தன் இனிமையொடு மாடுமேய்ப்பன்
- இனியுழுது பயிரிடுத னன்றுநன றிதைவிட் டிரந்துண்ப தீனமெனவே
- கச்சுமுலை மாதுமை யுரைத்திடும் புத்தியைக் கைக்கொண் டுளத்திலிதுநற்
- காரியமெனக் கருதி மெத்தக் களித்திடுங் கண்ணுதல் உமைக்காகவே. (4)
- கவுரிகமலா யரனிரந்த சோறிதுவெனக் கமலைமண் கண்டேனெனக்
- காளையொன்றே யாற்கென மாடுமேய்த்ததைக் கட்டிடைய னாரோவெனச்
- சிவனொருவர் தூதென்ன அத்தூது சென்றகதை செப்பிலொரு பாரதமெனச்
- சேரோடுதிருடினா னரனெனக் கட்டுண்ட செய்தி நாமறிவோமென
- அவையில் நடமாடினான் அரனென்ன அவ்வாடலரவம் அறியாதோவென
- ஆலமதை யுண்டனன் அரனென்ன மண்ணுண்ட வதனை அறியோமோவென
- விவரமொடு மலைகளு மலர்மகளு மிவ்வாறு விளையாடு மிவர்கடுணையா
- மேவிவரு புத்ரமித்திர களத்திரருடன் மென்மேலு மிகவாழியே. (5)
நிறைய வுளதோ வெளிதோ கொளுவோம்
- பிறையை முடிக்கணிந்த பெம்மான்-உறையும்
- திருக்காட்டுப் பள்ளி திரிபாவாய் நீயிங்
- கிருக்காகாட்டுப் பள்ளி யெமக்கு. (6)
7-9
தொகு- அடுத்துவரும் தொண்டனுக் காவந்தகனைத் தாளால்
- அடர்ந்த்துவும் சத்தியமே யானால்- எடுத்ததொரு
- மாங்கனிக்கா என்னை மடிபிடித்த மாபாவி
- சாங்கனிக் காதித்தன் வரத்தான். (7)
- குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழன்
- முடக்கோடு முன்னம் அணிவார்க்கு- வடக்கோடு
- தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
- ஊருடையான் என்னு முலகு. (8)
விருத்தம்
- சேய் கொண்டாருங் கமலச் செம்மலுடனே யரவப்
- பாய் கொண்டானும் பணியும் பட்டீச் சுரத்தானே
- நோய் கொண்டாலுங் கொளலாம் நூறுவயதா மளவும்
- பேய் கொண்டாலுங் கொளலாம் பெண்கொள்ள லாகாதே. (9)
10-12
தொகு- நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர் கணிமலன் றாளைக்
- கிட்டையிலே கொடுத்து முத்தி பெறுமளவும் பெரியசுகம் கிடைக்குங்காம
- வெட்டையிலே மதிமயங்கிச் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித்தாலி
- கட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே கிடத்துமட்டும் கவலைதானே. (10)
- திருந்து தமிழிலக்கண வைந்திணைக் கோவை விருத்தகிரி செலவர்க்கோதும்
- பெருந்தகைமை உடையம்யாம் விடுமோலை வெங்கணூர்ப் பிடாரிகாண்க
- இரும்புவியில் ஒருமுறுங்கைக் கொம்பொடியாமற் காத்திங் கிருக்குநீநம்
- முருங்கை தனை வேறோடும் களைந்தனை யென்றாலுனக்கு மறைநன்றாமோ. (11)
- முன்னமொரு தமிழ்ப்புலவன் தனையுண்டு கண்டசுவை முதிர்ச்சியாலே
- தன்னியலை முழுதுமுரைத் தமையா முன்னினைக் கவர்ந்து தடங்காளத்தி
- மன்னவன் உண்டானெனது மாதவத்தின் வலிதீர மண்ணின்மீதே
- என்னுடன் வந்தவதரித்த விளங்கருணைப் பிரகாசனென்னுங் கோவே. (12)
13-14
தொகு- நாணியென்பதை நாரியென் றுரைத்திடு நசையால்
- வேணுவானது வளைந்து போய்புகுந்தது வென்றாற்
- காணலாவ தோருருவ மெய்ந்நாரியைக் கண்டால்
- பூணுவார் மயல் காளைய ரென்பதும் புதிதோ. (13)
- அல்லிமலர்ப் பண்ணவனு மாராய்ந் தறிகவிதை
- சொல்லும் இருவரிடைத் தோன்றிய்யான்- முல்லை
- அரும்பிற் பொலியுமணி முறுவ னல்லாய்
- கரும்பிற் கணுநிகர்த் தேன்காண். (14)
வேலைய சுவாமிகள் பாடல்
தொகு- ஆண்டதனால் எனையொவ்வாய் வித்தையினிற் றமையனினு மதிகமென்றே
- பூண்டவுலக தனிலுள்ளோர் புகல்வது கேட்டிருந்துமென்ன புதுமைதானோ
- காண்டகு கண்மணியே நல்லிளங் கருணைப் பிரகாசக் காளாய்நீதான்
- மாண்டனை யென்றறிந் திருந்தும் உயிர்தரித்தேன் யானுமிகு வன்நெஞ்சேனே. (15)
சிவப்பிரகாச சுவாமிகளின் பிதா
தொகு- கயல்வாய்த்த கண்ணியுல கீன்றவல்லி பங்காவுனது
- செயல்வாய்த்த அன்பருக்கும் அல்லாதார்க்கும் சிரிப்பல்லவோ
- இயல்வாய்த்த எந்தைக்கி யான் வாய்த்ததுவும் இங்கென் றெனக்கு
- வயல்வாய்த்தது மனைவாய்த்தது மைந்தர்கள் வாய்த்ததுவே. (16)