சேக்கிழார் தந்த செல்வம்/குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும்
சிலமுறை ஆண்டு அகன்றதன் பின்……
பெரிய புராணத்தில் இடம் பெற்ற வரலாறு திருநாவுக்கரசர் புராணமாகும். பிறந்ததிலிருந்தே, தம் வாழ்க்கை முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை எதிர் கொண்ட நாவரசர் செய்த ஒவ்வொரு செயலும், இன்றைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல பாடங்களாகும். சுந்தரர் பிறந்த அதே நடு நாட்டில், சுந்தரருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர்ப் பிறந்தவர் ஆவார் நாவுக்கரசர். வளம் கொழிக்கும் மேட்டுக் குடியில் பிறந்த அவர், இளமையிலேயே தாய் தந்தையரை இழந்தவர் ஆவார். பெண்ணினத்திற்கே பெருந்திலகமாக விளங்கும் திலகவதியார், நாவரசரின் மூத்த சகோதரியாவார்.
நாவரசரின் பெற்றோருக்கு முறையே திலகவதியாரும், மருள்நீக்கியாரும் பிறந்ததைச் சொல்ல வந்த சேக்கிழார் மிகச் சிறந்த முறையில் ஒரு பாடலைப் பாடுகிறார்.
142 சேக்கிழார் தந்த செல்வம் திலகவதியார் பிறந்து சிலமுறை யாண்டு அகன்றதன்பின் அலகு இல் கலைத்துறை தழைப்ப அருந்தவத்தோர் நெறி வாழ, உலகில் வரும் இருள் நீக்கி - ஒளிவிளங்கு கதிர்போல மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார். - - (பெ. பு-288) இப்பாடலை மேலோட்டமாகப் படிப்பவர்கள் திலகவதியார் பிறந்து சிலகாலம் கழித்து, உலகோரின் மன இருளைப் போக்கும் கதிரவன்போல மருள் நீக்கியார் என்ற பெயருடன் ஓர் ஆண் மகவு பிறந்தது என்ற பொருளை விளங்கிக்கொள்ள முடியும். அதில் தவறு ஒன்றுமில்லை, என்றாலும், சேக்கிழார் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியவை. என்பதை மனத்துட் கொள்வது நலம். - இருபதாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழும் நமக்கு அரசினர் விடாது அறிவுறுத்துகின்ற ஒரு செய்தி, ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே உள்ள காலம் மூன்றாண்டுகளுக்கு மேல் இருத்தல் நலம் என்பதாகும். இவ்வாறு கொல்லுவதற்குரிய காரணம் மக்கள் தொகையைக் குறைக்கவேண்டுமென்பதே ஆகும். ஆனால், நாவரசர் பிறந்த 6ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் மக்கள் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும். 143 தொகைப் பெருக்கம் எதுவுமில்லை. அப்படியிருக்க முதற் குழந்தை பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் என்று சேக்கிழார் கூறக் காரணம் என்ன? சில ஆண்டுகள் என்று கூறினாலே போதுமானதாயிற்றே அப்படி இருக்க முறையாண்டு’ என்று கவிஞர் கூறக் காரணம் யாது? தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றும் மகளிரிடை ஒரு பழக்கம் இருந்துவருகிறது. தை மாதத்தில் பிறந்த குழந்தையை அடுத்த சித்திரையில் குறிக்கும்பொழுது போன வருடம் பிறந்த குழந்தை என்று பேசும் மரபு இன்றும் உண்டு. இத்தகைய தவறு நேராமல் இருக்கவே, முறை ஆண்டு என்றார் சேக்கிழார். அதாவது பன்னிரு மாதங்கள் முறையாக முடிந்த ஒவ்வோர் ஆண்டாகக் கணக்கிட்டு, அத்தகைய ஆண்டுகள் சில கழிந்தபின் என்று கூறுவது திலகவதியாருக்கும் அவர் தம்பியாகிய மருள் நீக்கியாருக்கும் இடைவெளி ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதைக் குறிப்பதே ஆகும். செல்வர்கள் வீட்டில் எப்படியாவது, ஆண் பிள்ளை ஒன்று வேண்டும் என்று நினைப்பது பண்டுதொட்டுத் தமிழர்கள் வாழ்க்கையில் இடம் பெற்ற ஒன்றாகும். புகழனார் செல்வராயினும் முதலில் பிறந்தது பெண் குழந்தையே ஆயினும் எப்படியாவது ஒரு ஆண் குழந்தை வேண்டும், அதுவும் உடனே வேண்டும் என்று நினைக்கவில்லை என்பதை இன்றைய சமுதாயத்தார்க்கு வலியுறுத்தவே திலகவதியர் பிறந்து சிலமுறையாண்டு அகன்றதன் பின் என்று பாடுகிறார். - 144 சேக்கிழார் தந்த செல்வம் ... திருத்தொண்டர் புராணம் அடியார் வரலாறு களைக் கூறும் நூல் என்பதில் ஐயமில்லை. பக்திச் சுவை சொட்டும் படியாக அமைந்துள்ளது என்பதிலும் ஐயமில்லை. மறுமையில் வீடு எய்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பயில வேண்டிய நூல் என்பதிலும் ஐயமில்லை. இவை எல்லாவற்றையும்விடப் பெரியபுராணம் பொதுவாக மானிட சாதிக்கும் சிறப்பாகத் தமிழினத்திற்கும் வாழ வேண்டிய முறையைக் கற்பிக்கின்ற சமுதாய நூல் என்பதை மறத்தலாகாது. திலகவதியாருக்குப் பிறகு ஒர் ஆண் மகவு பிறந்தது என்று கவிஞர் கூறிப் போயிருக்கலாம். அவ்வாறு கூறாமல் சிலமுறை ஆண்டு அகன்றதன்பின் என்று ஏன் கூறினார் என்று ஆய்ந்தால், சமுதாயத்திற்கு ஒரு படிப்பினையை இலைமறை காயாகக் கற்பிற்கும் நோக்கத்துடனேயே இதனைக் கூறினார் என்பதை அறிய முடிகிறது. முடிவாகி, நிறைவேறாத திருமணம் திலகவதியார் மணப்பருவம் எய்தினார். கலிப் பகையார் என்ற ஓர் இளைஞருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய பெரியோர் சிலர் திலகவதியாரின் அழகு முதலியவற்றைக் கேள்விப் பட்டு அவர் தந்தையாராகிய புகழனாரிடம் வந்து அவர் பெண்ணைக் கலிப்பகையாருக்குத் தரவேண்டு மெனப் பேசினார்களாம். அதைக் கூறவந்த சேக்கிழார், மணம் பேசவந்தவர்களும் பெண்ணின் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 145 தந்தையும் என்ன பேசினார்கள் என்பதையும் கூறுகிறார். இரண்டு விஷயங்களைப் பேசி இரு. சாராரும் மனநிறைவு கொண்டனர் என்கிறார் சேக்கிழார், "குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் பைந்தொடியை மணம் நேர்ந்தார். -
- : 、 (பெயு-1294) என்பதால், பெண்ணின் தந்தை முதலில் அறிய விரும்பியது மணமகனின் குணநலன்களாகும். அதனாலேயே முதலில் குணம் பேசி என்கிறார் கவிஞர். அடுத்தபடியாக உள்ள குலம் பேசி என்பதனைக் கண்டு யாரும் மருள வேண்டியதில்லை. இன்று வழங்கப்படும் சாதி, குலம், கோத்திரம் என்ற பொருளில் சேக்கிழார் இதனைப் பயன் படுத்தவில்லை. குலம் என்ற சொல், குடிப்பிறப்பைப் குறிக்கும். அதாவது, பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள் என்ற மூன்று தலைமுறையை அறிவதன்மூலம் ஒருவருடைய குணநலம் நிலையானதா என்பதை அறிய முடியும். குலம் என்ற சொல்லுக்கு இதுவே பொருள் என்பத்ை.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும். * (குறள்-958). 146 சேக்கிழார் தந்த செல்வம் என்ற குறளால் அறியலாம். சிறந்த பெற்றோர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த ஒருவன் தகாதவற்றைச் செய்ய மாட்டான். அவ்வாறு செய்வானே ஆயின் அவன் அப்பெற்றோர்களின் மகன் அல்லன் என்கிறார் வள்ளுவப் பேராசான். குலம் என்ற சொல்லுக்குக், குடிப்பிறப்பு என்ற பொருளே சிறப்பாக வழங்கிற்று என்பதை அறியலாம். அந்தப் பொருளிலேயே சேக்கிழார் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார் என்பதை அறிய முடிகிறது. இரு சாராரும் மன மகிழ்ச்சியோடு திலகவதி அம்மையாருக்கும் கலிப்பகையாருக்கும் மணமுடிக்க உறுதி பூண்டனர். மண உறுதி நிகழ்ச்சியின்பின் மணநாள் வருவதற்குமுன்னரே தந்தை புகழனார் இறையடி சேர்ந்தார். அத்துயரம் பொறாத அவர் மனைவியும் உயிர்நீத்தார். பெருந்துயரில் ஆழ்ந்திருந்த திலகவதியாரும் தம்பி மருள்நீக்கியாரும் சுற்றத்தார் அருகிருந்து தேற்ற, தாய் தந்தையருக்குரிய கடன்களை இயற்றிவிட்டு, ஒருவாறு மன அமைதி அடையும் நேரத்தில் மற்றோர் நெடுந்துயரம் செய்தியாக வந்து நின்றது. மணமகனாக நிச்சயிக்கப்பெற்றிருந்த கலிப் புகையார், போர்த் தொழில் பூண்டவர். மணஉறுதி நிகழ்ச்சி முடிந்த உடனேயே போர்க் களம் செல்ல நேரிட்டது. இறையருள் வேறாக இருந்தமையின் போரிடைச் சென்ற கலிப்பகையார் வீடுபேற்றை அடைந்தார். குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 147 தயா-அருள் ሯ : ..፥ « பெற்றோரை இழந்த பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் தமக்கை, தம்பி இருவருக்கும் கலிப்பகையார் விண்ணுற்ற செய்தி பேரிடியாய் வந்துற்றது. இந் நிலையில் திருமண உறுதி நிகழ்ச்சி நடைபெற்று விட்டபின் கலிப்பகையாரே தம் கணவர் என்ற முடிவுக்கு வந்த திலகவதியார் வேறு மணம் என்ற நினைவை ஒழித்து; இவ்வுடலைத் துறக்கத் துணிந்தார். ஏறத்தாழப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது நிரம்பிய அவர் தம்பியாராகிய மருள்நீக்கியார் தாய் தந்தையரை இழந்தபிறகு தமக்கையே முழு ஆதரவு என்ற கருத்தில் தமக்கையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, நீங்களும் இறக்கத் துணிந்தால் என் கதி என்ன ஆகும்? என்று அழுகிறார். அதனால் மனம் இளகிய திலகவதியார் என்ன செய்தார் என்பதைச் சேக்கிழார் இதோ கூறுகிறார்: - தம்பியார் உள் ஆக வேண்டும் என வைத்ததயா உம்பர்.உலகு அணைய உறு > . நில்ை விலக்க, உயிர் தாங்கி அம்பொன் மணி நூல் தாங்காது, - அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி, இம்பர்மனைத் தவம் புரிந்து, + திலகவதியார் இருந்தார் ... . . . . . . . . . . . . (பெ. பு-304) 148 சேக்கிழார் தந்த செல்வம் இப்பாடலில் பல நுண்மையான கருத்துக்களைத் தெய்வப்புலவர் சேக்கிழார் பெய்துவைக்கின்றார். வேறு துணையில்லாத தம்பிக்காகவாவது உயிர் வாழ வேண்டுமென்ற நினைவில் திலகவதியார் மங்கல நாண் அணியாமல் மனைத்தவம் புரிந்தார் என்று கூறுகிறது பாடல். தாய், தந்தையர், தமக்கை, தமையன், தம்பி என்பவர்களிடையே காணப்படும் பாசத்தை அன்பு என்ற சொல்லாலேயே இத் தமிழர் குறித்தனர். விவரம் அதிகம் தெரியாத மருள்நீக்கியார்மாட்டு தமக்கையாகிய திலகவதியார் கொண்டிருந்தது சகோதரபாசம் அல்லது உடன் பிறப்பு அன்பு என்பதே ஆகும். இதை அறியாதவ ரல்லர் சேக்கிழார். அப்படி இருந்தும் தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா என்று கூறுவதன் உட்கருத்து யாது? தயா என்ற வடசொல் கருணை என்கிற பொருளைத் தருமேதவிர அன்பு என்ற சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியாத சொல்லாகும். நாம் இறைவன்மாட்டுக் கொள்வது அன்பு; இறைவன் நம்மாட்டுக் கொள்வது கருணை அல்லது அருள் எனப்படும். இதை நன்கறிந்திருந்தும் 'தம்பி வாழ வேண்டும் என்ற அன்பினால் என்று சொல்லாமல், தயாவால் (அருளால்) தான் இறக்காமல் உயிர் வாழ முடிவு செய்தார் என்கிறது பாடல். இவ்வாறு கூறுவதால் இரண்டு அருங்கருத்துக் களைப் பெறவைக்கிறார் சேக்கிழார். முதலாவது, தம்பியின் நிலை கண்டு வருந்தி அவருக்கு அருள் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது; ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 149 பெண் தன் (தம்பியிடம் தந்தை வீட்டில் இருக்கின்றவரை காட்டுகின்ற அன்பிற்கும் கணவன் வீடு சென்றபின் காட்டுகின்ற அன்பிற்கும் வேறுபாடு உண்டு. ஒருவேளை திலகவதியார் மணமுடிந்து கலிப்பகையாருடன் சென்றிருப்பின் மருள்நீக்கியார் மாட்டுப் பழைய அன்பைச் சொரிதல் இயலாத காரியம். அப்படி மணமுடித்துச் சென்றபின் தாய் தந்தையார் இறந்திருப்பின் மருள்நீக்கியாரைக் கணவன் வீட்டிலிருந்தபடியே கவனித்துக்கொள்ள முடியுமே தவிர, உடனிருந்து அன்பு செய்தல் இயலாத காரியம் நிலைமை மாறிவிட்டமையின் தம்பியாருடன் ஒரே வீட்டில் இருக்கின்றார் எனினும் கணவனுடன் உயிர் துறக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் விட்டுக்கொடுத்ததுத் தம்பி மாட்டு ஏற்பட்ட அன்பால் அன்று, கைம்மாறு கருதாத அருளாலேயே ஆகும். இவ்வளவு இளமைப் பருவத்தில் அடுக்கிவந்த இத்துணை மாபெரும் துயரங்களைச் சந்தித்த பிறகு திலகவதியார் இம்பர்மனைத் தவம் புரிந்து வாழத் தொடங்கினார் என்றால், அன்பின் முதிர்ந்த நிலையாகிய அருளுடை மையால்தான் முடியும். . . . . , இரண்டாவதாகக் காண வேண்டியது. இவ்வளவு இளமைப் பருவத்தில் அடுக்கி வந்த துன்பங்களால் மனமெர்டிந்துபோகாமல், வாழ்க்கையில் வெறுப்புக் கொள்ளாமல், தன் நிலையை நினைந்து நொந்து போகாமல் உறுதியுடன் வாழ்வது எளிதான காரியம் 150 சேக்கிழார் தந்த செல்வம் அன்று. அப்படி வாழவேண்டுமேயானால் அதற்குரிய ஒரே வழி, шт6йт எனது என்ற அகங்கார மமகாரங்களை அறவே ஒழித்துவிட்டு அனைத்து உயிர்களிடத்தும் அருள் பூண்டு வாழ்வதே ஆகும். திலகவதியார் இதனையே செய்தார் என்பதை அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி’ என்ற சொற்களால் குறிப்பிடுகிறார். அடுத்து, இம்பர்மனைத் தவம் புரிந்து, என்று கவிஞர் கூறுவது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. மனை வாழ்க்கை என்பது ஒன்று: மனைத்தவம் என்பது மற்றொன்று. கணவனோடு கூடி LᏝ)ᏊᏈ) ☾Ꭲ வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், இயல்புடைய மூவர்க்கும், விருந்தினர்க்கும், சுற்றத்தார்க்கும் பயன்பட வாழ வேண்டும். இல்லறத்திற்கு உரிய கடமை தொடர் புடையார்மாட்டுபட செய்வதேயாகும். இவை அனைத்தும் அன்புடைமை என்றே கூறப்படும். அருளுடைமை இதற்கு அப்பாற்பட்டதாகும். தொடர்புடைய சுற்றத்தார், நண்பர், விருந்தினர், பகைவர், நொதுமலர் (Siange) என்பவர்களிடம் வேறுபாடு பாராட்டாமல் காட்டப்படுவது அருள் என்று கூறப்படும். மனையில் தங்கி வாழ்ந்த திலகவதியார், தம்பிக்காகமட்டும் வாழ்ந்திருப்பின் அது சோதர அன்பு அல்லது சோதர பாசம் எனப் பட்டிருக்கும். அவ்வாறில்லாமல் தம்பி என்ற உறவைப் பெரிதாகப் பாராட்டாம்ல் அனைத்து உயிர்களிலும் அவரும் ஓர் உயிர் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தார் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 151 என்று குறிக்கவே அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி’ என்றும், மனைத்தவம் புரிந்தார் என்றும் கவிஞர் பாடுகிறார். இதுவே பொருள் என்பதைப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். தம்பியார் மாறியும் தம் நிலைமாறாமை எந்தத் தம்பிக்காக உம்பர் உலகு அணையாமல் இம்பர் மனைத்தவம் மேற்கொண்டாரோ அந்தத் தம்பி வேற்றுச் சமயம் புகுந்துவிட்டார். தம்பிக்காக மட்டும் வாழ்ந்திருப்பின் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மனமுடைந்து உயிர் நீத்திருப்பார். அல்லது தம்பியை அழைத்துத் தன் மன உளைச்சலை வெளியிட் டிருப்பார். திலகவதியார் அவ்வாறு செய்யவில்லை. இறைவனிடம் முறையிட்டுவிட்டுத் தாம் மேற் கொண்ட ஆலயப் பணியினை விடாது செய்து வந்தார். இதிலிருந்தே அன்புடைமையின் மேம்பட்ட அருளுடைமையில் திலகவதியார் நிலைபெற்று விட்டார் என்பதை அறியமுடிகிறது. ஒரே தம்பியார் தம்மை விட்டு அகன்றபின், திருவாமூரில் இருந்து புறப்பட்டுச் சென்று, கெடில நதிக்கரையில் உறையும் அதிகை வீரட்டானரை நண்ணி, திருக்கோவிலில் பணிபுரியும் பணியை மேற் கொண்டார் திலகவதியார் என்று சேக்கிழார் இதோ கூறுகிறார்: 152 சேக்கிழார் தந்த செல்வம். "புலர்வதன்முன் திருஅலகு பணிமாறிப் புனிறுஅகன்ற நலம்மலிஆன் சாணத்தால் நன்குதிரு மெழுக்கு இட்டு, மலர்கொய்து கொடுவந்து, மாலைகளும் தொடுத்து அமைத்துப் பலர்புகழும் பண்பினால் திருப்பணிகள் பலசெய்தார்.” (பெ. பு-1314) கோயில் திருப்பணி : சமுதாயப் பணி - இப்பாடல்மூலம் இறையன்பின் அடிப்படையில் இத்தொண்டு செய்யப்படுகிறது என்பதைமட்டும் அல்லாமல், மற்றொரு கருத்தையும் சேக்கிழார் குறிக்கிறார். திருக்கோயில் பணிகளில் மிக முக்கியமானது திருக்கோயிலைக் கூட்டித் துப்புரவு செய்வதும், பசுஞ்சாணத்தால் மெழுகுவதும் ஆகும். அக்காலத்தில் கோயில் முழுவதும், பிராகாரம் உள்பட மண்தரையாக இருந்ததேதவிர, இக்காலம் போலப் கருங்கல்லால் தளவரிசை இடப்படவில்லை. அன்றியும், அன்றாடம் நூற்றுக் கணக்கானவர்கள் திருக்கோயிலுக்கு வந்து, பிராகாரம் வலம் வந்து கருவறைவரை சென்று நின்று இறைவனை வழிபட்டுச் செல்வது மரபாகும். எனவே, சுற்றுப் புறமும் தரையும் மாசுபடுதல் இயல்பே ஆகும். அதனைப் போக்க அலகிடுதலும் சாணத்தால் மெழுகுதலும் தேவைப்பட்டன. பூமியில் உள்ள மாசைக் கழிக்க இவை இரண்டும் போதுமானவை என்றாலும், பலர் கூடி மூன்று புறம் அடைக்கப் பட்ட கருவறையில் நின்று வழிபடும்பொழுது குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 153 அவர்கள் மூச்சுக் காற்றால் காற்றில் மாசு ஏற்படுவது இயல்பு. இந்த மாசைப் போக்க நம்முடைய முன்னோர் கண்ட ஒப்பற்ற புதுமை-சாம்பிராணி, குங்கிலியம், சூடம் என்பவையாகும். மிகப் பழங் காலம்தொட்டே திருக்கோயில்களில் மூன்றையும் பயன்படுத்திவந்தனர். அடைபட்ட இடத்தில் ஏற்பட்ட காற்று மாசைப் போக்க இவை மூன்றும் மிகச் சிறந்த பொருட்களாகும். இவற்றுள்ளும் சாம்பிராணி முதலிடத்தையும் குங்கிலியம் இரண்டாவது இடத்தையும் சூடம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. சாம்பிராணி போன்ற காற்று மாசு நீக்கியைக் காண்பது இன்றும் அரிதாகும். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு தான் திருக்கோயிலில் அலகிடுதல், மெழுகிடுதல், குங்கிலியம் இடுதல் ஆகிய பணிகளை இறை பணியாகவே கருதி நம் முன்னோர் செய்துவந்தனர். மக்கட்குச் செய்த தொண்டே மகேசன் தொண்டு என்பதைத் திலகவதியார் நன்கு அறிந்திருந்தார் ஆதலின் அனைத்து உயிர்க்கும் அருள் தாங்குவதற்குத் திருக்கோவில் பணி சிறந்தது எனத் தேர்ந்தெடுத்த காரணம் முன்பின் தெரியாத பலரும் கோயிலுக்கு வருவதால், மகேசனுக்குச் செய்யும் இப்பணி, அனைத்துயிர்க்கும் செய்யும் பணியாக அமைந்து இருப்பதைக் காணலாம். 154 சேக்கிழார் தந்த செல்வம் திலகவதியார் செய்தி ஏன்? திலகவதியாரின் வாழ்க்கை நிலையைச் சொல்ல வேண்டிய தேவை இல்லையென்றாலும் சேக்கிழார் கூறக் காரணம், சமுதாய அடிப்படையில் கணவனோடு வாழ முடியாதவர்கள் எந்த முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள் என்பதைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு உணர்த்தவே சேக்கிழார் இதனை விரிவாகப் பாடினார் என்பதை அறிய வேண்டும். செல்வமலி மருள்நீக்கியார் பணிவாழ்வு : தம்பியாகிய மருள்நீக்கியார் (நாவரசர் எனும் பட்டம் பின்னரே அவருக்கு எய்திற்று) செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்தமையின் என்ன செய்தார் என்பதனைச் சேக்கிழார் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். மருள்நீக்கியார் நிரம்பித் தேசநெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய்க் காசினிமேல் புகழ்விளங்க - நிதி அளித்துக் கருணையினால் ஆசில் அறச் சாலைகளும் தண்ணிப் பந்தரும் அமைப்பார். (பெ. பு-1305) குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 155 என்று பாடுவதால், மருள்நீக்கியாரின் சமுதாயத் தொண்டு இள்மையிலேயே தொடங்கிவிட்டது என்பதை அறிகிறோம். 6ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ஒஹோவென்று செல்வம் செழித்ததாகத் தெரியவில்லை. எனவே, சமுதாயத்திற்குத் தேவையான அறச்சாலைகளும், தண்ணீர்ப் பந்தலும் அமைத்தார். இன்று பெரிதாகப் பேசப்படும் சுற்றுச்சூழ்நிலைப் பாதுகாப்பு என்பது, மரங்கள் வளர்ப்பதன் அடிப்படையிலேயே பெரும் பகுதி அமைகின்றது என்பதை அறிந்த நமக்கு, மருள் நீக்கியார் அற்றை நாளில் செய்த சமுதாயத் தொண்டு வியப்பை அளிக்கிறது. தம் செல்வத்தை வேண்டுவாருக்கு அளிப்பதிலும் விருந்தினரை உபசரிப்பதிலும் செலவிட்ட அவர், பொதுத் தொண்டையும் மறக்கவில்லை. அதனையே முதலில் செய்தார் என்பதனைப் பின்வரும் பாடல் விளக்குகிறது. காவளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன - மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நானிலத்து உள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறை நின்றார். . (பெ. பு-1306) 156 சேக்கிழார் தந்த செல்வம் 'கா வளர்த்தல் என்பது சோலைகளை வளர்த்தல் என்றும் குளம் தொட்டு’ என்பது குளம் வெட்டுதல் என்றும் பொருள்படும். தமிழ் நாட்டில் என்று முள்ள நீர்ப்பஞ்சம் குளம்வெட்டுதலால் ஒரளவு போக்கப்படும். என்பதைப் புறநானூற்றுக்காலம்முதல் நாவரசர் காலம்வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளால் அறிகிறோம். "நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளா தோரிவண் தள்ளாதோரே' (புறம்-18) என்ற புறப்பாடலால் குளம் வெட்டுதலைச் சங்க காலத்திலேயே சிறந்த தொண்டாகக் கருதினர் என்று அறிய முடிகிறது. அதையே தொடர்ந்து நாவரசரும் செய்தார் என்று அறிகிறோம். மிக்க இளம் வயதினராயினும், அடக்கி ஆளும் தாய் தந்தை இல்லாதபோதும், பெற்ற பெருஞ்செல்வத்தை மருள் நீக்கியார் எவ்வாறு செலவிட்டார் என்பது, தான் தோன்றிகளாகத் திரியும் இக்கால மேட்டுக்குடி இளைஞர்கட்கு நல்ல படிப்பினையை நல்கும். பொதுவாக, செல்வக்குடியில் பிறந்த இளைஞர்கள் இளமையிலேயே தாய், தந்தையரை இழந்துவிட்டால் அப்பெருஞ்செல்வமே அவர்கட்குப் பகையாகி அவர்கள் அழிவிற்குக் காரணமாகின்றது. அத்தகையோரும் மருள்நீக்கியார் வாழ்க்கை அறியப் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 157 படவேண்டியதாகும். செல்வக் குடியில் பிறந்தவர்கள் கல்வி கற்பது குறைவுதான். ஆனால், மருள்நீக்கியார் எங்ங்ணம் கற்றார் என்பதை இதோ சேக்கிழார் கூறுகிறார்! பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயிலத் தொடங்குவித்தார்.” (பெ. பு-1290) பெருஞ்செல்வர்கள்கூட ஆடம்பரங்களுக்குச் செலவு செய்வதுபோலத் தம் குழந்தைகளின் கல்விக்குச் செலவிடுவது இல்லை. இதனெதிராக மருள்நீக்கியார் குடும்பம், பொருள் நீத்தம் கொள வீசினார்கள் என்பதால், கல்வி கற்பிற்கும் ஆசிரியர்களுக்கு வேண்டுமான பொருள் உதவி செய்தார்கள் என்பதையும் சேக்கிழார் வருணிக்கிறார். ஒரு பிடிப்பு இல்லை இதனை அடுத்து, மருள் நீக்கியார் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பெரு நிகழ்ச்சி சிந்தனைக்குரியதாகும். செல்வக் குடியில் பிறந்திருப்பினும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு. இல்லாமல், அமைதியற்று வாழ்ந்தார் என்பது தெரிகின்றது. இதனைக் கூறவந்த சேக்கிழார், மருள் நீக்கியார், - 158. சேக்கிழார் தந்த செல்வம் நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறந்துறந்து (பெயு-1307) வேற்றுச் சமயம் புகுந்தார் என்று கூறுகிறார். பெருஞ் செல்வத்தில் வாழ்ந்தாலும் வாழ்க்கை நிலையாமை பற்றியும், தாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் மருள்நீக்கியார் மனத்தில் ஒரு போராட்டமே நிகழ்ந்தது என்பதை மேலே காட்டிய வரிகள் அறிவிக்கின்றன. இப்போராட்டத்திற்குக் காரணம் அவருடைய இளமை வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த இறப்புக்களே ஆகும். மிகக் குறுகிய காலத்தில் பெற்றோர்கள், தமக்கைக்கு வரிக்கப்பட்ட கணவர் ஆகிய மூவரும் அடுத்தடுத்து இறந்தது மருள்நீக்கியார் மனத்தில் நிலையாமைபற்றி நினைக்க இடமளித்தது. எத்துணைச் செல்வம் இருப்பினும் இறப்பு முதலிய துன்பங்களைத் தவிர்க்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார். தாம் பிறந்து வளர்ந்த சமயத்தில் அமைதி கிட்டவில்லை. ஆதலால், வேற்றுச் சமயம் புகுந்தார் என்று தெரிகின்றது. பல ஆண்டுகள் அங்குத் தங்கி, பாலிமொழியையும் கற்று கணிக வாதம் பேசும் பெளத்தர்களை வாதில் வென்று தருமசேனர் என்ற பட்டம் பெற்றார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. என்றாலும், என்ன ! அவர் - தேடிப்போன அமைதி அங்கேயும் கிடைப்பதாகத் தெரியவில்லை. எனவே, குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 159 இறைவன் அருள் கடைக் கூட்ட மறுபடியும் சைவத்திற்கே வந்து சேர்ந்தார். தம்மை வருத்திய சூலை நோயைத் - திருவதிகை வீரட்டனப் பெருமானைப் பாடித் தீர்த்துக் கொண்டார். கல்வியும் தொண்டும் நிறைவு தரவில்லை! மருள்நீக்கியாரின் வாழ்க்கையின் தொடக்கம், நிறைந்த கல்வியைப் பெறுவதிலும் மக்கள் தொண்டு செய்வதிலும் தொடங்கிற்று என்பதை முன்னர்க் கண்டோம். ஆனால், இந்தக் கல்வியும், மக்கள் தொண்டும் அவருக்கு மனநிறைவைத் தரவில்லை. இது ஏன் என்பதுபற்றிச் சிந்திப்பது இன்று நமக்குப் பயன் தருவதாகும். இவை இரண்டு மட்டும் இருக்கும் பொழுது அமைதி கிட்டவில்லை. அப்படியானால், எப்பொழுது இவர் அமைதி பெற்றார் என்று ஆராய்வது பொருத்தமுடையதாகும். தொடக்கத்தில் கல்வியும் தொண்டும் இருந்தாலும், இறைபக்தி அல்லது இறையன்பு அதில் இடம் பெறவில்லை. சூலை நோய்க்குப் பிறகு, இறையன்பு, முன்னர்க் கூறிய கல்வி, தொண்டு என்பவற்றுடன் சேர்ந்த பிறகு மன அமைதி பெற்றுவிட்டார் நாவரசப் பெருமான். தேவாரத்தால் நாம் அடையும் பயனைப்போலவே அவருடைய வாழ்க்கையும் அதில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் இன்றைக்கும் வருங்காலச் சமுதாயத்திற்கும் வழி காட்டுவனவாகும். 160 சேக்கிழார் தந்த செல்வம் தாமகாததாத தததுவம் இந்நிலையில் முற்கூறப்பட்ட வரலாற்றுப் பகுதியில் இரண்டு நிகழ்ச்சிகளைப்பற்றிச் சிந்திப்பது நலம். இந்த நூற்றாண்டில் செல்வம் உடையவர்கள் அந்தச் செல்வத்தைப்பற்றி என்ன நினைக்க வேண்டும், அதனை எவ்வாறு செலவிட வேண்டும் என்பன பற்றியெல்லாம் விரிவாகப் பேசிய மகாத்மா காந்தி, இதற்குத் தர்மகர்த்தாத் தத்துவம் (rusleeship Concept) என்று பெயரிட்டார். ஒருவன் எவ்வளவு சம்பாதித்தாலும் அது தன்னுடைய உழைப்பால் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பிற மக்களின் உழைப்பும் அதில் உள்ளது என்பதை மறக்கக்கூடாது, எனவே, வருகின்ற ஊதியம் உழைத்த அனைவருக்கும் பொதுவானதாகும். அனைவரும் தனித்தனியே வருகின்ற ஊதியத்தைப் பங்கிட்டுக்கொண்டால், பொதுவான நன்மை எதையும் செய்யமுடியாது. அதற்காகத்தான் ஒரு தனிமனிதன் அவர்கள் உழைப்புக்கு ஒரு பகுதியைக் கூலியாகத் தந்துவிட்டு, எஞ்சியதைச் சேர்த்துவைக்கின்றான். அதன்ாலேயே அவன் செல்வன் என்று அழைக்கப்படுகின்றான். ஆனால், இந்தச் செல்வம் பிறருடையது, அவர் கட்கு நன்மை செய்வதற்காகவே தன்பால் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவன் மறத்த லாகாது. பெரும்பொருளை நிர்வகிப்பது ஒருவர் இருவரால்தான் செய்யமுடியுமே தவிர, பலர் ஒன்று சேர்ந்து செய்ய முடியாது. குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 161 வங்கியின் நிர்வாக இயக்குநர் பிறருடைய பொருளை வங்கியில் சேமித்துவைத்து நிர்வகிப்பது போலவே, செல்வர்கள் எனப்படுபவர்கள் பிறருடைய உழைப்பால் வந்த செல்வத்தைச் சேகரித்துத் தம்மிடம் வைத்து, அதை நன்கு நிர்வகித்து, பிறருக்காகவே அச் செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும். இதனைத்தான் மகாத்மா தர்மகர்த்தாத் தத்துவம் என்று கூறினார். இருபதாம் நூற்றாண்டில், மகாத்மா கூறிய இதனை, அவருக்கு 1400 ஆண்டுகள் முன்னர் இத்தமிழகத்தில் வாழ்ந்த மருள்நீக்கியார் என்ற மேட்டுக்குடி மகனார் செயலில் செய்து காட்டினார். சோலைகள் வளர்த்தல், குளம் வெட்டுதல், சாலை அமைத்தல், தண்ணீர்ப் பந்தல் வைத்தல் என்பவை மருள்நீக்கியார் என்ற தர்மகர்த்தா பொதுநன்மைக்காகச் செய்த செயல்க ளாகும். இன்றைய செல்வர்கள், நாவரசரின் இளமை வாழ்க்கையை அறிந்து கடைப்பிடித்தால், உலகம் உய்ய வேறு எதுவும் தேவையில்லை. நாவரசர் இக்கொள்கையைப் புதிதாகக் கண்டறிந்தார் என்று கூறுவதும் சரியன்று. மிகப் பழைய புறநானூற்றில் செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புந பலவே’ (புறம்-189) என்ற அடிகள் தர்மகர்த்தாத் தத்துவத்தை விளக்கிக் கூறுவதைக் காணலாம். ஒரு தவறான முடிவும், உண்மை விளக்கமும் மருள்நீக்கியாரின் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு பெருநிகழ்ச்சி, அவர் வேற்றுச் சமயம் புகுந்ததாகும். 162. சேக்கிழார் தந்த செல்வம் இன்று பெரியபுராணத்தைக் கற்கின்ற சைவர்கள், தமிழ்நாட்டுச் சமணர்கள் ஆகிய இருவரும் வரலாற்றடிப்படை தெரியாமையால், பெருந்தவறு செய்கின்றனர். 6ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர் நாவரசர். "கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்’ (1807) என்று நாவரசர் சமணரானதைச் சேக்கிழார் பாடுவதை, வரலாற்றுக் கண்கொண்டு &ᏚFTöᏈᏈT வேண்டும். சங்க காலம்தொட்டே, தமிழ் மக்களில் சிலர் சமண சமயத்தைப் பின்பற்றிவந்தனர். ரிஷப தேவரும் ஏனைய தீர்த்தங்கரர்களும் வடபுலத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் வகுத்த சமயத்தின் அடிப்படையான கொள்கை, பிறர்மாட்டு அன்பு, பிற உயிர்களுக்குக் கருணை, அஹிம்சை, நோன்புகள் முதலியனவாகும். இக் கொள்கைகளில் சைவர்கள் ஒதுக்கக்கூடியவை, தங்களுக்குப் புறம்பு என்று கூறக்கூடியவை எதுவும் இல்லை. எனவே, சங்க காலம்தொட்டு, இன்றுவரை இங்குள்ள சமணர்கள் ஏனைய மக்களோடு ஒருங்கிணைந்து, அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் பலர் மாபெரும் தமிழறிஞர்களாக, தமிழ்ப் பற்றுடையவர்களாக, தமிழ் மொழியைத் தாயெனப் போற்றுபவர்களாக, பல தமிழ் நூல்களை இயற்றியவர்களாக இருந்தனர். பெருங்கதை GTGÖT வழங்கும் உதயணன் சரிதையும், திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியும், தோலாமொழித் தேவரின் சூளா குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 163 மணியும், பவணந்தியார் வழங்கிய நன்னூலும் சமணர்கள் தமிழுக்குத் தந்த கொடையாகும். அப்படியானால், 6ஆம் நூற்றாண்டில் இத்தகைய சமணர்களோடு திருநாவுக்கரசர் மாறுபட்டார் என்று சொல்வது அர்த்தமற்றதாகும். இந்த அடிப்படையில் வரலாற்றை ஆய்ந்தால் ஒர் உண்மை விளங்கும். கி.பி. 3ஆம் நூற்றாண்டுவாக்கில், எருமைநாடு என்று அன்று அழைக்கப்பட்ட மைசூர்ப் பிராந்தியத்திலிருந்து களப்பிரர் என்னும் கூட்டத்தார், சத்தியமங்கலம், கோவைவழியாகத் தமிழகத்தில் புகுந்தனர். அங்கிருந்து இரண்டு பிரிவாகப் பிரிந்து, ஒரு பகுதி கிழக்கு நோக்கி வந்து பல்லவ நாட்டையும், ஒரு பகுதி தெற்கு நோக்கிச் சென்று பாண்டிய நாட்டையும் கைப்பற்றினர். இவர்கள் கொள்ளைக் கூட்டத்தினர். இவர்களைப்பற்றிக் கூறவந்த சேக்கிழார், மூர்த்தி நாயனார் புராணத்தில், "கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவல் மானப்படை மன்னவன் வலிந்து நிலம் கொள்வானாய்"(பெ.பு.-983) மதுரையைப் பிடித்தான் என்று கூறுகிறார். பெயரளவில் இவர்கள் சமணர்களே தவிரச், சமண சமயக் கொள்கைகட்கும் இவர்கட்கும் வெகுதூரம் கொள்ளை அடிப்பதும் போரிடுவதுமே தங்கள் கொள்கைகளாகக் கொண்ட இவர்கள் சமணம் என்ற போர்வையில் வாழ்ந்தவர்களேதவிர உண்மைச் சமணர்கள் அல்லர். இவர்கள் பல்லவ நாட்டையும், பாண்டிய நாட்டையும் கைப் பற்றினாலும் மக்கள் தொடர்பில்லாதவர்கள். எந்த நாட்டிலும் உள்ளூரில் தங்கி மக்களோடு பழகி 164 சேக்கிழார் தந்த செல்வம் வாழ்ந்ததாக ஒரு குறிப்பும் இல்லை. முதலாவது, இவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள். தமிழ் மொழியைப் புறக்கணிப்பவர்கள். இரண்டாவது, சமணக் கொள்கைகளைப் போற்றி நடவாமல் அச்சமயப் பெயரைமட்டும் வைத்துக் கொண்டு, அரசர்களைத் தம்வசப்படுத்தி மறைவில் நின்று அதிகாரம் செலுத்தினர். ஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை இவர்கள் தம்வசத்தில் வைத்திருந்தாலும் மதுரை நகருக்குள் வாழமுடியாமல், ஆனைமாமலை போன்ற மலைகளிலும் குகைகளிலும் வசித்து வந்தனர். ஞானசம்பந்தர் வாதஞ்செய்தது இந்தக் களப்பிரர்களுடனேயே அன்றித், தமிழ்ச் சமணர்களிடம் அன்று. தமிழ்ச் சமணர்கள் சங்ககாலம்தொட்டே பரவி வாழ்ந்தார்கள். தமிழ்மொழிமாட்டுப்-பேரன்புடையவர் களும் அமைதியாக ஏனைய சைவ, வைணவர் களோடு சேர்ந்து வாழ்பவர்களுமாகிய இவர்களுடன் திருஞானசம்பந்தர் திடீரென்று வாதஞ்செய்யக் காரணமேயில்லை. நாவரசர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் என்ற பல்லவன் இவர்கள் பிடியில் இருந்த காரணத்தால் நாவரசருக்குத் தீங்கிழைத்தான். இறுதியாகச் சொல்லவேண்டுமானால், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியவர்களுடன் மலைந்தவர்கள் களப்பிரரே அன்றித், தமிழ்ச் சமணர்கள் அல்லர் என்பதை அறிந்துகொள்ள குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 165 வேண்டும். தமிழ்ச் சமணர்கள் கொல்லாமையைத் தம் உயிர்போல் போற்றுகின்றவர். அதனாலேயே இவர்களில் மாறுபட்டவர்கள் களப்பிரர் என்பதைக் குறிக்கவே, கொல்லாமை மறைந்துறையும் சமணர்’ என்று சேக்கிழார் இவர்களைக் குறிப்பிடுகிறார். நாவரசர் வாழ்க்கையின் இடைப்பகுதியில், மகேந்திரவர்மன் களப்பிரர் சூழ்ச்சியால் அவருக்குப் பல்வேறு விதமான கொடுமைகளைச் செய்தான். சுண்ணும்புக் காளவாயில் இடுதல், நஞ்சினை ஊட்டல், யானையால் தலையை இடறச் செய்தல், கல்லோடு கட்டிக் கடலில் இடுதல் ஆகிய கொடுஞ் செயல்களைத் தமிழ்ச் சமணர்கள் மனத்தால்கூட நினைந்து பார்க்கமாட்டார்கள். நாமார்க்கும் குடியல்லோம்’ என்றும், 'அஞ்சுவது யாதொன்று மில்லை, அஞ்சவருவதுமில்லை என்றும் பாடிய நாவரசர், மன்னன் இழைத்த இக்கொடுமைகளை எவ்வாறு எதிர்கொண்டார் என்று பார்த்தால், 20ஆம் நூற்றாண்டின் மகாத்மா வகுத்த அஹிம்சைப் போராட்டத்திற்கு நாவரசரே முன்னோடி ஆவார் என்பதை அறியமுடியும். இக்கொடுமைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டு ஒரு வார்த்தைக்கூட எதிர்த்துப் பேசாமல் நாவரசர் இருந்ததுமட்டும் அன்று, அவருடைய மனத்தில் இக்கொடுமை செய்பவர்கள்மாட்டு ஒரு கடுகளவு சினமோ, வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோகூட இருந்ததில்லை என்பதை அவர் பாடல்கள் மூலமாகவே அறிகிறோம். 166 சேக்கிழார் தந்த செல்வம் "வஞ்சனை பால்சோறுஆக்கி, வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே' (திருமுறை-4-70-5) "கல்லினோடு எனைப்பூட்டி அமண் கையர் ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக்குடியரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே' (திருமுறை-5-72-7) இவ்விரு பாடல்களும் தமக்கிழைக்கப்பெற்ற கொடுமைகளை நினைந்து பேசும் அப்பெருமானு டைய வாக்கில் ஒரு கடுஞ்சொல்கூட வரவில்லை என்பதை அறியவேண்டும். இவ்விரண்டு பாடல் களையும் வைத்துக்கொண்டே இச்செயல் செய்தவர் கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ்ச் சமணர்கள் அல்லர் என்பது நன்கு விளங்கும். எந்தத் தமிழனும் செய்ய ஒருப்படாத இச்செயலை அஹிம்சையை உயிராகக் கொண்டு வாழ்ந்த தமிழ்ச் சமணர் ஒரு நாளும் செய்திருக்க முடியாது. அன்றியும், தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழ்ச் சமணர் எண்ணிக்கையால் மிகக் குறைவானவர்கள். போரை மனத்திலும் விரும்பாதவர்களால் அவர்களிடம் படைபலமோ, அரசனைக் கைக்குள் போட்டுக்கொள்ளும் தந்திரமோ ஒரு நாளும் இருந்திருக்க முடியாது. மகேந்திரவர்மன், நின்றசீர்நெடுமாறன் என்பவர்கள் சாதாரணமான சிற்றரரசர்கள் அல்லர், பேரரசர்கள். இவர்களை வசப் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 167 படுத்திய கூட்டம், மைசூர்ப் பகுதியிலிருந்து வந்த களப்பிரர்களே ஆவர். தமிழர்களைப் பொறுத்த மட்டில் பண்டுதொட்டே ஒரு குறை இருந்துவந்தது என்பதைத் தமிழ் இலக்கியங்களை நன்கு பயில்வார் அறியமுடியும். தம்முடைய நாட்டில் உள்ளவர்களை மதிப்பதைவிட, வந்தேறிகளிடம் அதிக அக்கறை செலுத்தினர். இந்நாட்டுச் சமயங்கள் சைவமாயினும், வைணவம் ஆயினும் வேள்விகள் முதலியவற்றிற்கு அதிக மதிப்புத் தரவில்லை. பரிபாடல், திருமுரு காற்றுப்படை என்பவை பக்தியையே பெரிதாக மதித்துப் பேசின. அப்படியிருந்தும், வடக்கிலிருந்து வந்த வேத, வைதிகர்கள் புரியாத மொழியில் வேள்விகள் செய்யத் தொடங்கியவுடன் தமிழ் மன்னர்களில் சிலர், அதில் அதிக ஈடுபாடு காட்டினர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்போர் வேள்விகள் செய்வதைப் பெருமையாகக் கருதித் தங்கள் பெயருக்கு முன்னர், அந்த வேள்விகளின் பெயர்களையே சூட்டிக்கொண்டனர். இடைக் காலச் சோழர்களிடமும் இக்குறை இருந்ததை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். - - இராஜராஜனும், இராஜேந்திரனும் தேவாரங்கள் தோன்றிய சோழ நாட்டில் வாழ்ந்தும், கோளகி சைவத்தைச் சேர்ந்த வடவராகிய சதுரானன பண்டிதரைக் குருவாகக் கொண்டிருந்ததை அறிவோம். இதே குறை மகேந்திர வர்மன், நின்றசீர்நெடுமாறன் ஆகியோரிடமும் 168. சேக்கிழார் தந்த செல்வம் இருந்தது. எனவே, சமணர் என்ற போர்வையில் இருந்த களப்பிரர்களை நம்பி ஏமாந்தனர் என்றே அறிய வேண்டும். கையூட்டு இக்காலத்தில் இந்தியப் பெருநாட்டை ஆட்டிப் படைக்கும் கையூட்டு முறை (லஞ்சம்) தமிழகத்திற்குப் புதியதன்று என்பதை மகேந்திரவர்மன் எழுதிய மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தில் காணலாம். அந்த நாடகத்தை நன்கு படித்த சேக்கிழார், தக்க இடத்தில் அதனைப் பயன்படுத்துகிறார். நாவரசர் சைவத்திற்கு மீண்டுவிட்டார் என்பதை அறிந்த களப்பிரர்கள் காடு, மலைகளில் இருந்த தம் இருக்கையை விட்டு, மகேந்திரவர்மனிடம் வந்து 'உன்னுடைய ஆணையை மீறிய மருள்நீக்கியாரைக் கொண்டுவந்து தண்டிக்க வேண்டும் என்று கோள் மூட்டுகின்றனர். பல்லவன் தலைநகரில் இல்லாமல் எங்கோ காட்டிலும் மலையிலும் வாழ்ந்த இவர்கள் இப்பொழுது அரசனிடம் வந்து கூடினார்கள் என்பதை, தலையும் பீலியும் தாழவந்து ஒரு சிறை சார்ந்தார் (35) என்று கவிஞர் கூறுவதால் எங்கோ வாழ்ந்தவர்கள் இப்பொழுது அரசனிடம் ஒரு சேரக் கூடினார்கள் என்று அறிகிறோம். மகேந்திரன் காலத்தில் தமிழ்ச் சமணர்கள் காஞ்சியில் நிரம்ப வாழ்ந்துவந்தனர். எனவே, வந்து ஒரு சிறை சார்ந்தார் என்று இவர்களைப்பற்றிச் சேக்கிழார் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 169 கூறியிருக்க முடியாது. வந்து சார்ந்தார் என்பதால் இவர்கள் எங்கோ மக்கள் வாழாத பகுதியில் வாழ்ந்தனர் என்பதும், தேவை ஏற்பட்டபொழுதே நேராக அரசனிடம் வந்தனர் என்பதும் அறியப்படும். காஞ்சியில் வாழ்ந்த தமிழ்ச் சமணர்களைப்பற்றி இவ்வாறு கூறமுடியாது. யாரும் மதம் மாறக்கூடாது என்ற ஓர் ஆணையைத் தான் எக்காலத்திலும் பிறப்பிக்கவில்லை என்றும், ஒரு தனி மனிதன் மதம் மாறினால் அதனால் பெருந்தீங்கு விளைந்து விடாது என்றும் அரசன் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மகேந்திரவர்மன் அமைச்சர்களை அழைத்து, மருள்நீக்கியாரை அழைத்துவரச் சொன்னானாம். அவன் என்ன சொன்னான் என்பதைப் பின்வரும் பாடலில் சேக்கிழார் கூறுகிறார், . . . . “அருள்கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி - - - "அறிவுஎன்று மருள்கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை - - - நோக்கித் தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டுவிடாது, என்பால் கொடுவாரும்' - எனப் புகன்றான். (பெ. பு-360) அமைச்சர்களைப் பார்த்து ஓர் அரசன், கையூட்டு வாங்கிக்கொண்டு அவனை விட்டுவிடாமல் என்பால் 170 சேக்கிழார் தந்த செல்வம் கொண்டு வாருங்கள்’ என்று பேசுவானேயானால் அவனுடைய ஆட்சி எத்தனை கீழ்த்தரம் ஆனதாக இருந்திருக்கும் என்பதனைத் தெரிவிக்கவே, சேக்கிழார் இவ்விடத்தில், பொருள் கொண்டு விடாது என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். அஞ்சுவது யாதொன்றும் இல்லை "அரசன் ஆணை, நீங்கள் உடன் வரவேண்டும்” என்று ஏவலர்கள் வந்தழைத்தபோது, பெருமான் திருவதிகையில் இருந்தார். அரசன் ஆனை என்ற சொல்லை, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'நாமார்க்கும் குடியல்லோம் (6-98-1) என்று கூறுவதால், தாம் யாருக்கும் அடிமையில்லை என்பதை வலியுறுத்துகிறார். அடுத்து, எப்படியாவது அவர் வந்துதீரல் வேண்டும், இன்றேல் அரசன் தங்களைத் தண்டிப்பான் என்று வந்தவர்கள் வேண்ட அவர்கள்மாட்டுக் கொண்ட கருணையினால் அவர் களோடு புறப்படுவதற்கு முன், சுண்ண வெண் சந்தனச் சாந்தும் என்று துவங்கும் பாடலின் இறுதி அடியில், - с &š -கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை” - х r - (திருமுறை-4, 2, 1) குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 171 என்று கூறுகிறார். மன அமைதி எங்கே கிடைக்கும் என்று தேடியலைந்த நாவரசருக்கு மனஅமைதி, மனத் திடம், நெஞ்சுறுதி என்பவை கிடைத்துவிட்டன." அதன் விளைவாகவே நான். யாருக்கும் அடிமையில்லை’ என்றும் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை என்றும் பேச முடிகிறது. இராவணன், இரணியன்முதல், இன்றுள்ளவர் களில்கூடப் பலர், தாம் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. தம்மை அசைக்க யாராலும் முடியாது என்று பேசியுள்ளார். இங்ங்னம் பேசிய இரணியன் முதலானோர் என்ன கதி அடைந்தனர் என்பதை நாம் அறிவோம். நாவரசரும் இதைத்தானே சொன்னார் ? அப்படியிருக்க, இவர்களிடையே வேற்றுமை என்ன என்று கேட்கப்படலாம். இரு கூட்டத்தாரும் சொல்லிய சொற்களில் வேற்றும்ை இல்லை. ஆனால் அச்சொல்லின்பின்னே நின்ற அவர்கள் மனநிலையில்தான் மன்லபோன்ற வேறுபாடு உள்ளது. இரணியன் முதலானோர் தான்' என்ற ஆணவத்தின் அடிப்படையில் நின்று இவ்வ்ாறு கூறினர். நாவரசர் கூற்றின்பின்னே உள்ள மனநில்ை வேறு. சங்கரன் என்ற கோமானுக்கு மீளா ஆட்பட்டு விட்டமையின் வேறு யாரையும் தலைவர் என்று. ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார். பெரும்ான். அடுத்து, ஒரு மனிதன் அஞ்சாமல் இருப்பதென்பது. இயலாத காரியம். ஏதோ ஒன்றில்லாவிட்டால், மற்றொன்றிற்கு அஞ்ச நேரிடும். ஆனால், பெருமான் 172 சேக்கிழார் தந்த செல்வம் இங்கே, அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை என்று கூறுகிறாரே, இது சரியா? என்று சிந்தித்தால அதற்குரிய விடையை அதே அடியின் முற்பகுதியில் அவர் விளக்கமாகக் கூறுகிறார். கெடிலப்புனல் உடையார் ஒருவர் தமர் நாம் என்று கூறுவதால் வீரட்டானேசுவரர்க்குப் பக்தராகிய நாம் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை என்று விளக்கம் தருகிறார். - நியாயத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் அதிகாரத்தைக் கண்டு அஞ்சாமல் இருப்பது பெரு வீரம் எனப்பெறும். இந்த வீரம் ஒருவருடைய மனத்தில் விளையவேண்டுமாயின் அதற்குரிய பக்குவம் யாதென்று சிந்திப்பது நலம். பகைவர்களை வெல்லுவதுமட்டும் வீரமன்று. பொறிபுலன்களை அடக்கி வாழ்வதே மாபெரும் வீரமாகும். இதனாலேயே வெளிப்பகையை, புறப்பகை என்றும், பொறிபுலன்களை அகப்பகை என்றும் நம் முன்னோர் வகுத்தனர். அகப்பகையை வெல்ல எந்தத் தனி மனிதனும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. 'அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்; அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை' (திருமந்:2033) என்ற திருமூலரின் வாக்கு, சிந்தனைக்குரியது. பொறி புலன்களை வெல்லவேண்டுமானால் அதற்கொரு. துணை தேவை. புறப்பகையை வெல்லத் துணை நாடுவது போல அகப்பகையை வெல்லவும் می ஒரு துணை தேவைப்படுகிறது. அந்தத் துணை இறையன்பு குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 173 என்பதாகும். பற்றற்றான் பற்றினைப் பற்றுவது ஒன்று தான் பற்றை விடுவதற்கு வழியாகும் என்கிறார் திருவள்ளுவர். நாவரசர் பெருமானுக்குப் பொறி புலன்களை வெல்ல உதவியாக இருப்பது கெடிலப் புனலுடையான் திருவடிப் பற்றே ஆகும். அகப்பகை ஆகிய இந்தப் பற்றை வென்றவர்க்கு அச்சம் என்பது கனவிலும் வாராது. அந்த அடிப்படையில்தான் கெடிலப் புனலுடையான் அடியவர்களாகிய நமக்கு அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்சவருவதுமில்லை என்று துணிவோடு கூறுகிறார். அகப்பகை வென்றவர்க்குப் புறப்பகை இல்லை. களப்பிரர் தூண்டுதலால் காளவாயில் இடுதல், நஞ்சினை ஊட்டல் முதலிய கொடுமைகளை எவ்விதக் காரணமும் இல்லாமல் அரசன் செய்தபொழுது, நாவரசருக்குச் சினமோ காழ்ப்புணர்ச்சியோ அவர்கள் மாட்டு வெறுப்போவாராமைக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்று சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும். அகப்பகையை வென்றவர்க்கு, புறப்பகை என்று எதுவுமில்லை. பகை என்று ஒருவரைக் கருதினால் தான் காழ்ப் புணர்ச்சியும் சினமும் ஏற்பட இடமுண்டு. களப்பிரரையும் அவர்களைச் சார்ந்த மன்னனையும் பகைவர் என்று நாவரசர் நினைக்கவே இல்லை. அதனால் அவர்கள்மாட்டு சினமோ காழ்ப் புணர்ச்சியோ தோன்றவேயில்லை. அஹிம்சைத் 174 சேக்கிழார் தந்த செல்வம் தத்துவத்தின் அடிப்படை இதுதான். எச்சமயத்தைச் சேர்ந்தவராயினும் அகப்பற்றை வென்றவர்க்குப் பகைவர் என்று யாருமில்லை. நேரடியாகக் கொடுமை இழைத்தவர்களைக்கூட அவர்கள் பகைவர்கள் என்று கருதுவதில்லை. முதல் நூற்றாண்டில் ஏசு பெருமானும் ஆறாம் நூற்றாண்டில் நாவரசப் பெருமானும் இருபதாம் நூற்றாண்டில் மகாத்மா காந்தியும் இதற்கு இலக்கியம் ஆவர். - இந்த நிலையும் பழைய புறநானூற்றில் பேசப் படுவதைக் காணலாம். இன்று பலராலும் பேசப்படும் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பாடல் இதற்குரிய விளக்கத்தைத் தருகிறது. ஒருவரை எப்பொழுது நாம் பகைவர் என்று நினைக்கின்றோம்? நம்முடைய உடல், பொருள், ஆவி என்ற மூன்றில் ஏதாவது ஒன்றிற்கோ அல்லது மூன்றுக்குமோ ஊறு விளைவிப்பவர்களைப் L6)& என்று நாம் கருதுகிறோம். இந்த நினைவு போவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. எத்துணைத் தீமையை ஒருவர் செய்யிலும் அவர் செய்த காரணத்தால் அத்தீமை நம்பால் வரும் என்று கருதுவது தவறு. நமக்கு ஏற்படும் நன்மை, தீமை ஆகிய இரண்டும் நம்முடைய செயல்களின் பின்விளைவே தவிர எவர். ஒருவரும் நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியாது. நம்முடைய உடம்பு நோகும்படியாக ஒருவர் கொடுமை இழைக்கும்பொழுதுகூட, அவர் இதனைச் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 175 செய்தார் என்று நினைப்பது தவறானது என்ற கருத்தை மேலே காட்டிய புறப்பாடலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அடிகள் விளக்குவதைக் காணலாம். தீதும் நன்றும் பிறர் தர வரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே. (புறம் 192) என்ற அடிகளின் மூலம் கணியன் பூங்குன்றன் என்ற கவிஞன் அஹிம்சைத் தத்துவத்தின் அடிப்படையை நன்கு விளக்குகிறான். இந்த அடிப்படையில் வாழ்பவர்கட்குப் பகை என்று யாரும் இருக்க முடியாது. அதனால்தான் இவர்கட்குத் தீமை செய்தவர்களைகட்டப் பகைவர்கள் என்று இவர்கள் கருதுவதில்ல. தீங்கிழைத்தவர்களையே தம்முடைய சுற்றத்தார் அல்லது உறவினர் என்று இவர்கள் நினைக்கிறார்கள். வஞ்சகமாகத் தம்மைக் குத்திக் கொன்ற முத்தநாதனை மெய்ப்பொருள் நாயனார் யார் என்று நினைக்கிறார்? அவனைக் கொல்ல வந்த பணியாளனாகிய தத்தனைப் பார்த்து, “தத்தா! நமர் என்று கூறித் தடுத்தாரென்றால், கிறித்துவ சமயத்திற்கு ஒரு ஏக தோன்றியதைப் போலச் சைவ சமயத்திற்கு ஒரு நாவரசரும், ஒரு மெய்ப்பொருள் நாயனாரும் உள்ளனர் என்பதை நினைக்கும்பொழுது மகாத்மாவின் அஹிம்சைத் தத்துவம், இத்தமிழ் நாட்டில் கிறிஸ்துவிற்கு முன்னர்ச் சங்க காலத்தில் தோன்றி மெய்ப்பொருள், நாவரசர் காலம்வரை விரிந்து வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. 176 சேக்கிழார் தந்த செல்வம். இறையன்போடு இசைந்த அஹிம்சை அஹிம்சைத் தத்துவத்தை வெறும் வாய்ப் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்த மகாத்மா இதைக் கொண்டு செலுத்த இரண்டு முக்கியமான தேவை களைப்பற்றிக் கூறுகிறார். அவற்றுள் முதலாவது இறையன்பு என்பதாகும். துன்பத்தை மன அமைதியோடு ஏற்றுக் கொள்ளும் இயல்பு இறை அடியார்க்குமட்டுமே முடியக்கூடிய ஒன்றாகும். நாவரசரின் இறையன்புபற்றி ஒன்றும் கறத் தேவையில்லை. காந்தி அடிகள் கூறும் இரண்டாவது தேவை மனஉறுதியும், வாழ்க்கையில் ஒரு குறிக்கோளும் ஆகும். வாய்மை, அஹிம்சை என்ற இரண்டையும் குறிக்கோளாகக் கொண்டமையின் தம் வாழ்நாள் முழுதும் இவ் இரண்டையும் கொண்டு செலுத்த அடிகளுக்கு முடிந்தது. அதே போன்று இறையன்பு இல்லாமல் மன அமைதியைத் தேடப் போகின்ற நாவரசருக்குத் தாம் பிறந்த சமயத்திலும் புகுந்த பிற சமயத்திலும் அது கிட்டவில்லை. அதனாலேயே இறையன்பைச் சேர்த்துக்கொண்டா லொழிப் அமைதி கிட்டாது என்பதைப் புரிந்து கொண்டார் நாவரசர் அந்த வினாடியிலிருந்து இறையன்போடு கூடிய அஹிம்சை அவர் குறிக்கோளாக அமைந்துவிட்டது. குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 177 மக்கள் தொண்டே மகேசன் தொண்டு வாய்மை, அஹிம்சை என்ற இரண்டையும் குறிக்கோளாகக் கொண்டவர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற முடிவுக்குத்தான் வருகிறார்கள். நாவரசரைப் பொறுத்தமட்டில் உழவாரப் பணிமூலம் பிற்காலத்தில் தொண்டு செய்தார். வாழ்க்கையின் தொடக்கத்தில் குளம் வெட்டல், கா வளர்த்தல் என்பன போன்ற மக்கட் பணியில் ஈடுபட்ட பெருமான், பிற்காலத்தில் உழவாரப் பணியை மேற்கொண்டதன் நோக்கம் எதுவாக இருக்கும் என்ற வினாவை எழுப்பினால், ஓர் அற்புதமான விடையைக் கண்டுபிடிக்க முடியும். பெருஞ்செல்வத்துடன் வாழ்ந்த அந்த இளமைக் காலத்தில் ஏவுதற் கர்த்தாவாகமட்டும் நின்று பணியாளர்மூலம் கா வளர்த்தல் முதலியனவற்றைச் செய்தார். அதன் முடிவில் "நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துறந்து விட்டார்” (பெபு-1807) எனவே, புறச்சமயம் சென்று மீண்ட பொழுது உள்ளம், உடல் என்ற இரண்டிலும் முழுத் துறவு பெற்றவராகவே இருந்தார். இடையில் ஒன்றும் நிகழாமையின் குடும்பச் செல்வம் அப்படியேதான் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தும், பெருமான் ஏனோ அவற்றைத் திரும்பிப் பார்க்கவோ எடுத்துப் பயன்படுத்தவோ மறுத்துவிட்டார். "கந்தை 178 சேக்கிழார் தந்த செல்வம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்”(பெ.பு2173) என்று சேக்கிழார் பாடுவதால் பெருமான் முழுத் துறவை மேற்கொண்டார் என அறிய முடிகிறது. இற்றை நாளில் ஒரு தவறான கருத்து, சமுதாயம் முழுதும் பரவியுள்ளது. ஒருவர் துறவியாகிவிட்டால் எந்தப் பணியும் எந்தத் தொண்டும் செய்யவேண்டுவ தில்லை. மக்கள் அனைவரும் அந்தத் துறவிக்குத் தான் தொண்டு செய்யவேண்டுமே தவிர அவர் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்ற இந்தத் தவறான கருத்து இன்று இந்தியாமுழுவதும் பரவி யிருப்பதுடன் தமிழகத்தில் சிறப்பாகப் பரவியுள்ளது. இக்கருத்து, தவறானது என்பதை அறிவுறுத்தவே நாவரசர்பெருமான் மனம், மொழி, மெய்களால் இறைத் தொண்டு புரிவதுடன் மக்கள் தொண்டையும் உழவாரப் பணி செய்வதுடன் மேற்கொண்டார் என்பதை இற்றைநாள் துறவிகள் அவசியம் அறிய வேண்டும். இந்த உழவாரத் தொண்டைப் பெருமான் எங்கெங்கே செய்தார் என்பதை மிக நுணுக்கமாகச் சேக்கிழார் காட்டுகிறார். முக்கியமாகச் சிதம்பரம், திருவாரூர் ஆகிய இரண்டு இடங்களிலும் தெருக்களிலும் உழவாரப் பணி செய்தார் என்று கவிஞர் குறிப்பிட்டுக் காட்டுவதில் ஓர் உண்மை பொதிந்துள்ளது. இவை இரண்டும் மிகப் பிரசித்தி பெற்ற தலங்கள் ஆதலால், மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பது அறியப்பட வேண்டிய ஒன்று. குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 179 மக்கள் கூட்டம் அதிகமானால் குப்பை, கூளம், தூய்மையின்மை என்பவை அவ்வூர்த் தெருக்களில் மிகுந்து காணப்படுவது இயல்பு. எனவேதான், பெருமான் இவ்வூர்த் தெருக்களில் உழவாரப் பணி செய்தார் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் சேக்கிழார். திருக்கோயில் பிராகாரங்களிலும் தெருக் களிலும் உழவாரப் பணி செய்வது மக்கள் நடமாடும் பகுதிகள் துப்புரவாக இருக்கவேண்டும் என்ற கருத்தில்தான் பெருமான் இப்பொறுப்பை மேற் கொண்டார். நாவரசர்பெருமானின் வாழ்க்கை இத் தமிழ்ச்சமுதாயத்தில் வாழும் நாம்-இல்லறத் தாராயினும், துறவறத்தாராயினும்-அறிந்து கடைப் பிடிக்க வேண்டிய பலவற்றைத் தன்பால் கொண்டுள்ளதாகும். ஒரே ஒரு கருத்தைமட்டும் இங்கு நினைவிற் கொள்ளுதல் நலம். வாழ்நாள் முழுவதும் முழுத் தொண்டு செய்த பெருமான், இக்காலத் துறவிகளைப் போல மக்களைப் பார்த்து, நீங்கள் அது செய்யவேண்டும், இது செய்யவேண்டும் என்று உபதேசம் செய்யவில்லை. அந் நாளைய துறவியாகிய அவர் உபதேசம் செய்யவில்லை; தாமே தொண்டு செய்தார். இக்காலத் துறவிகள் வாய் உபதேசம் செய்கிறார்கள், எந்த ஒரு தொண்டையும் செய்வதில்லை. பின்னர் வரும் சமுதாயத்திற்கு வழி காட்டவேண்டி அடியார்கள் வரலாறுகளைக் கூறவந்த சேக்கிழார், அவ்வரலாறு களின் மூலமாகவே தாம் சொல்லவந்தவற்றை இலைமறைகாயாகச் சொல்லி யுள்ளது ஆழ்ந்து சிந்தித்து வாழ்வுடன் இணைத்துக் 180 சேக்கிழார் தந்த செல்வம் கொள்ளவேண்டிய பகுதியாகும். ஒரு சிலரைப் பொறுத்தமட்டில் குறிக்கோள் வேறாகவும் தொண்டு தனியாகவும் இருக்கலாம். மகாத்மாவைப் பொறுத்த மட்டில் அவரது குறிக்கோள் நாட்டு விடுதலை என்பதாகும். அவர் செய்த மக்கட் தொண்டு சமுதாய முன்னேற்றத்திற்கு உரியதாகும். குறிக்கோள் வேறாகவும் தொண்டு வேறாகவும் இருப்பதில் தவறில்லை. ஆனால், நாவரசர்பெருமானைப் பொறுத்தமட்டில் அவர் குறிக்கோளும் மக்கள் தொண்டும் ஒன்றாகவே இணைந்து விட்டன என்பதை அவர் பாடல் மூலமே அறிய முடியும். "கிடப்பது' “என் கடன் பணி செய்து கிடப்பதே' (திருமுறை : 5-19-9) என்ற அவருடைய பாடல் வரிகள் அவர் வாழ்க்கையின் தாரக மந்திரமாக அமைந்து விட்டதைக் காணலாம். இந்த அடியின் கடைசியில் உள்ள கிடப்பதே என்ற சொல் ஆழ்ந்த சிந்தனைக் குரியதாகும். கிடப்பது என்ற சொல் தன்னிச்சை இன்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இருப்பதைக் குறிக்கும். வழியில் கல் கிடக்கிறது என்றால், அங்கே கிடக்க வேண்டும் என்ற எண்ணமோ அந்த இடத்தைவிட்டுப் போகவேண்டும் என்ற எண்ணமோ அந்தக் கல்லுக்கு இல்லை. அங்கே கிடப்பது ஒரு கல் என்று கூறவேண்டுமே தவிர, ஒரு மனிதன் வீழ்ந்து கிடந்தால் அந்நிகழ்ச்சியைக் குறிக்க அங்கே குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 181 கிடப்பவன் ஒரு மனிதன் என்று கூறுவது பொதுநிலையில் பொருந்தாது. கிடப்பது என்ற அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதன்மூலம் நாவரசர் பெருமான் மனித சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் தத்துவத்தையே விளக்குகிறார். பணி செய்த ஒருவன் அதற்குரிய பயனை எதிர் பார்ப்பதுதான் இயற்கை அதில் தவறு ஒன்றும் இல்லை. மனிதனுக்குப் பணி செய்கின்ற மாடு முதலிய விலங்குகள்கூடப் பணி முடிந்தபின் உணவு ஆகிய பயனை எதிர்பார்க்கின்றன. எனவே, பணி செய்த ஒருவன் பயனை எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லை. அவ்வாறு இருக்க, பெருமான் 'கிடப்பதே என்று கூறியதன் நோக்கம் யாது? பணி செய்து நிற்பதே அல்லது இருப்பதே அல்லது 'வாழ்வதே’ என்று கூறியிருக்கலாம். பாடுபவரோ, செந்தமிழ், வடசொல், பாலி ஆகிய மொழிகளைக் கற்று கரைகண்ட பேரறிஞர். அப்படியிருக்க, இருப்பதே, நிற்பதே, வாழ்வதே என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் கிடப்பதே என்று பாடினார் என்றால், ஒரு சிறந்த கருத்தைத் தெரிவிக்கவே இச் சொல்லைப் பயன்படுத்துகிறார் என்பதை அறிய வேண்டும். - ஸ்வேதாஸ்வரம் .” கர்மயோகம் TED! கீதை கூறுவது இதையே ஆகும். "கர்மண்யேவா அதிகாரஸ்தே, மாப' - என்பது 182 சேக்கிழார் தந்த செல்வம் கர்மயோகத்தின் சாரம் ‘கடமையைச் செய்வதுதான் உனது உரிமையே தவிர அதன் பயனை எதிர் பார்ப்பது அன்று என்ற கீதையின் தாக்கம் பெருமானுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால், ‘என்னுடைய கடமை, நீ இட்ட பணியைச் செய்துவிட்டுப் பயனை எதிர்பாராமல் ஒரு கல் போன்று கிடப்பதே ஆகும் என்ற பொருளில்தான் "கிடப்பதே என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு கூறுவது, சைவப் பெருமக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். ஆனால், சேக்கிழார் பெருமான், பொருளை நிரம்பச் செலவிட்டுப் பல கலைகளையும் மருள்நீக்கியார் பெற்றார் என்று கூறுவதால் இவ்வாறு நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அன்றியும் விறகில் தீயினன்' (திருமுறை: 5-90-10) என்ற தனித்திருக் குறுந்தொகைப் பாடல் ஸ்வேதாஸ்வர உபநிடத்தின் பாடலை அப்படியே மொழிபெயர்த்துக் கூறியதாகும் . என்பதையும் அறிதல் வேண்டும். மிகவும் பிரசித்தி பெற்ற உப நிடதங்களையெல்லாம் விட்டுவிட்டு ஸ்வேதாஸ்வர் உபநிடத்தில்மட்டும் ஏன் நாவரசர் பெருமான் ஈடுபட்டிருக்கிறார் என்பதைப்பற்றிச் சிந்தித்த பொழுது ஒர் உண்மை வெளிப்பட்டது. ஏனைய உபநிடதங்கள் பரம்பொருளைப் பிரம்மம் என்று கூறுமே தவிரச் சிவன் என்று கூறியதில்லை. ஆனால், இவற்றிலிருந்து மாறுபட்டு ஸ்வேதாஸ்வதர முனிவர் சிவனையே பரம்பொருள் என்றும் அவனைச் சரணடைந்து பக்தி செய்வது எவ்வாறு என்றும் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 183 கூறியுள்ளார். அதனால்தான் பெருமான் அந்த ஒரு உபநிடதத்தில் மட்டும் ஈடுபாடு கொண்டு பேசி புள்ளார் என்பதை அறியமுடிகிறது. பிற மொழி நூல்கள், பிற சமயநூல்கள் என்பவற்றையெல்லாம் கற்றுத் துறைபோகிய பெருமான், அந்நூல்களிலும் அச்சமயங்களிலும் காணப்பட்ட சிறந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை அறிதல் வேண்டும். களப்பிரர்கள் (அமண்கையர்) இயக்கிய சமண சமயத்தில் அடிகள் புகுந்தாரேனும், பல்லாண்டுகள் அச்சமயத்தின் ஈடுபட்டிருந்தமையின் அந்நூல் களையும் கற்றறிந்திருந்தார். அமண்கையர் என்ற சொல் தமிழ்நாட்டுச் சமணர்களைக் குறிக்கின்ற சொல் அன்று வந்தேறிகளானவர்களும் சமண சமயப் போர்வையில் வாழ்ந்தவர்களும் அரசியல் செல்வாக்குடன் இருந்தவர்களும் ஆகிய களப்பிரர், மேலாதிக்கம் செலுத்தினரே அன்றி இங்குள்ள சமணர்களிடம்கூட அவர்கள் ஈடுபாடு கொண்ட தாகத் தெரியவில்லை. தமிழை அறியாதவர்களாகிய களப்பிரர், தமிழில் உள்ள சமன நூல்களை அறிந்திருக்க நியாயமில்லை. அச்சமயத்தில் வாழ்ந்த பொழுது நாவரசர் கண்ட ஒரு சமணர்கள் கூறும் மந்திரம் அவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். "தயாமூல தன்மன்’ என்ற சமணருடைய மந்திரத்தை சிவபெருமானுக்கே ஏற்றிப் பாடும் அரிய மனத்திடம் உடையவர் பெருமான் என்பதை தயாமூல தன்மன் கண்டாய் என்ற அவருடைய பாடல் வரிகள். 184 சேக்கிழார் தந்த செல்வம் அஹிம்சைக் கொள்கையில் இவ்வளவு அழுத்தமான நம்பிக்கையை பெருமான் பெறுவதற்கு அவர் சமண சமயத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்ததும் ஒரு காரண மாக இருக்கலாம் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. முதல் சத்தியாக்கிரகி இதனை அடுத்து நாவரசப் பெருமானை முதல் சத்தியாக்கிரகி என்று கூறுவது பொருத்தமுடைய தாகும். ஒரு மனிதன் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவை எடுத்து அதன்படி நடக்கத் தொடங்கினால் மனிதன், மாமனிதனாக அல்லது பெருந்தொண்டகை ஆவதற்கு அதுவே முதற் படியாகும். துணிந்து செயற் படத் தொடங்கிய பிறகு அந்தச் செயல்பாட்டிற்கு எத்தனை தடை வந்தாலும் அதைக் கொண்டு செலுத்துவதில் உயிரே போவதானாலும் கவலைப்படாமல் செயல் படுபவனே சத்தியாக்கிரகி என்று கூறப்பெறுகிறான். சத்தியத்தை ஆக்கிரகித்தல் அதாவது முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுதல் என்ற பொருளுடைய சொல்லுக்குப் புதிய விளக்கம் தந்தார் நம் காலத்து வாழ்ந்த மகாத்மா இறை நம்பிக்கையின் அடிப்படையில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், தாம் மேற்கொண்ட செயற்பாட்டில் முன்ன்ேறுவதே சத்தியாக்கிரகம் என்றார் மகாத்மா நாவரசர் பெருமானின் வாழ்க்கையில் அவர் சத்தியாக்கிரகம் செய்த இரண்டு நிகழ்ச்சிகள் நம் சிந்தனைக்குரியன். குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 185 ஊர்கள்தோறும் சென்று இறைவழிபாட்டுடன் மக்களைச் சந்திக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த நாவரசர்பெருமான், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழையாறை என்ற ஊருக்கு வருகிறார். அங்குள்ள சிவன் கோயில் மணல்மேடிட்டு விமானம்மட்டும் வெளியே தெரிகின்ற நிலையில் இருந்தது. உடனிருந்த வர்கள் இது சமணப்பள்ளி’ என்று கூறினர். ஆனால், விமானத்தின் அமைப்பைக் கண்ட நாவரசர் அது சிவன் கோயில், மண்ணை இட்டுப் புறச்சமயத்தார் மூடிவிட்டிருந்தனர் என்பதை உணர்கின்றார். உடன் இருந்தவர்கள் துணைகொண்டு மணல்மேட்டைப் பறித்து கோயிலை வெளிக்-கொணரவே அப் பகுதியை ஆண்ட சிற்றரசனிடம் சென்று முறையிட்டு இக் காரியத்தைச் சாதிக்கவே-இப்பெருமான் விரும்ப வில்லை. அதற்குப் பதிலாக உண்மையான சத்தியாக் கிரகியாகிய அவர் அருகே இருந்த மண்டபத்தில் சென்று அமர்ந்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். இதனைக் கூறவந்த சேக்கிழார், "வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகன்' என்று எண்ணம் முழக்கும் வாகீசர் . இருந்தார் - அமுது செய்யாதே; அணணலாரும அது உணாநது அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் திண்ணமாக மன்னனுக்குக் . கனவில் அருளிச் செய்கின்றார். . (பெ. பு-1566) என்று பாடுகிறார். 186 சேக்கிழார் தந்த செல்வம் தனிமனிதராகிய நாவரசர் மேற்கொண்ட இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம், அப்பகுதிச் சிற்றரசன் ஆட்களுடன் வந்து பழையாறை வடதளிப் பெருமானை வெளியே கொணருமாறு செய்தது சத்தியாக்கிரகம் என்ற சொல்லை நமக்குத் தந்த மகாத்மா, ஒரு சத்தியாக்கிரகிக்குத் தேவையான ஆயுதங்கள் யாவை என்று சொல்லும்பொழுதுவாய்மை, அஹிம்சை, நெஞ்சுரம், இறைபக்தி என்ப வற்றோடு உண்ணாவிரதத்தையும் ஒர் ஆயுதமாகக் கூறுவதைக் காணலாம். ஆயிரம் கோயில்களில் சிவபெருமானை வழிபட்டாலும், பழையாறையில் ஒரு தவறு நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்த நாவரசர் அத்தவற்றை நீக்கச் சத்தியாக்கிரகப் போர் தொடுப் பதையும், உண்ணா நோன்பு இருத்தலையும் மேற் கொள்ளுதலைக் காணலாம். சைவ சமயத்தைப் பொறுத்தவரை ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை மனிதன் மேற்கொள்ள வேண்டியவற்றில் உண்ணா நோன்பும் உண்டு என்று எங்கும் குறிக்கப் படவில்லை. அப்படி இருந்தும் முதன் முதலாக உண்ணா நோன்பை மேற்கொண்டார் நாவரசர் என்றால், அது வியப்பாக உள்ளது. உண்ணா நோன்பை வலியுறுத்தும் சமயம் சமணசமயமே ஆகும். அச்சமயத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்த நாவரசர் உண்ணா நோன்பின் (உபவாசம்) வலிமையை அறிந்திருந்தார் என்பதில் ஐயமில்லை. உண்ணா நோன்பிருந்து, சத்யாக்கிரகம் செய்து பழையாறை வடதளிப் பெருமானை வெளிக்கொணர்ந்தார் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 187 நாவரசர் என்பதால், உலகின் முதல் சத்தியாக்கிரகி இவரே என்று கொள்வதில் தவறில்லை. அடுத்தபடியாக, நாவரசர் மேற்கொண்ட சத்தியாக்கிரகம் மிகக் கடுமையானதாகும். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தைத் தனி ஒருவராக எதிர்த்து நின்று அரையாடை உடுத்த ஒரு மா மனிதர் கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு மாபெரும் சத்தியாக்கிரகப் போரைத் தொடங்கியபொழுது பலரும் அவரைப் பயித்தியக்காரர் என்றுதான் கூறினர். எந்த ஒரு தனிமனிதனும் கற்பனைக்கூடச் செய்துபார்க்க முடியாத ஒரு போரை, ஒரு தனி மனிதன் தொடங்கினால் சராசரி மக்கள் அதனை எள்ளி நகையாடுதல் இயல்புதான். இதே போன்று மனித உடம்புடன் உள்ள்வர்கள் யாரும் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாத ஒர் அருஞ்செயலை நாவரசர் மேற்கொண்டார். அவருடைய தலயாத்திரையில் திருக்காளத்தி வந்து பெருமானையும், குலவேடர் பெருமானையும் ஒருங்கே கண்டு வழிபட்டார். தென்திசையில் கயிலையாம் காளத்தி மலையில் கருணையே வடிவாக உள்ள சிவபெருமானையும், அன்பே வடிவாக நின்றிருக்கும் கண்ணப்பரையும் வணங்கியவுடன் வடகயிலையில் பெருமான் எழுந்த கோலத்தைக் காண வேண்டும் என்ற அவா நாவரசர் உள்ளத்தில் தோன்றிற்று. (பெபு-1617) இவ் உடல் கொண்டு கயிலை செல்ல இயலாது என்பதை அறியாதவரல்லர் நாவரசர். 188 சேக்கிழார் தந்த செல்வம் மாபெரும் கல்விமானாகவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றியவராகவும் உள்ள அவருக்கு இந்தச் சாதாரண உண்மை தெரியாமல் இருக்க முடியாது. தெரிந்திருந்தும் துணிந்தார் என்றால், அது எண்ணித் துணிந்த கருமம் ஆகும். சென்ற முறையையும் பனிக் கட்டியின்மேல் நடந்ததால் உண்டான கொடுமை களையும் சேக்கிழார் வருணிக்கின்றார். அந்த நிலையிலும் கை, கால்கள் உதவாமல் போக, உடலோடு உருண்டு செல்லும் துணிச்சலான செயலையும் மேற்கொண்டார். பனிக் கட்டியின் மேல் உடல் படுவதால ஏற்படும் (பெபு-1630) நோயால் இரத்த ஓட்டம் தடைப்பட, மேலே செல்ல முடியாத நிலையில் நின்ற பொழுது, எதிரே ஒரு முனிவர் தோன்றி, ஏன் வந்தாய்?’ என்று கேட்டார். 'இறைவன் கயிலையில் இருந்த கோலத்தைக் காணவே வந்தேன்’ என்று ஆளுடைய அரசு கூற, முனிவர், 'அமரரும் அணுக முடியாத இடத்தை இவ்வுடல் கொண்டு அடைய முற்பட்டது பெருந்தவறாகும். உடன் மீண்டு செல்க' என்று முனிவர் கூறவும், பெருமான் பின்வருமாறு பேசலானார், "மீளும் அத்தனை உமக்குஇனிக் கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனிசொல்ல, - ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல் லால் மாளும் இவ்உடல் கொண்டு மீளேன்' என மறுத்தார். - (பெ. பு-1636) குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 189 மனிதர்கள் வகுத்த சட்டத்தை மீறிச் சத்தியாக்கிரகப் போர் புரிந்தார் மகாத்மா. இறைவன் இயற்கையின் வழியாக அமைத்த சட்டத்தையே மீறி நாவரசர் சத்தியாக்கிரகம் செய்தார். சத்தியாக்கிரகத்தின் வலிமை எத்தகையது என்பதை ஆறாம் நூற்றாண்டில் ஒருவரும், இருபதாம் நூற்றாண்டில் ஒருவரும் உலகறியக் காட்டினர். மகாத்மாவின் சத்தியாக் கிரகத்தின் எதிரே ஆங்கிலப் பேரரசு வளைந்தது. ஆறாம் நூற்றாண்டு சத்தியாக்கிரகியான நாவரசரின் முன்னே இறைவனும் தான் வகுத்த சட்டத்தை வளையச் செய்தான். நாவரசரை அண்மையில் உள்ள குளத்தில் மூழ்கித் திருவையாற்றில் வெளிப்படுமாறு செய்தான் இறைவன். பெளதிக உலகில் ஒருவனோ, ஒருத்தியோ ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமேயானால் நடந்தோ, அன்றி ஒரு வாகனத்தின்மீதோதான் செல்ல வேண்டும் நடந்து சென்றால் கால் சுவடு பூமியில் பட்டே தீரும். வாகனத்தில் சென்றால் வாகனத்தின் சக்கரங்களின் சுவடு பூமியில் பட்டே தீரும். இவ்வாறு, யாதும் சுவடு படாமல் கயிலைக் குளத்தில் மூழ்கி, திருவையாற்றில் ஆளுடைய அரசு தாம் வந்ததை தேவாரத்தில், மாதர் பிறைக் கண்ணியானை என்று துவங்கும் பாடலில், 'யாதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்ற போது என்று பெருமானே பாடியுள்ளார். இவ்வாறு சுவடுபடாமல் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல 190 சேக்கிழார் தந்த செல்வம் இறைவன் ஒருவனால்தான் முடியும். இவ்வருஞ் செயலைக் கம்பநாடன், "வாராதே வரவல்லாய்' என்று கூறுவதிலிருந்து அறியலாம். வாராதே வரவல்ல இவ்வருஞ் செயலை ஆறாம் நூற்றாண்டில் பெருமான் நிகழ்த்தினார் என்றால் உலகின் முதல் சத்தியாக்கிரகியின் வெற்றியாகும் இது. ஐயத்திற்கு இடமான பாடலும் விளக்கமும் இறையருளால் வாகீசப் பெருமானுக்குச் சூலைநோய் வந்ததும் அதனைப் போக்க வழியின்றித் தமக்கை யாருக்குச் சொல்லியனுப்பியதும் அப்பெரு மாட்டியார் வந்தப் பணியாளனைப் பார்த்தவுடன்’ தீங்கு உளவோ? எனக் கேட்டதும் அமண் பாழிக்குத் தாம் வர முடியாது என்று கூறியதும் சேக்கிழார் கூறிய செய்திகள். இதைவிட வியப்பு என்னவெனில் தாம் வரஇயலாது என்று கூறினாரே தவிர, தம்பியை இங்கு வரச்சொல்’ என்று கூறவேயில்லை. செய்தி அறிந்த வாகீசர், சோதரியை நாடி வந்ததும் அம்மையார் திருநீற்றை அளித்து, திருக்கோயில் செல்லுமாறு பணித்ததும் வரலாறு கூறும் செய்திகள் ஆகும். புறச்சமயத்திலிருந்து வந்தவரை ஏசாமல் பிற்காலத்தார் கூறும் பிராயச்சித்தம் முதலிய எதுவும் செய்யாமல் சோதரியார் ஏற்றுக்கொண்டார் என்றால் இந்த இரு சமயத்தாரிடையேயும் இருந்த நிலை சிந்திக்கத் தக்கதாகும். குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 191 சகோதரியார் ஆணையின்படி பெருமான் அதிகை வீரட்டானத்திலுள்ள சிவபெருமானை வணங்கச் சென்றார். அங்கே சென்று அவர் பாடிய பதிகம் 'கூற்றாயினவாறு’ என்று தொடங்குவதாகும். இப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன், நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்” என்று கூறுவதோடு, ஆறாவது பாடலில், சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் (திருமுறை4-1-6) என்று கூறுகிறார். இந்த இரு பாடல்களும், பாடலிபுரத்திலிருந்து (திருப்பாதிரிபுலியூர்) விடியற்காலம் புறப்பட்டு, சகோதரியாரைச் சந்தித்துக் கோவிலுக்கு வந்த வுடனேயே பாடிய பாடல்களாகும். ஏறத்தாழப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்ச் சமண் சமயம் புகுந்த வாகீசர் இரண்டு மணிநேரத்திற்குமுன்வரை நல்ல சமணராகவே இருந்துவந்தார். அப்படி இருக்க, தம் பழைய வாழ்வை நினைந்து பாடும் இப்பகுதியில் 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்” என்றும் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் என்றும் பாடினார். 192 * சேக்கிழார் தந்த செல்வம் அதைக் கற்கின்ற நம் மனத்தில் பெருங்குழப்பத்தை உண்டாக்குவதில் வியப்பொன்றுமில்லை. இரண்டு மணிநேரம் முன்புவரை சமணராக இருந்த இவர் சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று பாடினால் அதை என்னென்று சொல்வது! இந்தக் குழப்பத்திற்கு விடை காண்பது மிக இன்றி யமையாததாகும். இரண்டு மாறுபட்ட நிலைகளில் இதுபற்றி முடிபு கூறியவர்கள் உண்டு. பெரியபுராணத்தை ஆங்கிலத்தில் எழுதிய அமரர் G.V.பிள்ளை அவர்கள் நாவரசர் பெருமான், சைவர்கள் அனுப்பிய ஒற்றர் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சமணர்களின் குறை பாடுகளை அறிந்துகொள்வதற்காக அவர்களுடைய பாசறையில் அவர்களோடு வாழ்ந்து, அவர்களின் குற்றங் குறைகளை அறிந்து கொள்வதற்காகவே அனுப்பப்பட்டவர் என்ற கருத்தில் திரு. G.V.பிள்ளை பேசுகிறார். இந்த முடிபு பெரியபுராணத்தையும் நாவுக்கரசரையும் சிறிதும் விளங்கிக் கொள்ளா தவர்கள் தந்த முடிபாகும். அறுவகைக் குற்றங் களையும் செற்று, பகைவர், நண்பர் என்ற வேறுபாடு அற்று வாழ்ந்த ஒரு மாபெரும் ஞானியை ஒற்றர் என்று கூறுவது நகைப்பை விளைவிப்பதாகும். இதிலிருந்து மாறுபட்டுப் பேசும் ©óᏜFᎧl பெருமக்கள் இந்தக் கோடியில் இருந்து எதிர்கோடிக்கே சென்று விட்டனர். அவர்கள் கூற்றுப்படி சமணசமயத்தில் இருக்கும்பொழுதே சைவ குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 193 சமயக் கொள்கைகளை விட்டுவிடாமல் மறைவாக, பிறர் அறியாமல் ஜெபம், பூசனை முதலியவற்றை செய்தார் என்று முடிவுக்கு வந்துள்ளனர். முதலவர் கூற்றை விட இது கொடுமையானது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கீழ்த் தரமான மனிதராக நாவரசரை இவர்கள் தங்கள் சைவப்பற்று காரணமாக தரந்தாழ்த்திவிட்டனர். இவ்விருசாரார் கூற்றும் நகைப்புடன் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியதாகும். வரலாற்று அடிப்டையில் கண்டால் இவ்விரு பாடல்களும் பெருங் குழப்பத்தைக் கற்பவர் மனத்தில் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமே இல்லை. இதன் உண்மை தத்துவத்தை அறிந்து கொள்ளவேண்டும் ஆனால் ஒருசில அடிப்படைகளை அறிதல்வேண்டும் மனிதமனம் மிகமிக விந்தையானது. ஓர் இடத்தில் இருக்கும்பொழுது மற்றோர் இடம் இதைவிடச் சிறப்புடையது என்று நினைத்து சஞ்சலப்படுதல் மனித மனத்தின் இயல்பாகும். இரண்டாவது, சங்கப் பாடல்களில் வரும் பாலைத்திணைப் பாடல்களை ஆராய்ந்தால் அவற்றிலிருந்து ஒன்றை அறியமுடியும். கற்புக் காலத்தில் தலைவியோடு இருக்கும்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆற அமர சிந்திப்பதற்கு சமயம் கிடைப்பதில்லை. கல்விவயின் பிரிவு, பொருள் வயின் பிரிவு, போர்வயின் பிரிவு என்ற ஏதோவொரு காரணத்தால் தலைவியைவிட்டு, நெடுந்துாரம் சென்று விட்ட தலைவன் அங்குள்ள அன்றாடப் பணிகளை 194 சேக்கிழார் தந்த செல்வம் முடித்தபிறகு, ஒய்வாக இருக்கும்பொழுது தலைவியோடு செலவழித்த காலத்தையும், அவள் பேசிய பேச்சுக்களையும், அவர்களிடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் மெல்ல அசைபோட்டு EFTG) i தானமாக சிந்திப்பது மரபாகும். பாலைத்திணை பாடல்கள் பல இங்கு கூறியவற்றை விளக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் அடிப்படை யாது? என்றோ நடந்த ஒன்றை, வேறொரு சூழ்நிலையில் இருக்கும்பொழுது ஆற அமர சிந்திப்பது மனித மனத்தின் பண்பாகும். இவ்வாறு நினைந்து அவன் அசைபோடுவதால் தலைவன் கடமையிலிருந்து தவறி விட்டான் என்று நினைப்பதும், கூறுவதும் மனவியல் அறிந்தார் ஏற்றுக் கொள்ளாத ஒன்றாகும். அமைதியாக இருக்கும் பொழுது பழைய நினைவுகளை அசைபோடுதல் என்பதை Remembering in Tranquility என்று மேனாட்டார் கூறுவர். r மனித மனத்தின் அமைப்பில் தவிர்க்கமுடியாத - ஒரு பகுதியாகும் இது. நாவரசரின் வாழ்க்கையை இப்பொழுது நினைவுக்கு கொண்டுவருதல் நலம். பெருஞ்செல்வர் இல்லத்துப் பிறந்த ஒரே மகனார். மிகக் குறுகிய காலத்தில் மூன்று சாவுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து அந்த இளைஞன் மனத்தை உலுப்பிவிட்டன. தம்மிடம் உள்ள இப்பெருஞ் செல்வம் இம்மூன்று துன்பங்களில் ஒன்றைக்கூட h விலக்கப் பயன்படவில்லை என்ற எண்னம் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 195 அதிர்ச்சியைத் தந்ததோடல்லாமல் இந்தச் செல்வம், இந்த வாழ்க்கை என்பவை அனைத்தும் நீர்க்குமிழி போன்று நிலையில்லாதவை என்ற முடிபுக்கு அவரை உந்தித் தள்ளிற்று. இத்தகைய முடிபு உலகத்தில் பலருக்கும் வருவதுண்டு. மன ஊற்றம் இல்லாத காரணத்தாலும் இன்ப நாட்டம் கொண்ட காரணத் தாலும் இந்த முடிவின்படி யாரும் நடந்துகொள்வ தில்லை. இதனை நம் முன்னோர் மயான வைராக்கியம் என்று கூறினர். ஒரு வினாடி மனத்தில் தோன்றி உடன் மறைந்துவிடுகின்ற இதனை மயான வைராக்கியம் என்று கூறுவதில் தவறில்லை. இத்தகைய மனிதரிலிருந்து, முற்றிலும் மாறு பட்டவர் புகழனாரின் மகனான மருள்நீக்கியார், நிலையாமையைக் கண்கூடாகக் கண்ட அவர் இது தமக்குமட்டும் சிறப்பாக நிகழ்ந்ததன்று, உலகம் முழுவதற்கும் பொதுவானது என்பதை அறியச் சில காலம் பிடித்திருக்கும். தம்முடைய செல்வத்தை மக்கள் தொண்டில் ஈடுபடுத்தியபோதும், பல்வேறு கலைகளைக் கற்றபோதும் மனத்தில் அமைதி நிலை பெறவில்லை என்பதை அறிந்த அவர், இந்தச் சாவுகளின் மூலம் நிலையாமை என்ற ஒன்றுபற்றி அதிகம் சிந்திக்கலானார். இதைக் கூறவந்த சேக்கிழார், நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துறந்து, சமயங்கள் ஆனவற்றின் 196 சேக்கிழார் தந்த செல்வம் நல்லாறு தெரிந்து, உணரநம்பர் அருளமையினால், கொல்லாமை மறைந்து உறையும் அமண்சமயம் - குறுகுவாா. (பெ. பு-1307) என்று பாடுகிறார். நில்லாத உலகியல்பையும் நிலையாத வாழ்க்கை யையும் அன்றாடம் கண்டுகொண்டிருக்கின்ற கோடிக் கணக்கானவர்களில் எத்துணைப் பேர் அறத் துறக்கிறார்கள் என்று சிந்தித்தால், மருள் நீக்கியார் பெருமை அறியமுடியும். பெளத்தம், வைணவம், சாக்தம், சமணம் ஆகிய அனைத்தும் ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நன்கு நிலை பெற்றிருந்தன என்றால், சைவத்தை விட்டுப் பெளத்தத்தையோ சாக்தத்தையோ விட்டுவிட்டுச் சமணத்தில் ஏன் வாகீசர் ஈடுபட்டார் என்ற வினாவை எழுப்பினால், ஒர் உண்மை தெற்றெனப் புலப்படும். நிலையாமைபற்றியே அதிகம் சிந்தித்தார் ஆதலால் யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலையாமை ஆகியவற்றை அதிகம் அழுத்திக் கூறும் சமணம், மருள்நீக்கியாருக்கு உகந்த தாயிற்று. மேலும் கலைகள் பல கற்றவராதலால், எல்லாச் சமயங்களின் தத்துவங்களையும், கொள்கை களையும் ஒரளவு நன்கு அறிந்திருக்க வேண்டும். சமயங்களின் தத்துவங்களை, கொள்கைகளை அறிவு பூர்வமாக ஆய்ந்து அவற்றில் நல்லனவற்றை அறிதல் வேறு. குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 197 சமயங்கள் கூறுவனவற்றை சமையிகள் அனைவரும் கடைபிடிக்கிறார்கள் என்று நினைப்பதும் சொல்வதும் அறியாமை உடையதாகும். எந்தச் சமயத்தில் வாழ்பவர்களும் அந்தச் சமயம் கூறும் விதிமுறை களைப் பின்பற்றி வாழ்ந்தால் சமயப் பூசலுக்கு இடமே இல்லை. அன்பையே அடிப்படையாகக் கொண்டு வளர்த்த ஏசு பெருமானின் சமயத்தார் அன்று முதல் இன்று வரை செய்த, செய்கின்ற போர்களுக்கு ஒரு முடிவே இல்லை. அச்சமயத்தில் தோன்றிய கிளைச் சமயங்கள் தம்முள் போரிட்டு மடிந்த வரலாற்றை உலகம் அறியும். சமையிகள் (சமயத்தைப் பின்பற்றுவார்கள்) சரியாக நடந்து கொள்ளாமையால் அச்சமயத்தைக் குறை கூறுவது அறியாமையின் பாற்படும். சமயம் என்பது வேறு, சமயிகள் என்பவர்கள் வேறு. கொல்லாமையே முழு மூச்சாகக் கொண்ட தமிழ்ச் சமணர்களிடையே வந்தேறிகளான களப்பிரர் தாங்களும் சமணர் என்று கூறிக் கொண்டாலும் கொலைக் கொள்ளை என்பவற்றையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். இந்த நுணுக்கத்தையும், தமிழ்ச் சமணர்களினின்று களப்பிரர் மாறுபட்டவர்கள் என்பதையும் நன்கு அறிந்த சேக்கிழார், கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் என்று கூறுகிறார். இந்த வேறு பாட்டை உணர்த்தவே ஞானசம்பந்தர், நாவரசர், சேக்கிழார் ஆகிய மூவரும் சமணர் என்ற சொல்லைப் 198 சேக்கிழார் தந்த செல்வம் பயன்படுத்தாமல், அமணர் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். மேலும், தமிழ்ச் சமணர் அரசியலில் புகுந்ததாக, அரசர்களை ஆட்டி வைத்ததாக வரலாறே இல்லை. எனவே, நாவரசர் புகுந்த அமண் சமயத்தார், பல்லவ மன்னனாகிய மகேந்திரனை கைக்குள் போட்டுக் கொண்டு, புறத்தே இருந்து தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர் என்பதை அறியலாம். அத்தகையோர் வட்டத்தில்தான் வாகீசர் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தாலும் தொடக்கத்தில் அவர்கள் உடைய மறைவு வாழ்க்கை அறியாமல் அச்சமயக் கொள்கை களில் ஈடுபட்டார். வாய்மை, கொல்லாமை முதலிய அவர்களுடைய கொள்கைகள் நாவரசரை ஈர்த்ததில் வியப்பில்லை. ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் சைவ சமயத்தில் பலர் ஊன் உணவை மேற் கொண்டு இருந்தனர். இவ்வாறு உண்பது சரியா தவறா என்ற போராட்டம் சைவர்களிடையே இருந்து வந்தது என்பதை 'ஊனொடு உண்டல் நன்றென, ஊனொடு உண்டல் தீதென' என்று தொடங்கும் சம்பந்தர் தேவாரம் இதை விளக்கும். அன்றியும் முன்னரே தமிழகத்தில் புகுந்த வைதிக சமயம் கொலை வேள்வியை ஏற்றுக்கொண்டதாதலின் அந்த வைதிக சமயம் தமிழகத்தைத் தாக்கியபொழுது சைவர்களும் ஒரளவு வேள்வியில் ஈடுபட்டனர். 'பசுவேட்டு எரி குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 199 ஒம்பி என்ற சம்பந்தர் தேவாரம் இதற்குச் சான்றாகும். இவற்றை ஏற்காத சைவர்களும் இருந்தனர் என்பது தெளிவு. - நாவரசருக்கு ஊன் உணவு, வேள்வி என்ற இரண்டும் கட்டோடு பிடிக்கவில்லை. இதனை வேதம் ஒதில் என் வேள்விகள் செய்யில் என்’ என்ற திருக்குறுந்தொகைத் தேவாரம் அறிவிக்கும். ஆகவே, கொலை வேள்வியை மறுத்தல், அஹிம்சை என்ற இரண்டுக்கும் தலைமையிடம் தந்த சமண சமயம், வாகீசரை ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. முழு மனத்தோடு, முழு நம்பிக்கையோடு சமண சமயத்தில் அவர் புகுந்தார் என்பதில் ஐயத்திற்கு இடமே இல்லை. - அப்படியானால், அங்கே சென்றபிறகு இந்த நம்பிக்கை தளர்வுற்றதா என்ற வினாவை எழுப்பினால், 'ஆம்’ என்றே விடை கூறவேண்டும். எந்தக் கொலையை வெறுத்து, எந்த அஹிம்சையில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தில் புகுந்தாரோ, அந்தச் சமயத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் அந்த அமணர்கள் களப்பிரர்கள் இவை இரண்டையும் கூசாமல் மறைவாகச் செய்வதைக் கண்டவுடன் மருள்நீக்கியாருக்கு மன வருத்தம் தோன்றலாயிற்று, அல்லாமலும், அவர் பிறந்ததிலிருந்து வளர்ந்து புறச்சமயம் செல்கின்றவரை அவருடைய மனத்திலும் பரம்பரையிலும் ஊறிப்போயிருந்த 200 சேக்கிழார் தந்த செல்வம் கடவுட் கொள்கைக்குப் புதிய சமயத்தில் இடமில்லை. அவர் மனத்தில் ஆழ்ந்து படிந்திருந்த கடவுட் கொள்கையும் களப்பிரர் வாழ்க்கையில் காணப்பட்ட ஹிம்சை, கொலைவெறி என்பவற்றில் ஏற்பட்ட வெறுப்பும் அவரைச் சிந்தனையில் ஆழ்த்தின. ஏதோ ஒரு வேகத்தில் அமண் சமயம் குறுகினார். மாபெரும் அறிவாளி ஆதலின் அச்சமயத்தின் உண்மையான கொள்கைகளை அறிந்து, பிற சமயங்களை வெற்றி கொள்ளும் சிறப்பையும் பெற்றார். அச்சமயத்தின் உண்மையான தத்துவங்களிலும் கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டிருப்பினும் அவர் மனத்தில் இரண்டு குறைகள் தோன்றலாயின. முதலாவது, அந்தச் சமயம் கூறும் நல் உபதேசங் களையும் நல்லுரைகளையும் அந்தச் சமயிகள் பின் பற்றவில்லை என்பது முதற்குறையாகும். ஏனைய சமயத்தார் போலவே இவர்களும் பேசும் கொள்கை வேறாகவும், நடைமுறை வேறாகவும் இருப்பதில் ஏற்பட்ட குறை முதற்குறையாகும். இரண்டாவது, மனத்தில் இளமையிலிருந்து ஊறிய கடவுட் கொள்கை, வழிபாட்டு முறை என்பவற்றை இடையே விட்டுவிட்டதால் ஏற்பட்டது இரண்டாவது குறை. விரும்பிச் சென்றடைந்த புதிய சமயத்தில் காணப் படும் முரண்பாட்டால் மனத்தில் வியப்பும் தளர்ச்சி யும் ஏற்பட்டன. அமைதியாக அதுபற்றிச் சிந்திக்கும் பொழுது பழைய சமயத்தில் தாம் மேற்கொண்டிருந்த குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 201 கடவுள் நம்பிக்கை வழிபாட்டு முறை என்பதுபற்றி அடிக்கடி சிந்திக்கலாயினார். போர்வயின்சென்ற தலைவன், போர்புரியாத பொழுது தலைவியைப் பற்றி நினைந்துகொண்டு இருப்பதுபோல, புதிய சமயத்தின் அன்றாட அலுவல்களை முடித்த பிறகு பழைய நினைவுகள் மனத்தில் ஒயாது ஊசலாடின. அச் சமயத்தில் இருக்கும்பொழுது இச் சமயம் சிறந்தது போலக் காட்சி அளித்தது. எனவே, இங்கே வந்தார். இங்குள்ள முரண்பாட்டால் மனத்தளர்ச்சி ஏற்பட்டவுடன் அந்தப் பழைய சமயமே தேவலாம் என்ற எண்ணம் மனத்தில் ஊசலாடியது. அங்கிருந்த நாட்களில் தம் எண்ண ஓட்டங்களையும் செயல் முறைகளையும் அடிக்கடி சிந்திக்கலானார். எவ்வளவு முயன்றும் இளமையில் ஊறிய அப்பழக்க வழக்கங்களை எளிதில் ஒதுக்க முடியவில்லை. அதைத்தான் முதல் பதிகத்தின் இரண்டாவது, ஆறாவது பாடல்களில் வாகீசர் நினைவுகூர்கிறார். ஐந்தெழுத்தை ஜெபித்ததாகவோ, பூசனைகள் செய்ததாகவோ கூறவில்லை. சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்” என்பது முதலான அடிகளில் வரும் "மறந்தறியேன்” என்ற சொற்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அகமனத்தின் அடித்தளத்தில் ஒடிக்கொண் டிருக்கும் இந்தச் சிந்தனைகளை மறக்க முடியவில்லை என்பதே இப்பாடலின் பொருளாகும். இம்முறை தவிர, வேறு எம்முறையில் பொருள் செய்தாலும் நாவரசரை இழிவுபடுத்துவதாகவே முடியும். 202 சேக்கிழார் தந்த செல்வம் கைத்திருத் தொண்டு செய்கடப்பாட்டினார் தொண்டு செய்வதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர் நாவரசர் என்பது முன்னமே குறிக்கப் பட்டுள்ளது. அவர் செய்த உழவாரத் தொண்டும், திருப்பூந்துருத்தியில் நீண்ட காலம் தங்கிச் செய்த திருக்கோயில் தொண்டும் மக்கள் தொண்டே ஆகும் என்பதையும் அறிதல் வேண்டும். இவற்றை அல்லாமல் திருவிழிமிழலையில் நடைபெற்ற நிகழ்ச்சி இப்பெருமானார் மக்கள்மாட்டு கொண்டிருந்த எல்லையற்ற அன்பிற்கும் செய்த பணிக்கும் எடுத்துக் காட்டாகும். எழுபது வயது நிரம்பிய நாவரசரும் பத்து வயது நிரம்பிய ஞானசம்பந்தப் பெருமானும் இறைவனை மனக் கண்களால் அன்றி, ஊனக் கண்களாலும் பார்த்து வழிபடும் பெருமை உடையவர்களாயினும், தம்மைச் சுற்றியுள்ள மக்கள் வாழ்க்கையை இவர்கள் மறப்பதே இல்லை. இப் பெருமக்கள் இருவரும் திருவிழிமிழலையில் ஒருமுறை வந்து சேர்ந்தனர். . தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கூறப்பெறும் அப்பகுதியில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இப் பஞ்சம் இயற்கையானதாகத் தோன்றவில்லை. வணிகர் களின் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட செயற்கைப் பஞ்சம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்நிலையில் திருஞானசம்பந்தப் பெருமானோ அன்றி அப்பர் பெருமானோ இறைவனை வேண்டி குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 203 ஒரு பதிகம் பாடித் தேவையான மழை தருவித் திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இறைவனை வேண்டி, அவனருளால் ஆளுக்கொரு பொற்காசு பெற்று உணவுப் பண்டங்களை வாங்கி ஊரின் இரண்டு கோடிகளிலும் இரண்டு மடங்களை அமைத்து, மக்கள் பசிப்பிணியைப் போக்கினர். பொற்காசைக் கண்டவுடன் வணிகர்கள் வேண்டு மான பொருட்களைத் தந்தார்கள் என்றால், இப் பொருட்கள் அதுவரை எங்கே இருந்தன: பொருட்களை மறைத்து வைத்துக்கொண்டு, அதிக விலைக்குப் பொருட்களை விற்க விரும்பிய வணிகர்களின் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பெற்ற பஞ்சம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இரு பெருமக்களும் ஒன்றாகத் தங்கியிராமல் ஊரின் இரண்டு கோடிகளிலும் மடம் அமைத்து, உணவு சமைத்து மக்கள் பசிப் பிணியைப் போக்கக் காரணம் யாது! ஒன்றாக இருந்து ஒரே இடத்தில் உணவு தயாரித்து வழங்கியிருக்கலாம். அதை விட்டு விட்டு இரண்டு இடங்களில் தனித் தனியே உணவு சமைக்கக் காரணம் யாது என்பதை ஆராய்ந்தால், இப் பெருமக்களும் மக்கள்மாட்டுக் கொண்ட அன்பும் தொண்டின் சிறப்பும் வெளிப்படும். - - - - - . . கோடை കെഥി ஒரே இடத்தில் அமைந்துள்ள மடத்திற்கு வரவேண்டுமானால் நீண்ட 204 சேக்கிழார் தந்த செல்வம் தூரம் நடக்க நேரிடும். அவ்வாறு நடைபெறாமல் இருக்கவே இரண்டு இடங்களில் மடம் அமைத்து உணவு இட்டனர். பொதுவாக இவ்வாறு அறஞ் செய் பவர்கள் ஏவுதல் கர்த்தாவாக இருந்து, இப்பணியைத் தொடங்கியவுடன் அத்தோடு அதுபற்றிக் கவலைப் படாமல் இருந்துவிடுவர். இந்த இரண்டு பெரு மக்களில் சிறிய பெருந்தகையார் ஆன ஆளுடைய பிள்ளையார் காலா காலத்தில் உணவு தயாரிக்கப் பெற்று நன்முறையில் வழங்கப்பெறுகிறதா என்பதை விடாமல் மேற்பார்வை பார்த்துக்கொண் டிருந்தார் என்று அறிகிறோம். நாவரசர் மடத்தில் உரிய காலத்தில் உணவு வழங்கப்பெற்றும், தம்முடைய மடத்தில் காலந் தாழ்ந்து உணவு பரிமாறப்படுகிறது என்பதை அறிந்த பிள்ளையார் அதன் காரணத்தை அறிய விரும்பினார். தமக்குக் கிடைக்கும் காசு மாற்றுக் குறைந்திருப்பதும் நாவரசர் காசு ஆணிப்பொன்னாக இருப்பதும் அவருக்கு தெரியவந்தது. ஒரு வினாடி இந்த வேறுபாட்டிற்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்று சிந்தித்த பிள்ளையாருக்கு உடனே உண்மை விளங்கி விட்டது. மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் இறைத் தொண்டு செய்ய வேண்டும் என்பது இந் நாட்டின் தலையாய கொள்கையாகும். தலை மகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர் மனத்தாலும் வாக்காலும் இறைத் தொண்டு செய்தாரே தவிர உடலால் எதுவும் செய்ததாக குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 205 வரலாறு இல்லை. அவருடைய மிக இளமைப் பருவம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும், இறைவனுடைய கணக்கில் இரண்டால் (மணம், மொழி தொண்டு செய்பவர்களை விட, மூன்றால் (மனம், மொழி, மெய்) தொண்டு செய்பவர் முழுத் துய்மை பெறுதற்குரியவராகிறார். "கைத் தொண்டு ஆகும் பான்மையினால் வாசி இல்லாக் காசு பெற்றார் வாகீசர்" என்ற உண்மையை ஒரே வினாடியில் அறிந்துகொண்டார் ஞானசம்பந்தர் என்கிறார் சேக்கிழார். இந்நாட்டுச் சைவப் பெருமக்கள் தொண்டுக்குக் கொடுத்த தனிச் சிறப்பு இதுவாகும். - . இங்கே ஓர் ஐயம் தோன்ற இடமுண்டு மாபெரும் சக்தி வாய்ந்த இப் பெருமக்கள் இருவரும் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடி வினாடி நேரத்தில் மழையை வருவிக்கும் ஆற்றல் உடையவர்கள்தாமே! அப்படி இருக்க, மழையை வரவழைத்துப் பஞ்சத்தைப் போக்காமல் சோறிட வேண்டிய காரணம் என்ன என்ற வினாவுக்கு வேறொரு விளக்கமும் காணலாம். இப்பொழுதே மழையை வர வழைத்தாலும் பயிர்கள் விளைந்து பயன்தர மூன்று மாதங்கள் ஆகும். வருகின்ற மழை உடனடியாக அவர்கள் பசிப் பிணியைப் போக்க உதவாது. எனவே தான் பஞ்சம் தீர்கின்றவரையில் உணவிட்டார்கள் என்பதை அறி கிறோம். இவ்வளவு உயர்ந்த நிலையில் இறைவனை நேரே காணும் வாய்ப்பு உடையவர்களாயினும் 206 சேக்கிழார் தந்த செல்வம் —r சாதாரண மக்கள் வாழ்வில் நாவரசர் போன்றவர்கள் எவ்வளவு கவனம் செலுத்தினார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டாகும். . திருவுருவ விளக்கம் மாபெரும் அறச்செயல்களைச் செய்தும் நற்பெயர் எடுத்தும் பிற சமயம் சென்று தருமசேனர் என்ற பட்டம் பெற்றும் மீட்டும் சைவத்திற்கு வந்து நஞ்சூட்டல், கடலில் எறியப்படுதல் ஆகியவற்றி லிருந்து வெற்றியோடு மீண்டதன் மூலம் செயற்கரும் செயல்களைச் செய்த நாவரசர் பெருமானின் தனி வாழ்க்கை ஈடு இணையற்ற முன்றயில் அடக்கத்திற்கே கொள்கலமாய் இருந்ததைக் கிளிண்கிறோம். பல்லவன் ஏவலன் வந்து தம்மை அழைத்தபொழுது நாம் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறி, வர மறுத்துவிட்டார் பெருமான். ஆனால், அதே நேரத்தில் அவரை அழைத்துச்செல்லாமல் சென்றால் தங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்று ஏவலர் கூறியவுடன் அவருடன் செல்ல உடன்பட்டார். அரசன் ஆணையை மறுக்கும் நெஞ்சுரம் உடையவர் ஆயினும் சாதாரணமானவர்களும் அப்பாவிகளுமான ஏவலர் தண்டன்ை பெறுவதைப் பெருமான் பொறுக்கத் தயாராயில்லை. சாதாரண மக்கள்மாட்டு அவர் கொண்டிருந்த மனித தேய்ம் அளவிடற்பா ) தன்று. குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 207 வாழ்க்கை அனுபவங்கள் இந்த இறை நேசரை வெறும் பக்தராகமட்டும் ஆக்காமல் தலைசிறந்த மனித நேயம் உடையவராகவும் மாற்றிவிட்டது. அதன் பயனாகத்தான் தமக்குத் தீங்கு செய்தவர்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை. உடல் பொருள், ஆவி அனைத்தையும் ஈசன்பால் வைத்தமையின் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அனுபவ பூர்வமாக அறிந்துவிட்டார். மனித நேயம் வளர அதுவும் ஒரு காரணமாயிற்று இவருடைய மனவளர்ச்சி அவருடைய முகத்திலும் பிரதிபலித்தது என்பதைக் கடலிலிருந்து கரையேறி திருப்பாதிரிப்புலியூரை வணங்கிவிட்டுத் திரு வதிகைக்குள் பெருமான் நுழையும் போதுச் சேக்கிழார் இதோ படம் பிடித்துக் காட்டுகிறார். தூய வெண்ணிறு துதைந்தபொன் மேனியும் - தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துஉருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் - செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே. (பெயு-1410) இப்பாடலின் முதலடியில், பெருமானின் பருவுடல் வருணிக்கப்படுகிறது. பொன் மேனியில் வெண்ணிறு பூசப்பட்டிருத்தலின் சிவபெருமானை நினைவூட்டு வதாக அது அமைகிறது. இரண்டாவது அடியில் அவருடைய மனத்தைப் படம் பிடிக்கிறார் 208 சேக்கிழார் தந்த செல்வம் கவிஞர். இறைவனின் திருவடியை வருடுவதுபோல அவருடைய சிந்தை ஆகிய வண்டு, இறைவன் திருவடியாகிய மலரை ஒயாது சுற்றிவருவதை "நாயகன் சேவடி தைவரு சிந்தை' என்ற சொற்களால் தெய்வச் சேக்கிழார் எடுத்துக்காட்டுகிறார். இங்கு மனம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், சிந்தை என்று கூறியதால் பெருமானுடைய மனம் முழுவதும் திருவடியால் நிரம்பி, ஆழத்தில் இருக்கும் -opiocaráng (deeper consciousness) grosé கூறுகிறார். ஆழ் மனம் இப்பணியில் ஈடுபட்டதால் அந்த உணர்வோடு தொடர்புடைய கண்கள், கண்ணிரைத் தாரை தாரையாகப் பெருக்குகின்றன. இரண்டடிகளில் மனம், மெய் என்ற இரண்டையும் கூறிவிட்டதால், எஞ்சியுள்ள மொழியைப்பற்றி மூன்றாவது அடியில் பேசுகிறார். பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும்’ என்று கூறுவதால் அவருடைய மொழியும் தன் பணியை இறைவன்மாட்டுச் செலுத்துகின்றது என்பதையும் தெரிவித்தார். 'செஞ்சொல் மேய செவ்வாய்' என்றதால் பெருமானின் வாய் பதிகச் செஞ்சொல் பேசுமே தவிர, வேறு ஒன்றையும் பேசாது என்பதையும் குறிப்பாக உணர்த்திவிட்டார். - இந்த வருணனை இடர்களையெல்லாம் வென்று, மனித நேயத்தைப் பூரணமாகப் பெற்று முழு வளர்ச்சி அடைந்த ஒரு முழு ஆன்மிக வாதியைத் குறிக்கோளுடன் வாழ்ந்த தக்கையும் தம்பியும் ை தெய்வச் சேக்கிழார் கண்ட விதமாகும் இது. இதற்கு அரண் செய்வதுபோலச் சேக்கிழாரின் இந்த மதிப்பீடு முற்றிலும் நியாயமானது என்பதை நிரூபிப்பதுபோலப் பின்னர் ஒரு நிகழ்ச்சி நடை பெறுகிறது. இங்குக் கூறப்பெற்ற நிகழ்ச்சிகள் நடை பெற்ற காலத்தில் தலைமகன் ஆகிநின்ற தமிழ் ஞான சம்பந்தர் இன்னும் இம்மண்ணில் அவதரிக்கவில்லை. ஆளுடைய பிள்ளையார் திருஅவதாரம் செய்கையில், வாகீச முனிவருக்கு ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் நிறைந்திருக்க வேண்டும். திருவதிகை வீதியில், வாகீசர் புகுந்ததைச் சேக்கிழார் கூறுகின்றபொழுது அம் முனியுங்கவருக்கு ஏறத்தாழ நாற்பது வயது ஆகியிருத்தல் வேண்டும். எனவே, மேலும் இருபது ஆண்டுகள் கழிந்துப் பிள்ளையாரைப் பார்ப்பதற்காக வாகீசர் சீழ்காழிக்கு வரும்பொழுது அறுபது பிராயங்களைக் கடந்த அவரது புற, அக வடிவங்கள் எவ்வாறு இருந்தன என்பதைத் தம் கூற்றாக அல்லாமல், பிள்ளையார் கூற்றாகத் வைத்து தெய்வக் கவிஞர் கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். பிரசித்தி பெற்ற ஒருவரை நாம் நேரே கண்டிராவிடினும் அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒவ்வொருவர் மனத்திலும் ஒரு கற்பனை வடிவை அமைத்துக்கொள்ளுதல் இன்றும் நிகழ்வ தாகும். நாவரசர், ஆளுடைய பிள்ளையின் சிறப்புக்களைக் கேள்வியுற்று ஞானப்பால் உண்ட 210 சேக்கிழார் தந்த செல்வம் கவிஞர். இறைவனின் திருவடியை வருடுவதுபோல அவருடைய சிந்தை ஆகிய வண்டு, இறைவன் திருவடியாகிய மலரை ஓயாது சுற்றிவருவதை ‘நாயகன் சேவடி தைவரு சிந்தை' என்ற சொற்களால் தெய்வச் சேக்கிழார் எடுத்துக்காட்டுகிறார். இங்கு மனம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், சிந்தை என்று கூறியதால் பெருமானுடைய மனம் முழுவதும் திருவடியால் நிரம்பி, ஆழத்தில் இருக்கும் sepudaorégog, (deeper consciousness) 6TGäg|3; கூறுகிறார். ஆழ் மனம் இப்பணியில் ஈடுபட்டதால் அந்த உணர்வோடு தொடர்புடைய கண்கள், கண்ணிரைத் தாரை தாரையாகப் பெருக்குகின்றன. இரண்டடிகளில் மனம், மெய் என்ற இரண்டையும் கூறிவிட்டதால், எஞ்சியுள்ள மொழியைப்பற்றி மூன்றாவது அடியில் பேசுகிறார். பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும் என்று கூறுவதால் அவருடைய மொழியும் தன் பணியை இறைவன்மாட்டுச் செலுத்துகின்றது என்பதையும் தெரிவித்தார். 'செஞ்சொல் மேய செவ்வாய்’ என்றதால் பெருமானின் வாய் பதிகச் செஞ்சொல் பேசுமே தவிர, வேறு ஒன்றையும் பேசாது என்பதையும் குறிப்பாக உணர்த்திவிட்டார். . . . . . " ... . .” இந்த வருணனை இடர்களையெல்லாம் வென்று, மனித நேயத்தைப் பூரணமாகப் பெற்று முழு வளர்ச்சி அடைந்த ஒரு முழு ஆன்மிக வாதியைத் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 211 தெய்வச் சேக்கிழார் கண்ட விதமாகும் இது. இதற்கு அரண் செய்வதுபோலச் சேக்கிழாரின் இந்த மதிப்பீடு முற்றிலும் நியாயமானது என்பதை நிரூபிப்பதுபோலப் பின்னர் ஒரு நிகழ்ச்சி நடை பெறுகிறது. இங்குக் கூறப்பெற்ற நிகழ்ச்சிகள் நடை பெற்ற காலத்தில் தலைமகன் ஆகிநின்ற தமிழ் ஞான சம்பந்தர் இன்னும் இம்மண்ணில் அவதரிக்கவில்லை. ஆளுடைய பிள்ளையார் திருஅவதாரம் செய்கையில், வாகீச முனிவருக்கு ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் நிறைந்திருக்க வேண்டும். திருவதிகை வீதியில், வாகீசர் புகுந்ததைச் சேக்கிழார் கூறுகின்றபொழுது அம் முனியுங்கவருக்கு ஏறத்தாழ நாற்பது வயது ஆகியிருத்தல் வேண்டும். எனவே, மேலும் இருபது ஆண்டுகள் கழிந்துப் பிள்ளையாரைப் பார்ப்பதற்காக வாகீசர் சீழ்காழிக்கு வரும்பொழுது அறுபது பிராயங்களைக் கடந்த அவரது புற, அக வடிவங்கள் எவ்வாறு இருந்தன என்பதைத் தம் கூற்றாக அல்லாமல், பிள்ளையார் கூற்றாகத் வைத்து தெய்வக் கவிஞர் கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். பிரசித்தி பெற்ற ஒருவரை நாம் நேரே கண்டிராவிடினும் அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒவ்வொருவர் மனத்திலும் ஒரு கற்பனை வடிவை அமைத்துக்கொள்ளுதல் இன்றும் நிகழ்வ தாகும். நாவரசர், ஆளுடைய பிள்ளையின் சிறப்புக்களைக் கேள்வியுற்று ஞானப்பால் உண்ட 22 சேக்கிழார் தந்த செல்வம் இரண்டாவது பாடல் தனிச் சிறப்புடையதாகும். மிக இளம் பிராயத்தினராகிய ஆளுடைய பிள்ளையார் அந்த வயதில் பழுத்த சிவனடியார் யாரையும் கண்டதில்லை என்றாலும், தம் மனத்தோடு ஓர் ஒவியத்தை வரைந்துவைத்திருந்தார். அந்த ஒவியத்தை ஒத்த அடியாரைப் பிள்ளையார் இது வரை கண்டதில்லை. இப்பொழுது ஆளுடைய அரசைக் கண்டவுடன், ஆளுடைய பிள்ளையார் மனத்தில் தோன்றிய எண்ணம் என்ன தெரியுமா? அவருடைய கற்பனையில் ஒரு பழுத்த சிவனடியார் இப்படித்தான் இருப்பார் என்ற ஒவியம் இருந்ததல்லவா? அந்த ஓவியம் இப்பொழுது உயிர் பெற்றுத் தம் எதிரே திருமேனி தன்னில் அசைவோடு’ வருவதைப் பிள்ளையார் கண்டு பேருவகையில் மூழ்கினார். இதனைக் கூறவந்த சேக்கிழார் கருத்தில் பரவு மெய்க் காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று கூறுகிறார். ஆளுடைய அரசை ஆளுடைய பிள்ளையார் கண்ட காலத்தில்தான் இத்தகைய வடிவுடன் இருந்தார் என்று நினைக்கவேண்டியதில்லை. நாவரசர் வேடம் எப்பொழுதும் இப்படியேதான் இருந்தது. இதனை அறிய மற்றோர் நிகழ்ச்சி அப்பூதி அடிகள் புராணத்தில் பேசப்படுகிறது. இதனைப் பின்னர்க் காண்போம். " . . . . ." குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 213 இருவர் பாடல்களில் வைதிகக் குறிப்பு : உண்மை என்ன? சேக்கிழார் காலத்தில் சாதி வேறுபாடும், சைவ, வைணவப் போராட்டமும் தலைவிரித்து நின்றன. பல்லவர்கள் விட்டுச் சென்ற நம்பிக்கைகளும், வேள்வி முதலிய கிரியைகளும் அன்றும் ஒரளவு இருந்துவந்தன. திருஞானசம்பந்தர், நாவரசர், சுந்தரர் என்ற மூவர்முதலிகள் பல்வேறு வகையான் புரட்சிகளையும் புதிய சிந்தனைகளையும் நாட்டில் பரப்பியிருந்தாலும் அவர்கள் காலத்திற்குப் பிறகு இவை மெள்ளத் தளர்வடையத் தொடங்கின. அந்நிலையில் சமுதாயப் புரட்சியைத் தாமே சொல்வதுபோல் கூறினால் அதற்கு வரவேற்பு இராது என்று கருதிய சேக்கிழார், இம்மூவர் வரலாறுகளில் அங்கங்கே புரட்சிக் கருத்துக்களைப் புகுத்தினார். அவ்வாறு செய்வதற்கு இவர்களுடைய வரலாறுகளும் அருளிச்செயல்களும் பெரிதும் உதவின. மூவரில் காலத்தால் முற்பட்டவர் நாவரசர். பல்லவ மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர். அந்நாளில் வேத அடிப்படையிலான வைதிக சமயம் வீறு பெற்றிருந்தது. அச்சமயத்தில் வேள்விகள் செய்தல், வேதம் ஓதுதல், அங்கம் ஒதுதல் ஆகியவையே. மக்களை உய்விக்கும் என்ற கருத்து வலுப் பெற்றிருந்தது. கி.பி. இரண்டாம், நூற்றாண்டு முதல் மக்களிடையே பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த சில வடமொழிப் புராணங்களும் தீர்த்த 214 சேக்கிழார் தந்த செல்வம் யாத்திரை செய்தால் எல்லாப் பாவங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று பறைசாற்றின. மேலே குறிப்பிடப்பெற்ற வைதிக சமயமும், தீர்த்த யாத்திரை பற்றிப் பேசும் புராணங்களும், சடங்குகட்கு முக்கியத்துவம் தந்தனவே தவிர, இறை உணர்வை ஊட்டவில்லை. இந்தச் சடங்குகளைச் செய்தாலே மோட்சத்தை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை வலுப் பெற்றிருந்த காலம் அது. இந்தச் சூழ்நிலையில் தான் திருநாவுக்கரசர் பெருமான் இவ்வுலகிடைத் தோன்றுகிறார். இளமைப் பருவத்திலேயே காத்து ஆள்பவர் காவலை இகழ்ந்து புறச்சமயம் சென்று பல்லாண்டுகள் கழித்து மீட்டும் சைவம் வருகையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகட்கு மேற்பட்டவராக இருந்தார். இறை உணர்வு இல்லாமல் செய்யப்பெறும் எந்தச் சடங்கும் எந்தத் தீர்த்தாடனமும் ஒரு பயனையும் தரா என்பதை அனுபவரீதியாக அறிந்து கொண்டார் நாவரசர். ஆனால், அவரைச் சுற்றியிருந்த சமுதாயம் சடங்கு, தீர்த்தம் என்பவற்றையே சுற்றி வந்தது. அந்த நிலையை மாபெரும் புரட்சியாளராகிய நாவரசர், சமுதாயத்தின் இந்தப் பயித்தியக்காரத்தனமான செயல்களைக் கண்டிக்கத் தொடங்கினார். பிற் காலத்தில் வந்த சித்தர்கள்தான் இந்தப் புரட்சிக் கருத்துக்களை முதன் முதலாகப் பேசினார்கள் என்று நினைப்பது பெரும் தவறாகும். நாவரசர் பெருமான் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 215 சமுதாய மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் முறையில் இதோ பேசுகிறார், கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஓங்கு மாகட லோதநீ ராடிலென் எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே (திருமுறை. 5-99-2) வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஓதி அங்கமோ ராறு முனளிலென் ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே - (திருமுறை: 5-99-4) காணநாடு கலந்து திரியிலென் ஈனமின்றி இரும்தவஞ் செய்யிலென் ஊனையுண்ட லொழிந்துவான் நோக்கிலென் ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே (திருமுறை: 5-99-6) கூட வேடத்த ராகிக் குழுவிலென் வாடி ஊணை வருத்தித் திரியிலென் ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப் பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே. திருமுறை 5-99-7) 216 சேக்கிழார் தந்த செல்வம் நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென் சென்று நீரிற் குளித்துத் திரியிலென் என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே. (திருமுறை: 5-99-8) கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை ஆடினாலும் அரனுக்கன் பில்லையேல் ஓடு நீரினை ஒட்டைக் குடத்தட்டி முடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே. (திருமுறை: 5-99-9) சடங்குகள் என்று கூறிச் சாடுகிறார். அவருடைய காலத்தில் சைவ சமயம் ஏற்றுக்கொள்ளாத துறவு மார்க்கமும், காடுகள் சென்று கனசடை வளர்த்து, மூச்சைக் கட்டுப்படுத்தி தவம் செய்யும் வழக்கம் இருந்துவந்ததால் அதனையும் சாடுகிறார். அடுத்தபடியாகப், புராணங்கள் கூறும் தீர்த் தாடனத்தையும் மிகக் கடுமையாகத் தாக்குகிறார். கோடி தீர்த்தங்களில் கலந்து குளித்துவிட்டால் வீடு பேறு நிச்சயம் என்று கருதும் அஞ்ஞானிகளைப் பார்த்து ஓர் அற்புதமான உவமையால் அவர்களைச் சாடுகிறார். ஒடும் நீரினை ஒட்டைக் குடத்தில் அடைப்பவன் அறிவிலி என்பதை அனைவரும் அறிவர். ஆனால், தன் தவற்றை அறிய முடியாத மூர்க்கன் ஒட்டைக் குடத்தில் பிடித்த நீர் வெளியே ஒடிவிடுவதை அறிந்துகொள்ள முடியாமல் அதன் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 217 மேல் ஓர் மூடியைப் போட்டுவிட்டு, நீர் உள்ளே இருக்கிறது என்று நினைப்பவன் மூர்க்கனிலும் மூர்க்கனாவான். ஆண்டு, அனுபவம் ஆகியவற்றில் முதிர்ந்தவரான நாவரசரின் இப்பாடல்கள் சேக்கிழாரை மிகவும் தாக்கியிருக்க வேண்டும். அதன் பயனாகவே அன்றைய சமுதாயம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பல புரட்சிகளை அவர் காப்பியத்துள் புகுத்தினார். மேலே கூறியவற்றோடு அமையாது ஆதி புராணக் குறுந்தொகையிலும் வேள்விகளையும், காயத்ரி மந்திரங்களையும் இப்பெருமான் சாடுதலைக் d#5ITsgsjsjTsol)/Tls). எரிபெ ருக்குவர் அவ்வெளி ஈசனது உருவ ருக்கம தாவது உணர்கிலார் அரிஅ யற்கரி யானை அயர்த்துப்போய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே . (திருமுறை: 5-100-7) அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்க னாவான் அரனுரு அல்லனோ இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தி னைநினை யார்கன் மனவரே - . (திருமுறை 5-100-8) முதற்பாடல் வேள்வியைச் சாடுகிறது. இந்த இடத்தில் நியாயமான ஓர் ஐயம் எழ இடம் ஏற்படும். இப் 218 சேக்கிழார் தந்த செல்வம் பெருமானின் சம காலத்தவரான திருஞானசம்பந்தர் ரிக் வேதிகள் குடும்பத்தில் பிறந்தவர். அக் குடும்பத் தினர் வேள்விகள் செய்யும் வழக்கமுடையவர்கள். 'அன்றியும் கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லை” என்று பாடுபவர் ஞான சம்பந்தர். அப்படியானால் ஞானசம்பந்தர் ஏற்றுக் கொள்ளும் வேள்வியை நாவரசர் எதிர்க்கிறாரா என்ற வினா நியாயமானதே ஆகும். ஆழ்ந்து நோக்கினால் இவர்கள் இருவரும் இரண்டு விதமான வேள்வி களைப்பற்றிப் பேசுகின்றனர் என்பதை அறிய முடியும், வேத வழிப்பட்ட வைதிகர்கள் பிராமணங் களில் கூறப்பட்ட முறையில் செய்துவந்த வாஜபேயம் முதலிய இருபத்தோரு வேள்விகளும் ஞானசம்பந்தர் கூறும் வேள்விக்கு மாறுபட்டவை. வைதிகர்கள் இயற்றிய அந்த 21 வேள்விகளிலும் வேள்வித் தலைவர்கள் அல்லது வேள்வித் தெய்வங்கள் இந்திரன், வருணன், அக்கினி, ஆதித்தன் முதலிய வர்களே ஆவர். அவ்வேள்விகளில் சிவபெருமானுக்கு இடமே இல்லை. அவ்வேள்வி களில் அளிக்கப்படும் அவிஸ் இந்திரன் முதலியவர் களுக்குச் செல்லுமே தவிரச், சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் <$ali_ இல்லை. சிவபிரானை அல்லாமல், திருமாலாகிய மகா விஷ்ணுவிற்குக்கூட அவிர்ப்பாகம் கிடையாது. எனவே, இந்திரன் முதலானோர்களைக் குறித்து இந்த வேதியர்கள் செய்த வேள்விகளைத்தான் நாவரசப் பெருமான் சாடுகிறார். இங்கே இந்திரன் முதலிய தெய்வங்களை குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 219 அழைத்து இந்திராய ஸ்வாஹா, வருணுய ஸ்வாஹா' என்ற மந்திரங்களை ஓதி அக்கினியில் அவிர்ப்பாகத்தை இடுகின்ற வைதிகர் களைக் குறித்து ‘grff) பெருக்குவரவ் வெளியீசனது உருவ வருக்கமதாவது உணர்கிலார்’ என்று கூறுகிறார். சிவபெருமானை முதற்பொருள் என்று கொள்ளாமல், இந்திரனை வேள்வித் தலைவனாக ஏற்று நடத்தப்படும் இந்த வைதிக வேள்விகளைத் தான் நாவரசர் சாடுகிறார். இதனெதிராக ரிக் வேதத் தைப் பின்பற்றிப் பிராமணங்களில் கூறப்பட்டபடி வேள்வி செய்தாலும், அவ்வேள்வியின் தலைவனாக இந்திரன் முதலிய சிறு தெய்வங்களைக் கொள்ளாமல் சிவபெருமானையே முதல்வனாகக் கொண்டு வேள்விகள் செய்யும் ஒரு சிறு பிரிவினர் வேதங்கள் தோன்றிய பஞ்சாப், ஹரியானா மாநிலப் பகுதிகளில் வேதம் தோன்றிய காலத்திலேயே இருந்துவந்தனர். இப்பிரிவினருக்குக் கெளண்டின்ய கோத்திரத்தார் என்று பெயர். சிவபிரானை முதற்பொருளாக ஏற்றுக் கொள்ளாத வைதிகர்கட்கும் இந்தக் கெளண்டின்யக் கூட்டத்தாருக்கும் பகைமை மூண்டு இவர்கள் வெருட்டப்பட்டு விட்டனர். நாளா வட்டத்தில் இந்த கெளண்டின்யர் பரம்பரை வடநாட்டில் மறைந் தாலும் தமிழகத்தில் சங்க காலத்திலேயே வேரூன்றிவிட்டது. பூஞ்சாற்றுார் பார்ப்பான் கெளனியன் விண்ணந் தாயன் என்ற (புறம்.166) 220 சேக்கிழார் தந்த செல்வம் ஒருவன் சிவபரம்பொருளை முன்னிலைப்படுத்தி இருபத்தொரு யாகங்களைச் செய்தான் என்று புறநானூறு பேசுவதாலும், திருஞானசம்பந்தர் கெளனியன் சம்பந்தன்” என்று தம்மைக் கூறிக் கொள்ளுவதாலும் ரிக்வேதியர்களிடையே இப்படிச் சிவபெருமானை முன்னிறுத்தி வேள்வி செய்யும் இனம் ஒன்று இருந்ததை அறிகிறோம். ஞானசம்பந்தர் குறிப்பிடும் வேள்விகளெல்லாம் இத்தகையவைகளே. இவர்களைப் பொறுத்தமட்டில் ரிக்வேதிகளாக இருந்தாலும் வேதத்தைவிட ஐந்தெழுத்தே தலை யானது என்ற கொள்கை உடையவர்கள். இதனையே ஞானசம்பந்தர் வேத நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே' (3–307–1) என்று பாடிச் செல்கிறார். எனவே, திருநாவுக்கரசர் சாடியது ரிக்வேதிகள் இந்திரனை முன்னிலைப் படுத்திச் செய்த வேள்விகளையே ஆகும். அருக்கன் ஆவான் அறன் உரு அல்லனோ என்று நாவரசர் பாடியதும் இக் கருத்தை வலியுறுத்தும். எனவே, தேவாரத்தில் வேதநாயகன் என்றும், வேதியர் நாயகன் என்று வருவதும், வேதம் என்ற சொல் பயன்படுத்தப்படுவதும் கெளனியர்கள் போற்றும் வேதம் என்ற அடிப்படையிலேயே ஆகும். இக்கருத்தைச் சேக்கிழார் மிக நன்றாக அறிந்திருந்தார் என்பதைப் பெரியபுராணம் முழுவதிலும் காணலாம். "வேதநெறி தழைத்தோங்க' என்று திருஞான குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 221 சம்பந்தர் புராணத்தைத் தொடங்கும் சேக்கிழார் பெருமான் அடுத்தபடியாக மிகு சைவத்துறை விளங்க என்று பாடுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கெளனியர் அல்லாத ஏனைய வேத வழிப் பட்ட வைதிகர்கட்கும் சைவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வைதிகர்கள் விக்கிரக வழிபாட்டையோ ஆலயத்தையோ அபிடேகம் அர்ச்சனை என்பவற்றையோ ஒத்துக்கொள்வது மில்லை; ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆனால், ஞான சம்பந்தப்பெருமான் 'ஆனின் ஐந்து ஆடுவார்' என்று பாடுவதும், "செந்தமிழர், தெய்வமறை நாவர், அருங்கலைஞர், அந்தமில் குணத்தவர்கள் * விழிமிழலையே' என்று பாடுவதும், இவர்கள் பழைய வைதிக வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்ற கருத்தை வலியுறுத்துவ தாகும். இவரை அல்லாமல் திருநாவுக்கரசுப் பெருமான் வேத வழிபட்ட வைதிகர்களைச் சாடியதைக் கண்டோம். அதே திருநாவுக்கரசர் - "நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன்காண்” - (திருமுறை. 6-8-78) என்றும், சாமவேத கந்தர்வம் விரும்புமே என்றும் பாடுவது முன்னர்க் கூறிய வேறுபாட்டை அறிந்து கொண்டவர்கட்கே புலனாகும். 222 சேக்கிழார் தந்த செல்வம் இத்துணைப் பெரிய காப்பியத்தையும், அதன் சிறப்புக்களையும் விரிவாகக் காண்டல் இந்த நூல் அளவில் அடங்காது. ஆதலால் ஒரு சில வரலாறு களைமட்டும் கதைப் போக்கில் அதிகம் ஈடுபடாமல் அதில் உள்ள சிறப்புகளைமட்டும் பின்வரும் பகுதிகளில் காணலாம். நேரில் காணாமலே போற்றிய அந்தணர் திங்களுரில் வாழ்ந்த அப்பூதி என்ற அந்தணப் பெருமகனார் அப்பர் அடிகளை நேரே காணா விட்டாலும் அவரைப்பற்றிக் கேள்வியுற்று, அவரையே குருவாகக் கொண்டு தாம் வழங்கும் பொருள் அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்றே பெயரிட்டு வழங்கிவரலானார். வடிவுதாம் காணாராயினும், வாக்கின் வேந்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றைக் கேள்விப்பட்டு அவர்மாட்டு அடிமை பூண்டவர் அப்பூதியார். - நாவரசர் பெருமான், அப்பூதியார் வைத்த தண்ணிர்ப் பந்தலில், திருநாவுக்கரசர் தண்ணிர்ப் பந்தல் என்று எழுதியிருப்பதைக் கண்டு வியப்புறு கிறார். இந்த வியப்புக்கு ஒரு காரணமும் உண்டு. நாவுக்கரசர் என்பது இறைவனால் வாகீசருக்குக் கொடுக்கப்பட்ட காரணப் பெயர் ஆகும். அதனால் அப்பெயர் பெருமான் காலத்தில் அவரைத் தவிர யாரும் அறியாத பெயராகும். எனவே, அப்பெயர் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 223 புழக்கத்திலும் இல்லை. அதனால்தான் தண்ணிர்ப் பந்தலின் மேலே எழுதப்பெற்ற பெயரைக் கண்டு வியப்புற்றவராய், இதனை எழுதிய அப்பூதியாரைக் காண வேண்டும்’ என்று செல்கிறார். தம் பெருமை தாமறியா நாவரசர் பெருமான், இறைவனுக்கும் தமக்கும் மட்டுமே இப்பெயர் தெரியும். இதனைப் பிறர் அறிய வாய்ப்பில்லை என்று இதுவரை கருதியிருந்தார் ஆதலால், அப்பூதியாரைக் காண விரைகின்றார். அப்பரைக் கண்டவுடன் அந்த அந்தணச் சிகாமணி தம் வாயிலில் நிற்கும் சிவனடியார் தம் வாழ்வின் குறிக்கோளாகிய குரு என்று கருதவில்லை. அதற்கும் ஒரு காரணம் உண்டு. கல் மிதப்பில் கரை ஏறிய பெருமான், தம்முடைய வீட்டை நாடி வருதல் என்பது நினைக்க முடியாத ஒன்றாகும். எனவே தான், அப்பூதியார் இவரை வாக்கின் வேந்தர் என்று நினைக்கவே இல்லை. அதன்பிறகு நடந்ததைச் சேக்கிழார் அற்புதமாக அப்பூதி அடிகள் புராணத்தில் விவரிக்கின்றார். அப்பூதியாரைப் பார்த்துப் பெருமான் நீர் வைத்த தண்ணிர் பந்தலில் நூம்பேர் எழுதாதே, வேறொரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் சொல் என்று மிகச் சாதாரணமாகத்தான் கேட்டார். பிறர் யாரும் அறியாத பெயர் என்று பெருமான் நினைத்திருந்தமை யால்தான் வேறொரு பெயர் என்று கூறினார். 224 சேக்கிழார் தந்த செல்வம் $, ஆனால், தம் உயிரினும் மேலாக மதித்துப் போற்றும் நாவரசர் பெயரை வேறொரு பேர்’ என்று அலட்சியமாகக் கூறப்பட்டதைக் காதில் கேட்ட அந்தணர் நிலைகலங்கிவிட்டார். இதுவும் மனித இயல்புதான். நம்மால் போற்றி வழங்கப்படும் பொருளை அதற்குரிய மரியாதை தராமல் யாரேனும் பேசினால் நமக்கும் சினம் வருவது இயல்பே ஆகும். அப்பூதியாருக்குச் சினம் தோன்றுவதற்கு இதுவும் ஒர் காரணம். இதனை அடுத்து மற்றோர் காரணமும் உண்டு. வேறொரு பேர் என்று கூறியவர் வேற்றுச் சமயத்தாராகவோ இல்லறத்தாராகவோ விவரம் புரியாதவராகவோ இருந்து இவ்வாறு கூறியிருப்பின் அப்பூதியார் கோபம் இந்த அளவு வளர்ந்து இருக்காது. இதனெதிராக வந்தவர் சிவவேடத் தோடும் துறவிக் கோலத்துடனும் இருந்துகொண்டு இவ்வாறு கேட்டது பெருங்கொடுமை என்று நினைக்கின்றார் அப்பூதியார். சிவவேடத்துடன் நின்ற யாரும் நாவரசர் பெருமையை அறியாதிருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் அவர் இவ் வேடத்திற்குப் பொருத்தம் இல்லாதவர். அல்லது புறச் சமயத்தாராய் இருத்தல் வேண்டும். எனவே, அப்பூதியார் பின்வருமாறு பேசுகிறார், நின்ற மறையோர் கேளா, நிலைஅழிந்த சிந்தையராய் "நன்றுஅருளிச் செய்திலீர்! நாண்இல் அமண் - பதகருடன் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 225 ஒன்றிய மன்னவன் துட்சி திருத்தொண்டின் உறைப்பாலே வென்றவர்தம் திருப்பேரோ வேறுஒருபேர்?” என வெகுள்வார். (பெ. பு-1800) "பொங்குகடல் கல்மிதப்பில் போந்துஏறும் அவர்பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யார்உளரே! மங்கலம் ஆம் திருவேடத்துடன் நின்றுஇவ் வகை மொழிந்தீர்; எங்குஉறைவீர்? நீர்தாம் யார்? இயம்பும் என - - இயம்பினார். (பெ. பு-1802) இரண்டாவது பாடலில் எங்குறைவீர்? நீர் தான் யாம்? இயம்பும் என்று அப்பூதியார் பேசியது இயல்பான அவர் பண்பாட்டிற்கு ஒரளவு பொருந்தாததாக உள்ளது. பண்பாட்டின் உறை விடமாய் புலனழுக்கற்ற அந்தணாளராய் உள்ள அப்பூதியார் ஒரு சிவனடியாகப் பார்த்து இவ்வாறு பேசுவது முறையா? என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றல் கூடும். நாவரசர் பெருமானின் வடிவையும், முகபாவத்தையும் கண்ட யாரும் இப்படி பேசி இருக்க முடியாது. அப்பூதியார் பேசியது உண்மைதான். இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை ஒரே சொல்லால் விளக்கி விட்டார் சேக்கிழார். பெருமை அறிந்து கொள்ளாமல், 226 சேக்கிழார் தந்த செல்வம் சிவவேடம் தாங்கி எதிரே நிற்கின்றார் ஒருவர் என்பதைக் காணக்கான அப்பூதியாரின் சினம் மேலோங்கிவிட்டது. அதனால் தான் எங்கு உறைவிர்? மங்கலமாம் திருவேடத்துடன் நின்று இவ்வகை மொழிந்தீர், நீர் தாம் யார்? என்ற வினாக்களை எழுப்புகிறார். அதன்பிறகு நடந்தவை அனைவரும் அறிந்த நிகழ்ச்சிகளாகும். இந்நிகழ்ச்சியை மனக்கண் முன் கொண்டுவர வேண்டும். இருவர் எதிரெதிராக நிற்கின்றனர். ஒருவர் சிவனடியார் வேடத்தில் இடையில் கட்டிய ஒரே கந்தையுடன் காட்சி தருகிறார். அவரின் எதிரே பண்பாடுடைய அந்தணர் ஒருவர் இருக்கின்றார். அவர் எதிரே உள்ள அடியாரைப் பார்த்துத் தான் பேசுகிறார். கண்டவர் களையெல்லாம் கனியச் செய்யும் இச் சிவன் அடியார்களின் முகம் அப்பூதியாரை ஏன் மயக்க வில்லை? இவ் வினாவிற்கு விடையாக 'தின்னின் சிறந்தவை நின் நாமங்கள்’ என்றார் பிறரும். எனவே, திருநாவுக்கரசு என்ற பெயரில் தன்னை முழுவதுமாகப் பறிகொடுத்தவர் அப்பூதியார் ஆகலின் அந்நாமத்துக்கு உரியவர் எதிரே நிற்கும் பொழுதுகட அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இறைவனுடையவும் அவன் அருள் பெற்ற அடியார்களுடையவும் அவன் நாமங்கள், அவர்களை விட உயர்ந்தவை என்பது இந் நாட்டவர் கண்ட உண்மை. இக்கருத்தை சிவப் பிரகாச சுவாமி குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 227 கள் நால்வர் நான்மணிமாலையில் பின்வருமாறு பாடுகிறார், "உற்றான் அலன் தவம், தீயில் நின்றான் அலன் ஊண் புனலா அற்றான் அலன் திருநாவுக்கரசு எனும் ஓர் சொற்றான் எழுதியும் கூறியுமே என்றும் துன்பில் பதம் பெற்றான் ஒரு நம்பி அப்பூதி என்றும் பெருந்தகையே’ (நால்வர் நான்மணிமாலை) இப்பாடலின்படி பார்த்தால் ஒருவர் தவம் செய்ய வில்லை. பஞ்சாக்னி மத்தியில் நிற்கவில்லை, உணவு, நீர் என்பவற்றை அருந்தாமல் விடவில்லை. இவை ஒன்றையும் செய்யாமல் திருநாவுக்கரசு என்ற பெயரை எப்பொழுதும் கூறியும், எல்லா இடங்களிலும் எழுதியும், யாரும் பெறுதற்கரிய வீடு பேற்றைப் பெற்றார் என்றால் அவர்தான் அப்பூதி என்னும் பெருந்தகையார் ஆவார். வீடு பேற்றை அருளக் கூடிய திருநாவுக்கரசு என்ற பெயரை வேறொரு பேர் என்று ஒருவர் கூறினால் சினம் வராமல் இருக்குமா? அப்படிக் கூறியவர் புறச் சமயத்தாராக இருப்பின் இந்த மந்திரத்தின் அருமைப் பாட்டை அறியாதவர் என்று நினைத்து அப்பூதியார் சிரித்துவிட்டுப் போயிருப்பார். ஆனால், இப்படிச் சொல்பவர் சிவவேடம் புனைந்து நின்று கூறினார்; ஆதலால் தான், இப்படியும் ஒருவர் இருப்பாரா என்ற எண்ணத்தில் அப்பூதியார் கோபம் 228 சேக்கிழார் தந்த செல்வம் அடைகிறார். மேலும் நாவரசரின் பெருமையை 'அங்கணர் தம் புவனத்தில் அறியாதவர் யாரு மில்லை என்ற முடிவுடன் இருப்பவர் ஆதலின் அதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் சிவவேடத்துடன் எதிரே நிற்பவரைப் பார்த்து, நீர் எங்கே வாழ்கின்றீர், உம்முடைய பெயர் என்ன என்று கேட்பதில் வியப்பொன்றுமில்லை. நாம மகிமையின் பெருமை இதுவாகும். எண்பதுக்கு மேலும் தேவையா? இப் பெருமானுடைய புராணத்தில் கடைசிப் பகுதியில் வரும் ஒரு நிகழ்ச்சி சிலருடைய மனத்தில் ஒர் ஐயத்தைத் தோற்றுவிக்கின்றது என்பது உண்மை தான். நாவரசர் பெருமானின் வயது எண்பதையும் கடந்த நிலையில், வழக்கம்போல் திருப்புகலூரில் உழவாரப் பணி செய்து கொண்டிருக்கும் நாட்களில், ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியாகும் இது. பெருமான் புல்லைச்செதுக்கும் உழவாரப் படையில் பொன்னும், மணியும் வைரங்களும் குப்பல் குப்பலாக வருகின்றன. அவற்றை ஏறெடுத்தும் பாராமல் பெருமான் கூட்டி வாரி அருகிலிருந்த பள்ளத்தில் கொட்டிவிட்டார். இதே நேரத்தில், தேவ மாதர் ஆகிய ரம்பை, ஊர்வசி முதலானவர்கள் மானுட வேடம் தாங்கிப் பெருமான் எதிரே நடனம் ஆடுகின்றனர். கூத்தனின் குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 229 நடனத்தில் நாள்முழுதும் லயித்திருக்கும் பெருமானின் கண்களில், மனத்தில் எதிரே நாட்டியம் ஆடுபவர்கள் வடிவமோ நாட்டியமோ தென்பட வில்லை. இங்குக் கூறப்பட்ட கருத்துக் களைத், தெய்வச் சேக்கிழார், நாவரசர் புராணத்தில் 417 முதல் 422 வரை உள்ள பாடல்களில் மிக விரிவாகப் பாடுகிறார். இன்று இதனைக் கற்பவர்கள் எண்பத்தொரு வயது நிரம்பிய ஒருவர் இவற்றில் ஈடுபடவில்லை என்று கூறுவதில் என்ன சிறப்பு இருக்கிறது. என்று நினைத்துக் கேட்கவும் செய்கின்றனர். இதைப் புரிந்துகொள்ளச் சேக்கிழாரைச் சற்று ஆழமாகக் கற்க வேண்டும். தெய்வச் சேக்கிழார் கற்காத கலையே இல்லை. அதிலும் மனித மனத்தின் இயல்புகளை-புறமனம், அகமணம், ஆழ்மனம் ஆகியவற்றின் இயல்புகளைஇக்கால மனவியலார் ஆய்ந்துள்ளதைவிட அதிகமாக -oilfigeira TTY. gpubcor:#36) (deeper consciousness) இறையுணர்வு நிறைந்திருந்தாலும், பொறி, புலன் களோடு கலந்து பணிபுரியும் புறமனம் (External mind) ஒரோ வழி கட்டுப்பாட்டை மீறி அலைவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இவ் உண்மையை நன்கு அறிந்திருந்த வள்ளுவப் பேராசான் துறவு என்ற அதிகாரத்தில் அகப், புற துறவுபற்றிப் பத்துக் குறள்கள் பாடிய பின்னர் மறுபடியும் அவா அறுத்தல் என்ற ஓர் அதிகாரத்தைப் பாடுகிறார். எத்துணை யளவு துறந்தார்க்கும் ஒரோவழி புலன்கள்மேல் பற்றுச் செல்லும். அது தவிர்க்க முடியாதது. எனவே, முழுத் துறவு பூண்டவர்களும் வயது வேறுபாடின்றி, இப்பொறி புலன்களால் அவ்வப்பொழுது ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தவே, ‘துறவு’ என்ற அதிகாரத்திற்குப் பின், ‘அவா அறுத்தல்’ என்ற அதிகாரம் வைக்கப்பட்டு உள்ளது. மனித மனத்தின் திருகல்களில் இது முக்கியமானது என்பதை நன்கு அறிந்திருந்த தெய்வச் சேக்கிழார், இந்த இரண்டு அதிகாரங்களுக்கும் விளக்கம் தருபவர் போல, நாவரசர் புராணத்தில் இந்த நிகழ்ச்சியை வைத்துக் காட்டுகிறார். மனத் திருகல்களில் மாற்றம் உண்டாக வயது குறுக்கே நிற்பதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே, இந்நிகழ்ச்சியைப் பாடிய தெய்வச் சேக்கிழாரின் சிறப்பை அறிய முடியும்.
நாவரசர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், அவற்றை அவர் எதிர் கொண்ட விதம், பணி செய்வதே. குறிக்கோள் என்ற கருத்துடன் வாழ்ந்த அவர் வாழ்க்கை முழுவதும் இக்காலத்துக்கும், இனி எதிர்காலத்துக்கும், எல்லாச் சமுதாயங்களுக்கும் தேவையான படிப்பினையாகும். நாவரசர், திலகவதியார் வாழ்க்கை பற்றிய குறிப்புக்கள் சேக்கிழார் தந்த செல்வத்தின் ஐந்தாம் பகுதியாகும்.
※※※※※