சேக்கிழார் தந்த செல்வம்/இளமை துறந்தார்


9. இளமை துறந்தார்

பெரிய புராணத்தில் காணப் பெறும் எல்லா அடியார்களும் இறையன்பு, குறிக்கோள் என்ற இரண்டிலும் தளராத ஊக்கமுடையவர்களாய் வாழ்ந்தார்கள் என்பதை அறிகிறோம். அப்பூதி அடிகள், திருநீல நக்கர், பெருமிழலைக் குறும்பர், உருத்திர பசுபதி போன்றவர்கள், தாம் மேற்கொண்ட வாழ்க்கையில் எவ்வித எதிர்ப்பையும் சந்திக்காமல், அதே நேரத்தில் தம் குறிக்கோளிலிருந்து தளர்ந்து விடாமல், வாழ்ந்து இறையடி அடைந்தவர்கள் ஆவார்கள். சிறுத் தொண்டர், கண்ணப்பர், இளையான்குடி மாறர், கணம் புல்லர் போன்ற அடியார்கள் மிகச் சிறிய தடையையோ அன்றி, மிகப் பெரிய தடையையோ சந்தித்து, அதில் வெற்றி கொண்டு, உலகம் காணுமாறு, தாம் பெற்ற வெற்றியை நிலை நாட்டினர். இவர்கட்கு வந்த சோதனை என்று கூறுவதை விட, இவர்கள் குறிக்கோள் பயணத்தில் எதிர்பட்ட தடையாகும் இது என்று கூறினால் தவறில்லை. மகனைக் கறி சமைப்பதும், கண்ணை இடந்து அப்புவதும், பல நாள் உணவின்றி இருந்தும், பகலில் வித்திய செந்நெல் முளையை வாரிக் கொண்டு வந்ததும், தன் கூந்தலை விளக்கிலிட்டு எரிப்பதும் அனைவரும் காணக் கூடிய முறையில் நிகழ்ந்த தடைகளாகும். -

316 சேக்கிழார் தந்த செல்வம் வேறு வகைப்பட்ட சோதனை இவை இரண்டும் தொகுப்பிலும் அடங்காத ஒரு சோதனை அல்லது தடை ஒருவருக்கு வந்தது. அதனை எவ்வாறு அவர் எதிர்கொண்டார்? எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதைக் காண்பது பயன் உடைய செயலாகும். . மனைவியார் ஊடல் பழைய தில்லையம்பதியில் சட்டி, பானை செய்து விற்கும் வேட்கோவர் குடியில் பிறந்தவர்; உலோகத்தால் செய்யப்பெற்ற பண்ட பாத்திரங்கள் அதிகம் புழங்காத அந்நாளில் அனைத்துச் செயல்களும் மண் சட்டிகளிலேயே செய்யப் பெற்றன ஆதலால் சட்டி, பானை செய்பவர்களுக்கு நன்றாக வாணிபம் நடைபெற்ற காலம். அக்குடியில் பிறந்த ஒருவர், சிவபக்தியில் மேம்பட்டவர், சிவனடியார் கட்குத் தேவையான திருவோடு செய்து தருவதில் அதிக நாட்டம் கொண்டிருந்தவர். எல்லா வளங்களையும் பெற்றிருந்த அவர், சிவ பெருமான் இடத்து நீங்காத பக்தி கொண்டிருந்தாலும் அவனுடைய திருநீலகண்டத்தையே மிகவும் போற்றி வழிபட்டுவரலானார். அதற்கொரு காரணத்தையும் சேக்கிழார் கூறுகிறார். கடலில் புறப்பட்ட நஞ்சு, அகில புவனங்களையும் அழித்துவிடுமோ என்று அஞ்சிய நிலையில், சிவன் நஞ்சை குடித்துவிட்டார். இளமை துறந்தார் . 317 அது அவருள்ளே செல்லாமல், கழுத்திலேயே தங்கிவிட்டது. அவருடைய செம்மேனியில் கருநஞ்சு நிலைத்துவிட்டமையின், அந்தக் கருமை, நீலம் என்று அழைக்கப்பட்டது. நீலகண்டன் என்ற காரணம் பெரிதும் இறைவனுக்கு நிலைக்கலாயிற்று. இளமைத் துடிப்பு மேட்டுக்குடி மக்களுக்குரிய செல்வம் தட்டிக் கேட்க ஆளில்லாத ஒரு சூழ்நிலை, இந்த நிலையில் வாழ்ந்தவர் திருநீலகண்டர் ஆதலால், தவறு செய்ய வாய்ப்பும் நிரம்ப இருந்தது. - அழகிய இளம் மனைவி வீட்டில் இருக்கவும், அந்தப் பெண்ணின்பத்தை வெளியே நாடினார், இவருடைய செயல் மனைவியார்வரை எட்டி விட்டது. அந்தக் காலத்தில், திருநீலகண்டரின் இச்செயல் புதுமையானது என்றோ, பெருந்தவறு என்றோ யாரும் கருதவில்லை. - பிறர் எங்ங்ணம் கருதினார்களோ தெரியாது, ஆனால், திருநீலகண்டரின் மனைவியார் இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அதிர்ச்சி பெற்றுவிட்டார். சாதாரணமாகக் கணவன் மனைவியரிடையே ஊடல் தோன்றுவதும் அதன் தரத்திற்கேற்பச் சில பல நாட்கள் நீடிப்பதும் பின்னர் அவ்ஊடல் மறைவதும் இவ்உலக இயற்கையேயாம். இத்தகைய ஊடல் எக்காரணம் பற்றியும் வரலாம். காரணமின்றியும் வரலாம். வாழ்க்கைச் சுவையூட்டுவதற்காகவே 318 சேக்கிழார் தந்த செல்வம் தோன்றுவ தாதலின், உப்பு அமைந்தற்றால் புலவி என்கிறான் வள்ளுவன். அதாவது, ஒருசாப்பாட்டிற்கு உப்பு எவ்வளவு தேவையோ அதுபோல் புலவியும் அதாவது - ஊடலும் சிறந்த வாழ்க்கைக்குத் தேவையானதாகும். . . திருநீலகண்டரின் மனைவிக்கு வந்த ஊடல் ஆழமானதாகும். தன்னை விட்டுவிட்டுக் கணவன் வேறொருத்தியிடம் சென்றான் என்றால் அது தனக்கிழைக்கப்பட்ட அவமானம், என்றுதான் மனைவி நினைப்பாள். ஆனால், இவர் தம்மைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், பெண் குலத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் என்று நினைத்து விட்டார். ஒரு பெண்ணுக்குச் செய்யப்பட்டாலும் நூறு பெண்களுக்குச் செய்யப்பட்டாலும் மான பிரச்சினை ஒன்றுதான். தம்மைவிட்டுக் கணவன் வேறொருத்தியை நாடியதால் தம்முடைய மானம் மட்டும் போனதாக அவர் கருதவில்லை. பெண்குலம் முழுவதற்கும் மானம் போய்விட்டதாகவே கருதினார். இந்த எண்ணம் அவருடைய ஆழ்மனத்தில் நிறைந்து இருந்தமையால்தான் பின்னர், ‘என்னைத் தொடாதீர்!’ என்று சொல்வதற்குப் பதிலாக எம்மை’ என்று கூறிவிடுகிறார். தப்புக் கணக்கு சாதாரண ஊடலாக இருப்பின் அம்மகளிர் எவ்விதப் பணியையும் நிறைவேற்றாமல் முடங்கிக் கிடப்பர். இளமை துறந்தார் 319 பிறருடைய கவனத்தைக் கவர்தற்கு இது தக்க வழியாகும். ஆனால், திருநீலகண்டரின் மனைவியோ, தம்முடைய ஊடற்காலத்திலும் செய்யவேண்டிய பணி அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்தார். அவருடைய பெண் உணர்வு அவமானப்படுத்த பட்ட்மையின், மனைவியாக இருக்க மறுத்துவிட்டார். இப்படிச் சில நாட்கள் செல்லுகின்றன. திருநீல கண்டரைப் பொறுத்தமட்டில் மனைவியாரின் கோபம் நாளாவட்டத்தில் கணிந்துவிடும் என்று கருதிக் காத்திருந்தார். அம்மையார் சினம் தணிவதாக இல்லை. மானம் போய்விட்டது என்று கருதியதால் வந்த சினம். போன மானம் திரும்பிவரப் போவதில்லை, ஆதலால் அவருடைய சினமும் தணிவதற்கு வாய்ப்பே இல்லை. அம்மையாரின் மனவேறுபாட்டின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாத திருநீலகண்டர் நாட்கள் செல்லச் செல்ல மனைவியின் சினம் தணிந்துவிடும். என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டார். 'திருநீலகண்டம்’ அதன்பயனாக, ஒருநாள் மனைவியிடம் நெருங்கிப் பல் வேண்டுதல்களைக் கூறி அவரை அணை வதற்காக நெருங்கியவுடன் சற்றும் எதிர் பாராத ஒரு நிகழ்ச்சி அங்கு நடை பெற்று விட்டது. திருநீலகண்டரைப் பார்த்து, அவருடைய மனைவியார், - - * 320 சேக்கிழார் தந்த செல்வம் தீண்டுவீர் ஆயின் எம்மைத் திருநீலகண்டம்’ '.' • ' . . - (பெ. பு-365) திருநீலகண்டத்தின் பெயரிலேயே தம் முழு உயிரையும் வைத்திருப்பவரும் இறைவனைவிடத் திருநீலகண்டத்தையே தம்மால் விரும்பப்படும் பொருளாகக் கொண்டவருமான திருநீலகண்டருக்கு அம்மையாரின், 'எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்ற மூன்று சொற்களும் பெரிய இடியாகத் தலையில் இறங்கிவிட்டன. - இந்தச் சொற்கள் அவரை என்ன செய்தன என்பதைத் தெய்வச் சேக்கிழார் இதோ கூறுகிறார்: ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்டஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி. "ஏதிலார் போல நோக்கி, எம்மை என்றதனால் மற்றை மாதரார் தமையும் என்தன் மனத்தினும் தீண்டேன்' என்றார். (பெ. பு-366) இப்பாடலின் முன்னிரண்டு அடிகள் - நீலகண்டரின் வாழ்க்கைக் குறிக்கோளும், இப்பொழுது நடந்த நிகழ்ச்சிகளும் மோதுகின்ற ஒரு நிலையை இளமை துறந்தார் . 321 உணர்த்துகின்றன. இறைவனுடைய திருவடிவின் பல்வேறு உறுப்புகளில் நீலகண்டமும் ஒன்றாகும். ஏனைய உறுப்புக்கள் அவ்உடலுடன் ஒட்டியவை. கண்டம் அல்லது கழுத்து நீலமான நிகழ்ச்சி இடையே வந்தது. ஆனாலும் அந்தக் கழுத்து நீலமான பிறகு நீலகண்டம்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. காரணம் என்னவெனின், அந் நஞ்சு இறைவனின் உள்ளே சென்றிருப்பின் அங்குத் தங்கியிருக்கும் பதினான்கு உலகங்களையும் அழித்திருக்கும். ஆதலால் அது கீழே இறங்கிச் செல்லாமல் கழுத்தளவிலேயே நிற்குமாறு செய்துவிட்டார். எனவே, நீலகண்டம் என்றால் பிறருடைய துன்பத்தைப் போக்குவதற்கு உரிய ஒர் அடையாளமாக, குறியீடாகக் (Symbol) கருதப்பட்டது. இவ்வளவு ஆழமான கருத்தை மனத்தில் கொண்டுதான் திருநீலகண்டர், இறைவனுடைய அப்பெயரிடத்து எல்லையில்லாத பக்தி கொண்டு இருந்தார். அப்பெயரினிடத்துத் தம் உயிரையே வைத்திருந்தார் ஆதலின், அம்மையார் திரு நீலகண்டம் ஆணை எம்மைத் தொடாதீர்' என்று கூறியவுடன் ஒரே வினாடியில் வேற்று மனிதராக மாறிவிடுகிறார். - - இறைவனுடைய பெயர்கள் உயிர்களைத் துன்பக் கடலிடையே தோணித் தொழில் பூண்டு கரை 322 சேக்கிழார் தந்த செல்வம் ஏற்றுவன என்ற நாவரசர் பெருமானின் பாடலுக்கேற்ப அம்மையார் பயன்படுத்திய திருநீலகண்டம்' என்ற சொல், அவருடைய கணவராகிய வேட்கோவரை மிகப் பெரிய உயரத்திற்குத் தூக்கிவிட்டுவிட்டது. பேதியா ஆணை’ திருநீலகண்டம் என்ற ஆணையைப், பேதியா ஆணை’ என்று சேக்கிழார் சொல்வதன் காரணம் யாது? சற்று நிதானமாகவும் விரிவாகவும் சிந்திக்க வேண்டிய இடமாகும் இது. பேதியா ஆணை’ ೯೯p தொடர் வருகின்ற இரண்டடிகளையும் காண்டது நலம். ஆதியார் நீலகண்டத்து - அளவுதாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணைகேட்ட பெரியவர் இப்பாடல் சிக்கலாக உள்ளது என்பது ஒருதலை எனவே, உரை எழுதிய பலரும் தங்கள் தங்கள் கருத்துக் கேற்ப எழுதிச்சென்றனர் என்பதையும் அறிதல் வேண்டும். இரண்டடிகட்கும் பின்வருமாறு: பொருள் செய்தல் ஒரளவு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆதியார்-எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கின்ற - - -- சிவபெருமானுடைய இளமை துறந்தார் . 323 நீலகண்டத்து-நீலகண்டத்தினிடத்து; தாம் கொண்ட ஆர்வம்-தாம் வைத்திருக்கின்ற ஆர்வத்தினது அளவு எத்தகையது என்பதை பேதியா ஆணை-பிரித்து, வேறுபடுத்திக் காட்டுகின்ற ஆணையை கேட்ட பெரியவர்-காதால் கேட்ட பெரியவர்; என்பதே இந்த இரண்டடி களுக்குரிய பொருத்தமான பொருளாகும். இவ்வாறு பொருள் சொல்வதற்குரிய காரணம் வருமாறு: பல சமயங்களில் ஒரு பொருளிடத்து ஒருவன் வைத்திருக்கின்ற பற்று, ஆசை, பக்தி என்பவற்றை அவனேகூட அறிந்துகொள்ள முடியாத நிலை இருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அடிமனத்தின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் இந்த உணர்வு எத்தகையது என்பதை அறியவேண்டு மானால், அதற்கொரு சோதனை வேண்டும். திருநீலகண்டரின் ஆழ்மனத்தில் நிறைந்து கிடந்த ஒன்று, இறைவனுடைய திருநீலகண்டத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வமே ஆகும். அந்த ஆர்வத்தின் அளவு எத்தகையது என்பதை அவரே அறிந்திருக்கவில்லை. இப்பொழுது ஆற்று வெள்ளம் போல், அவரது ஆழ்மனத்தில் அடங்கிக் கிடக்கின்ற பக்தி, அம்மையாரின் ஆணையைக் கேட்டவுடன் பொங்கி எழுகின்றது. அளவை வேறுபடுத்திக் காட்டுகின்ற ஆணை என்று தெய்வச் சேக்கிழார் கூறுவது எவ்வளவு பொருத்தமானது! இந்த ஆணை 324 சேக்கிழார் தந்த செல்வம் இல்லையானால் அவர் கொண்டிருந்த நீலகண்ட பக்தி அவருக்கும் இறைவனுக்கும்மட்டும் தெரிந்ததாய் அம்மட்டோடு நின்று மறைந்திருக்கும். அந்த அளவு எத்தகையது என்பதை வேதித்து (வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் தோன்றிய ஆணை, என்று கூறுவதால், இந்த ஆணையின் ஆற்றல் எத்தகையது, ஆணையைக் கேட்டு அஞ்சி அகன்றவர் எத்தகையவர் என்பதையெல்லாம் காட்டுதலின், பேதியா ஆணை’ - வேறுபடுத்திக் காட்டுகின்ற ஆணை என்ற பரந்த பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார். என்னை-எம்மை சேக்கிழார் கூற்றை - ஒரு வினாடியில் மறந்து விட்டு, நடந்தவற்றைமட்டும் கற்பனையில் கொண்டு. பார்த்தால், சிலவற்றை விளங்கிக்கொள்ள முடியும் எவ்வளவு முயன்றும் சிலவற்றை ஏன் என்று விளங்கிக் கொள்ள முடியாது. நடைபெற்றது உலகியலில் எல்லா இடங்களிலும் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்ச்சித்ான். மேட்டுக் குடியில் பிறந்த ஒர் இளைஞன், பரத்தையிடம் செல்வது, மனைவியிடம் குறை இரந்து மன்னிக்கு மாறு வேண்டுவது, வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் ஒன்றாகும். அப்படி என்றால், திருநீலகண்டர் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்தச் சாதாரணச் இளமை துறந்தார் . 325 சம்பவத்திற்கு ஒரு புராணம் பாடவேண்டுமா என்ற வினாத் தோன்றினால், அது நியாயமானதே ஆகும். இந்நிகழ்ச்சி எங்கும் நடைபெறுவ தாயினும், தமிழகத்தில் வாழும் ஒரு பெண், என்னைத் தொடாதே என்று கூறுவாளே தவிர, எம்மைத் தீண்டுவீராயின்’ என்று கூறும் மரபு இல்லை. அப்படியானால், அடக்கமே உருவான அப் பெண்ணின் வாயில் என்னை என்ற சொல்லுக்குப் பதிலாக 'எம்மை என்ற சொல் வந்தது ஒரு புதுமைதான். சாதாரண நிலையில் உள்ளவர்கள் இது ஏதோ வாய்த் தவறுதலாக என்னை என்பதற்குப் பதிலாக 'எம்மை என்று கூறிவிட்டார். ஆகவே, அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்ற முறையில் தான் அனைவரும் பொருள் கொள்வர். அவ்வாறு , பொருள் கொள்வதிலும் தவறில்லை. ஏனென்றால், இதைக் கூறிய திருநீலகண்டரின் மனைவி தன்மைப் பன்மையாக இதனைக் கூறவில்லை. என்னைத் தொடதீர்! திருநீலகண்டம் ஆணை என்று கூறவந்தவர், 'எம்மை’ என்று கூறிவிட்டார். நிச்சயமாக உலகத்தில் உள்ள பெண்களையெல்லாம் தம்மோடு சேர்த்துக் கொண்டு, பெண்கள் ஒருவரையும் தொடாதீர்!’ என்ற ப்ொருளில் 326 சேக்கிழார் தந்த செல்வம் அம்மையார் இதனைச் சொல்லவில்லை என்பது தெளிவு. அப்படியானால், பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி ஏதிலார் போல நோக்கி, - "எம்மை என்றதனால் மற்றை மாதாரார் தமையும் என்தன் மனத்தினும் தீண்டேன்' என்றார் என்று சேக்கிழார் பாடுவதன் நோக்கம் யாது? 'எம்மை’ என்ற சொல்லை, அம்மையார் வேண்டுமென்றோ தம் விருப்பத்தை வெளிப்படுத்தும் சொல் என்றோ கருதி, எம்மை என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அது வாய்தவறி வந்த வார்த்தைதான். எனினும், அந்த ஒரு வார்த்தை, திருநீலகண்டரின் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தைச் செய்ய ஏதுவாய் அமைந்துவிட்டது. ஒரு வினாடியில் பெரியவர் ஆனது - அம்மையாரின் கூற்றில் அமைந்திருந்த இந்தச் சொல்லைக்கேட்டவுடன் நிகழ்ந்தது யாது என்பதைச் சேக்கிழார் மிக அற்புதமாக விளக்குகிறார். சிவநேயச் செல்வராய், சிவனடியார்களிடம் அன்பு பூண்டவராய், திருநீலகண்டத்திடம் ஈடு இணையற்ற பக்தி கொண்டவராய்த் தில்லை மூதூரில் வாழ்ந்த வேட்கோவரான ஒரு சராசரி அடியார் ஒரே இளமை துறந்தார் . 327 வினாடியில் பெரியவராகிவிடுகிறார். அது எப்படி ஒரு வினாடியில் பெரியவராவது வள்ளுவன் குறளை நினைவிற்கு கொண்டுவருவது நலம். செயற்கரிய செய்வர் பெரியர் என்பதுதானே பெரியவர்களுக்குரிய இலக்கணம்: இப்பொழுது தில்லையில் வாழ்ந்த வேட்கோவரான ஒரு சராசரி மனிதர், எம்மைத் தொட்டால் திருநீலகண்டம் ஆணை’ என்ற சொற்களைக் காதில் கேட்கிறார். ஒரு மனைவியானவள் கோபத்தில் பேசுவதற்கு எல்லாம் பொருள் செய்யத் தொடங்கினால் உலகம் நடைபெற முடியாது. ஆகவே தான் காதலர்கள் செய்து கொள்ளும் சத்தியத்திற்கும் கணவன் மனைவியர் ஊட்லில் செய்துகொள்ளும் ஆணைக்கும் பொருள் செய்யக்கூடாது என்று உலகிடை உள்ளோர் கூறுவர்." திருநீலகண்டர் நம்மைப்போல் சாதாரண மனிதராய் இருந்து, மனைவியின் இந்தச்சொற்களுக்கு அதிக மதிப்புத் தராமல் மனைவியைத் தொட்டிருந்தால், மனைவியார் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது உண்மைதான். அவ்வாறு செய்யாமல், அம்மையாரின் ஆணையில் குறிக்கப் படாத ஒரு பொருளை, அந்த ஆணையை வைத்த அந்த அம்மையார்கூடக் கனவிலும் கருதாத ஒரு பொருளை, இப்பொழுது திருநீலகண்டர் அந்த ஆணையில் ஏற்றிக் காண்கிறார். அவ்வாறு கூறக் 328 சேக்கிழார் தந்த செல்வம் காரணம் யாது? சரியோ, தவறோ அந்த எம்மை’ என்ற சொல் திருநீலகண்டம்’ என்ற சொல்லோடு சேர்ந்தல்லவா வந்துவிட்டது! சாதாரண காலத்தில் எம்மை என்ற சொல்லுக்கு இப்படிப் பொருள் கொள்ளவேண்டிய தேவையில்லை. இப்பொழுது திருநீலகண்டத்தோடு சேர்ந்துவந்தமையின், அச். சொல்லைக் காதில் கேட்டவுடனேயே தில்லை வேட்கோவர், திருநீலகண்டர் என்ற பெரியவராகி. விட்டார் என்கிறார் சேக்கிழார். ஆணை கேட்ட பெரியவர் என்று சேக்கிழார் பாடுவது அவருடைய பக்தியின் விளைவாக வந்ததா, அடியார்களைப் புகழ்ந்து சொல்ல வேண்டும் என்ற கருத்தில் வந்ததா என்று பார்த்தால், இல்லை என்பது விளங்கும். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அறுவகைக் குற்றங்களிலிருந்து விடுதலையாவது கடினம். அதுவும், முற்றிலும் விடுதலை ஆவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும். இம்மாதிரி நிலையில் பொருள் வளம் மிக்க குடும்பத்தில் பிறந்த ஒருவர்-யாருடைய தயவுக்காகவும் தம் வழிகளை மாற்றிக் கொள்ளத் தேவையில்லாத ஒருவர் இந்த ஆறுவகைக் குற்றங்களிலும் மிக ஆழமானதான காமக் குற்றத்திலிருந்து விடுபடுகிறார் என்றால், அது ஈடுஇணையற்ற ஒரு நிகழ்ச்சி ஆகும். ஏதோ ஒரு குறிப்பிட்ட பெண்ணினிடத்து இம்மாதிரி மனம் கொண்டார் என்றால், ஒருவேளை இளமை துறந்தார் . 329 அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், எம்மை’ என்றதனால், வேறு எந்த ஒரு பெண்ணையும் மனத்தினாலும் தீண்டேன் என்ற முடிவுக்கு ஒருவர் வருகிறார். இத்தகைய முடிவுக்கு அவர் வரக் காரணமாய் இருந்தது எம்மை என்ற ஒரு சொல்லே ஆகும். இந்த ஒரு சொல், ஒரு மனிதனை அறு வகைக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்து, உலகிடை அவரை வாழவைத்தது என்றால், இதற்குரிய பெருமை அச்சொல்லுக்கா? யாருக்கென்று சொல்வது. ஆழ்ந்து சிந்தித்தால் இதற்குரிய பெருமை முழுவதும் அந்த சொல்லைக் கேட்டவுடன், முழுத் துறவு பூண்ட திருநீலகண்டருக்கே பொருந்தும். ஆகையால்தான் சேக்கிழார், ஆணைகேட்ட பெரியவர் என்று சொல்கிறார். தனிச் சிறப்பான வைராக்கியம் இம்மாதிரி சூழ்நிலைகளில் பலருக்கு இத்தகைய வைராக்கியங்கள் தோன்றுவதுண்டு. அவற்றை மயான வைராக்கியம், பிரான வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்று கூறுவர். அதாவது ஒரு சில வினாடிகள் தீவிர வைராக்கியமாக வெளிப்பட்டு, சில நாழிகைப் பொழுதில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகின்ற 'வைராக்கியங்களையே மேலே சொன்னவாறு குறிப்பிடுவர். திருநீலகண்டரின் வைராக்கியம் இரண்டு வகையில் ஈடு இணையின்றிச் சிறப்புற்று விளங்கியது. ஒன்று, மிக இளமையில் 330 சேக்கிழார் தந்த செல்வம் தோன்றிய இந்த வைராக்கியம் அவர் முதுபெரும் கிழவராக ஆகின்றவரையில் நீடித்தது என்பது ஒரு சிறப்பு. ஒரு வேளை இந்த வைராக்கியத்தை மேற் கொண்டவுடன் அவர் மனித சஞ்சாரமே இல்லாத இமயமலை உச்சிக்குச் சென்று அங்கே வாழ்ந்து இருந்தால், வேறு வழியின்மையின், இந்த விரதம் சாத்தியமாகலாம். ஆனால், தில்லை வேட்கோவர் அழகிய இளம் மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டே இத்தகைய விரதத்தைக் கடைப்பிடித்தார் என்றால், அது உலக வரலாற்றில் வேறு எங்கும் காணப்படாத ஒரு சிறப்பாகும். கணவன், மனைவி இருவரும் என்ன காரணத்தாலோ இத்தகைய கடுமையான ஒரு விரதத்தை மேற்கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். வேறு யாரும் அவ்வீட்டில் அவருடன் வாழ்ந்ததாக வரலாறு குறிக்கவில்லை. அவ்வாறானல் இவருடைய விரதத்திற்குக் கேடு வராமல் பாது காக்க வெளியுதவி யாருமில்லை என்பது விளங்குகிறது. அவர்களுக்கு அவர்களே காவலாக அமைந்திருந்தனர் என்பது எல்லாவற்றையும்விடத் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத இத்தகைய கடுமையான விரதங்கள் ஒருவரை மன இறுக்கம் காரணமாக நிலைகுலையச் செய்து விடும் என்பது இற்றைநாள் மனவியலார் கூறும் இளமை துறந்தார் 331 கருத்தாகும். ஆழ்மனத்தின் அடியில் வெளியில் சொல்ல முடியாத, பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத குற்ற உணர்வு இருக்குமேயானால், எத்தகைய வலுவுடைய மனிதனையும் அது நிலைகுலையச் செய்துவிடும். அப்படியானால் திருநீலகண்டரையும், அவருடைய மனவியையும் நிலைகுலையச் செய்யாமல் அமைதியான வாழ்க்கை பல்லாண்டுகள் வாழுமாறு செய்தது எது? அவர்கள் ஆழ்மனத்தில் குற்ற உணர்வாக இது படியவில்லை. அதனெதிராகத் தங்கள் வாழ்வு முன்னேறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய ஒரு படியாக இம்முயற்சியை மேற் கொண்டனர், ஆதலால், மன இறுக்கத்திற்கோ, அதன்வழியாக வரும் எந்த ஒரு நோய்க்கோ இங்கு இடமே இல்லை. பிறழ்ந்திருந்தால் இருபதாம் நூற்றாண்டில் மகாத்மா இந்தச் சோதனையை மேற்கொண்டார் என்பது உண்மை தான். ஆனால், அப்பெருமகனார் இச் சோதனையை மேற்கொள்ளும்பொழுது அவருக்குப் பிள்ளைகள் பிறந்துவிட்டனர். திருநீலகண்டரின் நிலை வேறு விதம். இத்தகைய ஒரு சோதனையில் விரும்பியோ விரும்பாமலோ அவர் தள்ளப்பட்டார் என்பது உண்மைதான். ஒருவர் விரும்பாமலே இத்தகைய சோதனையில் ஈடுபடமுடியுமா? திருநீலகண்டர் 332 சேக்கிழார் தந்த செல்வம் “எம்மை என்ற சொல்லுக்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் மனைவியைமட்டும் குறிக்கும் சொல்லாக அதனை நினைத்திருப்பின் யாரும் அவர்மேல் குறைகூற முடியாது. அன்றியும், யாருக்கும் தெரியாமல் தொடங்கப்பட்ட இம்முயற்சி இடையே தடைப்பட்டிருப்பினும், திருநீலகண்டரைக் குறைகூற யாரும் துணியமாட்டார்கள். விசுவாமித்திரன் கதையும், மச்சகந்தி பரிமளகந்தி ஆன கதையும், இந்தியா முழுவதும் அறியப்பட்ட கதைகள்தாமே! அப்படியிருக்கத் திருநீலகண்டர் தம் வைராக்கியத்தில் ஒரு முறை பிறழ்ந்திருந்தால், உலகம் மூழ்கிப் போயிராது. ஆனால், அப்பெருமகனார் அவ்வாறு செய்யாமைக்குக் காரணம் என்ன? மாதரைத் தீண்டாமையா, திருநீலகண்டப்பற்றா? மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பகுதியாகும் இது. இறைவனுடைய அருள் துணை இல்லாமல், பொறி புலன்களை அடக்குதல் என்பது ஏறத்தாழ இயலாத காரியம். விசுவாமித்திரர் போன்றோர் தோல்விக்கு இதுவே காரணம் என்பதை அறிதல் வேண்டும். திருநீலகண்டரின் குறிக்கோள் எதுவாக இருந்தது? மாதரை மனத்தாலும் தீண்டாமல் இருக்கின்ற ஒரு விரதத்தை அவர் மேற்கொண்டாரா அல்லது தம் உயிரினும் மேலாக மதித்த திருநீல இளமை துறந்தார் 333 கண்டத்தின்மேல் ஆணையிடப்பட்டதால் அதனைப் பெரிதாக மதித்தாரா? ஆழ்ந்து சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். அவரது தலையாய குறிக்கோள் நீலகண்டத்திடம் அவர் கொண்டிருந்த எல்லையற்ற ஈடுபாடே ஆகும். இதனைக் கூறவந்த சேக்கிழார், ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் என்று கூறுகிறார். அந்த அம்மையார், இந்தத் திருநீலகண்டத்தோடு சேர்த்து வேறு எதனைக் கூறியிருந்தாலும் அதனை உடனே வேட்கோவர் செய்திருப்பார். இரண்டுக்கும் ஆணிவேர் பொறிபுலன்களை வெல்வது கடினம். காமத்தை வெல்வது உயிர்களுக்கு இயலாத ஒன்று. இவை இரண்டையும் ஒருவர் ஒரே வினாடியில் மேற் கொண்டு, வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கிறார் என்றால், அந்த விரதத்திற்கு ஆணிவேர் எங்கோ இருத்தல் வேண்டும். அந்த ஆணிவேர்தான், நீல கண்டத்தின்மேல் வேட்கோவர் கொண்டிருந்த அளவில்லாத ஆர்வம் ஆகும். இதுகாறும் கூறிய வற்றை ஒரு கண்ணோட்டம் விட்டால் தில்லை வேட்கோவர் எவரும் செயற்கரிய மாபெரும் செயலைத் திருநீலகண்டத்தின்மேல் கொண்ட ஆர்வம் காரணமாகச் செய்துமுடித்தார் என்பதை அறியலாம். . - - . 334 சேக்கிழார் தந்த செல்வம் தில்லைக் கூத்தன் பங்கு / பணி இந்நிகழ்ச்சி நிகழக் காரணமாக இருந்தது அவரது திருநீலகண்ட பக்தி அல்லவா? அப்படி ஒரு பக்தி இருந்தால், எதனையும்-எத்துணை இயலாத ஒன்றையும்-பொறி புலன்களை இந்த உலகில் வாழும் பொழுதே வென்று வாழமுடியும் என்பதை உலகத்தார்க்கு எடுத்துக் காட்டவேண்டிய கடமை தில்லைக் கூத்தனைச் சேர்ந்த தாகிவிட்டது. வேட்கோவர் தம் கடமையைச் செய்துமுடித்தார். தில்லைக் கூத்தன் தன் பணியைத் துவங்குகின்றான். கதை பலரும் அறிந்த ஒன்றாதலின், விரிவாகச் சொல்லத் தேவையில்லை. - வேதியர் வடிவுடன் வந்த கூத்தன் பழைய ஒடு ஒன்றை வேட்கோவரிடம் கொடுத்து, பொன்னினும், மணியினும் போற்றவேண்டுவது இது (பெ.பு-375) என்று கூறி, அந்தப் பழைய ஒட்டைப், பத்திரமாக வைத்துக் கொள் என்று கூறினார். ஒரு பழைய ஒட்டைக் கொடுத்துவிட்டு வந்த கிழவன், பொன்னினும், மணியினும் போற்றவேண்டுவது என்று கூறிய பொழுதே, திருநீலகண்டர் இதுபற்றிச் சந்தேகித்திருக்க வேண்டும். அப்பாவி ஆகிய அவர் இதுபற்றிச் சிந்திக்கவே இல்லை. "தந்து நில்’ - கிழவன் பல்லாண்டுகள் கழித்து நீலகண்டரிடம் வந்து நிற்கின்றான். பாவம், நீலகண்டர் பல்லாண்டுகள் இளமை துறந்தார் 335 கழிந்தமையின் அந்தக் கிழவனை இன்னான் என்று கூடப் புரிந்துகொள்ளவில்லை. வந்தவன் பேச்சைத் தொடங்கும்பொழுதே ஆத்திர மூட்டும் வகையில் பேசுகிறான். "முந்தைநாள் உன்பால் வைத்த மொய் ஒளி விளங்கும் ஒடு தந்துநில்' என்றான் 争势 (பெ. பு-379) ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு, பின்னர்க் கேட்பவர்கள்கூடப் பல முறை கேட்டும் தரா விட்டால் கடைசியாக, இதைக் கொடுத்துவிட்டு மறுவேலை பார் என்று பேசுவது இன்றும் உலக மரபு தான். அப்படி இருக்க, தான் இன்னான் என்பதையே அடையாளம் கண்டுகொள்ள முடியாத வேட்கோவ ரிடம் தந்து நில் அதாவது கொடுத்து விட்டு மறுவேலை பார் என்று பேசுவது, பக்கத்தில் நிற்பவர் யாராக இருப்பினும் அவருடைய ஆத்திரத்தை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை. இந்த உரையாடல் நடைபெறும் பொழுது, தாம் பாதுகாவலுடன் வைத்த ஒடு மறைந்து போன செய்தி வேட்கோவருக்குத் தெரியவே தெரியாது. அப்படி இருந்தும், கிழவன் தந்துநில் என்று 336 சேக்கிழார் தந்த செல்வம் சொல்லும்பொழுது வேட்கோவர் கோபிக்கவே இல்லை. இரண்டாவது நிலை, ஒட்டைத் தேடி அது எங்கும் காணாமையால் கிழவனிடம் வேண்டிக் கொள்கின்ற நிலை. ஒடு காணாமல் போனது உண்மைதான். ஆனால், வசதிமிக்க வேட்கோவர் பாதுகாவலுடன் வைத்த ஓடு எப்படிக் காணாமல் போயிருக்க முடியும் என்ற ஐயம் இன்றும் நம் மனத்திடையே உள்ளது. வந்தவன் ஒரு படி மேலே சென்று, ஒட்டை நீ திருடிக் கொண்டாய். ஆகவே, உன்னை வளைத்து நீதிமுன் நிறுத்தி உன் திருட்டுத் தனத்தை வெளியிடப் போகிறேன்’ என்று ஒன்றன் பின் ஒன்றாய் இல்லாத பழிகளையெல்லாம் கிழவன் அடுக்குகிறான். இதற்குரிய காரணம் யாது? வாழ்நாள் முழுவதும் இறைத்தொண்டு செய் வதிலும் அடியார்க்கு வேண்டுவன செய்வதிலும் சிறப்பாகத் திருவோடு செய்வதிலும் ஈடு இணையற்று விளங்கிய வேட்கோவரிடம் வந்த கிழவன், இல்லாத பழிகள் இத்தனையைச் சுமத்துவதன் நோக்கம் யாது? ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனுடைய பரம கருனை இங்கே வெளிப்படுதலைக் காணலாம். பொறிகளை அடக்கி, மனத்தை ஒருமுகப்படுத்தி வாழ்தல் மிகப் பெரிய செயலாகும். இறையன்பு இளமை துறந்தார் , 337 காரணமாகத் தாம் ஒரு குறிக்கோளை மேற்கொண்டு பொறிபுலன்களை அடக்கி வாழ்தல் முன்னையதை விடச் சிறப்புடையதாகும். இளமை, இளமைக்குரிய பெருஞ்செல்வம், அழகுடைய மனைவி இத்தனையும் வைத்துக்கொண்டு, காடு முதலியவற்றிற்கு ஒடிச் செல்லாமல் இவற்றிடையே வாழ்ந்து காமத்தை வெல்லுதல் கற்பனைக்கு அடங்காத அற்புதமாகும். இவை அனைத்தையும் தில்லை வேட்கோவர் செய்து, திருநீலகண்டர் என்ற காரணப் பெயரையும் பெற்று விட்டார். அப்படியானால், களத்து நஞ்சு ஒளித்தவன், கிழவேதியனாய் எதிரே நின்று என் ஒட்டைத் திருடிக்கொண்டாய் என அடாப் பழி சுமத்தும்போதுகூட, நீலகண்டருக்குச் சினம் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில் திருநீலகண்டர் சினமடைந்திருந்தாலும் எதிரே நின்று அடாப் பழி கூறும் கிழவனை ஏசியிருந்தாலும் நையப்புடைத்து இருந்தாலும் அவர்மேல் யாரும் தவறு கூறார். அப்படியிருக்க, கிழவன் இத்தனை பழிகளைச் சுமத்தி உன் மகன் கையைப் பிடித்துக்கொண்டு குளத்தில் மூழ்கு என்று கூறுகிறான். வேட்கோவர், அவ்வாறு செய்யப் பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என்று கூறவும், அந்த வார்த்தைக்காகக் காத்திருந்தவன் போலக் கிழவன், உன் மனைவியின் கையைப் பற்றி மூழ்குவாயாக’ என்ற அளவுக்குத் 338 சேக்கிழார் தந்த செல்வம் திருநீலகண்டரை வெருட்டியதால் இறைவன் என்ன பயனைப் பெற்றான்? பள்ளிச் சோதனை போலவா? பெரியபுராணத்தின் உட்கோளை புரிந்துகொள்ளாமல் பலர் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், இறைவன் அடியார்களைச் சோதனை செய்வதற்காக இவ்வாறு செய்தான்’ என்று கூறுவதையும் எழுதுவதையும் கண்டுள்ளோம், பாவம் ! தங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் ஆண்டு முடிவில் சோதனை செய்வது போலவே, இறைவனும் சோதனை செய்கிறான் என்கிறார்கள் இவர்கள். சோதனை செய்யும் நிலையில் இருப்பவன் இறைவனாக மாட்டான். பின்னர் ஏன் இவை நடைபெறுகின்றன. இரண்டு காரணங்களுக்காக இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒன்று, மாபெரும் தீரச் செயல்களைச் செய்த இந்த அடியார்களிடம் அவர்களையும் அறியாமல் ஏதோ ஒரு மாசு உள்ளே இருந்துகொண்டு அவர்களை வளரவிடாமல் செய்கிறது. இறுதியாக உள்ள அந்த மாசைப் போக்கத்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் இறைவன் அருளால் நிகழ்கின்றன. 'நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் என்று பழுத்த அனுபவ ஞானியாகிய நாவரசர் பெருமான் கூறுவது இங்கு நினையத் தக்கது. இளமை துறந்தார் , 339 இதை விளக்க, இதுவரை கண்ட இரண்டு வரலாறுகளை எடுத்துக்கொள்வது நலம் பயக்கும். வென்ற ஐம்புலனால் மிக்கீர்’என்று இறைவனலேயே விளிக்கப்படும் பெருமை வாய்ந்தவர் திருநீலகண்டர். காமத்தை வென்று மனைவியோடு பல்லாண்டுகள் வாழ்ந்துவிட்ட அவரது ஆழ்மனத்தில் எங்கோ ஒரு மூலையில் தாம் மேற்கொண்ட பணியில் பெற்ற வெற்றி காரணமாக ஒரளவு அகந்தை தோன்றி இருக்கலாம். அதை எந்த அளவு வேட்கோவர் போக்கியுள்ளார் என்பதைக் காட்டத்தான் கிழவன், இல்லாத பழியையெல்லாம் சுமத்தி, இறுதியாகக் அப் பெருமான் வாழ்நாள் முழுவதும் மறைவாக காத்து வைத்திருந்த சபதத்தை உலகறியக் கூறுமாறு செய்து விட்டான். - - வேட்கோவர் உள்ளத்தில் கடுகளவாவது அகந்தை இருந்திருப்பின், கிழவர் சுமத்திய பழிகளைக் கண்டு சினம் பிறிட்டுக்கொண்டு வந்திருக்கும். எந்த நிலையிலும் திருநீலகண்டர் மனத்தில் சினம் தோன்றவே இல்லை என்றால், ஐம்பொறிகளை வென்றதோடுமட்டு மல்லாமல் அந்தக்கரணங்கள் நான்கையும் வென்றுவிட்ட தனிப்பெருந் தலைவராக அவர் விளங்குவதைக் காணலாம். ஒற்றுமையுடைய வரலாறுகள் மூன்று சிறுத்தொண்டருக்கும் இப்படி ஒரு சூழ் நிலையை இறைவன் உண்டாக்குவதை காணலாம். சிறுத் 340 சேக்கிழார் தந்த செல்வம் தொண்டர், திருநீலகண்டர், ஏயர்கோன்கலிக்காமர் ஆகிய மூவருடைய வரலாறுகளும் ஒரு விதத்தில் ஒற்றுமை உடையவை. திருநீலகண்டர், சிறுத் தொண்டர் ஆகிய இருவரும் செயற்கருஞ் செயல்கள் செய்தார்கள் என்பதைப் பலரும் அறிவர், ஏயர் கோனுடைய வரலாறு பலரும் அறியாத ஒன்றாகும். சுந்தரர் இறைவனிடம் அதிக உரிமை பாராட்டினார், அந்த உரிமை காரணமாக அவர் பல தவறுகளைச் செய்தார் என்று நம்பிய ஏயர்கோன் அவரைக் கண்ணால் பார்ப்பதும் பாவம் என்ற முடிவுடன் இருந்தார். அவருக்குச், சூலைநோயைக் கொடுத்த இறைவன் ‘சுந்தரர் வந்தால்தான் அச்சூலை நோய் தீரும்’ என்று கனவிடைக் கூறினார். சீறி எழுந்த ஏயர்கோன் "ஐயனே! உமக்குப் பரம்பரையாக அடிமை செய்யும் எங்களுக்கு ஒரு தீமை வந்தால் அதைப் போக்குவது உம்முடைய கடமை ஆகும். அதை விட்டுவிட்டு நீரே விரும்பிப் போய் ஓர் அடியானைப் பிடித்து அவனைத் தோழனாகவும் கொண்டீர். ஆனால், அவன் வந்து என்னுடைய சூலையைப் போக்குவதைவிட நான் இதனோடு இறப்பதே மேல், பெற்றம் உயர்த்த பெருமானே! தாங்கள் போய் வரலாம்” என்று இறைவனிடமே கூறும் நெஞ்சுரம் கொண்டவர். இந்த மூவரும் தங்கள் குறிக்கோளை உயிரினும் மேம்பட்டதாகக் காத்தனர். அவ்வாறு செய்யும் இளமை துறந்தார் : 341 பொழுது அவர்களையும் அறியாமல் அகந்தைக் கிழங்கு துளிர் விட்டால் அதில் தவறு ஒன்றும் இல்லை. என்றாலும், அதன் விளைவாக அத் தொண்டர்கட்கு இன்னும் ஒரு பிறவி வராமல் காக்க இறைவன் இவ்வாறு செய்கின்ற நான், இறைவன் மேற்கொள்ளும் இச்செயல் சோதனை அன்று. அடியார்கள் சாதனை புரிய இறைவன் சில வழிகளை வகுத்துக் கொடுப்பதே இங்கு நாம் காணும் நிகழ்ச்சிகள். இதுபற்றிப் பின்னர் ஓரளவு விரிவாகக் காணலாம். "திருநீலகண்டம்' என்று ஜெபித்தவர் யார்? தெய்வச் சேக்கிழார் பாடிய திருநீலகண்டர் புராணத்தில் இன்றுவரை பலரை மயக்கும் பாடல்கள் இரண்டு உண்டு. அவை, அவர் தங்கண் மனைவி யாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்; புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம்செய் தவம் நின்று தடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று சிவன் எந்தை கண்ட தன்னைத் 'திரு நீல கண்டம்' என்பார். - (பெ. பு-363) ஆனதம் கேள்வர் அங்குஓர் பரத்தைபால் அணைந்து நண்ண 342 சேக்கிழார் தந்த செல்வம் மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்தேன்.அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார். (பெ. பு-364) இவற்றுள் முதலில் உள்ள அவர் தங்கண் என்ற பாடலுக்குச் சரியாகப் பொருள் செய்யாமல், திருநீல கண்டம் என்பார் என்ற அடிக்கு அருந்ததிக் கற்பின் மிக்கார்’ என்ற பெயரையே எழுவாயாக ஆக்கி, அந்த அம்மையார் தாம் திருநீலகண்டத்திடம் எல்லையற்ற அன்பு பூண்டிருந்தார். தாம் உயிராக வைத்திருந்த திருநீலகண்டத்தின் பெயரைச் சொல்லி ஆணையிட்டார்’ என்று இவர்கள் பொருள் கூறுகிறார்கள். இவ்வாறு பொருள் கொள்வது தவறானதுமட்டு மன்று, திருநீலகண்டர் புராணத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்துவிடும் என்பதையும் இவர்கள் அறிதல் வேண்டும். இப்பாடலுக்கு முன்னர்க் காணப்படும் அளவு இலா மரபின்’ என்ற பாடலும், அவர் தங்கண் மனைவியாரும் என்று தொடங்கும் பாடலும் ஆன தம் கேள்வர் என்று தொடங்கும் அடுத்த பாடலும் ஒரளவு உண்மையிலேயே குழப்பம் தருகின்ற பாடல்கள்தாம். பொறுமையாகச் சிந்தித்து, கொண்டு இளமை துறந்தார் 343 கூட்டுச் செய்தாலொழிய நேரிய பொருள் காண்பது அரிதாகும். . தில்லை வேட்கோவர் தங்கள் மரபுக்கு ஏற்பத் திருவோடு முதலியவற்றைச் செய்து அவற்றைச் சிவனடியாருக்கு ஏனைய பரிசுகளோடு வழங்கி மகிழ்ந்து வாழும் அந்நாட்களில் ஒரு முறை தம்முடைய இளமை காரணமாக மகளிர் நலம் துய்க்கும் இயல்பில் தம்முடைய தகுதிக்குப் பொருந்தாத நிலையில் ஒரு ப்ரத்தைபால் தொடர்பு கொண்டார். அளவு இலா மரபின் வாழ்க்கை மண்கலம் அமுதுக்கு ஆக்கி, வளர்இளந் திங்கள் கண்ணி மன்றுஉளர் அடியார்க்கு, என்றும் உளம் மகிழ் சிறப்பின் மல்க ஒடு அளித்து ஒழுகும் நாளில் இளமை மீதுஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார். - (பெ. பு-362) இவர் இவ்வாறு செய்வதற்கு, மனைவியின் உடல் நலம் சரியில்லை என்று சொல்ல முடியாதபடி அவர் மனைவி அருந்ததிக் கற்பின் மிக்கவராய் இருந்தார். இதனை அவர்தங்கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார் என்ற அடுத்த பாடல் தொடரால் அறியலாம். இந்தத் தொடரை முழு வாக்கியமாகக் 344 : சேக்கிழார் தந்த செல்வம் கொண்டு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். பாடலின் பின் மூன்று அடிகளும் இந்த அடியோடு சேர்த்துப் பொருள் செய்யப்படக் கூடாது. இவற்றிற்குத் தலைவராய் இருப்பவர் திருநீல கண்டரே யாம் என்ற கருத்தோடு பாடலைக் கவனித்தால் திருநீலகண்டருக்கு இப்பெயர் வந்த காரணம், திருநீலகண்டம் என்ற பெயரில் அவர் ஈடுபாடு கொண்ட காரணம் ஆகியவற்றிற்கு விடை கிடைக்கும். இப்பொழுது பாடலைப் பார்க்கலாம். இறைவனின் வயிற்றில் அண்ட சராசரங்கள் அனைத்தும் இருத்தலின் அவன் உண்ட நஞ்சு உள்ளே சென்றிருப்பின் இந்தப் புவனங்களை அழித்திருக்கும். அப்படி அந்த நஞ்சு அழிவு வேலையைச் செய்யாமல், அதாவது நஞ்சை உள்ளே செல்லவிடாமல், தடைசெய்தது இறைவனுடைய கழுத்தல்லவா? எனவே, தில்லை வேட்கோவர் இறைவனுடைய நீலகண்டம் செய்த இந்த மாபெரும் உபகாரத்தை நினைந்து, அந்த இறைவன் கண்டத்தை திருநீலகண்டம் என்றே சொல்லும் பழக்கமுடைய வராய் இருந்தார். இதனை அடுத்து வரும் பாடல் ஆன தம் கேள்வர் என்று தொடங்கும் பாடலாகும். இப் பாடலின் தொடக்கத்தில் உள்ள ஆன' என்ற பெயரெச்சம் இதற்கு முன் பாடலில் உள்ள, திருநீல கண்டம் என்பார் என்ற சொல்லோடு இணைந்து, இளமை துறந்தார் 345 எப்பொழுதும் திருநீலகண்டம் திருநீலகண்டம்’ என்று சொல்பவர் ஆன தம்கேள்வர் ஒரு பரத்தை பால் அணைந்து நண்ண’ என்று முடிவு கொள்ளும். இப்பொழுது மூன்று பாடல்களையும் ஒன்றாக இணைத்துப் பொருள் கொள்ளும் முறையைக் காண்போம். அருந்ததிக் கற்பின் மிக்கார் (பெபு-863) எழுவாய்; எளியரானவரும் (பெபு-362) திருநீல கண்டம் என்பாரும் (பெயு-363) ஆன தம் கேள்வர் (பெ.பு-364) பரத்தைபால் அணைந்து நண்ண (பெயு-364) உடன் உறைவு இசையார் ஆனார் (பெ.பு-364 பயனிலை. திருநீலகண்டம் என்பாரான தம் கேள்வர் என்று கூறியதால், திருநீலகண்டத்தை ஓயாது ஜெபம் செய்பவரும், அதன்பால் ஈடுபாடு கொண்டவரும் தில்லை வேட்கோவரே தவிர, அவருடைய மனைவியார் அல்லர் என்பதை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். - - - - - - - ஆணை வைப்பது பற்றி இத்தமிழர்கள் கொண்டிருந்த ஒரு கருத்தைப் புரிந்துகொள்வது நலம். ஆணை வைப்பது இரு வகைப்படும். ஒருவன் தன் கருத்தை வெளியிடும்பொழுது, அக்கருத்துக்கு அரண் செய்யும் முறையில் தான் எதனை விரும்புகிறானோ அதன்மேல் ஆணையிடுதல் ஒரு முறை மற்றொரு வரை, ஒரு கருத்தை ஏற்குமாறு செய்வதற்கு 346 சேக்கிழார் தந்த செல்வம் அவருக்குப் பிடித்தமான ஒன்றின்மேல் ஆணை வைப்பது இந்நாட்டு மரபாகும். இம் முறையைத் தான் சேக்கிழார் கையாள்கிறார். ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பநாடன் இந்த ஆணை வைக்கும் முறையைப் பலவகையில் சொல்லிக் காட்டுகிறான். கைகேயியின் மனத்தில் உள்ள குறையைப் போக்க வேண்டும் என்று நினைத்த தசரதன், - - --ஒன்றும் லோபேன் வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் ‘. . . (கம்ப-50) என்ற பாடலில் தசரதன் தனக்கு முக்கியமாக உள்ள இராமன்மேல் ஆணை இடுகிறான். இது பேசுபவர்கள் எதனைப் பெரிதென மதிக்கிறார்களோ அதன் பெயரில் ஆணை இடும் மரபைக் காட்டும். - இதனை அடுத்தபடியாக, பேசப்படுபவருக்கு எது முக்கியமோ அதன்மேல் ஆணை இடுகின்ற மரபும் தமிழகத்தில் உண்டு. இதே தசரதன் கைகேயியைப் பார்த்து, மறைக்காமல் உன் மனத்தில் உள்ளதைஇங்கு நடந்ததைச் சொல்வாயாக, என்மேல் ஆணை! என்ற கருத்தில், டபுணர்த்த வஞ்சம் உண்டோ? உன்நிலைசொல் எனது ஆணை உண்மைlஎன்றான்." ... " ... . . " ' ' . . . . (கம்ப-1512) இளமை துறந்தார் 347 என்ற இப்பாடலில் தசரதன் தன்மேல் ஆணை வைப்பதன் அடிப்படை என்ன?, ஒரு மனைவிக்குக் கணவன்தான் அனைத்தும் என்று அந்நாளைய கருத்தின்படி தன்மீது ஆணை வைத்துவிட்டால் கைகேயி பயந்து உண்மை கூறிவிடுவாள் என்று தசரதன் நம்பினான். பேசப்படுபவர்கட்கு எது முக்கியமோ அதன்மீது ஆணை வைப்பது அந்நாளில் உண்டு என்பதை இப்பாடல் அறிவிக்கும்.

  • , இதே கருத்தில்தான் GalLGarat ೧೯೧೯೮೧uTಗೆ பேசுகிறார். திருநீலகண்டம் என்பாரான தம் கணவரை ஒன்றைச் செய்யுமாறு வற்புறுத்தற்கு

அம்மையார் மேற்கொண்ட வழிதான் ஆணை இடும் வழி. "ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் ·赞罗 என்ற சேக்கிழாரின் பாடலடிகள் இக்கருத்தையே வலியுறுத்தும். நீலகண்டத்திடத்துத் தாம் கொண்ட ஆர்வத்தை அம்மையார் வைத்த ஆணை பேதித்து விட்டது எனலாம். திருநீலகண்டம் என்று எப்போதும் தியானித்துச் சொல்பவர் அந்த அம்மையாரே என்று சிலர் பொருள் கூறுவது பொருத்தமற்றது என்பதை இதன் மூலம் அறியலாம். சேக்கிழார் பாட வந்தது வேட்கோவர் வரலாறேயாகும். வரலாற்றில் வரும் பெருமிதச் செய்திகள் வரலாற்று தலைவரையே மையமாகக் கொள்வதே சிறப்பு. பாண்டங்கள் உதவுதல் வேட்கோவர் செய்த புறப்பணி. அப்பணியோடு இணைந்திடும் வகையில், திருநீலகண்ட தியானத்தையும் இணைப்பதே சிறப்பு. திருநீலகண்டம் என்று தியானம் செய்வதை அவருடைய மனைவிக்கு ஏற்றாமல், தியானம் செய்யும் செயலையும், இளமை துறந்த செயலையும் வேட்கோவருக்கே ஏற்றுதல்தான் சேக்கிழார் கருத்துக்கு அரண் செய்வதாகும்.