சேக்கிழார் தந்த செல்வம்/சுந்தரர்

4. சுந்தரர்

திருத்தொண்டத் தொகையில் இல்லாததைப் பாடியது ஏன்?

பெரிய புராணக் காப்பியம், சுந்தரர் வரலாற்றுடன் தொடங்குகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய திருத்தொண்டத் தொகையில் காணப்படாத வரலாறு இது. ஏனென்றால், அப்பதிகத்தைப் பாடியவரே இவர்தான். அத்தனை பேருக்கும் அடியேன் என்று பாடிய பெருந்தகை இவர்தான். இவருடைய வரலாற்றைத் தொடங்கின காரணத்தால், பலரும் இந்தக் காப்பியத் தலைவர் இவரே என்று கருதி விட்டனர். சுந்தரர் காப்பியத் தலைவர் அல்லர்; தொண்டுதான் காப்பியத் தலைமை இடத்தைப் பெற்றுள்ளது என்று முன்னரே குறிக்கப் பெற்றுள்ளது. அப்படியானால், திருத்தொண்டத் தொகை பட்டியலில் உள்ள அடியவர்கள் பற்றி பாடி விட்டால், சுந்தரருக்கு அங்கு இடம் இல்லாமல் போகும். அது மட்டுமன்று. இந்தத் திருத்தொண்டத் தொகை, யாரால், எப்பொழுது, எதற்குப் பாடப் பெற்றது என்ற வினாக்களுக்கும் விடை இல்லாமல் போய் விடும், சுந்தரர் வரலாற்றைச் சொல்லிக் கொண்டு வருகிற பொழுது, இன்ன இடத்தில், இன்ன காரணத்திற்காகத் திருத்தொண்டத் தொகை பாடினார் என்று கூறுவது பொருத்தமாக 104 சேக்கிழார் தந்த செல்வம் இருக்கும். அதன்பிறகு, அவர்பாடிய முறையிலேயே ஏனைய வரலாறுகளைப் பாடுவது பொருத்தமாக இருக்கும். இந்தக் காரணம் போக, சுந்தரர் வரலாற்றைச் சேக்கிழார் முதலில் பாடியதற்கு மற்றொரு முக்கியக் காரணம் உண்டு. இந்த உலகம் உய்வதற்காக அடியார்களின் பெருமையை முதன் முதலாக வரிசைப்படுத்திப் பாடியவர் சுந்தரர் அல்லரோ? இத்தகைய பேருபகாரம் செய்த அப்பெருமானுக்கு நன்றி பாராட்டும் வகையில் அவர் வரலாற்றை முதலில் சொல்லத் தொடங்குகிறார். அந்தப் பெருமானை வணங்குவதற்கு இந்தப் பிறவி பேருதவி செய்வதால் தம்முடைய பிறப்புக்கே ஒரு வணக்கத்தைச் செலுத்துகிறார் சேக்கிழார் நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாசமலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்' - (பெ. பு:- 270) என்று பாடுவதால், சுந்தரர்மாட்டுச் சேக்கிழார் கொண்டிருந்த பக்தியின் ஆழம் விளங்கும். ஏனைய அடியார்களிடம் கொண்டிருந்த அன்பைவிடச் சுந்தரர் 105 சுந்தரரிடம் அன்பு காட்டுவதற்கு, தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இடைக்காலத் தமிழர் தம் வாழ்க்கையில் மறந்துபோன குறிக்கோள், இறை உணர்வு, தொண்டு மனப்பான்மை என்ற மூன்றுக்கும் தம் வாழ்நாளையே செலவிட்ட அறுபத்து மூன்று தமிழ்மக்களின் வாழ்க்கை முறையைப், பின்னர் வந்த தமிழ் மக்கள் அறிந்துகொள்வதற்கு அவர்கள் வரலாற்றைச் சுருக்கிக் கூறிய திருத்தொண்டத்தொகை ஒரு மாபெரும் புதையலாகும். இந்தப் புதையலை வெளிக்கொணர்ந்த பெருமை சுந்தரர்க்கே உரியது ஆதலால், சுந்தரர்மாட்டு எல்லையற்ற பக்தி கொண்டதுடன் அவர் வராலற்றையே முதலில் துவங்குகிறார். தடுத்து ஆட்கொண்ட கதை திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூர் என்ற ஊரில் புகழனார், இசைஞானியார் என்ற தம்பதியருக்கு மகவாய் அவதரித்தவர், சுந்தரர் என்று நம்மால் அழைக்கப்படும் நம்பி ஆரூரர் ஆவார். சிவவேதியர் மரபைச் சேர்ந்த இவர், சிறுதேர் உருட்டி விளையாடும் இளம் பருவத்திலேயே அந்நாட்டுச் சிற்றரசர் நரசிங்க முனையரையன் என்பவனால் எடுத்து வளர்க்கப்பெற்றார். ஆதிசைவ மரபில் பிறந்த ஒருவரை, வேளாளனாகிய நரசிங்க முனையரையன் எடுத்து, மகனாக வளர்த்தான் என்கிறது பெரியபுராணம். இதைக் கூறவந்த சேக்கிழார், 106 சேக்கிழார் தந்த செல்வம் SAASAASAAASதங்கள் அரசு இளங்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார். (பெ. பு-15). என்று பாடுவதால், நம்பி ஆரூரர் வாழ்க்கை, தொடங்கும்பொழுதே ஒரு புரட்சியைத் தொடங்கு கிறது என்பதை அறியமுடிகிறது. சிவ வேதியர் குலத்திற்கு ஏற்ற பழக்க வழக்கங்களையும், நம்பி ஆரூரர் திருமணக்காலம்வரை விடவில்லை என்று தெரிகிறது. திருமணப் பருவம் வந்தவுடன் சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளை, நம்பி ஆரூரருக்கு மணம் முடிக்க முடிவு செய்து, அதன்படியே திருமணப் பந்தலில் அனைவரும் கூடினர். வேதியர்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தில், திருமணச் சடங்கு தொடங்குகின்ற அந்த வேளையில், ஒரு கிழட்டு அந்தணன் உள்ளே நுழைந்தான். மன்னவர் திருவும், வைதிகத் திருவும் நிறைந்துள்ள மணப்பந்தலில், "பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக் கொண்டதுஓர் சழங்கல்உடை ஆர்ந்து அழகு கொள்ள வெண்துகிலுடன் குசை முடிந்துவிடு வேணுத் தண்டு ஒருகை கொண்டுகழல் தள்ளு நடைகொள்ள' - (பெ. பு-177) சுந்தரர் 107 இந்தக் கிழவனின் உடை முதலியவை, அந்தத் திருமணக் கூட்டத்தில் முற்றிலும் பொருத்தமில்லாமல் அமைந்திருந்தது என்றாலும், வயது முதிர்ந்தவர்களைப் பாராட்டும் பண்பு தமிழ்நாட்டிற்கு உண்டாதலால் அனைவரும் அவனை வரவேற்றனர். இத்தனை வரவேற்புகளுக்கிடையேயும், கிழவன் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக, ஒரு சினம் குடி கொண்டது போன்று இருந்தது. இவர்கள் வரவேற்பைச் சட்டை செய்யாத கிழவன், நேரே மணமகனிடம் சென்றான். மணமகனைப் பார்த்து, - * * - - - - - - * * * * * "என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான் முன்உடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி' என்றான் (பெ. பு-18) கிழவன் இவ்வாறு கூறவும், நம்பி ஆரூரர், "உற்றது ஓர் வழக்கு என் இடை நீ உடையது உண்டேல், மற்று அது முடித்து அலது யான் வதுவை செய்யேன்” (பெபு-182) என்று கூறிவிட்டார். எந்த நேரத்தில் நம்பி ஆரூரர் இவ்வாறு கூறினாரோ தெரியவில்லை, கல்யாணப் பந்தலில் வழக்கு முடியவும் இல்லை; அந்தத் திருமணம் நடைபெறவுமில்லை. 108 சேக்கிழார் தந்த செல்வம் அதன்பிறகு, கிழவன் ஒலையைப் படித்ததும் நம்பி ஆரூரர் தனக்கு அடிமை என்று கூறியதும், அதுகேட்டுச் சினந்த நம்பி ஆரூரர், "ஆசுஇல் அந்தணர்கள் வேறுஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல், பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?' என்றார் (பெ. பு-86) அதன்பிறகு, திருவெண்ணெய் நல்லூர் பஞ்சாயத்து நீதிமன்றத்தில் இவ்வழக்கைக் கொண்டு சென்றதும், அவர்கள் வழக்கை நன்கு விசாரித்து விட்டு, "நம்பி ஆரூரர்! தோற்றீர்” என்று முடிவு கூறியதும், பெரியபுராணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது. சேக்கிழாரின் சட்ட நுணுக்கம் இப்பகுதியில், நீதிமன்றத்தார் ஆட்சியில், ஆவணத்தில், அன்றி மற்றார் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்று, கிழவேதியனைக் கேட்கிறார்கள். ஓர் அந்தணன் மற்றோர் அந்தணனுக்கு அடிமை யாதல் மரபில்லை. அது இல்லாதபொழுது ஆவணம் என்று சொல்லப்படும், எழுதப்பட்ட சான்றுகள் பேசப்பெறுகின்றன. அதைக் காட்டியே பழைய மன்றாடியாகிய கிழவன், தன் வழக்கை வெல்கிறான். இப்பகுதி, சோழப் பேரரசின் சுந்தரர் 109 தலைமை அமைச்சருக்கு இருந்த சட்ட ஞானத்தை எடுத்துக் காட்டச் சிறந்த சான்றாகும். இது அல்லாமல், இவ்வழக்கில் மற்றோர் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார் தலைமை அமைச்சர். நீதித் துறையின் நேர்மை, முறைமை முன்பின் காணப்பெறாத இவ்வழக்கில் வாதியாக வந்த இக்கிழவன், அவ்வூராரால் முன்பின் அறியவோ, காணவோபடாதவன். பிரதிவாதியாகிய நம்பி ஆரூரர் உள்ளூர்க்காரர்; பல தலைமுறைகளாக நீதி மன்றத்தாருக்கு அறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்தவர். போதாதற்கு அந்நாட்டுச் சிற்றரசனால் மகன்மை கொள்ளப்பெற்றவர். இவை எல்லா வற்றையும்விட, வழக்கோ சமுதாய மரபிற்கு முற்றிலும் மாறுபட்டது. அப்படி இருந்தும், அந்த ஒலையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்தார் வழக்கு முடிகின்றவரை வாதியை யார் என்று கேட்டுக் கொள்ளவேயில்லை. அந்தக் கிழவன் அதே ஊர்க்காரன் என்று அந்த ஒலையில் எழுதியிருந்தும், நீதிமன்றத்தார் அவனை யார், எவன் என்று கேட்டு அறிய முற்படவில்லை. சட்டத்தின் எதிரே முன்பின் தெரியாத வாதியும், அரசரால் வளர்க்கப்பெற்ற உள்ளூர்க்காரரான பிரதிவாதியும் ஒன்றாகவே கருதப்பட்டனர். பிரதிவாதி வேண்டியவர் என்பதற் காகவோ வாதி இன்றோ நாளையோ முடியப்போகும் கிழவன் என்றோ பிரதிவாதி இளைஞன் என்றோ 110 சேக்கிழார் தந்த செல்வம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. வாதிக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறிய பிறகுதான் நீதிபதிகள் என்ற முறையில் இல்லாமல், சாதாரண மனிதர்கள் என்ற முறையில் "பெரியவரே! தாங்கள் காட்டிய ஒலையில் தாங்கள் இந்த ஊர்க்காரர் என்று குறிக்கப் பெற்றிருந்ததே, இத்தனை ஆண்டுகளாக இவ்வூரில் வாழும் நாங்கள் ஒருமுறைகடத் தங்களைக் கண்டதில்லையே! தாங்கள் எங்கு உறைகின்றீர்கள்? தங்கள் வீடு, மனை வாழ்க்கை என்பதை அறிய ஆசைப்படுகிறோம்’ என்றார்கள். அக்காலத்து நீதிபதிகள் தமிழகத்தில் இவ்வளவு துய்மை உடையவர்களாகவும் நல ஒழுக்கம், நற்பண்பு, விருப்பு, வெறுப்பு என்பவை இல்லாத நடுநிலையாளர்களாகவும் இருந்தார்கள் என்று நினைக்கும்பொழுது, இன்று வாழும் நாம் ஒரு துயரப் பெருமூச்சு விடுவது தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. பழைய மன்றாடியாகிய கிழவன் தன் வீட்டைக் காட்டுவதாகக் கூறி, நம்பி ஆரூரர் உள்பட அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு திருவருள்துறை என்று பெயர் பெற்றிருந்த அவ்வூர்க் கோயிலினுள் சென்றான். வீட்டைக் காட்டுவதாகத் தங்களை அழைத்துவந்த கிழவன், கோயிலுனுள் சென்றதைக் கண்டு திகைத்துப்போனார்கள் என்பதைக் கூறவந்த கவிஞர் பெருமான், . சுந்தரர் 11 திரு அருள் துறையே புக்கார், கண்டிலர் திகைத்து நின்றார்.' (பெ. பு-21) என்று கூறுகிறார். சொற்றமிழ் இதன்பிறகு, இறைக்காட்சியும் இறையருளும் பெற்ற நம்பி ஆரூரர், அப்பெருமானின் கட்டளைப் படி சொற்றமிழ் பாடத் தொடங்கினார். இதனைக் கூறவந்த சேக்கிழார், சொற்றமிழ் பாடுக என்றான் துமறை பாடும் வாயார். இத்தொடரில் உள்ள சொல்+தமிழ் என்ற சொற்களுக்கு, நிறைந்த சொற்களையுடைய தமிழ் என்றே பலரும் பொருள் கண்டுள்ளனர். இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள 'சொல் என்பதற்கு ஒப்பற்ற ஒரு சொல்லையுடைய தமிழ்’ என்று பொருள் கூறி, அதற்குப் பின்வரும் விளக்கத்தையும் தந்துள்ளார் பேராசிரியர் கவிக்கோ. அப்துல் ரகுமான் அவர்கள். இறைவனைக் குறிக்க 'அவன்’ என்ற ஆண்பால் சொல்லையே எல்லா மொழிகளும் பயன்படுத்துகின்றன. சாக்தர்கள், இறைவனைத் தாய்வடிவாகக் கொண்டு அவள் என்ற சொல்லால் குறிக்கின்றனர். இவ்விருவர் கூற்றிலும் ஒரு சிறு குறை ஏற்படுகிறது. அவன்’ என்று கூறும்பொழுது இறைவனின் பெண்மை விடப்படுகிறது. அவள்” என்று கூறும்பொழுது 112 சேக்கிழார் தந்த செல்வம் ஆண்மை விடப்படுகிறது. இறைவனோ ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; ஆணாகவும் உள்ளான்; பெண்ணாகவும் உள்ளான். அப்படியுள்ள ஒரு பொருளைக் குறிக்கப் பிற மொழிகள் கூறும் 'அவன்’ என்ற சொல்லோ, அவள்” என்ற சொல்லோ பயன்படாது. ஆண், பெண் இரண்டையும் சேர்த்து ஒன்றாகவே குறிக்க ஒரு சொல் வேண்டுமானால், அவர் என்ற சொல் தமிழ் மொழி ஒன்றில்தான் உள்ளது. எனவே, அவர் என்ற ஒப்பற்ற சொல்லை உடைய தமிழ்மொழியைக் குறிக்கத்தான், சொற்றமிழ்’ என்று தெய்வப்புலவர் சேக்கிழார் பாடினார் என்ற இந்த அழகிய விளக்கத்தைத் தந்த பேராசிரியர் கவிக்கோ அவர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். இதனை குமரகுருபரர் 17ஆம் நூற்றாண்டிலேயே சிதம்பரச் செய்யுட் கோவை என்ற தம்முடைய நூலில் பின்வரும் பாடலில் கூறியுள்ளமை அறியத்தக்கது. அப்பாடல் வருமாறு. "அருவருக்கும் உலகவாழ்வு அடங்க நீத்தோர்க்கு ஆனந்தப் பெருவாழ்வாம் ஆடல் காட்ட மருஅருக்கன் மதிவளிவான் யமானன் தீநீர் மண்ணெனும்எண் வகையுறுப்பின் வடிவுகொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன்றால் அவ் உருவைஇஃது ஒருத்தன்என்கோ ஒத்தினன்கோ இருவருக்கும் உரித்தா ஒருவர் என்றுஓர் இயற்சொல் இலதெனின் யான்மற்றென் . . . . செய்கேனே' (சிதம்பரச் செய்யுட் கோவை-54) சுந்தரர் 113 இளைஞர்க்கு ஒரு செல்வம் பெரியபுராண வரலாறுகளை வரிசைப்படுத்திப் பேசுவது இந்நூலின் நோக்கம் அன்று. பல்வேறு வரலாறுகளில் காணப்பெறும் நிகழ்ச்சிகளில் இன்றைய சமுதாயத்திற்கு, அச்சமுதாயம் உயர் வதற்குத் தேவையான பகுதிகள் இருப்பின், அவற்றுள் சிலவற்றை எடுத்துக்காட்டுவதே இந்நூலின் நோக்கம். ஆதலால், அடியவர்களின் வரலாறுகள் வரிசையாக இங்கு இடம் பெறா. சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்று நம்மால் அழைக்கப் பெறும் பெருமகனாராகிய நம்பி ஆரூரர், ஒவ்வொரு தலமாக வணங்கிக்கொண்டு திருவதிகை வீரட்டானம் வருகிறார். அந்நிலையில், தமக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த நாவுக்கரசர் பெருமானின் நினைவு வருகிறது. அப்பெருமான், முதன்முதலாக இறை அருளைப் பெற்று, குறிக்கோள் இலாத தமிழ்ச் சமுதாயத்தை கைதுக்கிவிடப் புறப்பட்ட முதலாவது இடம் திருவதிகை வீரட்டானம் ஆகும். அவ்வூரிலும், அத் திருக் கோயிலிலும்தான் நாவரசர் பெருமான் உழவாரத் தொண்டு செய்தார். இறையருளைப் பரிபூரணமாகப் பெற்ற மகான்கள்கூடத் தாங்கள் வாழும் இச்சமுதாயத்தையும் இம்மக்களையும் மறந்ததில்லை. அப்பர் பெருமானைப்பற்றி நினைவுகூர்ந்த சுந்தரர் என்ன செய்தார் என்பதை தெய்வப்புலவர் பின்வரும் பாடலில் குறிக்கின்றார், 114 சேக்கிழார் தந்த செல்வம் "உடைய அரசு உலகு ஏத்தும் உழவாரப் படை ஆளி விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்புபெரும் பதியை மிதித்து அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அந்நகரில் புகுதாதே மடைவளர் தண் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார்.” - w (பெ. பு-229) சிவவேதியராகப் பிறந்தவரும் அரசற்குரிய சிறப்புக்களோடு வாழ்ந்தவரும் இறைவனே மானுட வடிவில் வந்து அவனாலேயே ஆட்கொள்ளப் பெற்றவரும் அவனாலேயே "தோழமையாக உனக்கு நம்மைத் தந்தோம்’ என்று சிறப்புச் செய்யப் பெற்றவரும் நூற்றுக்கணக்கான அன்பர்கள் புடைசூழ வருபவரும் மணப்பருவத்தில் உள்ள கட்டிளங் காளையும் ஆவார் நம்பி ஆரூரர். இந்த நிலையில் இருநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒருவரைப்பற்றி நினைத்து, அவர் கைத்தொண்டு செய்த இடத்தில் நான் காலால் மிதித்து நடக்க மாட்டேன்’ என்ற முடிவுக்கு வந்துள்ளார் அவர் பதவி, செல்வம் ஆகிய இரண்டும் அப்பெருமானுடைய மனத்தில், பண்பாட்டில் எவ்விதத் தாக்கமும் விளைவிக்க வில்லை என்பதை அறிய முடிகிறது. இளைஞர் சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு பண்பாடாகும் இது. இன்றைய சமுதாயத்திற்குச் சுந்தரர் 115 சேக்கிழார் தந்த செல்வத்தின் முதல் பகுதியாகும் இது. இளைஞர்க்கு இன்னொரு செல்வம் இதனை அடுத்து, ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்தவட மடத்தில் உடன் வந்த அன்பர்கள் ஒவ்வோர் இடத்தில் படுத்துறங்க, நம்பி ஆரூரர் ஓர் இடத்தில் படுத்துறங்குகிறார். நடுச் சாமத்தில் யாரோ ஒருவருடைய பாதம் அவர் தலையில் படுகிறது. தன்தலையில் கால் படுமாறு நீட்டிய ஒருவரை, ஒரு சிறிதும் சினம் கொள்ளாமல், 'ஐயா! தாங்கள் என் தலையில் கால் படுமாறு படுத்துள்ளீர்கள்’ என்று அமைதியாகச் சொல்ல, அக்காலுக்குரியவர் "திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண்” (பெபு-232 என்று பதிலளித்தார். நம்பி ஆரூரர் வேறோர் இடத்தில் படுத்தார். அங்கும் இதே நிலை; இதே பதில், பலமுறை இடம் மாறிப் படுத்தும், காலை நீட்டிய கிழவன், மாற்றிக்கூட விடை தராமல் அதே விடையைத் தந்துகொண்டிருந்தான். நாடகம் பலமுறை நடந்தும் ஒரு சிறிதும் சினம் கொள்ளாத நம்பி ஆருரர், ஒர் உண்மை உணர்ந்தார். இக்காலுக்குரிய கிழவன் திசை அறியாமல் இதனைச் செய்யவில்லை. வேண்டுமென்றே செய்கின்றான் என்பதனை நன்குணர்ந்தார் நம்பி ஆரூரர். அப்பொழுதும், தம் பண்பாட்டில் ஒரு கடுகளவும் குறையாமல், - 116 சேக்கிழார் தந்த செல்வம் 'இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார்?" (பெயு-233) என்று வினவ, "கங்கைசடைக் கரந்தபிரான் 'அறிந்திலையோ? " எனக் கரந்தான்.” (பெ. பு-233) என இறைவன் கூறி மறைந்தான். திடுக்கிட்டு எழுந்த நம்பி ஆரூரர் தம்முடைய எசமானனை அறியாத அடிமைகளும் இருக்கின்றார்களே என்ற கருத்தில், தம்மானை அறியாத சாதியார் உளரே (பெ.பு.-234) என்ற பதிகத்தைப் பாடி மனம் உருகுகின்றார். இளங்குமரன் ஒருவன், தன்னைச் சுற்றிப் பலர் புடைசூழ வருகிறான். இரவு நேரமாதலின், ஒரு பொது இடத்தில் தங்கி உறங்குகிறான். யாரோ முன்பின தெரியாத ஒரு கிழவன் பலமுறை அவ் இளைஞன் தலையில் காலால் மிதிக்கிறான். இந்த ஒரு சூழ்நிலையை நினைத்துப்பார்த்தால், இளைஞன் கோபம் கொண்டிருந்தாலோ, அக்கிழவனைப் புடைத் திருந்தாலோ அதில் தவறில்லை என்றே தோன்றும். பலமுறை மிதித்த பிறகும், "மிதித்த நீ யாரையா?” என்று வணங்கிய வாயினராக நம்பி ஆரூரர் கேட்கிறார். நுணங்கிய கேள்வினுக்கல்லால் இத்தகைய வணங்கிய வாய் அமைதல் அறிது. இந்நிகிழ்ச்சியும் சுந்தரர் 117 இன்றைய சமுதாய இளைஞர்கட்கு சேக்கிழார் உணர்த்தும் பாடமும் சேக்கிழார் தந்த செல்வத்தின் இரண்டாவது பகுதியாகும். மேலும் ஒரு செல்வம் திருநாவுக்கரசர் கைத்தொண்டு செய்த பதியை, காலால் மிதிப்பது தவறு என்ற எண்ணம் நம்பி ஆரூரருக்கு எப்படி வந்தது . அடுத்தபடியாகத் திருஞானசம்பந்தப் பெருமான் அவதாரம் செய்த சீர்காழிப் பதியையும் காலால் மிதிப்பது சரியில்லை என்று ஊரைச் சுற்றிக்கொண்டு போனார் சுந்தரர். இதனைக் கூறவந்த சேக்கிழார், பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி, உள்ளும் நான் மிதியேன்” (பெ.பு.258) என்று ஊர் எல்லைப் புறம் வலம்வந்து போனார் என்று கூறுகிறார். இந்த எண்ணம் சுந்தரருக்கு எவ்வாறு வந்தது? இதற்குக் காரணமாக இருந்தவர் காழிப்பிள்ளையாரே ஆவார். இனி, இவரால் போற்றப்பெறும் திருஞானசம்பந்தர் என்ன செய்தார்? பல தலங்களையும் வணங்கி வரும் 'தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர்' திருவாலங்காட்டுக்கு வருகிறார். அப் பெருமானுக்கு மூன்று நூற்றாண்டுகள் முற்பட்டு இறைவனாலேயே 'அம்மையே என்று அழைக்கப்பெற்ற காரைக்கால் அம்மையார் பேய் வடிவுடன் கயிலையிலிருந்து தலையால் நடந்து, ஆலங்காட்டு ஐயனிடம் வந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. தம் தந்தையாகிய 118 சேக்கிழார் தந்த செல்வம் சிவபெருமான், அம்மையே! என்று அழைத்ததால், காழிப்பிள்ளையாருக்குக் காரைக்கால் அம்மையார் பாட்டிமுறை ஆகிறார். எனவே, புகலிவேந்தர் என்ன செய்தார் என்று கூறவந்த சேக்கிழார், 'இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண ஏழ் உலகும் போற்றிசைப்ப எம்மை ஆளும் அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங்காடு ஆம் - (பெயு-291) என்று பாடுகிறார். எத்துணைப் பெரியவர்களாயினும் - இறைவன் அருளை முழுவதுமாகப் பெற்றவர்களாயினும் - இப் பெருமக்கள் தமக்கு முன்னர் வாழ்ந்த அடியவர்களை மதித்துப் போற்றி நடந்தார்கள். காழிப்பிள்ளையார், அம்மையாரை மதித்து நடந்தார்; நாவரசர், காழிப் பிள்ளையாரை மதித்து நடந்தார்; சுந்தரர், நாவரசரை மதித்து நடந்தார். இன்றைய சமுதாயம் ஓங்க வேண்டுமேயானால் நம் முன்னோராகிய இத் தமிழ்ப் பெருமக்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் அறிந்துகொண்டு, முன்னோருக்கு மதிப்புத் தந்து வாழ்ந்தால்தான் நமக்குப் பின்னே வருபவர்கள் நம்மை மதித்துப் போற்றுவார்கள் என்ற இந்த அறிவுரை, சேக்கிழார் தந்த செல்வத்தின் மூன்றாவது பகுதியாகும். - சுந்தரர் 19 தில்லைக் காட்சி : அனுபவ விளக்கம் நம்பி ஆரூரரின் தல வழிபாடுகளைப்பற்றிக் கூறவரும் சேக்கிழார், அவர் தில்லைக்குச் சென்று கூத்தனை வழிபட்டதைக் கூறவருகிறார். இப் பாடல்களை இயற்றிய சேக்கிழார் பெருமானும், அதே தில்லையில் கூத்தனின் எதிரே நின்று வழிபடும் பொழுது நான்கு நூற்றாண்டுகள் முற்பட்டு அவருடைய கற்பனை பறக்கிறது. தாம் நிற்கும் அதே இடத்தில் கூத்தனின் திருமுன்னர்ச், சுந்தரமூர்த்திகள் நின்ற காட்சியையும் அவர் வழிபட்ட முறையையும் கற்பனையில் காண வேண்டும் என்று கவிஞர்பிரான் நினைத்திருக்க வேண்டும். கூத்தன் அவ்விருப்பத்தை நிறைவேற்றினான். சேக்கிழார் நான்கு நூற்றாண்டுகள் முன்னே சென்று ஒரு காட்சியைக் காணுகிறார். மணவாளக் கோலத்துடன் நம்பி ஆரூரர் கூத்தனின் எதிரே நிற்பதைக் காண்கிறார். ஆரூரரின் கண்கள் திறந்துதான் உள்ளன. கண்ணில் இருந்து அருவி போல் நீர் பாய்கிறது. கூத்தனின் திருநடனத்தில் ஆரூரர் கண்கள் நிலைபெற்றவுடன் அவருடைய ஐந்து பொறிகளில், கண்கள் தவிர ஏனைய நான்கும் செயல் இழந்துவிட்டன. அவற்றை அடுத்து நிற்கும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கில் சித்தமும், மனமும் கண்கள்மூலம் கண்ட காட்சியில் ஒருங்கிணைந்து விட்டன. எனவே, நான்கு கரணங்களில் சித்தமும், மனமும் கூத்தனின் ஆடல் அழகில் ஒரே நிலையில் 120 சேக்கிழார் தந்த செல்வம் நின்றுவிட்டதால் ஏனைய கரணங்கள் செயலிழந்து விட்டன. அந்தக்கரணங்கள் நான்கும் பொறிகளுடன் மாறுபட்ட பல்வேறு துறைகளில் ஈடுபடுவதற்கு மூலமாக இருப்பவை முக்குணங்களாகும். தாமசம், இராஜசம் என்ற இரு குணங்களின் வழிப்பட்ட பொறிகள், மனம், சித்தம் என்பவற்றோடு ஒருங்கிணையாமல் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தொழிலில் ஈடுபடுகின்றன. மூன்றாவதாக உள்ள சாத்துவிக குணத்தில் இவை லயிக்கும் பொழுது, மேலே கண்ட பொறிகள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்றுவிட்டன. வேறு வகையாகக் கூறவேண்டுமானால், நம்பி ஆரூரரும் முதன்முதலில் கண்கள் என்ற பொறி வழியாகத்தான் கூத்தன் திருநடனத்தைக் காணத் தொடங்கினார். ஒரு வினாடியில் திடீரென்று ஒர் அதிசயம் நடந்துவிட்டது. பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் இரும்புத் துகள்கள், வலுவான காந்தம் எதிர்பட்டபோது ஓடிவந்து ஒரே நேர்க்கோட்டில் அந்தக் காந்தத்தின் எதிரே நின்று விடுவதைப் போல, இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஆரூரரின் பொறிகள், அந்தக்கரணங்கள், முக் குணங்கள் ஆகிய இரும்புத் துகள்கள் கூத்தப் பெருமானின் திருக்கடைக்கண் பார்வையாகிய காந்தம் பட்ட அதே வினாடியில், இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து, அவனருளில் மூழ்கத் தொடங்கி சுந்தரர் 121 விட்டன. அதே வினாடியில் ஆரூரரிடம் இதுவரை காணப்படாத பேரின்ப உணர்ச்சி பொங்கத் தொடங்கியது. கூத்தனின் திருநயனம், பொறிகள் முதலியவற்றை ஒரு நிலையில் நிறுத்திவிட்டவுடன், அந்தக் காந்த அலைகள் எங்கும் பரவுவது போல ஆரூரரின் உள்ளே பேரின்ப வெள்ளம் நிறைந்தது. இந்தக் காட்சியிலிருந்து நான்கு நூற்றாண்டு களைக் கடந்து, சோழப் பேரரசின் தலைமை அமைச்சர் தம்முடைய காலத்திற்கு வருகிறார்; கண்ணை விழித்துப் பார்க்கிறார். கூத்தனின் எதிரே தான் நிற்பதைக் காண்கிறார். திடீரென்று உள்ளே ஓர் எண்ணம் தோன்றுகிறது. நம்பி ஆரூரர் வழிபட்ட காட்சியைத் தம் மனக் கண்ணில் விரிவாகக் காணுமாறு கூத்தன் ஏன் அருள் செய்தான் என்ற வினாவை எழுப்பிய அதே கணத்தில் அதற்குரிய விடையும், அமைச்சரின் மனத்தில் கிடைத்துவிட்டது. மாபெரும் கவிஞராகிய அவர், புறத்தே நின்று, ஆரூரர் வழிபட்டதைக் கண்டு உணர்ந்தார் அல்லவா? அதை அப்படியே, அதாவது தாம் கண்ட காட்சியைப் LlíTL– வேண்டும் என்பதுதான் கூத்தனுடைய கட்டளை என்பதை உணர்கிறார். ஒரு வினாடியில் அவன் அருளாலேயே பாடல் வெளிப்படுகிறது. "ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு அரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக, 122 சேக்கிழார் தந்த செல்வம் இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லைஇல் தனிப்பெரும் கூத்தின் வந்த பேர்இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறுஇலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்’ - - (பெ. பு- 252) இப் பாடலின் முதல் இரண்டு அடிகளில் ஆரூரர் வழிபட்ட முறையையும் அவருடைய பொறிகள், அந்தக் கரணங்கள், முக்குணங்கள் என்பவை ஒரே நேர்கோட்டில் நின்ற சிறப்பையும் கூறிவிடுகிறார் கவிஞர் பெருமான். நேர்கோட்டில் நின்றன என்றால், அக்கோடு எங்கே தொடங்கி, எங்கே முடிகிறது என்பதையும் அறிவிக்கின்றார். முக்குணங்களும் சாத்விகத்தில் தொடங்கி, அந்தக்கரணங்களின் வழிச் சென்று, கண்களின் மூலம் வெளி வந்து, கூத்தனின் நடனத்தில் அக்கோடு நின்றது. இப்பொழுது ஒர் எதிர்நிகழ்ச்சி ஏற்படுகின்றது. கூத்தனின் கருணை, இதே கோட்டின் வழியாக மீண்டுவந்து, ஆரூரரின் கண்கள் வழியாக உள்ளே புகுந்து, அந்தக்கரணங்களை நிறைத்து, சாத்விகக் குணத்தையும் நிறைத்துவிட்டது. இந்த அருள் நோக்கம், இவை அனைத்தையும் நிறைத்ததால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதைத் தெய்வப் புலவர் பாடலின் நான்காவது அடியில் எடுத்துக் கூறுகிறார். பேரின்ப வெள்ளத்துள் திளைத்தார்’ என்று கூறும்பொழுது அது எத்தகைய இன்பம் என்ற சுந்தரர் 123 வினா தோன்றுமன்றே! அதற்கு விளக்கம்தான் மூன்றாவது அடியாகும். "இந்து வாழ்சடையான் ஆடும் ஆனந்த எல்லைஇல் தனிப் பெருங்கூத்து”த் தான், ஆரூரரின் பேரின்ப வெள்ளத்திற்குக் காரணம். இவ்வளவு அழகாகவும், விரிவாகவும் ஆரூரர் பெற்ற அனுபவத்தைக் கூத்தனின் அருள் கொண்டு விளக்கிய சேக்கிழார் பெருமான், அடுத்துக் கூறுகின்ற மூன்று சொற்கள் நம் சிந்தனைக்குரியவை. வெள்ளம் என்று ஒன்று வரும்பொழுது அதில் சிக்குபவர்கள் இரு வகைப்படுவர். ஒருசாரார், வெள்ளத்துள் அமிழ்ந்து போவர். மற்றொருசாரார், அதில் திளைத்து மகிழ்வர். கவிஞர்பிரான், இவ்வாறு இந்த மூன்று சொற்களையும் சேர்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு. திளைத்து, மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்’ என்று நான்காவது அடியில் சேக்கிழார் பெருமான் கூற ஒரு வலுவான காரணம் உண்டு. மேலே கூறிய முறையில், பொறி புலன்கள், கரணங்கள், குணங்கள் என்பவை ஒருமுகப்பட்டுக் கூத்தனின் அருள் வெள்ளத்தில் மூழ்குபவர்கள் மீட்டு வருவதில்லை. அந்த நிரதிசய இன்பத்தில் மூழ்குபவர் திருவடி நீழலில் இடம்பெற்று விடுதலின், பிறவிக் கடலைக் கடந்து அங்கேயே நின்று விடுவர். ஆருரருக்கும். அவ்வாறு நடைபெற்று விட்டால், அவரை எதற்காக இவ்வுலகிற்கு இறைவன் அனுப்பினானோ, அச் செயல்கள் நடைபெறாமல் நின்றுவிடும் அல்லவா? 124 சேக்கிழார் தந்த செல்வம் இம் மண்மேல் வாழ்ந்து, நூற்றுக்கணக்கான சொற்றமிழ் மாலைகள் பாடி, அடியார்களின் பட்டியலை அழகுத் தமிழில் தருவதற்காகத்தானே ஆரூரரை அனுப்பினான்? இப்பொழுது, பேரின்ப வெள்ளத்துள் திளைத்து அங்கேயே நின்றுவிட்டால், இச்செயல்கள் எவ்வாறு நடைபெறும் அதைக் குறிக்கத்ததான், மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்’ என்று பாடுகிறார் சேக்கிழார் பெருமான். ஒரு குறிப்பிட்ட பக்குவம் வரும்பொழுது, மலர் மலர்ந்து மணம் பரப்புவதைக் காணுகின்றோம். அதுவரை அம் மணம் மலருள்ளேயே மறைந்து கிடந்தது. அதுபோலக், கூத்தனின் பேரின்ப வெள்ளம், சுந்தரரின் அகமனத்தில் நிறைந்து கிடப்பதைக் கூத்தன் வெளியே கொணர்கின்றான். முதலில், அந்த வெள்ளத்துள் ஆரூரர் திளைத்தார்; பிறகு, கூத்தனின் ஆணைப்படி அந்த இன்பத்தைச் சொற்றமிழ் மூலம், பாடல்களாக்கி வெளியிட்டார். அங்ங்னம் வெளியிடுவதற்காகவே கூத்தன், அவரை இந்நிலவுலகில் நிறுத்தினான் என்பதை அறிவிக்கவே மலர்ந்தார்’ என்ற சொல் மூலம் கவிஞர்பிரான் வெளியிடுகின்றார். சேக்கிழார் பெருமான் காப்பியத்துள் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் என்னும் தாமரைத் தடாகத்துள், இந்த ஒரு பாடல் ஏனைய மலர்களை விடப் பல முழம் உயர்ந்து நிற்பதை அனுபவித்து அறியலாம். சுந்தரர் 125 காலமும் சமயமும் கடந்த பாடல் இந்தப் பாடல், மனித சமுதாயத்தில் ஒரு சிலருக்கே பயன்படக் கூடிய பாடலாகும். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்பவர்கள், ஒவ்வொரு காலத்திலும் உளர். அந்தக் காலகட்டத்தில், வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களில் இத்தகையவர் ஒரு சிலரே ஆவர். இவர்கள், நாடு, மொழி, இனம் என்ற அனைத்துப் பிரிவினை களையும் கடந்து நிற்பவர் ஆவர். பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்ற அவர்களுடைய குறிக்கோளை அடையச் சேக்கிழார் காட்டும் செந்நெறி ஆகும் இது. இந்து வாழ் சடையான் என்ற சொல், சிவபெருமானைக் குறிப்பதால், இப்பாடல் சைவர் களுக்குரியது என்று சிலர் நினைக்கலாம். இச் சொல்லுக்குப் பதிலாக 'எல்லையில் இறைவன் என்ற சொல்லைப் பெய்து விட்டால், இப்பாடல் எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சமயத்தாருக்கும் வழி காட்டுகின்ற ஓர் இணையற்ற பாடலாகிவிடும். இப் பிரபஞ்சம், அணுக்களின் சேர்க்கையால் ஆனது. அணுக்கள் என்று கூறியவுடன் அது ஒயாது இயங்கிக் கொண்டே இருக்கும் இயல்புடையது என்பதையும், இயங்கல் தொழில் நின்றால் அனுப் பிளந்து வேறாகிவிடும் என்றும் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. எனவே, அணுக்கணுவாகி, அவற்றின் உள்ளும் புறமுமாகி எங்கும் நிறைந் 126 சேக்கிழார் தந்த செல்வம் துள்ளாள் இறைவன் என்ற கருத்தை எல்லாச் சமயங்களும் ஏற்றுக்கொள்ளும் என்பதில் தடை யில்லை. எனவே, எல்லைஇல் இறைவன் ஆடும் தனிப்பெருங்கூத்து என்று சேக்கிழார் பெருமான் கூறிய மூன்றாவது அடிக்குப் பொருள் கொண்டால், எல்லாக் காலத்துக்கும், எல்லா மனிதர்க்கும், எச்சமயத்தாருக்கும் பொருந்திய பாடலாகும் இது என்பதை எளிதில் அறியலாம் உலகம் முழுவதற்கும் பயன்படக்கூடிய இந்த ஒரு LissL-60)%U இயற்றுவதற்காகவே, அமைச்சர் பெருமானுக்குக் கூத்தன், சுந்தரர் வழிபட்ட முறையைக் காணுமாறு செய்தான். அதன் பயனாக விளைந்ததே இப்பாடல். "உலகெலாம்" என்று இறைவன் அடியெடுத்துக் கொடுத்தமையின் சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அறிந்து, உணர்ந்து, பின்பற்றுவதற்குரிய ஒரு வழிமுறையை இப்பாடல் மூலம் சேக்கிழார் அருளியுள்ளார். சற்றே மாறுபட்ட காதல் பெருங்காப்பியம் என்றால், தலைவன், தலைவி சந்திப்பு, காதல் கொள்ளுதல்,அக்காதல் முடிவதற்குள் துயரமடைதல் என்பவை இடம் பெற்றிருக்கும். தனித்தனி வரலாறுகளைக் கூறும் பெரிய புராணத்தில் அதற்கு அதிக இடம் இல்லை யென்றாலும், சுந்தரர், பரவையார் இருவர் சுந்தரர் 127 சந்திப்பையே இதற்குப் பயன்படுத்திக்கொள்ளுகிறார் காப்பியப்புலவர். ஒரு திருமணம் தடைப்பட்ட பிறகு, சுந்தரர் மனத்தில் இறையன்புதவிர வேறு எதுவும் இடங்கொள்ளாத நிலையில், அப்பெருமான் தலயாத்திரை செய்து கொண்டு திருவாரூரை அடைகிறார். பூங்கோயில் அமர்ந்த புராதனனை வழிபடச் செல்லும்பொழுது, எதிரே வழிபட்டுத் திரும்பிவரும் ஒரு பெண்மணியை காணுகிறார். இறைவனைத்தவிர வேறு எதனையும் சிந்தியாத அந்த இருவர் மனத்திலும் ஓர் இன்ப அதிர்ச்சி. ஒருவரை ஒருவர் இன்னார் என்று அறியாத நிலையில் அவர் யாராக இருக்கக்கூடும் என்று இருவர் மனத்திலும் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த எண்ணங் களுக்கு வடிவு கொடுப்பது சங்க காலத்திலிருந்து, 12ம் நூற்றாண்டுவரை பயின்றுவரும் பகுதிதான். அதற்குச் சற்று மாறுபட்டுச் சேக்கிழார் இதோ பாடுகிறார், எதிரே வந்த பெண்மணியைப்பற்றிச் சுந்தரர் என்ன நினைக்கிறார் என்பதைக், & , . "கற்பகத்தின் பூங்கொம்போ? காமன்தன் . . . . . . . . . . . பெருவாழ்வோ? பொற்புஉடைய புண்ணியத்தின் புண்ணியமோ? - ' , புயல சுமந்து வில்குவளை பவளமலர் மதிபூத்த . - விரைக்கொடியோ? அற்புதமோ? சிவன் அருளோ? அறியேன் r - என்று அதிசயித்தார். (பெ. பு-286) 128 சேக்கிழார் தந்த செல்வம் என்ற பாடல் மூலம் விளக்குகிறார். தம் மனங்கவர்ந்த சுந்தரர்பற்றிப், பரவையார் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி, - முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால் தன்நேர்இல் மாரனோ? தார்மார்பின் விஞ்சையனோ? மின்நேர்செஞ் சடை அண்ணல் மெய் அருள்பெற்று உடையவனோ? என்னே! என் மனம் திரித்த இவன் யாரோ?" (பெ. பு-290) என்று நினைக்கிறார் பரவையார். முருகனோ? விஞ்சையனோ? மன்மதனோ? என்று நினைத்த பரவையார் தம் மனப்பக்குவத்தால் இவர்கள் அல்லர்’ என்று ஒதுக்கிவிட்டு, மின் நேர் செஞ்சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ? என்று பேசுகிறார். சுந்தரரோ என்னில், பரவையாரை அற்புதமோ, சிவனருளோ என்று அதிசயிக்கின்றார். இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரர், இறைவனின் மெய்யருள் பெற்றவர் என்பதை நாம் அறிவோம். இச் செய்தி அறியாவிடினும் பரவையார் மனத்தில், மெய்யருள் பெற்றுடையவர் என்ற எண்ணம் தோன்றிற்று என்றால், பரவையாரின் ஆன்மிக உயர்வு, சுந்தரருக்குச் சற்றும் தாழவில்லை சுந்தரர் 129 என்பதை பாடல் அறிவுறுத்துகின்றது. முன்பின் தெரியாவிடினும் இப்பெண்மணி சிவனருள் நிரம்பப் பெற்றவர் என்று சுந்தரர் எளிதில் அறிந்து கொள்கிறார். அதாவது, இறையருளை முழுதுமாகப் பெறாதவர் தம் மனத்தில் புகமுடியாது என்ற உறுதிப்பாடு இவர்களிடம் இருந்தது என்பதை இவர்கள் கூற்றால் அறிந்துகொள்ள முடிகிறது. தூய்மையான காதல் கூட இறைவனோடு தொடர்பு உடையது என்பதைத் தமிழர் நன்கறிந்திருந்தனர். அதனால் தான் இறைவனைப்பற்றி பாடும்போது கூட, அகத்துறையில் பாடல்கள் இயற்றினர். & 3. . கலப்பு மணம் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் சுந்தரர் பற்றியும், அவர் பாடிய அடியார்கள்பற்றியும் அறிந்து கொள்ளப் பெருமுயற்சி செய்திருக்கிறார். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று எத்தனை ஆதாரங்கள் கிடைக்குமோ அத்தனை ஆதாரங் களையும் திரட்டியிருக்கிறார். எனவே, பரவையாரைப் பற்றி அறிமுகம் செய்கின்ற பாடலில், பதியிலார் குலத்தில் தோன்றிப் பரவையார் என்றும் நாமம்’ (பெயு-278) பெற்று வாழ்ந்தார் என்று பாடுகிறார். முதன் முதலில், இவ்வரலாற்றை அறிமுகம் செய்யும் சேக்கிழார் சராசரித் o தமிழராக இருந்திருந்தால், சுந்தரர் மணம் செய்யப்போகும் ஒரு பெண், வேசியர் குலத்தில் பிறந்தார் என்று சொல்வது இழுக்கு என்று 130 சேக்கிழார் தந்த செல்வம் நினைத்து, அவர் வேளாளர் என்றோ வேறு குடியினர் என்றோ பாடியிருப்பார்கள். எட்டாம், நூற்றாண்டில் சுந்தரர் செய்த புரட்சியைத் தமி ழினத்திற்கு அறிவிக்க விரும்பிய சேக்கிழார், மாதவி தோன்றிய இக்குலம், எக்காரணத்தாலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று அன்று என்பதை நிலைநிறுத்து வதையே குறிக்கோளாகக் கொண்டார். காதற் பரத்தையாகக், கோவலன் ஒருவனுக்கே உரியவளாக வாழ்ந்தாள் மாதவி. 2ஆம் நூற்றாண்டில் தமிழச் சாதியின் நிலைமை, வேறு; ஆேம் நூற்றாண்டில் சாதிகளின் இறுக்க நிலை வேறு. ஆயினும், தமிழ்ப் பண்பாடு மிக உயர்ந்துவிட்ட நிலையில் சிவவேதியர் குலத்தில் தோன்றிய ஒருவர், இறைவன் திருவருளால் அதன் துணை கொண்டு, பரத்தையர் குலத்தில் தோன்றிய ஒரு பெண்ணை மணம் முடிக்கின்றார். திருவாரூரில் வாழ்ந்த அந்தணர்கள் அனைவரும் இந்தக் கலப்புத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு தாமே முன்னின்று இத்திருமணத்தை நடத்திவைக்கின்றனர். கலப்புத் திருமணம் என்பது 20ஆம் நூற்றாண்டுப் புரட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தந்த அருங்கொடை என்று பெரிதாகப் போற்றுபவர்கள், தங்களின் முன்னோர்களின் வரலாற்றை அறியாதவர்கள் ஆவர். தேவாரம் பாடிய சுந்தரர், இம் மண்ணில் 8ஆம், நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றி வாழ்ந்த வரலாற்று நாயகர் என்பதையும் இது கற்பனைக் சுந்தரர் 131 கதை அன்று என்பதையும் மறந்துவிட்டதால்தான் நாம் இன்று இந்த இழிநிலையில் உள்ளோம். தமிழகத்தைப் பொறுத்தவரை கலப்பு மணம் என்பது அருகி நடைபெற்றாலும், 6ஆம், நூற்றாண்டிற்கு முன்னர்த்தொட்டே இருந்துவந்தது என்பதற்கு திருஞானசம்பந்தர் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ரிக்வேதத்தைப் பின்பற்றும் வேதியர் மரபில் தோன்றியவர் காழிப்பிள்ளையார் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசச் செட்டியார் என்ற வணிகர், பூம்பாவை என்ற தம் பெண்ணை ஞானசம்பந்தருக்கு மணமுடிக்க வேண்டும் என்ற கருத்தில் வளர்த்தார் என்பதும் அப்பெண் பாம்பு கடித்து இறந்துவிட, அவள் எலும்பையும் சாம்பலையும் குடத்துள் அடைத்துக், காழிப் பெருமான் மயிலைக்கு வந்தபொழுது இவ் வரலாற்றைக்கூறி அவரிடம் அக் குடத்தை ஒப்படைத்தார் என்பதும் 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற செயலாகும். அதன் பிறகு, காபாலியின் தலைமகனாக நின்ற தமிழ்ஞானசம்பந்தர் அவ்வெலும்பைப் பெண்ணுக்கினார். சிவநேசர் 'மணம்புரிந்து கொள்க' என்று கூறியவுடன், காழிவேந்தர் கூறிய விடை தமிழ்ச் சமுதாயத்திற்கு என்றும் தேவையான பாடமாகும். "சிவநேசரே! எனக்குரியவள் என்று தாங்கள் வளர்த்த பூம்பாவை 132 சேக்கிழார் தந்த செல்வம் என்றோ இறைவனடி சேர்ந்துவிட்டாள். இனி அந்த எலும்பினின்று நான் உருவாக்கிய இவள், என்மகள் என்பதை மறந்துவிட வேண்டா என்று கூறி சிவநேசச் செட்டியாரை அமைதிப்படுத்தினார். இதேபோன்று, சுந்தரமூர்த்திகளுக்கு மணமுடிப்ப தற்காகக் கோட்புலியார் என்ற அடியார், வனப்ப்கை, சிங்கடி என்ற தம் இரு பெண்களையும் வளர்த்து வந்தார். சுந்தரர் வந்தபொழுது இவர்களை ஏற்றுக் கொள்ளுமாறு - வேண்ட, அவர்கள் இருவரையும் மடியிலிருந்தி இனி இவர்கள் தந்தை நான்’ என்று கூறியதுடன், தாம் பாடிய தேவாரத்திலும் வனப்பகை அப்பனாகிய நாவலூரன், சிங்கடியின் தன்தையாகிய நாவலூரன் என்று பாடியுள்ளார் என்றால், தமிழ்ப் பண்பாட்டின் இந்த உச்ச கட்டத்தை, இன்றைய தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்வது மிகத் தேவையாகும். பாடிப் பொருள் பெற்றார்.ஆனால் யாரை. சுந்தரர் வாழ்க்கையில், இன்றைய சமூகத்தினர் ஆகிய நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் பலவுண்டு. அவை அனைத்தையும் காண்பது இச்சிறுநூலின் எல்லைக்குள் அடங்காதாதலின், ஒன்று இரண்டு கருத்துக்களைமட்டும் சுட்டி மேல்ே செல்லலாம். இறைவனையே முழுவதுமாக நம்பி வாழ்ந்த இவர் போன்றோர், தம் தேவைக்காக சுந்தரர் 133 யாரிமும் சென்று எதையும் வேண்டும் பழக்கம் உடையவரல்லர் என்றாலும், மிகச் சிறந்த முறையில் திருவாரூரில் பரவையாரோடு இல்லறம் நடத்திய இவருக்கு, ஏனைய அடியார்களைப் போலல்லாமல், மிகுதியான பொருள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, பலமுறை இறைவனிடம் பொருள் கேட்டு, அதனைப் பெற்று இல்லறம் நடத்தினார் என்பதை அவருடைய பாடல்களே அறிவிக்கின்றன. ஆதலின், அந்த அகச் சான்றை வைத்துக் கொண்டு சேக்கிழார் பெருமான் அவர் பொருள் பெற்றதைப் பாடிச் செல்கிறார். அதில் ஒரு பகுதி, திருப்புகலூரில் நடந்த நிகழ்ச்சி யாகும். வழக்கம்போல் புகலூர்ப் பெருமானிடம் பொருள் கேட்க, அது உடனே கிடைக்கவில்லை. காரணம் அறியாத நம்பியாரூரர், திருக்கோயிலின் வெளியே வருகிறார். என்ன காரணத்தாலோ உறக்கம் அவர் கண்ணைச் சுழற்றிற்று. கோயில் திருப்பணிக்காக, சுட்ட செங்கற்கள் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன. அதில் நான்கு செங்கற்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு தம்முடைய மேல் துண்டையே படுக்கையாக விரித்து அதன்மேல் படுத்துறங்கி விட்டார். உறக்கம் கலைந்து எழுந்தார். செங்கற்களை மூடியிருந்த மேல் துண்டை உதறி எடுத்தவுடன் அடியில் இருந்த செங்கற்கள் அனைத்தும், பொன்கற்களாக மாறியிருக்கக் கண்டார். மனம் கசிந்த நாவலூர் பெருமான், தம்மையே புகழ்ந்து 134 : சேக்கிழார் தந்த செல்வம் இச்சை பேசினும்' என்ற பதிகத்தைப் பாடி அருளினார். அப்பாடல் இன்றும், என்றும் மனித குலத்திற்குத் தேவைப்படுகின்ற ஒன்றாகும். "ஒருவரைப் புகழ்ந்து எவ்வளவு இச்சகம் பேசினாலும் ஒன்றும் தராத மனிதர்களைப் புகழ்ந்து பாடாமல் இறைவனை ஏற்றிப் புகழ்ந்து பாடினால் இம்மையே தரும் சோறும் கூறையும் என்று பாடி, இந்த உலகத்தில் இவை கிடைப்பதோடல்லாமல், மறுமை இன்பமும் கிடைக்கும் என்று பாடினார். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரூரரின் இந்தப் பாடல் பதிகம் ஒரு மாபெரும் புரட்சியாகும். இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல் தொடங்கி, சுந்தரர் காலம்வரையுள்ள எல்லா இலக்கியங்களும் மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதைக் குறை கூறவும் இல்லை; மறுக்கவுமில்லை. 2500 ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கணம் வேறு மொழிகளில் காணப்படாத பொருளதிகாரம் என்ற பகுதியைப் பெற்றுச் சிறப்பு அடைந்துள்ளது. இரவலன் ஒருவன், வள்ளல் ஒருவனிடம் சென்று பரிசுபெற்றுத் திரும்பும் பொழுது, அவ்வள்ளலைச் சென்று காணாத மற்ற இரவலர்களை அவனிடம் செல்லுங்கள் என்று கூறுவது ஆற்றுப் படை' என்று தொல்காப்பியம் குறிக்கிறது. "பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறிஇச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்' சுந்தரர் 135 (தொல்,1084 என்று ஆற்றுப்படை இலக்கணத்தைப் பேசுகிறது தொல்காப்பியம். பத்துப்பாட்டில் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்பவை இடம் பெற்றுள்ளன. என்ன காரணத்தாலோ முருகனைப்பற்றிப் பாடும் பாடலுக்கும் திருமுருகாற்றுப்படை என்ற பெயர் தரப்பெற்றுள்ளது. ஆற்றுப்படை இலக்கணத்திற்கு மாறுபட்டிருப்பது இப்பாடல். சிறுபாணாற்றுப்படை என்றால், சீறியாழ் வாசிக்கும் பாணனை ஆற்றுப் படுத்துவது என்பது பொருளாகும். அந்த முறையில் முருகனை ஆற்றுப்படுத்துவது என்று பொருள் கொண்டால் பெருந்தவறு ஏற்பட்டுவிடும். எனவே, முருகனிடத்து ஆற்றுப்படுத்துவது என்று பொருள் கூறினார்கள் உரையாசிரியர்கள். இதுதவிர ஏனைய ஆற்றுப்படைகள் அனைத்தும் மனிதர்களைப் புகழ்ந்து பாடியவைதான். புறநானூற்றில் உள்ள பெரும்பாலான பாடல்கள் மனிதர்களைப் புகழ்ந்து பாடியவையே ஆகும். தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்ட இக் கருத்துக்கு மாபெரும் புரட்சியாளராகிய நம்பி ஆரூரர், முரண்பட்டு அதனை ஒதுக்கவேண்டும் என்று கூறுகிறார். கலப்புமணம் செய்துகொண்டு ஒரு புரட்சியைச் செய்த நாவலூரர், திருப்புகலூரில் இரண்டாவது புரட்சியைச் செய்கிறார். கேவலம், குறைபாடுடைய மனிதர்களை நிறைவுடையவர் களாகப் புகழ்வது இத்தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் இருந்து வரும் பெரும் சாபக் கேடாகும். தப்பித் தவறி 136 சேக்கிழார் தந்த செல்வம் ஒருவர் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் மனச்சான்றை விட்டுவிட்டு, அதிகாரத்தில் உள்ளவர்களைப் புகழும் பழக்கம் பெரும்பாலான தமிழர்களுக்குக் கைவந்த கலையாகும். இதனால் இரண்டு தீமைகள் ஏற்படுகின்றன. முதலாவது, இவ்வாறு புகழ்பவன், தான், தன்மதிப்பு, தன்மானம் என்பவற்றை இழந்து விடுகிறான். இரண்டாவதாக, பலராலும் புகழப் பெறும் ஒருவன்தான் உண்மையிலேயே இப் புகழுக்குரியவன் என்று நம்பத் தொடங்குகிறான். இருவரையும் அழிக்கும் இத் தீய பழக்கம் என்றோ தமிழ்நாட்டில் என்ன காரணத்தாலோ நிலைபெற்று விட்டது. கரிகால் பெருவளத்தானைப் புகழவந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர், "மலை அகழ்க்குவனே, கடல் துார்க்குவனே; வான் வீழ்க்குவனே, வளிமாற்றுவன்' என, தான் முன்னிய துறை போகலின்’ (பட்டினப்பாலை:271-273) என்று பாடியது நகைப்பிற்குரியதாகும். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த நகைப்பிற்குரிய இந்த நிலை, தமிழர்களாகிய நம்மிடம் இன்றும் இருக்கிறது என்று நினைக்கும்பொழுது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. : × நம்பி ஆரூரர் வாழ்க்கையில் நிகழ்த்திய, நிகழ்ந்த பல வியத்தகு புரட்சிகரமான செயல்களை இதுவரை கண்டோம். இத் தமிழ்ச் சாதனைவாயிலாகத் தமிழினம் சிறப்பாகவும் மனித சமுதாயம் சுந்தரர் 137 பொதுவாகவும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடத்தைச் சுந்தரர் வாழ்க்கையின், இடைப் பகுதியில் அறிவிக்கிறது. தவறுக்குத் தண்டனை எவருக்கும் உண்டு 'உன்னை விட்டுப் பிரியேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துத் திருவொற்றியூரில் சங்கிலியை மணந்தார். அவருடன் சிலகாலம் தங்கியதும், இளவேனிற்காலம் வந்தது; தென்றல் வீசிற்று; திருவாரூரில் உள்ள புற்றிடம் கொண்ட புராதனனை நினைத்தார். 'எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என் ஆரூர் இறைவனையே’ என்ற நினைவு வந்தது. சங்கிலி யாரிடம்கூடச் சொல்லிக் கொள்ளத் தோன்றவில்லை. ஆரூரன் அழைப்பு அவ்வளவு வலுவாக இருந்தமையின், உடனே திருவாரூருக்குப் புறப்பட்டு விட்டார். திருவொற்றியூர், எல்லையைத் தாண்டியது தான் தாமதம், கண்கள் இரண்டும் பார்வை இழந்தன. ஆராத் துயரத்தில் மூழ்கினார் ஆரூரர். எதனால் தம் கண் போயிற்று என்பதை நன்றாக அறிந்தார். சுந்தரர். திரும்பிவிட ஒரு வினாடிகூட அவர் நினைக்கவில்லை. உடன் வருபவர்கள் துணையுடன், ஆரூரரிடம் புறப்பட்டுவிட்டார் நம்பி ஆரூரர் வழியில் உள்ள திரு வெண்பாக்கம், வடதிருமுல்லைவாயில் முதலிய ஊர்களில் உள்ள பெருமானை வணங்கித் தம், குறை தீர்க்குமாறு 138 சேக்கிழார் தந்த செல்வம் எவ்வளவு கதறி அழுதும் கண்பார்வை திரும்பவில்லை. அடுத்து, காஞ்சியில் சென்று, தழுவக் குழைந்த பெருமானை மீட்டும் வேண்டுகிறார். தன் தோழனின் வேண்டுகோளுக்குத் தம்பிரான் செவிசாய்க்கவில்லை. ஆனால், தாய் கருணையே வடிவானவள் ஆதலின் ஒரு கண்ணைக் கொடுத்தாள் என்று பாடவரும் சேக்கிழார், 'மங்கைதழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார்' (பெ.பு-8446) என்று பாடுகிறார். பெற்ற ஒரு கண்ணுடன், திருவாரூர் சென்று தம் பிழை பொறுக்குமாறு பன்முறை வேண்டி மற்றொரு கண்ணையும் ஆரூரில் பெற்றார் என்று பாடுகிறார் சேக்கிழார். இந்த நிகழ்ச்சியால் நாம் அறிய வேண்டிய பாடம் ஒன்றுண்டு. 'பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும் நம் போன்றவர்கள் இதன் உட்பொருளை அறிதல் கடினம். சுந்தரரைப் பொறுத்தமட்டில் சபதத் தையும் அதன் உட்பொருளையும் அறியாதவர் அல்லர். இருந்தாலும் அவர்க்குத் தாய்வீடு போன்ற திருவாரூர்ப் பூங்கோயில் நினைவுக்கு வந்தவுடன் சபதம், சங்கிலி எல்லாம் மறந்தன. தாம் செய்வது பிழை என்றாலும், இப்பிழையை இறைவன் மன்னித்து விடுவான் என்று அவர் நினைத்துவிட்டார். சபதத்தை மீறுவதற்குக் காரணம், ஆரூர்ப் பெருமானின் நினைவு சுந்தரர் 199 தானே! எனவே, இப் பிழையை இறைவன் மன்னிப்பான் என்று கருதிவிட்டார். அதுதான் அவருடைய எண்ணம் என்பதை அவருடைய பாடலே அறிவிக்கின்றது. - - "பிழையுளன பொறுத்திடுவர் என்று அடியேன். - - . பிழைத்தக்கால் பழியதனைப்பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்” (திருமுறை-7-89-) என்பது திருவெண்பாக்கப் பதிகமாகும். சங்கிலிக்குச் செய்த சபதத்தால்தான் இது நிகழ்ந்தது என்பதையும், 'சங்கிலிக்கா என் கண்கொண்ட பண்ப!’ என்பதால் அறியலாம். தன் தோழன் இறைவன் ஆதலால், அவன் எதனையும் பொருட்படுத்த மாட்டான் என்ற எண்ணத்தில் செய்த காரியம் ஆகும் இது. என்றாலும், தோழனே. ஆயினும், தவறு செய்தால் இறைவன் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது இந்நாட்டவர் கண்கூடாகக் கண்ட உண்மையாகும். இப்பெருமானை அடுத்து, அரை நூற்றாண்டுகள் கழித்து வந்த மணிவாசகருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. குதிரை வாங்குவதற்கு என்று ஒதுக்கப்பட்ட பணத்தை-அரசாங்கப் பொதுப் பணத்தைத் திருக்கோயில் கட்டச் செலவழித்தாலும் அது தவறுதான், அதற்குத் தண்டனையாகத் திருவாசகம் பாடிய பெருமான்கட பதினான்கு நாட்கள் கடும் தண்டனையை அனுபவிக்க நேரிட்டது என்பதை, இன்று வாழும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏமாற்றி, தவறான வழிகளில் பணத்தைச் சம்பாதித்து, வருடத்திற்கொரு முறை முருகப் பெருமானுக்குப் பாலபிஷேகம் செய்து விட்டுத் தங்கள் பிழைகள் மன்னிக்கப்பட்டு விட்டன என்று மனப்பால் குடிக்கும் போலி பக்தர்கள் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளாகும் மேலே சொல்லப்பட்ட இரு நிகழ்ச்சிகளும். இன்றைய சமுதாயத்தாருக்குச் சேக்கிழார் தந்த செல்வத்தின் நான்காம் பகுதியாகும் இது.