சேக்கிழார் தந்த செல்வம்/திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்?
தீக் குளித்தது ஏன்?
இருவருள் ஒருவர்
சைவ சமயத்தில் மிகப் பெரிதும் போற்றப் படுகின்ற அறுபத்து மூன்று நாயன்மார்களுள், நந்தனாரும் ஒருவர் ஆவார். பெரிய புராணத்தில் வரும் அடியார்களுள் அரிசன குலத்தில் தோன்றியவர் இருவர் ஆவர். திருஞானசம்பந்தப் பெருமானிடம், யாழ் வாசிக்கும் பணியினை விரும்பி மேற்கொண்டிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஒருவர் ஆவர். அவருடைய வரலாற்றை நோக்கும் போது, பாணர் குலத்தில் பிறந்ததற்காக அவர் என்றுமே கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அதற்கேற்ப வேத நெறி தழைத்தோங்கத் தோன்றிய ஞான சம்பந்தப் பிள்ளையாரும் அவரை ஏற்றுக் கொண்டு தம்முடனேயே இருக்குமாறு பணித்தார் என்று வரலாறு பேசிச் செல்கிறது.
அடுத்தபடியாக உள்ள அரிசனத் தொண்டர் நந்தனார் ஆவர். சோழ நாட்டில் சிதம்பரத்தை அடுத்துள்ள ஆதனூரில் தோன்றியவர் இப்பெரியார். இவருடைய வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றேயாம். பல தலங்கட்கும் சென்று, புறவாயிலில் நின்றபடியே, இறைவனைக் கண்டு வழிபட்டு வரும் இவர், ஒரு முறை தில்லை செல்ல விரும்பினார். 350 சேக்கிழார் தந்த செல்வம் தில்லைக்குச் சென்றால் தம் குலம் காரணமாக நடராஜப் பெருமானைக் காண முடியாதென்ற கருத்தினால் நாளைச் செல்லலாம்’ நாளைச் செல்லலாம் என்று கூறிக்கொண்டிருந்து இறுதியாக ஒரு நாள் தில்லைக்குச் சென்றேவிட்டார். ஆனால், அங்கும் தம் சாதி காரணமாக அம்பலத்துள் செல்ல விரும்பாமல், புறத்தே இருந்து பெருமானை மனத்தால் நினைத்து வணங்கித் தம் பிறப்பைப் பற்றியே நினைந்து வருந்தித் துயிலச் சென்றார். இறைவன் அவருடைய கனவில் தோன்றி, இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீ மூழ்கி நம் கோயிலினுள் வருக எனப் பணித்து, அங்ங்னமே தில்லைவாழ் அந்தணர்கட்கும் நந்தனுக்கு எரி அமைத்துத் தரப் பணித்து மறைந்தார். மறுநாள் அவர்கள் அப்படியே தீ அமைத்துத் தரத் திருநாளைப் போவார் அதில் மூழ்கி எழுந்து கோயிலுட் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதுவே சேக்கிழார் கூறும் நாளைப் போவார்சரித்திரமாகும். பிறப்புப் பற்றிச் சேக்கிழார் குறிப்பு பிறந்து உணர்வு தொடங்கிய காலத்திலிருந்தே இறைவன் மாட்டுப் பெரும் காதல் கொண்டு, மறந்தும் அயல் நினைவின்றி இருந்தார் என்று சேக்கிழார் பெருமான் பாடிச் : செல்கிறார். திருநாளைப்போவார். தீக் குளித்தது ஏன்? 351 சிவத்தொண்டைச் செய்ய முற்பட்ட இவர், திருக்கோயில் வழிபாட்டுக்குத் தேவையான பேரிகைத்தோல், வீணை, யாழ் முதலியவற்றுக்குரிய நரம்புகள், கோரோசனை முதலியவற்றைத் திரும் பணியில் ஈடுபட்டிருந்தார். என்றாலும் இவருடைய இளமைப் பருவத்தைப் பேசவந்த சேக்கிழார் பெருமான், -வருபிறப்பின் வழிவந்த அறம்புரிகொள் கையராயே அடித்தொண்டின் நெறிநின்றார் (பெ. பு-1057) என்று சொல்வது ஆராய்வதற்குரியது. இப்பெரியார் பெரிதாக அமையப்போகிறதாகலின் அதனைக் குறிப்பால் உணர்த்தவந்த சேக்கிழார் பெருமான், திருக்கோயிலிலே தம் பிறப்புக்கொத்த முறையில் தொண்டு செய்தார் என்று பேசுகிறார். அடியார் களைப்பற்றிப் பேசவருகின்ற பொழுது எவருடைய குலத்தையும் பெரிதாகச் சுட்டிப் பேசுகின்ற வழக்கம் சேக்கிழாருக்கு இல்லை. அப்படியிருந்தும் நந்தனாரை பற்றிப் பேசும்பொழுது எடுத்த எடுப்பிலேயே தம் குலத்துக்குரிய தொண்டைச் செய்துவந்தார் என்று பேசுவது சற்று வியப்பையே விளைவிக்கின்றது. நன்கு சிந்திக்கும்போது சேக்கிழார் வேண்டு மென்றேதான் இந்த அடியைப் பெய்துள்ளார் என அறிய முடிகிறது. . 352 சேக்கிழார் தந்த செல்வம் புறத்தே நின்று வழிபடுதல் திருக்கோயிலுக்குரிய பொருள்களைத் தருவதுடன் நில்லாமல் ஆங்காங்கே உள்ள கோயில்களுக்குச் சென்று . --திருவாயிற் புறம் நின்று மெய்விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும் அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் . - (பெ. பு-1060) என்கிறார்.ஆசிரியர். எனவே, ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அதன் புற வாயிலிலே நின்று தம்மை மறந்து பக்தியினால் ஆடுதல் பாடுதல் முதலிய வற்றைச் செய்தார் நந்தனார் என அறிகிறோம். திருக்கோயிலுக்குள் நுழைவற்குத் தமக்குத் தகுதியில்லை எனக் கருதிய காரணத்தினாலேயே நந்தனார் இவ்வாறு செய்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இங்ங்னம் நடந்துவருகின்ற காலத்தில் ஒருமுறை வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்துள்ள திருப்புன்கூர் என்ற ஊருக்குச் சென்று இறைவனை வழிபட விரும்பினார்; அங்கே போன பிறகு ஏனைய கோயில்களில் இல்லாத ஒரு சூழ்நிலை அவ்வூரில் இருக்கக் கண்டார். மற்றைய ஊர்களைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மையான கோயில் களில் வாயிற்புறத்தில் நின்றுகூட உள்ளே உள்ள பெருமானை வணங்க முடியும் மிகப் பெரிய திருநாளைப்போவார் தீக் குளித்தது. ஏன்? 353 ஆலயங்களில் இவ்வாறு வணங்க முடியாதே தவிரத் தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் நூற்றுக்குத் தொண்ணுற்று ஒன்பது கோயில்களில் புறத்தே நின்று மூலத்தானத்தில் இருக்கும் பெருமானை வணங்க முடியும். தமிழ் நாட்டுக் கோயில் முறையின் அமைப்பும் அவ்வாறு இருந்தமையின் நந்தனாருக்கு இது எளிதாக முடிந்தது. எனவே, உள்ளே சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஓரளவு தோன்றி இருப்பினும், அதற்குத் தம்முடைய பிறவி தடையாக இருக்கின்றது என்று நினைத்த காரணத்தால் உள்ளே செல்லாமல் புறத்தே நின்று மூலத்தானத்தை வணங்கி வரும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். திருப்புன்கூர் திருப்புன்கூர் சென்றபொழுது வழக்கமாக அவர் மேற்கொள்கின்ற வழிபாட்டு முறை தடைப் படலாயிற்று. காரணம், ஏனைய ஊர்களைப் போல் அல்லாமல் திருப்புன்கூரில் உள்ள நந்தியம் பெருமான் மிகப்பெரிய வடிவத்தில இருந்தார். மூலத்தானத்தின் வாயிலை முற்றிலும் மறைத்துக் கொண்டிருந்த நந்தியம் பெருமானுடைய வடிவம் வாயிற்புறத்தில் நின்று உள்ளே காண வேண்டு மென்ற ஆர்வத்தோடு கண்களை ஒட்டிய நந்தனாருக்குப் பெருந்தடையாக அமைந்துவிட்டது. செய்வது அறியாத நத்தனார். 354 சேக்கிழார் தந்த செல்வம் --திருவாயில் - நேரேகும்பிடவேண்டும் எனநினைந்தார் - (பெயு-1062) இந்நிலையில் இயல்பாக அவர் மேற்கொண்ட வழிபாட்டு முறை முட்டுப்பட்டது. அடியார்க்கு நேர்ந்த முட்டுப்பாட்டை அறிந்த திருப்புன்கூர் மேவிய சிவலோகன் தன்னுடைய எல்லையில்லாத கருணை காரணமாக நந்தியபெருமானைச் சற்று விலகி இருக்க அருள் புரிந்தான் என்று பெரியபுராணம் பேசுகிறது. இந்த ஒரு நிகழ்ச்சி நந்தனாருடைய எல்லையற்ற அன்பின் ஆழத்தையும் இறைவனுடைய கருணையின் ஆழத்தையும் காட்டுவதோடு மற்றொரு பேருண்மை யையும் காட்டி நிற்கின்றது. இதுபற்றிச் சற்று விரிவ்ாகப் பின்னர்க் காண்போம். பிறவி, தடையா-பிறவித் தடையா இங்ங்னம் இறைவன் உறையும் பதிகள் பலவும் சென்று வழிபட்டுவந்த நந்தனார் தில்லையம்பலம் சென்று தூக்கிய திருவடி உடையானைத் துதிக்க வேண்டும் என்ற உணர்வுக்கு ஆட்பட்டார். ஆனால், இவ்வுணர்வைத் தடை செய்தது மற்றொரு நினைவு; அந்நினைவு என்ன என்பதை சேக்கிழார் மிக அழகாகப் பாடிச் செல்கிறார். திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 355 அன்றிரவு கண் துயிலார்; o புலர்ந்ததற்பின் "அங்கெய்த ஒன்றியணைதரு தன்மை உறுகுலத்தோ டிசைவில்லை” என்று "இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கொழிவார்; நன்றுமெழும் காதல்மிக "நாளைப் போவேன்” என்பார். (பெ. பு-1066) இதுவரையில் பல ஊருக்கும் சென்று புறத்தே நின்றாவது இறைவனை வழிபட்டுவந்த நந்தனார் தம்முடைய விருப்பம் தடைபடுவதற்குரிய காரணம் ஒன்றையும் காணவில்லை. முதன்முதல்ாக அவருக்கு ஏற்பட்ட தடையைக் கருணை வள்ளலாகிய பெருமான் நீக்கி விட்டான். எனவே, நந்தனார் சிதம்பரம் செல்லும் போது இத்தகைய தடை ஏதேனும் ஏற்பட்டால் இறைவன் கருணையினால் அதனையும் போக்கிக் கொள்ளலாம் என்று நினைந்து போயிருக்க வேண்டும். ஒருவேளை தம்முடைய பிறப்பைப் பற்றிக் கவலைகொள்ளாமல் சிதம்பரம் சென்றிருந்தால் வரலாறு வேறு விதமாக முடிந்திருக்கும்! ஆனால், அத்தகைய ஒரு மனோ நிலை அவருக்கு ஏற்படாமல் புதியதோர் எண்ணம் கிளைத்து விட்டது. | “. அங்கெய்த ஒன்றி யணைதருதன்மை 356 சேக்கிழார் தந்த செல்வம் உறுகுலத்தோடு இசைவில்லை - . (பெ. பு-066) என்று பேசுவது கொஞ்சம் வியப்பை அளிக்கின்றது. இதுவரையில் எவ்வாறாயினும் இறைவனை வணங்க வேண்டுமென்று நினைத்தாரே தவிர அங்ங்னம் வணங்குவதற்குத் தம்முடைய இந்தப் பிறவி தடை. என்ற எண்ணம் இவ்வளவு பெரிதாக அவர் மனத்தில் தோன்றவில்லை. ஆனால் தில்லைக்குச் செல்லவேண்டும் என்று நினைத்தவுடனேயே "குலத்தோடு இசைவில்லை” என்ற எண்ணம் பெரிதாகிவிட்டது. சாதாரணமாக மனத்திலே தோன்றும் பல்வேறு எண்ணங்கள், கவலைகள் போல் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நினைப்பது தவறு. ஒவ்வொரு முறை தில்லை செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் அடுத்து அவருடைய மனத்தில் தோன்றியது தம்முடைய குலம்பற்றிய நினைவுதான். எவ்வளவு ஆழமாக இக்குலம்பற்றிய எண்ணம் நந்தனாருடைய மனத்தில் தோய்ந்து விட்டது என்றால், "இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கொழிவார்’ என்று சேக்கிழார் சொல்லும்போது குலம்பற்றிய வருத்தம் மிகமிக ஆழத்தில் சென்று அவருடைய அகமனத்தையும் பற்றிவிட்டதைக் காண்கின்றோம். நாள்கள் செல்லச்செல்ல இவ்வெண்ணம் அவருடைய அக மனத்தைப் பற்றி அவரையும் அறியாமல் வெவ்வேறு விதமாகத் தொழிற்படும்படி இயக்கத் திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 357 தொடங்கிவிட்டது. திருப்புன்கூரில் நந்தியை விலகச் செய்ததுபோல் ஏதாவது ஒரு முறையில் கருணை காட்டுவான் என்ற எண்ணம்கூட அவருடய மனத்தில் தோன்றவில்லை. அவரைப் பற்றிக் கொண்டிருந்த சாதிபற்றிய எண்ணம் இவ்வளவு விரைவாகத் தாழ்வு மனப்பான்மையாக (Inferiority Complex) அவருள் பதிந்து விட்டது. மனஇயல்பற்றி அறிந்தோர் இத்தாழ்வு மனப் பான்மைபற்றி நன்கு அறிவர். இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்க்கு உய்கதியே இல்லை எனலாம். அவர்களாக இத்தகைய ஒன்று தம்மைப் பிடித்துள்ளது என்பதை அறிந்து நீக்கினாலொழிய, இதனைப் போக்கவே முடியாது. தாழ்வு மனப் பான்மையில் சிக்குண்டவர் மிகவும் இரங்கத் தக்கவராவர். பிறர் இதனை எடுத்துக்காட்டி, இத்தகைய மனப்பான்மை தேவை இல்லாத ஒன்று என்று எடுத்துக் கூறினாலும் இம் மனப்பான்மை தம்மிடம் உண்டு என்றுகூட இந்நோயுடையார் ஏற்றுக்கொள்வதில்லை. - - - ". . . . அவ்வாறானால் இத்தகைய மனநோய்வயப் பட்டார்க்கு மருந்துதான் யாது? மருத்துவன் யாவன்? நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் : ' ' ' -- - --> . குறள்-48) 358 சேக்கிழார் தந்த செல்வம் படுகின்றவனே சிறந்த மருத்துவனாவான். நந்தனார் போன்ற சிறந்த சிவபக்தர்-தவம் பெருக்குஞ் சிலர் ஒருவர் இத்தகைய வேண்டாத நோயால் பிடிக்கப் பட்டால், அதனை யார் நீக்க முடியும்? பிறர் எடுத்துக் கூறியவிடத்து மன அமைதி அடையக் கூடியவர்களா இவர்கள்? அதிலும் நீக்கக் கூடிய ஒன்றால் தாம் பற்றப்பட்டதாக நினைத்திருப்பின் ஒரு வேளை வேறு வழிகளில் முயன்றிருக்கலாம். உடம்புடன் பிறந்த நோயாகவே தம்முடைய சாதியை நினைந்துவிட்டார் நந்தனார். - சாதி என்ற ஒன்று உண்டா? அது மனிதர்களால் படைக்கப்பட்ட ஒன்றுதானே? அதற்காக இத்துணைத் தூரம் கவலைகொள்வது சரியா என்ற ஆராய்ச்சி பயனற்றதாகும். அந்த நாளைய சமுதாயம் இதனை உண்மை என நம்பிற்று. அந்தச் சமுதாயத்தில் தோன்றிவிட்ட பெரியார் - இதனை மெய் என்று முழு மனத்துடன் நம்பிவிட்டார். அந்த நம்பிக்கை சரியா தவறா என்று சிந்திப்பதில் பயனில்லை. சமுதாயத்தின் தவறுதான் என்று கூற வேண்டிய ஒன்றிற்கு, அந்த நம்பிக்கையின் அடிப் படையில் செயல்படுபவரை என்ன செய்ய முடியும்? சாதாரண மக்களின் நம்பிக்கை நம்பிக்கை புடையார் இரு வகைப்படுவர். சாதாரண மக்கள் நம்பிக்கை என்பதைப் புளியம் பழத்தின் ஒடுபோலக் கொண்டிருப்பர். முதல் அடி பட்டவுடன் திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 359 ஒடு பொலபொல வென்று உடைந்து கொட்டிவிடுகிறது. சாதாரண மக்களின் நம்பிக்கையும் இத்தகையதே. நம்பிக்கையின் எதிரான வாதமோ, காரியமோ நடைபெறுவதைக் கண்டவுடன் இவர்கள் நம்பிக்கையும் ஆட்டங் கண்டு வீழ்ந்து விடுகிறது. இறைவனாலும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆனால், அடியார்களின் நம்பிக்கை மிகமிக ஆழமானது. இறைவனாலும் அசைக்க முடியாத சிறப்புடையது. அவர்கள் எதிராக இறைவன் நேரே வந்து அவர்கள் கொண்ட நம்பிக்கை தவறானது என்று எடுத்துக்காட்டினாலும் அவர்கள் தம் நம்பிக்கையை விடுவதில்லை. இதனைப் பிடிவாதம் என்று தவறுதலாக நினைந்துவிட வேண்டா, தவறு என்று தெரிந்திருந்தும் வேறு காரணங்கள்பற்றி ஒன்றை விட மறுப்பது பிடிவாதம். ஆனால், தக்க காரணங்களுடன் தாங்கள் மேற்கொண்ட கொள்கை யிலிருந்து பிரிய மறுப்பது மன உறைப்பு என்று கூறப் பெறும் அடியார்கள் கொள்கை என மேற்கொள்வது அனைத்தும் நம்பிக்கையிலிருந்து பிறப்பவையே ஆகும். ஆதலால்தான் அவர்கள் கொண்ட கொள்கையின்மாட்டு அத்துணை முனைப்புடன் நிற்கின்றனர். .* * - ஏயர்கோன் கலிக்காமர் நம்பியாரூராகிய சுந்தரமூர்த்தியிடம் வெறுப்புக் கொண்டு அவரைக் காணவும் மறுக்கிறார். ஆனால், அவருக்கு வந்த 360 சேக்கிழார் தந்த செல்வம் சூலை நோயை நம்பியாரூரர் வந்துதான் தீர்க்கமுடியும் என இறைவன் கனவிடைக் கூறியதற்கு ஏயர்கோன் இறுக்கின்ற விடை வியப்பையும் அச்சத்தையும் விளைக்கிறது. "எம்பிரான்! எந்தை தந்தை தந்தைஎம் கூட்டம் எல்லாம் தம்பிரான் நீரே என்று வழிவழிச் சார்ந்து வாழும் இம்பளின் மிக்க வாழ்க்கை என்னைநின்று ஈரும் துலை வம்பு என ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து? "மற்றுஅவன் தீர்க்கில் தீராது - - ஒழிந்து எனை வருத்தல் நன்றால்: 55 (பெ. பு-355 & 52) "உயிர் போக வாட்டி வருத்துஞ் சூலையை நம்பியாரூரன் வந்து தீர்ப்பதினும் அது தீராது இருத்தலே நன்று” என்று பகரும் நெஞ்சுரம்தான் அவர்களை அடியார்களாக ஆக்குகிறது. அதுவும் வந்து கூறுபவன் சாதாரண் மனிதன் அல்லன்! இறைவனே கூறுவதானாலும் தம் கொள்கையினின்று பிறழக்கூடாது என்று நினைப்பவர்கள் இவ் வடியார்கள். இத்தகைய ஒரு உறுதிப்பாடு சரியா தவறா என்றது. இங்கு வினாவன்று. இதனைத் தவறு திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 381 என்று கூறுகிறவர்கள் பெருநிலையைப் பற்றி அறியாதவர்கள். அடியார்கள் இத்தகைய நெஞ்சுரம் கொண்டிருந்தமை யால்தான் செயற்கரிய செய்ய முடிந்தது. உலகத்தில் மாபெருங் காரியங்களைச் சாதித்தவர்கள் அனைவருமே இத்தகைய உரம் வாய்ந்தவர்கள் தாம். இதனை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் அடியார்களையும் மற்றப் பெரியார்களையும் பிடிவாத குணமுடையார்’ என்று கூறுவர். அதுபற்றி அடியார்கள் என்றுமே கவலைப்படுவதில்லை. ஆதனூரில் அடக்க முடிந்தது : தில்லை எல்லையில் முடியவில்லை இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு நந்தனாரின் மன நிலையையும் செயல்களையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். சிதம்பரத்திற்குப் போகலாமா வேண்டாவா என்று பல நாள் சிந்தனையிலேயே கழித்துவிட்ட நந்தனார் ஒரு வகையாக மனத்தில் திடங்கொண்டு சிதம்பரத்திற்கு வந்தே விட்டார். வந்ததும் அவருடைய பிரச்சினை தீர்ந்த பாடில்லை. தில்லையின் எல்லையை அடைந்த பெரியார் அங்கேயே வணங்கி எழுந்தார். ஊர் முழுவதும் வேள்வி செய்வதால் உண்டாகிய புகையும் மடங்களின் நெருக்கமும் கண்டார். கண்டவுடன் நினைவு தோன்றிற்று: 'அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்’ என்கிறார் ஆசிரியர். 362 சேக்கிழார் தந்த செல்வம் செல்கின்ற போழ்துஅந்தத் திருஎல்லை பணிந்துஎழுந்து பல்கும் செந்வளர்த்த பயில்வேள்வி எழும்புகையும் மல்குபெருங் கிடைஒதும் மடங்கள்நெருங் கினவும்கண்டு அல்கும்தம் குலம்நினைந்தே அஞ்சிஅணைந்திலர் நின்றார். (பெ. பு-1068) இப்பாடலின் இறுதி அடி நந்தனாரின் மனம் வேறு வழியில் திசை திரும்பிவிட்டதை நமக்கு அறிவுறுத்துகிறது. எத்தனை நாள்கள் சிதம்பரத்தைப்பற்றி நினைந்து, எவ்வாறாயினும் அங்கே சென்று நடராஜப் பெருமானை வணங்க வேண்டுமென்று அல்லும் பகலும் அதே நினைவாகக் காலம் கழித்தார்! இன்று போவேன், நாளை எப்படியும் போவேன், நாளை இல்லாவிடினும் அதற்கு அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் உறுதியாகப் போவேன்’ என்று விழிப்பிலும் உறக்கத்திலும் எல்லாம் ஒரே நினைவாக இருந்தார் பெரியார். ஆனால், இந்த நினைவு தோன்றும்பொழு தெல்லாம் இதற்கு எதிராகக் குலத்தை நினைந்து அங்கே செல்வது உறுகுலத்தோடு இசைவில்லை என்ற எண்ணம் தோன்றியது. இவ் விரண்டு மாறுபட்ட எண்ணங்களின் இடையே நிகழ்ந்த போராட்டத்தின் முடிவில் போகவேண்டும் திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 363 என்ற எண்ணம் ஒருவகையாக வெற்றி பெற்று விட்டது. இந்த எண்ணம் வலுப்பெற்றுத் தில்லைக்குப் புறப்பட்டவுடனேயே நந்தனாரின் மனத்திலிருந்த சாதிபற்றிய எண்ணம் மறைந்திருக்க வேண்டும். சாதி பற்றிய எண்ணத்தை வென்றுதானே தில்லைக்குப் புறப்பட்டார் எந்த நேரத்தில் புறப்பட முடிவு செய்தாரோ அந்த நேரத்திலேயே சாதியின் இழிவு பற்றிய துயரம் மறைந்திருக்கவேண்டும். அப்படித்தான் நாமும் எதிர்பார்ப்போம். ஆனால், நடந்தது என்னவோ வேறாக இருந்துவிட்டது. தில்லையின் எல்லையை அடைந்தவுடன் நீண்ட காலமாக அவருடைய மனத்தை நையவைத்து வேறு எண்ணமே புகவிடாமல் தனியாக நின்ற ஒரு பேராசை-தில்லை செல்ல வேண்டுமென்ற பேராசை இப்பொழுது முற்றுப்பெற்றுவிட்டது. எனவே, அவருடைய மனத்தில் தேவையில்லாத மற்றோர் எண்ணம் குடிபுகத் தொடங்கிவிட்டது. ஆதனூரில் இருக்கின்றவரையில் அடிமனத்தின் ஆழத்தில் தங்கியிருந்து ஒரோவழி வெளிப்பட்டு, அவருக்குத் துயரத்தைத் தந்த சாதிபற்றிய எண்ணம் இப்பொழுது தலைதூக்கிவிட்டது. முன்னமே அவருக்கிருந்த கவலைதானே இது? அப்படியிருக்க இப்பொழுது புதிதாக என்ன நேர்ந்துவிட்டது என்று நாம் ஐயுறலாம். உண்மை என்னவெனில், முன்னரே இந்த எண்ணம் இருப்பினும் இதனை எதிர்த்துப் போராடுகின்ற ஒர் எண்ணம்-அஃதாவது தில்லை 364 சேக்கிழார் தந்த செல்வம் செல்லவேண்டு மென்ற, எண்ணம்-இருந்துவந்தது. இவை இரண்டின் இடையேயும் போராட்டம் மிகுந்தமையின் சாதிபற்றிய எண்ணம் வலுப்பெற வில்லை. அது வலுப்பெறவில்லை என்பதற்கு அவர் தில்லைக்குப் புறப்பட்டு வந்ததே சான்றாகும். சாதிபற்றிய எண்ணம் வலுவாக இருந்திருப்பின் தில்லைக்கு வந்தேயிருக்கமாட்டார் அல்லவா? ஆதனுரில் இருக்கின்றவரையில் வலுவிழந்திருந்த இவ் வெண்ணம், தில்லை வந்தவுடன் போராடுவதற்குரிய மற்றோர் எண்ணம் இன்மையினால் இப்பழைய எண்ணம் தானே வலுப்பெற்று நந்தனாரின் மனம் முழுவதையும் ஆட்கொண்டு, தலைவிரித்து ஆடத் தொடங்கிவிட்டது அதனைத்தான் சேக்கிழார் பெருமான். அல்கும் தம்குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர். என்று பேசுகிறார். இந்த மனோநிலையையும் ஒருவாறு கடந்து ஊருக்குள் நுழைந்த நந்தனார், மறுபடியும் கோயிற் புறம் செல்ல விரும்பாமல் தில்லையைச் சுற்றி வருகிறார். இப் பரிசாய் இருக்கஎனக்கு எய்தல்அரிது என்றுஅஞ்சி, அப் பதியின் மதில்புறத்தில ஆராத பெருங்காதல் திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 365 ஒப்பு அரிதாய் வளர்ந்துஓங்க உள்உருகிக் கைதொழுதே செப்பு அரிய திருஎல்லை வலம்கொண்டு செல்கின்றார். (பெ. பு-1070) எல்லையிலேயே தோன்றிய சாதிபற்றிய இவ்வச்சம் ஊருக்குள் போனவுடன் பன்மடங்காகப் பெருகிவிட்டதை அறிகின்றோம். 'இப்பரிசாயிருக்க எனக்கு எய்தலரிது’ என்று அஞ்சினார் என்று அறிகிறோம். இந்த எண்ணம் அவரை முற்றிலும் ஆட்கொண்டுவிட்ட சூழ்நிலையில் பல நாட்கள் அங்குத் தங்கிப் பொழுதைக் கழிக்கின்றார். ஒவ்வொரு நாளும் உறங்கப் போகும் பொழுது, எல்லையற்ற சிவ பக்தியுடையவராகிய அவர் இறைவனுடைய திருவடிகளையே நினைந்து உறங்கப் போயிருப்பார் என்று நாம் கருதுவோம். ஆனால், உண்மையில் நிகழ்ந்தது அதுவன்று எனச் சேக்கிழார் கூறுகிறார். இன்னல்தரும் இழிபிறவி . இது தடை என்றே துயில்வார்’ - - (பெ. பு-1072) என்று கவிஞர் பாடுகிறார். என்றே துயில்வார் என்ற சொற்கள் இங்கு ஆராயத் தக்கன. இந்த ஓர் எண்ணத்தைத் தவிர அவருடைய மனத்தில் எண்ணம் வேறில்லை என்பதை நமக்கு 368 சேக்கிழார் தந்த செல்வம் அறிவுறுத்துவதற்குப்போலும் 'என்றே என்ற தேற்றேகாரம் கெர்டுத்துப் பேசுகிறார். எனவே, ஆதனூரில் இருந்த இந்தத் தாழ்வுமனப்பான்மை, தில்லைக்கு வந்த பின் விஸ்வரூபம் எடுத்து நந்தனாரை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது. இறைவனைப்பற்றிய நினைவைக்கூட அமுக்கி, சாதிபற்றிய ᏧᏠᏚᎧaᎥ6ᏡᎠᏮy அடியாரை முழுவதும் ஆட்படுத்திவிட்டது. இத்தகைய ஒரு நிலையில் அந்த நடராஜப் பெருமானே வந்து உன் சாதிபற்றிக் கவலை வேண்டா, நீ கோயிலுக்கு வா’ என்று அருளி யிருப்பினும் நெஞ்சுரம் உடைய அடியாராகிய நந்தனார் அதைப் பொருட்படுத்தி யிருக்கமாட்டார். இம் மனநிலைக்குக் காரணமான பிறவி போனால் ஒழிய நந்தனார் அமைதியாக ஆண்டவனை வழி பட்டிருக்க முடியாது. - இறைவன் ஆட்கொள்ள வழி இரண்டு இந்நிலையில் இரண்டு எண்ணங்கள். நம் மனத்தில் எழுகின்றன. முதலாவது எண்ணம், துயருடைய பிறவி போய் நீங்குமாறு இறப்பினைத் தந்து இறைவன் அவரை ஆட்கொண்டிருக்கலாம். இரண்டாவதாக, திருப்புன்கூரில் நந்தியை விலகச் செய்ததுபோலவும், திருவாலங்காட்டில் ஞான சம்பந்தப்பெருமானுக்கு ஊரின் வெளியே வந்து திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? - 367 காட்சி தந்ததுபோலவும் இறைவன் காட்சி தந்திருக்கலாம். இவற்றுள் முதலாவதாக உள்ளதைச் சற்று ஆராயலாம். நந்தனாருக்கு இறப்பைத் தந்து வீடு பேறு அருளியிருப்பின் இறைவனுடைய கருணைக்கே களங்கம் ஏற்பட்டிருக்கும். இந்த அடியார் வேண்டியது யாது? இறைவனுடைய திருவடியை அடையவேண்டுமென்று என்றுமே அவர் விரும்பினதாகத் தெரியவில்லை அதன் எதிராக இந்த உடலோடு அவனுடைய திருவடியைக் கும்பிட வேண்டுமென்றுதானே விரும்பினார்: அடியார்கள் யார் என்பதைக் கூறவந்த சேக்கிழார், "கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” (பெபு-143) என்று கூறுவதை இங்கு மனத்துட் கொண்டால், இறைவன் ஏன் இந்த முடிவெடுத்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும். எனவே, அவர் விருப்பத்தின் எதிராக உடம்பைக் கழித்து உயிருக்கு வீடுபேறு அருளுவது கருணைக் கடலாகிய இறைவனுக்கு உகந்ததன்று. - * . வேண்டிய வேண்டியாங்கு இனி இரண்டாவதாக உள்ள காரணத்தையும் சிந்திக்கலாம். வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று பாடிச் சென்றார் திருநாவுக்கரசர். அப்படியானால், நந்தனார் விரும்பியது யாது? அவர் வேண்டுவதைத் தருவதுதானே முறை? திருப்புன்கூர் 368 சேக்கிழார் தந்த செல்வம் சென்ற நந்தனார் கோயிலுக்கு உள்ளே செல்வதற்குத் தடையாகத் தம்முடைய பிறவி இருக்கின்றது என்று நினைத்ததாகத் தெரியவில்லை. சீர்ஏறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில் நேரேகும் பிடவேண்டும் எனநினைந்தார்க்கு, அதுநேர்வார் கார்ஏறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போஏற்றை விலங்கஅருள் புரிந்தருளிப் புலப்படுத்தார். (பெ. பு-1062) 'இறைவனைத் திருவாயில் நேரே கும்பிட வேண்டும்’ என்றுமட்டுமே நந்தனார் நினைந்தார். அந்த நினைவைச் செயல்படுத்தினவன் இறைவன். நேரே கும்பிடுவதற்குத் தடையாயிருந்த நந்தியம் பெருமானை விலகியிருக்க அருள் செய்தான். ஆனால், தில்லைக்கு வந்த நந்தனார் இறைவனை நேரே கும்பிடவேண்டும் அல்லது வீடுபேற்றைப் பெறவேண்டும் என்று நினைந்து இருப்பாரேயானால், இறைவன் அதற்கு அருள் செய்திருப்பான். அவ்வாறு இல்லாமல் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் அதற்குத் தடையாகத் தம்முடைய பிறவி உள்ளது என்று துயரத்தில் ஆழ்ந்து, இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்று நினைந்தார் ஆதலால், அந்தப் பிறவியாகிய தடையைப் போக்க முனைந்தான் பெருமான். திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 369 'இழிபிறவி என்று நந்தனார் குறிப்பிடுவது பொதுவாகக் கூறப்படும் மானுடப் பிறவியை அன்று. அவர் குறிப்பது அரிசன குலத்தில் தோன்றிய தம்முடைய உடம்பைத்தான் என்பதை அறிதல் வேண்டும். முன்னரே கூறியபடி பிறவியைப் போக்கி வீடுபேற்றைத் தந்தால் நந்தனாருடைய விருப்பம் முற்றிலும் நிறைவேறியதாகாது. அவருடைய தாழ்வு மனப்பான்மைக்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு. இந்தப் பிறவியிலேயே அவரால் இழிவான தென்று கருதப்பட்ட இந்த உடம்பை மாற்றி அவர் உயர் பிறப்பு என்று கருதும் வேறோர் உடம்பு தருவது தவிர வேறு வழி இல்லை. அடியாரின் நோயை நாடிய இறைவன், பின்னர் அந்த நோயின் முதலையும் நாடி, அடுத்து அந்நோய் தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பான ஒரு வழியை மேற்கொள்ளுகிறான். "இப் பிறவி போய்நீங்க எளியினிடை நீ மூழ்கி முப்புரி நூல் மார்பருடன் முன் அணைவாய்” (பெ. பு-1073) என்று கூறிப்போனான். அந்தணர் செயல் : இறைவன் கட்டளை அடியார் மன நோய்க்குரிய முறையில் மருத்துவம் செய்த வைத்தியநாதன், இத்தகைய ஒர் 370 சேக்கிழார் தந்த செல்வம் அடியாருக்குத் தான் அருள் செய்ததை மற்றவர்களும் அறியவேண்டும் என்ற கருத்தினால்போலும் தில்லை வாழ் அந்தணர்களிடமும் கனவில் தோன்றி நந்தனாருக்கு எரி அமைத்துத் தருமாறு கட்டளை. இட்டு மறைந்தான். இறைவனால் கட்டளை இடப்பெற்ற அவர்கள், நந்தனாரின் பெருமையை அறிந்து, அவருக்குத் தீயமைத்துத் தரத் தமக்குத் தகுதியோ உரிமையோ இல்லை என்பதனையும் நன்கு உணர்ந்தனர். என்றாலும் இறைவன் கட்டளையை மீற அஞ்சித் தீ அமைத்துத் தரவேண்டி நந்தனாரிடம் சென்று இதோ பேசுகிறார்கள்: ‘ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம் வெய்யஅழல் அமைத்துஉமக்குத் தரவேண்டி’ எனவிளம்ப, நையும்மனத் திருத்தொண்டர் "நான் உய்ந்தேன்'எனத் தொழுதார் தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படிமொழிந்தார். (பெ. பு-1075) இதிலுள்ள சிறப்பைச் சற்று ஆராய வேண்டும். தில்லையில் வாழ்கின்ற அந்தணர்கள், தம்முடைய பிறப்பு இழிவானது என்று வருந்தும் நந்தனை, நோக்கி, ‘ஐயரே! என விளிக்கின்றார்கள். ‘ஐயரே' என்று அழைத்துவிட்டுப் பிறகு அவருக்குத் தீ அமைத்துத் தருகின்றோம் என்றால், அது பொருத்த மற்றதாகும். சாதியால் ஐயர்கள் ஆகிய அவர்கள், திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 371 சாதியால் அரிசனக் குலத்தவராகிய நந்தனை மனமார ‘ஐயரே என்று அழைத்துவிட்டமையால் நந்தனாருடைய குலம்பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை என்பதை அறிவித்துவிட்டார்கள். அப்படி இருந்தும் அடுத்த அடியில், அவர் முழுகுவதற்குத் தீ அமைத்துத் தர இருக்கின்றார்கள் என்றால், இவை இரண்டும் எவ்வளவு பொருத்தமற்ற கூற்றுகள். இதிலுள்ள பொருத்தமின்மையை நன்கு அறிந்த தில்லை வாழ் அந்தணர் மிக்க அச்சத்தோடு தம் கருத்தை வெளியிடுகின்றார்கள். ஐயரே, உமக்கு அழல் அமைத்துத் தரவேண்டுமென்றோ அதில் தாங்கள் மூழ்கி எழவேண்டுமென்றோ நாங்கள் கனவிலும் கருதமாட்டோம். ஆனால், பின்னர் ஏன் வந்தோம் என்றால், அது, நீங்களும் நாங்களும் மீற முடியாத இறைவனுடைய கட்டளையாகும் என்று சொல்பவர்கள்போல், 'ஐயரே அம்பலவர் அருளால் இங்கு அணைந்தோம் வெய்யஅழல் அமைத்து உமக்குத் தரவேண்டி. ’ என்று பேசுகிறார்கள். தம்முடைய விருப்பு வெறுப்புகளை அப்பால் ஒதுக்கிவைத்துவிட்டுத் தலைவனின் இறைவன்) கட்டளையை நிறைவேற்றும் அடிமைகளாக அப்பெருமக்கள் காட்சியளிக்கின்றனர். . இந்நிலையில் நந்தனாருடைய மனநிலையைச் சற்றுக் காணவேண்டும். அவர்கள் அவ்வாறு கூறியவுடன் நந்தன் கூறிய சொற்கள், நான் உய்ந்தேன்’ என்பது ஆகும். எவ்வளவு தூரம் அவருடைய மனத்தில் சாதி பற்றிய துயரம் இருந்திருந்தால், இத்தகைய சொற்கள் வெளிப்பட்டிருக்கும்? ஆடவல்ல பெருமான் தம்முடைய கனவில் வந்து பேசியது கூட, அவ்வடியாருக்குப் பெரிதாகப் படவில்லை. ஆனால், ‘நெருப்பு அமைத்துத் தரப் போகின்றோம்’ என்று தில்லைவாழ் அந்தணர்கள் கூறியவுடன், ‘நான் உய்ந்தேன்’ என்று கூறுவாரேயானால், எவ்வளவு ஆழமாக அவருடைய மனத்துயர் இருந்தது என்பதையும் அத்துயர் ‘நெருப்பில் மூழ்குதல்’ என்ற இரண்டு சொற்களால் ஆறி விட்டது என்பதையும் அறிய முடிகிறது.
யாரால் அறிய முடியும்?
வரலாற்றின் இந்த நுணுக்கத்தையும், சேக்கிழாரின் தெய்வப் புலமையையும், அடியார்களுடைய நெஞ்சுரத்தையும், மனித மனத்தில் தோன்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற நீக்குவதற்கரிய நோய்களையும், நன்கு அறிந்த பெருமக்களே திருநாளைப்போவார் வரலாற்றில், அப்பெருமகன் தீக்குளிப்பதற்கு நேர்ந்த காரணத்தையும், செம்மையாக அறிய முடியும். இன்று சமுதாயத்தில் காணப்படும் குறைவு, நிறைவுகளை வைத்துக் கொண்டு, அன்றைய சமுதாயத்திலும் இத்தகைய ஒரு கொடுமை நிகழ்ந்தது என்று பேசுவது, சேக்கிழாரையோ, நந்தனாரையோ, அடியார்களையோ அறியாதவர்கள் செயலேயாகும்.
※※※※※