செம்மொழிப் புதையல்/005-020
செங்கைமாத்து வடக்கில் உள்ளது தென்மலை. மலைச்சாரலில் காடு பசுந்தழை போர்த்து இனிய காட்சி தருகிறது. புதர்களில் பல வகைப் பூக்கள் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றன. தென்றல் மெல்லென வீசுகின்றது. நண்பகல் வெப்பத்தால் வெம்பி வியர்த்த செல்வமக்கள் இம் மென்காற்றின் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றனர். மாலை மணி மூன்றுக்கு மேலாகியதனால் வெயிலின் வெப்பமும் சிறிது தணிந்து வருகிறது.
கானத்தின் அருகே ஓடும் காட்டாறு சிறிது அகலமாகவே உளது. செக்கர்ச் செவேரெனப் பரந்து விளங்கும் செம்மணல், சிவந்த புடவை யொன்றை நீட்டிப் புரளவிட்டது போலத் தோன்றுகிறது. அதன் கரையில் தென்னைகள் ஓங்கி நின்று குலைகள் தாங்கிக் காற்றில் மெல்ல அசைகின்றன. கரையருகே அழகிய ஊரொன்று தோன்றுகிறது. அதன்கண் மிகவுயர்ந்த மாடி வீடொன்று காணப்படுகிறது. அதன் பின் புறத்தே ஆற்றிற்குக் காலடிப்பாதை வருகிறது. அவ்வழியே மங்கையர் இருவர் வருகின்றனர்.
ஒருத்தி மாந்தளிர் போன்ற நிறமுடையவள். அவளது பின்னிவிட்ட கூந்தல் இடைமறையுமளவு நீண்டிருக்கிறது. பொன்னில் கல் வைத்திழைத்த வில்லையொன்று அவள் குழலில் இருந்து நல்ல அழகு செய்கிறது. கைவளைகள் கண்கவரும் வனப்புடையன. நீல நிறங்கொண்ட அவளது புடவையில் நித்திலம் தைத்தது போன்ற பூவேலைகள் இருந்து பொலிகின்றன. அவளருகே செல்பவள் இத்துணைச் சிறப்புடையளாக இல்லை. ஒத்தயாண்டினளாயினும், ஒப்பனையும் ஒழுக்கமும் நோக்கின், முன்னையவட்கு, நிலையில் தாழ்ந்தவளென்றே இவள் தோன்றுகிறாள். மணிநிறம் கொண்ட இவளது உள்ளத்தின் நேர்மையை, முகம் இனிது புலப்படுத்துகிறது. இவளை அடிக்கடி, அவள் “தோழி, தோழி" என்கிறாள்; அவளை இவளும் "அன்னாய்"என அழைக்கிறாள். ஆகவே, அவளை நாம் தலைவியென்றும், இவளை அவட்குத் தோழி யென்றும் வழங்குவோம்.
தலைவியும் தோழியும் ஆற்றிடைக்குறைக்குச் செல்கின்றனர்.அதனை துருத்தி (an island in the bed of a river) யென்றலும் மரபு. அங்கே, மா, வேம்பு, ஆல், தென்னை முதலிய மரங்கள் அழகுறத் தழைத்துப் பூத்துக் காய்த்து நலம் கனிந்திருக்கின்றன. புதர் தன்பால் செறிந்த பூவால் நறுமணம் கமழ, தென் காற்று மெல்ல வந்து தளிர்களை இனிதசைப்ப, தரை முழுதும் அறுகுபடர்ந்து பசுங்கம்பலம் விரித்ததுபோல் இன்பம் செய்கிறது. கிள்ளையும் புறவும் குயிலும் பூவையும் இசைபாடும் இவ் வினிய விடம் இவ் விருவர் மனத்தையும் வேறிடம் பெயராதவாறு பிணித்து விடுகிறது. “அன்னாய், இங்கே சிறிதே அமர்வோமே என்ன இனிய இடம்;” என்கின்றாள் தோழி.
தலைவி:-என்னை யாதும் வினவல். தோழி, இன்பமுடைய வர்க்கே இயற்கைக் காட்சியும் இன்பமளிக்கின்றது.
தோழி :-இதற்குத்தான் “கெட்டார்க்கு நட்டாரோ இல்" என்று சான்றோர் கூறுகின்றனர். அதுகிடக்க; ஏன் இவ்வாறு பேசுகின்றாய்? இயற்கை யாவர்க்கும் பொது. வாழ்க்கையில் இன்பமுடையார்க்கேயன்றி, அதனை இழந்தார்க்கும் அஃது இன்பம் வழங்குவதில் இழுக்குவது கிடையாது.
தலைவி:-அப்படித்தான் அறிவுடையோர் கூறுகின்றளர். ஆனால், என்னளவில் அது மாறுபட்டிருக்கிறது.
தோழி :- அப்படியானால், இதோ! இங்கே தோன்றும் தென்மலையும், செழுங்கானமும், சேயாறும் உங்கட்கு இன்பம் செய்யவில்லையோ?
தலைவி :- இவற்றைக் காணும்போது என் உள்ளம் திகீர் என்று கலங்குகின்றது. மானினம் துணையொடு கூடிச் செல்வதும், பறவைகள் தத்தம் துணையோடிருந்து பாடி மகிழ்வதும் எனக்கு வருத்தம் செய்யுமே என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது.தோழி :- (மருண்டு) அன்னாய், நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. தலைவர் உடன் இருக்கும்போது இவையெல்லாம் உனக்கு இன்பத்தைத் தானே செய்யும்? அவரை விட்டுத் தனியே வந்திருப்பதனால் இவ்வாறு பேசுகின்றாயோ?
தலைவி :- தோழி, இனி, தனியேதானே இருக்கவேண்டும். இப்போது உன்னோடு தனியே இருப்பது தனிமையாகுமா?
தோழி :- (பின்னும் மருண்டு) அன்னாய், உன் கருத்தை விளக்கமாய்ச் சொல், எனக்கு உன் பேச்சு சிறிதும் விளங்கவேயில்லை.
தலைவி :- நேற்று நம் காதலர் பேசியதில் இருந்து அவர் நம்மைப் பிரிந்தே போவர் என்று அறிகின்றேன். அது முதல் என் நெஞ்சம் இவ்வாறு துயரடையத் தொடங்கிவிட்டது.
தோழி :- (சுட்டிக்காட்டி) அதோ, நம் தலைவர் வருகின்றார். நீ அப் புதரிடையே மறைந்துகொள். நான் அவருடன் பேசி இதன் உண்மையை அறிகின்றேன்.
தலைவி :- நல்லது; அப்படியே செய். (மறைதல்)(தலைமகன் வருகின்றான் தோழி பூப்பறிப்பதைக் காண்கின்றான்; அவள் அருகே வருகின்றான்.)
தலைவன்:- (நெருங்கி) தோழி, நீ இங்கே என்ன செய்கின்றாய்?உன்னோடு தலைமகள் வந்தாளே எங்கே?
தோழி :- (கையாற் காட்டி) அதோ தோன்றும் புதர்க்குப் பின்னே பூப்பறிக்கப் போனார்கள். அழைத்து வரலாமே. (போக ஒருப்படுதல்)
தலைவன்:- (தடுத்து) வேண்டா. நில் நில். உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். அன்றும் நீ தானே துணை செய்தாய்?
தோழி :- (தலைகுனிந்து தனக்குள்ளே) தலைமகள் சொன்னது போல், இவர் தன் பிரிவைத்தான் இப்போது நம்பால் சொல்வார்போல இருக்கிறது. இருக்கட்டும்.தலைவன் :-ஒன்றுமில்லை. ஆண்மகன் ஒருவனுக்கு உயிராவது எது? தெரியுமோ?
தோழி:-ஐயனே, யானோ பெண்.எனக்கு அது தெரியாதே.
தலைவன்:-(முறுவலித்து) “வினையே ஆடவர்க்கு உயிர்."அதாவது, புகழ்தரக்கூடிய வினையைச் செய்வது தான் ஆண்மகனுக்கு உயிர். உயிரென்பது உயிரொத்த கடமை.
தோழி:-ஆமாம். இருக்கலாம். அதனை எனக்குச் சொல்வதால் பயன்?
தலைவன்:- அந்தக் கடமையைச் செய்ய யான் போக வேண்டும். சில நாட்களே பிரிந்திருக்க வேண்டும். என்ன சொல்கின்றாய்?
தோழி :- இதைத்தான் எனக்குச் சொல்ல விரும்பினீர்களா? அப்படியானால், இதனோடு வேறொன்று சொல்வார்களே? அது உங்கட்கு நினைவிருக்குமே.
தலைவன்:-(திடுக்கிட்டு) என்ன அது? எனக்கு நினைவில்லை.
தோழி:-எனக்கு நினைவிருக்கிறது: “வினையே ஆடவர்க்குயிரே, மனையுறை வாள்நுதல் மகளிர்க்கு ஆடவர் உயிரே"என்று சொல்வார்களே.
தலைவன்:-(மகிழ்ந்து) ஆமாம். மகளிர் தம் கணவனை உயிர் போலக் கருதி ஒழுகுவதுபோல, ஆடவர் தாம் செய்ய வேண்டிய வினையை உயிர்போல் கருதிச் செய்ய வேண்டும். இதுதானே அதன் கருத்து.
தோழி:-ஏன்? அதற்கு உள்ள பொருளை உள்ளபடியே......
தலைவன்:-(இடைமறித்து) நான் சொல்வது தவறேர்?
தோழி:-...ஆடவர்க்கு வினையே உயிர்; அவர்தம் மனைவியர்க்கு அவரே உயிர். அவர் பிரிந்தால், அவர்தம் மகளிரும் உயிர் பிரிவர். இதுதானே உண்மைப் பொருள்!
தலைவன்:-எப்படியோ போகட்டும். இன்று யான் தலைமகளோடு இனிதிருப்பதற்கு அன்று நீ செய்த
“செல்இனி, சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அறமாறி யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என்திறம் யாதும் வினவல்; வினவில்
பகலின் விளங்கும்நின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு”
இனி நீ செல்க, சென்று அங்கே செய்யும் வினையை முடித்துக்கொண்ட பின்பே இங்கிருந்து வருவோரைப் பார்த்து அன்பு இல்லாமையால் என்னால் துறக்கப்பட்ட தலைமகள் நலத்தை அறிவீர்களோ? என்று வினவுக; வினைமுடியு முன்பு அவர்களை வினவ வேண்டா. வினவில், சூரியன்போல் தலைமை கொண்டு விளங்கும் உமது தலைமை சிதைந்துவிடும். வேறு வகையால் கெடுதற்கில்லாத உமது செய்வினையும், முடிவடையாதபடி அவலம் உண்டாயினும் உண்டாகிவிடும்.
தலைவன் :- ஏன்? எனக்கு விளங்கச் சொல்.
தோழி :- என் தோழி நின் பிரிவாற்றாது, இறந்தாலும் இறந்து விடுவாள். - (புதர் மறைவிலிருக்கும் தலைவி வெளிப்படுகிறாள்)
தலைவ்ன் :- இதோ, திருமகள் வருகின்றனளே.... (சென்று இரு கைகளையும் பற்றி) - நீ எப்போது இங்கு வந்தாய்?
தலைவி :- காதல, இதுவரையும் என் தோழி சொன்னதைக் - கேட்டீர்களா?
தலைவன் :- இனி அதை நினையேன். உலகு முழுவதும் ஒருங்கு வருவதாயினும் இனி உன்னைப் பிரியேன். வா. இவ்வியற்கைக் காட்சியைக் கண்டு இன்புறலாம்.
இயற்கைக் காட்சி இன்ப ஊற்று.
இவ்வாறு பலப்பல சொல்லிப் பழிப்பர்.
தலைவன் :- ஏன்? நீங்களும் மனையிலுள்ள பிறரும் அவ்வாறு அலர் உண்டாகாதவாறு செய்யலாமன்றோ?
தோழி :- உலைவாயை மூடலாம்; ஊர்வாயை மூடலாமோ?
தலைவன் :- உண்டோ , முயன்றால் முடியாப் பொருள்?
தோழி :- என்ன சொல்கின்றீர்கள்.
“செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம்
பொய்யாதல் யான்யாங்கு அறிகோம் மற்று ஐய!
அகல்நகர் கொள்ளா அலர் தலைத் தந்து
பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகன் அல்லை மன்ற இனி."
(கலி - 19)
தலைவன் :- (முறுவலித்து) தோழி! நீ ஏன் வெகுள்கின்றாய்?
தோழி :- ஐய! நீங்கள் அன்று செய்தவற்றையும் இன்று செய்வதையும் பார்க்கின் இப்போது அவை . எல்லாம் பொய்யே என்பது வெளிப்படை. பொய்கூறி ஒழுகுபவன் மகனா (மனிதனா)?
தலைவன் :- நீ தலைமகள்பால் கொண்ட காதலால் இவ்வாறு பேசுகின்றாய். நான் அதற்கு மகிழ்கின்றேன். ஆனால் -
தோழி :- "ஆனால்" என்பது என்ன?
தலைவன் :- வினை செய்ய வேண்டியவிடத்து அதைச் செய்யாது விடுபவன் மனிதனாகான். 'செய்யத் தக்க செய்யாமையானுங் கெடும்; அல்ல செய்யவும் கெடும்.' இது நீ அறியாததல்லவே! மேலும் காதலரைப் பிரிந்து ஒரு காரியம் செய்து வந்த வழி, அவர் காதல் மாண்புறுமே தவிர, வேறு ஒன்றும் உண்டாகாது. நான் சென்று வருகின்றேன்.
தோழி :- (நெடிது நினைந்து) ஐய,
“செல்இனி, சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அறமாறி யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ! என்று வருவாரை
என்திறம் யாதும் வினவல்; வினவில்
பகலின் விளங்கும்நின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு”
இனி நீ செல்க, சென்று அங்கே செய்யும் வினையை முடித்துக்கொண்ட பின்பே இங்கிருந்து வருவோரைப் பார்த்து அன்பு இல்லாமையால் என்னால் துறக்கப்பட்ட தலைமகள் நலத்தை அறிவீர்களோ? என்று வினவுக; வினைமுடியு முன்பு அவர்களை வினவ வேண்டா. வினவில், சூரியன்போல் தலைமை கொண்டு விளங்கும் உமது தலைமை சிதைந்துவிடும். வேறு வகையால் கெடுதற்கில்லாத உமது செய்வினையும், முடிவடையாதபடி அவலம் உண்டாயினும் உண்டாகிவிடும்.
தலைவன் :- ஏன்? எனக்கு விளங்கச் சொல்.
தோழி :- என் தோழி நின் பிரிவாற்றாது, இறந்தாலும் இறந்து விடுவாள். (புதர் மறைவிலிருக்கும் தலைவி வெளிப்படுகிறாள்)
தலைவ்ன் :- இதோ, திருமகள் வருகின்றனளே....(சென்று இரு கைகளையும் பற்றி) நீ எப்போது இங்கு வந்தாய்?
தலைவி :- காதல, இதுவரையும் என் தோழி சொன்னதைக் கேட்டீர்களா?
தலைவன் :- இனி அதை நினையேன். உலகு முழுவதும் ஒருங்கு வருவதாயினும் இனி உன்னைப் பிரியேன். வா. இவ்வியற்கைக் காட்சியைக் கண்டு இன்புறலாம்.
இயற்கைக் காட்சி இன்ப ஊற்று.