சேக்கிழார் தந்த செல்வம்/சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி


12. சேக்கிழார் தந்த செல்வம்
— இறுதிப் பகுதி

தமிழ் மொழியிலுள்ள சிறந்த காப்பியங்கள் என்று சொல்லப் பெறுபவை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், சாத்தனாரின் மணிமேகலை, திருத்தக்கதேவரின் சிந்தாமணி, கம்ப நாடனின் இராம காதை, சேக்கிழாரின் பெரிய புராணம் ஆகிய ஐந்துமாகும். இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவை வரலாற்று அடிப்படையில் தோன்றியவை என்று கூறுவதற்கில்லை. மிகப் பழங்காலத்தில் இந்த நாட்டில் வழங்கிய அடிப்படைக் கதைகளை மூலமாகக் கொண்டு, இவை இயற்றப் பெற்று இருக்கலாம். தேவரின் சிந்தாமணி வடமொழியில் உள்ள ஸ்ரீபுராணத்தில் காணப் பெறும் ஒரு மாமனிதனின் வரலாற்றை கூறுவதாகும். அடுத்தபடியாக உள்ள கம்பனுடைய இராம காதை வால்மீகியை அடிப்படையாகக் கொண்டு, ஆனால் அதே நேரத்தில் தமிழ் மரபுக்கேற்றபடி செய்யப் பெற்ற ஒரு காப்பியமாகும். பெரிய புராணம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். பெரிய புராணத்தைப் பொறுத்த மட்டில், அதில் சொல்லப்பட்ட அடியார்கள் அனைவரும், வரலாற்றுக் காலத்தில் ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு முடிய வாழ்ந்தவர்கள் ஆவர். இந்தத் தமிழக எல்லையில் வாழ்ந்த அந்த அடியார்களைப் பற்றி சுந்தரமூர்த்தி 408 சேக்கிழார் தந்த செல்வம் சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் பாடியதை, கொஞ்சம் விரிவாக நம்பியாண்டார்நம்பி பாட, •916ᏈᎧᎫ இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு சேக்கிழார் தம்முடைய பெரியபுராணத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடினார். எனவே இதில் அவர் விருப்பம்போலக் கதைகளை மாற்றவோ அல்லது வேறு திருத்தங்கள் செய்யவோ உரிமை இல்லாமல் போய்விட்டது. உள்ள கதைகளை அப்படியே வைத்துக் கொண்டு தம்முடைய கற்பனையைச் சேர்த்து மிகச் சிறந்த முறையில் பாடினார் என்பதில் ஐயமில்லை. அந்தக் காப்பியத்தின் குறிக்கோளாக இருப்பது தொண்டு: அதற்கு அடுத்தபடியாக இருப்பது இறையன்பு: அதற்கடுத்தபடியாக இருப்பது குறிக்கோள் என்றெல்லாம் முன்னர் காணப்பட்டது. இனி இந்தப் பெரியபுராணத்தை அநுபவிக்க வேண்டுமானால் ஒரு சிக்கல் ஏற்படும். ஏனைய சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களை அநுபவிப்பது போல பெரியபுராணத்தை அநுபவிப்பது கஷ்டம். இதில் சொல்லப்பட்ட வரலாறுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்றாலும் பலகாலத்தில் வாழ்ந்த பலருடைய வாழ்க்கையை அது பேசுவது என்றாலும் அடிப்படையாக இருப்பது தொண்டு உணர்ச்சியும், குறிக்கோள் வாழ்க்கையும், இறையன்பும் ஆகும். இந்த மூன்றும் அறுபத்து மூவருக்கும் பொதுவாகும். எனவே இதனைப் படிக்க வேண்டுமென்று சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 409 நினைக்கும்போது இந்த மூன்றில் ஓரளவு பயிற்சியும், தேற்றமும் இருந்தாலொழிய இதனை அநுபவிப்பது கடினம். ... < - - - . . . . . . . . இறையடியார்களின் வரலாறுகளைக் கூறும் காப்பியங்கள் தமிழில் மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் காணக்கூடிய ஒன்றாகும். அப்படிப்பட்ட இறையடியார்கள் வாழ்க்கையில் ஒரு பொதுத் தன்மையைப் பார்க்கலாம். அவர்கள் அனைவரும் குறிக்கோள் வாழ்க்கை வாழ்ந்தவர்கள்; இறையன்பு நிறைந்தவர்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. தொண்டு செய்திருக்கிறார்கள் பலர் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதேயாகும். அப்படி ஆனால் இந்த மூன்று இயல்புகள் ஏனைய அன்பர்களிடத்திலும் காணப்படுகின்றன. பெரிய புராணத்திலுள்ள அடியார்களிடத்திலும் காணப் படுகின்றன என்றால் பெரியபுராணம் எந்த வகையில் ஏனைய காப்பியங்களோடு உலக காப்பியங்களோடு மாறுபட்டது என்ற சிந்தனை தோன்றினால் அது நியாயமானதேயாகும். அங்கே தான் ஒன்றை மிக நுண்மையாக சேக்கிழார் கூறியிருப்பதை நாம் காண முடியும். உலக இலக்கியங்களில் காணப்படும் இறை. அடியார்கள் அனைவரும் இந்தப் பிறவி போய் நீங்க, இறைவனடியைச் சென்றடைய வேண்டும், அவனோடு இரண்டறக் கலக்க வேண்டும் அல்லது மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவ்ே தங்களுட்ைய வாழ்நாளைக் 410 சேக்கிழார் தந்த செல்வம் கழித்தார்கள் என்பதை நாம் அறியமுடியும். இதனுடன் மாறுபட்டு, மோட்சத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இறைவனுடைய திருவடிகளைச் சேரவேண்டும் என்ற எண்ணங்கூடப் பெரிதாக இல்லாமல் இந்த உலகத்தில் இருந்தபடியே இறையன்பர்களுக்கு உதவுவதையே ஒரு பெரும் குறிக்கோளாகக் கொண்டு, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என்று சேக்கிழார் சொல்கிறாரே அதுபோல இருந்தவர்கள் தான் இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களும். - இவர்களுடைய வரலாறுகளைப் படிக்கும்போது ஒன்றை நாம் காண முடியும், எந்த ஒரு அடியாரும் இறையருளைப் பெற வேண்டும், இந்தப் பிறவியை விட்டு அவனுடைய திருவடியைச் சென்று அடைய வேண்டும் என்று முயன்றதாக வரலாறு இல்லை. அதற்குமாறாக தாங்கள் எடுத்து ஒரு பணியை, ஒரு தீவிரமான குறிக்கோளாகக் கொண்டு அந்தக் குறிக்கோளுக்காகவே வாழ்ந்தவர்கள். அந்தக் குறிக்கோள் தடைபடுமேயானால் உயிரைவிட்டாவது தம் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்தார்களே தவிர எப்படியாவது இறைவன் திருவடியைச் சேரவேண்டுமென்று யாரும் முயன்றதாகத் தெரியவில்லை. ஆகையினால் பெரியபுராணத்தின் தனிச்சிறப்பு என்ன்வென்றால் யாரும் இறைவனை நாடிச் செல்லவில்லை. இன்னும் விரிவாக அழுத்தமாகக் கூறவேண்டுமானால் சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 411 இவர்களை நாடித்தான் இறைவன் வந்திருக்கிறான். அவரவர்கள் வாழ்க்கையிலே கொண்ட குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக பல சமயங்களில் தங்களுடைய உயிரையும் விட வேண்டி நேரிட்டது. உயிரை விட்டவர்கள் பலர் விட முயன்றவர்கள் பலர் என்பதைக் காண்கிறோம். அப்படி அவர்கள் அந்த இறுதி நிலைக்கு வரும்போது இறைவன் காட்சி தந்ததாக அவர்களைத் தம்மிடம் அழைத்துக் கொண்டதாகத்தான் பெரியபுராணம் பேசுமே தவிர இவர்கள் இறைவனை நாடிச் சென்று எனக்கு வீடு பேற்றைத் தா. இந்தப் பிறவி வேண்டாம் என்று சொல்லியதாக எந்த வரலாறும் இல்லை. - இதில் ஒரு வரலாறு கொஞ்சம் மாறுபட்டுக் காணப்படும். அதுதான் காரைக்கால் அம்மையார் உடைய வரலாறு. அவர்தான் இந்த உடம்பை விட்டு விட்டு இறைவனிடம் போகவேண்டும் என்று நினைக்கிறார். 'ஈங்குஇவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற - தசைப்பொதி கழித்து, இங்கு உன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும். . . . - - - . . . . . . (பெ. பு-1770) 412 சேக்கிழார் தந்த செல்வம் என்று விரும்புகிறார். அது எதனால் என்றால் இந்த உலகத்திலே கணவன் தன்னைத் தெய்வம் என்று வைத்துவிட்ட பிறகு இந்த உடம்போடு இந்தச் சமுதாயத்தில் வாழ்வது கடினம், அது இன்றைய சமுதாயத்தில் கூடக் கடினம் என்றால் அன்றைய சமுதாயத்தில் கேட்க வேண்டியதே இல்லை. எனவே இந்த சமுதாயத்தில் வாழ முடியாது என்பதை அறிந்து கொண்ட பெருமாட்டியார் இப்போது நேரிடையாக இறைவனிடம் செல்ல வேண்டுமென்று நினைக்கிறார். அப்படியானால் அவ்வளவு துணிவோடு சொல்கிறவர் இந்த உடம்போடு சென்றிருக்கலாமே என்றால், சமுதாயத்தை நன்கு அறிந்தவராகிய அவர் ஒரு பெண் தனிப்பட்ட முறையிலே அதுவும் இளமை நிறைந்த ஒரு பெண், அழகு நிறைந்த ஒரு பெண் சமுதாயத்தில் தனித்து வாழ்தல் கடினம். அதைவிட கடினம் அவள் ஒரே குறிக்கோளோடு இறையன்பு செலுத்துதல் என்பது. எங்கே சென்றாலும் மக்களோடு சேர்ந்துதானே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஏன் திருமணம் நடக்கவில்லை? ஏன் கணவனை விட்டு வந்தாள்? என்கிற இப்படிப் பட்ட பிரச்சினைகளை இந்தச் சமுதாயம் கிளப்பும் அதன்ால் தான் அம்மையார் இந்தச் சமுதாயத்தை விட்டு ஒதுங்கிப் போகவேண்டுமென்ற எண்ணத்தில் தான் இந்த உடம்பை நீக்கி பேய் வடிவு வேண்டும் என்றும் உன் திருவடிக்கு வரவேண்டுமென்றும் விரும்பினாரே தவிர வேறு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி. 413 முடியும். அதைத் தவிர வேறு எந்த கதையிலும் அடியார்கள் இறைவனிடம் செல்ல முயன்றதாக வரலாறு இல்லை. இறைவனே அவர்களை நோக்கி வந்திருக்கிறான் என்பது பெரியபுராணத்தின் தனிச் சிறப்பாகும். இனி இந்த அடிப்படையைப் பார்க்கும்போது இவர்கள் தொண்டு, குறிக்கோள் என்பவற்றில் இறையன்பு எந்த இடத்தைப் பெற்றது என்று சிந்திப்பது நலம் பயக்கும். மூலமாக இருப்பது இறையன்பு என்பதில் ஐயமே இல்லை. அந்த இறையன்பு நிறைந்திருந்ததனால் தான் இவர்கள் மக்களுக்குத் தொண்டு செய்ய முடிந்தது. மகேசன் தொண்டைவிட மக்கள் தொண்டே சிறந்தது என்று நினைப்பதற்குக் காரணம் இவர்களுடைய இறையன்புதான். எல்லா உயிர்களும் இறைவனுடைய படைப்பு என்பதை அறிந்துவிட்டார்கள். ஆகையால் மக்களுக்குத் தொண்டு செய்வதையே தம்முடைய பெரும் குறிக்கோளாகக் கொண்டனர். மக்களுக்குத் தொண்டு என்று வரும்போது யாருக்குத் தொண்டு செய்தார்கள்? இது முன்னரே விரித்துப் பேசப் பெற்றிருக்கிறது. பெரியபுராணம் சிவன் அடியார் களுக்குத் தொண்டு செய்தார்கள் என்று தான் சொல்லும். அப்படிச் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. அவருடைய காலத்தில் சிவனடியார்கள் என்ற பெயரில் அந்த வேடம் அணிந்தவர்கள்வேடம் அணியாதவர்களும் கூட சிவனடியார்கள் 414 சேக்கிழார் தந்த செல்வம் என்றுதான் கூறப்பெற்றிருக்கிறார்கள். சாக்கியர் வரலாற்றைப் பார்க்கிறோம். அவர் சிவனடியாராகக் கருதப்பெற்றார். அவர் சிவவேடம் தாங்கவில்லை. இனி சிவவேடம் தாங்கி தவறான வாழ்க்கை வாழ்ந்த முத்தநாதன் முதலானவர்களைப் பெரிய புராணத்தில் காண்கின்றோம். இப்பொழுது இந்த வேடம் எந்த அளவுக்கு அவர்களை சிவனடியார்கள் என்று முத்திரை குத்த உதவிற்று? இந்த முத்திரையை பெற அவர்களாக முன்வந்து செய்தது எதுவும் இல்லை. அவர்களைப் பார்க்கின்றவர்களுடைய பார்வையில்தான் அது இருந்தது. மெய்ப்பொருள் நாயனாரோ, ஏனாதிநாத நாயனாரோ எதிரே இருக்கின்றவன் பகைவன், தீயவன், தீய எண்ணத்தோடு வந்திருக்கிறான் என்பதை நன்றாக அறிந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அப்படி அறிந்திருந்தும் தங்களால் இதுவரை போற்றப்பெற்ற அந்தச் சிவ வேடத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தார்களே தவிர அந்தச் சிவவேடத்தை அணிந்தவன் யார் என்ற ஆராய்ச்சியில் அவர்கள் போகவே இல்லை. இது உலகத்தில் மற்ற இலக்கியங்களில் பார்க்க முடியாத ஒரு தனிச் சிறப்பாகும். எதிரே இருப்பவன் தீயவன், தன்னைக் கொல்ல வந்திருக்கிறான், தமக்குத் தீமை புரிய வந்திருக்கிறான் என்று தெரிந்தும்கூட அதுபற்றிக் கவலைப் படாமல் தாம் இதுவரையில் எந்தச் சிவவேடத்திற்கு ஒரு மரியாதை கொடுத்தார்களோ சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி * 415 அந்தச் சிவவேடத்தை அவன் அணிந்திருக்கிறான் என்ற காரணத்தினால், அவன் என்ன செய்தாலும் lgil பற்றிக் கவலையில்லை, தங்களுடையلئے குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இன்றியமையாதது என்று கருதினார்கள் என்பதை பெரியபுராணம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது. பெரியபுராணத்தில் வருகிற இரண்டொருவர் ஒரு புதுவழியை மேற்கொண்டனர். தங்களுக்கு ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். அந்தக் கொள்கை சரியா தவறா என்று ஆராய யாருக்கும் உரிமையே இல்லை. ஏன் இறைவனுக்குக் கூட அந்த உரிமை இல்லை. ஆகவே தாங்கள் வகுத்துக் கொண்ட கொள்கைப்படி வாழ்ந்து வந்தார்கள். என்றாவது ஒருநாள் அந்தக் கொள்கைக்கு முட்டுப்பாடு வருமேயானால் உயிரை விடத் துணிகிறார்கள். அதுவரையில் சரி. அது பொதுத் தன்மைதான். இப்படியும் இரண்டொருத்தர் வாழ்க்கையில் இறைவன் திருவிளையாடல் புரிகின்றான். ஏயர்கோன் கலிக்காமர் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாக நிற்பவர். . . .' ...; எம்பிரான் எந்தை தந்தை தந்தைஎங் g . . தம்பிரான் நீரேஎன்று வழிவழிச் சார்ந்து வாழும் o, 416 சேக்கிழார் தந்த செல்வம் அடியவர்கள் என்ற ஒரு எண்ணம் அவர் மனத்தில் எந்தக் காரணத்தினாலோ இருந்திருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. அதாவது வழிவழியாகத் தொண்டு செய்கின்ற தாங்களும் தங்கள் குடியும் இறையன்பில் தலை நிற்பவர்கள் என்ற எண்ணம் அவர்களுடைய மனத்தின் ஆழத்தில் இருந்திருக்கிறது. ஆகையினால் தான் இறைவன் கனவிடை வந்து இந்த வயிற்று வலியைச் சுந்தரன் வந்துதான் போக்க முடியும் என்று சொன்னவுடன் - மற்றவன் இங்குவந்து தீர்ப்பதன் முன்நான் மாயப் பற்றிநின் றென்ன நீங்காப்பாதகச் சூலை சூலை - தன்னை உற்ற இவ்வயிற்றினோடும் கிழிப்பன். -: ೯೯೯ಕp சொல்லுகின்ற அளவுக்கு அவருடைய துணிவு போய்விட்டது. இது ஏயர்கோன் சிறந்த பக்தர்; சிவனடியார் என்பதை உணர்த்துகிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. வழிவழியாகச் சிவனடியார் ஆனாலும் அந்த சிவனடியாாாக இருப்பதில் ஒரு கர்வம் கொண்டுவிட்டார் என்பதை نئے۔lgi/ அறிவிக்கின்றது. பேசுகிறவன் இறைவன். இவருடைய பக்தியையும், அன்பையும், அதே நேரத்தில் சுந்தரருடைய பக்தியையும், அன்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவகிைய இறைவன் இப்பொழுது சொல்கிறான். அவன் வந்து இந்த வயிற்றுவலியைத் தீர்ப்பான்’ என்று. சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 417 ஆனால் ஏயர்கோன் என்ன நினைக்கிறார். பரம்பரையாக இறைவனுக்குத் தொண்டு பூண்டு வாழ்கிற தாங்கள் உயர்ந்தவர்கள். இறைவனே சென்று தடுத்தாண்டு கொண்டான் அந்தச் சுந்தரனை. அப்படிப்பட்ட சுந்தரன் தங்களைவிட ஒருபடி தாழ்ந்தவன் என்று நினைத்தார். அதைவிட மோசம் என்னவென்றால் இறைவன் ஆண்டான் என்றும் தாங்கள் அடிமை என்றும் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடவாமல், இறைவனைத் தோழமை பூண்டு தூது அனுப்புகிற அளவுக்கு தாழ்ந்துவிட்டான் சுந்தரன்; என்றும் நினைத்தார். எனவே அப்படிப்பட்ட சுந்தரன் வந்து தன் வயிற்று நோயைத் தீர்ப்பதைவிட இறந்து போவதே மேல் என்று நினைக்கிறார் என்றால் அந்த உறுதிப்பாடு, கொண்ட கொள்கையில் நிற்றல் என்பதெல்லாம் போற்றத் தகுந்ததுதான், மறுப்பதற்கில்லை. ஆனாலும் ஆழ்ந்து நோக்கினால் அவர் வயிற்றை கிழித்துக் கொள்ளும் அளவுக்கு ஏன் இறைவன்விட்டான் என்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் ஓர் உண்மை விளங்கும். ஏயர்கோனுடைய பக்தியில் ஒரு சிறு ஒச்சம் இருக்கிறது. அகங்காரம், மமகாரமற்று அடியாராக வாழ்வதைவிட்டு, நாங்கள் தான் உயர்ந்தவர்கள். நீ போய் ஆட்கொண்ட சுந்தரன் எங்களைவிட ஒரு படி கீழே: என்று நினைக்கின்ற போது அந்த அகங்காரம் தலைதூக்குகிறது. ஆகையால் அதற்குரிய தண்டனையாகத் தான் அவர் வயிற்றைக் கிழிக்கும்படியாக ஏற்பட்டது 418 சேக்கிழார் தந்த செல்வம் என்பதும் பெரியபுராணம் காட்டுகின்ற ஒரு சிறந்த அடிப்படையாகும். இனி இவர்கள் செய்த தொண்டுகளை எல்லாம் பார்ப்போமேயானால் திருக்கோயில் பணி செய்தவர்கள் உண்டு பெரியபுராணத்தில். யாரும் இல்லையென்று சொல்வதற்கில்லை. திலகவதியார் திருநீலநக்கர் புகழ்ச்சோழர் முதலானவர்கள் செய்து இருக்கிறார்கள். என்றாலும் நேரடியாகத் திருக் கோயில் தொண்டு செய்வதைவிட மக்கள் தொண்டு செய்தவர்களே அதிகமாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் அடியார்களுக்கு சட்டி கொடுத்தல், துணி கொடுத்தல், வேண்டுவனவற்றைத் தருதல், அன்னமிடுதல், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்று வரும்போது இவை எல்லாம் மக்கள் தொண்டின்பாற்படும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவிழிமிழலையில் பஞ்சம் தீரும் வரையில் அன்னமிட்டது எல்லாம் மக்கள் தொண்டின்பாற்படும். எனவே இந்தத் தொண்டு செய்வதில் ஓர் இன்பத்தைக் கண்டார்கள் இவர்கள். அவர்கள் பின்னே வந்த தாயுமானப் பெருந்தகை இந்த அருமைப்பாட்டை அறிந்து, அன்டர்பணி செய்யவெனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பரபரமே என்று சொல்கிறார். சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 419 இந்த மக்கள் தொண்டே அவர்களது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும், வீடுபேற்றைத் தருவதற்கும் கருவியாக அமைந்தது என்பதை நாம் அறிய முடிகிறது. அதைவிட இந்தத் தொண்டு செய்வதில் இன்று கூடப் பலர் நூற்றுக் கணக்கானவர்களுக்கு அன்னமிடுகிறார்கள். பலர் அறச்சாலை கட்டுகிறார்கள். திருக்கோயில் கட்டுகிறார்கள். அப்படி இருக்க இவர்களை விட பெரியபுராணத்தில் வருகிறவர்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் என்ற வினா நியாயமான வினாவாகும். இங்கே ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. * - -- இன்றும் அன்னம் இடுகிறவர்கள் உண்டு. ஏனைய அறங்கள் செய்கின்றவர்கள் உண்டு. இந்த அறம் எப்படி நடைபெறுகின்றது? தன்னை மாறி இருக்க உள்ள தடங்கள் கொண்டே செய்யப் பெற்றனவா? இளையான்குடிமாறனார் வரலாற்றில்சொல்வார், நிறைந்த செல்வத்தோடு இருக்கின்ற வரையில் அவர் அன்னம் இட்டார். எல்லாம் கொடுத்தார். எல்லாம். சரி. ஆனால், - - - வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் என்று சொல்லுவார். இவ்வளவு செல்வம் மல்கிய போது அச்செயல்கள் செய்வது அன்றியும், அல்லல் 420 சேக்கிழார் தந்த செல்வம் நல்குரவானபோதிலும் இச்செயல் செய்வார். அது தான் பெரியபுராணத்தின் நுணுக்கம். செல்வம் மல்கியபோது இவற்றையெல்லாம் செய்வது எளிதான காரியம். தன்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை இதற்கெல்லாம் செலவிடுவது என்ற முடிவுடன்பாலாபிஷேகம் செய்கிறர்களும்-நூற்றுக்கணக்கான வர்களுக்கு அன்னமிடுபவர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆனால், செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வதன்றியும் மெய்யினால் அல்லல் நல்குரவான போதிலும் வல்லர் என்பது இளையான்குடிமாறனாரால்தான் செய்ய முடிந்தது. இளையான்குடிமாறனார் வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கூட்டி வந்து சோறுபோட்டு, வயிற்றை நிரப்பி, வேண்டிய துணிமணிகளைக் கொடுத்து அனுப்பினார்:சிந்தித்துப் பார்த்தால் சாதாரண சமாசாரம். இந்த சாதாரண சமாசாரத்தைச் செய்த இவர்கள் எப்படி அடியார்கள் ஆனார்கள் என்பதைப் பார்க்கும் போதுதான் உண்மை விளங்குகிறது. இவர்கள் இதைச் செய்ததினாலே மட்டும் அடியார்கள் ஆகிவிட வில்லை. இதைச் செய்வதற்கு முடியாத ஒரு சூழ்நிலை உருவானபோது செய்வதற்கு முடியாத வறுமைப் பதம் வந்தபோது, செய்வதற்கு முடியாத சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 421 உடல் பிரச்சினை வந்தபோது செய்வதற்கு முடியாத குடும்பச் சூழ்நிலை உருவான போது என்ன செய்தார்கள்? அந்த நிலையிலும் அவர்கள் இதை விடாது செய்தார்கள். இந்தத் தொண்டுக்கு இடையூறு வரக்கூடிய சூழ்நிலை உருவானால் உயிரைவிட்டுத் தொண்டை நிலை நிறுத்தினார்களே தவிரஇப்பொழுது முடியாமல் போய்விட்டது-பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கவில்லை. ஆகையினால்தான் இவர்கள் அடியார்கள் ஆனார்கள் இதிலிருந்து பெரிய புராணத்திலுள்ள அடியார்களின் பொதுத் தன்மை நன்கு விளங்கும். அறிவைக் கொண்டு ஆராய்வது என்பது ஒருவகை உணர்வைக் கொண்டு ஆராய்வது என்பது ஒருவகை. பெரியபுராணத்தில் உள்ள அடியார்களின் வரலாற்றை அறிவுகொண்டு ஆராய்ந்தால் அவ்வளவு சரிப்பட்டு வராது. ஒருவர் விளக்கு எரிக்கிறார். அவர் எண்ணை வாணிகர். நிரம்ப வசதியுள்ள குடும்பம். கோயிலில் ஆயிரக்கணக்கான விளக்கு எரிக்கிறார். செல்வம் எல்லாம் போன நிலையிலும் விடாது விளக்கு எரிக்க வேண்டுமென்று நினைக்கிறார். அதற்காக புல்லரிந்து அதைக் கொண்டு வந்து விற்று அதில் கிடைக்கும் காசில் விளக்கு எரித்தார். பின்னர் செக்கு இழுக்கும் பணியாள் வேலைக்குச் சென்று பணம் சேர்த்து இதே பணியைச் செய்தார். 422 சேக்கிழார் தந்த செல்வம் இவ்வனைத்து முயற்சிகளும் தோற்று போகவே எதை வைத்து எரிப்பது என்ற நிலைமை வரும்போது, இனி நம்மால் இந்தத் தொண்டு செய்ய முடியாது என்று நினைக்கவில்லை, அங்கேதான் அவரது உறுதிப்பாடு வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட அடியார்கள் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்ட நிலைமையிலும்இந்தத் தொண்டை நிறுத்த மாட்டேன். நிறுத்தினால் உயிரை விட்டுவிடுவேன் என்றார்கள். இதை அறியாமை என்றா சொல்வது? அறிவினால் ஆராய்ந்து பார்த்தால் அப்படிக்கூடச் சொல்லலாம். ஆனால் அறிவினால் ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் அடியார்கள் அல்லர். உணர்வினாலே தான் இவர்களை உணர முடியும். இறைவன் அறிவினாலே ஆராயப்படுபவன் அல்லன். உணர்வினாலே உணரப்படுபவன். ஆதலால் இந்த அடியார்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஒரே வழி உணர்வினாலேதான் அவர்களை அறிய முடியும். அந்த உணர்வு நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்வோமேயானால் கணம் புல்லரோ அல்லது ஏனைய எந்த அடியாரோ செய்த செயலினுடைய அருமைப்பாட்டை விளங்கிக் கொள்ள முடியும். மிகச் சாதாரணச் செயலைக் கூட ஒரு மாபெரும் த்ொண்டாகச் செய்தார்கள். அது ஒன்று. - - இரண்டாவது இப்போ வசதி உடையவர்கள் அறஞ் செய்கிறார்கள். எப்படிச் செய்கிறார்கள். சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 423 தம்முடைய (ԼՔ(ԼՔ வசதியையும் அத்ற்காகப் பயன்படுத்துவதில்லை, ஆனால் இவர்களைப் பொறுத்தமட்டில் முழுவதையும் செய்தார்கள். அது எப்படி முடிந்தது என்பதை வேறுவிதமாகச் சொல்வார் சேக்கிழார். ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் அந்த விருப்பு வெறுப்பு போய்விட்டது. பொருளைச் சேகரிக்க வேண்டும்; ஆள வேண்டும் என்பது எல்லாம் போய்விட்டது. போனது மட்டுமல்ல. அந்தப் பொருளுக்கு ஒரு மதிப்புத் தருகிற நிலையும் போய்விட்டது. தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இடுப்பிலுள்ள கந்தை துணி தவிர வேறு எதுவும் இல்லாதவர்கள். அப்படியானால் அக்ப்பற்று ஆகிய அகங்காரம் புறப்பற்றாகிய மமகாரம் இவை எல்லாவற்றையும் ஒழித்து, அதன்வழி ஏற்படும் குற்றங்களையும் செற்ற காரணத்தினால், தூய்மையான மனம் உடையவர்களாக இருந்த காரணத்தினால்தான் அவர்கள் எந்தவிதமான பற்றும் இல்லாமல் இந்தக் குறிக்கோள் தொண்டு ஒன்றையே செய்தார்கள் என்பதை பெரியபுராணத்திலுள்ள எல்லா வரலாறுகளும் சுட்டிச் செல்லும், அதைப் புரிந்து கொள்வோமேயானால் இது ஒரு தனிப்பட்ட வாழ்க்கைமுறை-அதாவது ஏதோ ஒரு குறிக்கோளுக் காக எல்லாவற்றையும் தியாகம் செய்து வாழ்கின்ற வாழ்க்கை முறையைக் கடைப் பிடித்தவர்கள்-இந்தப் 424 சேக்கிழார் தந்த செல்வம் பெரியபுராணத்திலே அப்படிப்பட்ட பலருடைய வாழ்க்கையைச் சேகரித்து ஒன்றாகச் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் ஓரளவு பெரியபுராணத்தை அநுபவிப்பதற்கு அது வாய்ப்பாக இருக்கும். இன்று பெரியபுராணத்தைக் கற்கின்ற நமக்கு தமிழ்நாட்டு வரலாறு என்று சொல்லப்பெறுகின்ற சில கருத்துக்கள் முரண்பாடாக இருப்பதைக் காண முடியும். சேக்கிழாரைப் பொறுத்தமட்டில் சில அரசர்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றார். சில அரசர்களைப் பற்றி பேரளவிலே சொல்லிச் செல்கின்றனர். சில அரசர்களைப் பற்றி கொஞ்சம் ஏசவும் செய்கின்றார். . மகேந்திரவர்மன் திருநர்வுக்கரசர் காலத்தில் இருந்தவன். அவருக்குத் தீங்கிழைத்தவன் என்ற கருத்தில், - பூபாலர் செயல்மேற்கொள் புலைத்தொழிலோன் என்று ஏசுவார். அதுபோல ஏசாவிட்டாலும் நின்றசீர் நெடுமாறனைப் பொறுத்தமட்டில் அவன் திருஞான சம்பந்தப் பெருமானால் நலம் பெற்றவன் என்ற கருத்தினாலேயும், மங்கையர்கரசியருக்கு கணவன் என்ற கருத்தினாலேயும் அதிகம் அவனைப் பற்றிக் குறைகூறாமல் விட்டுவிட்டார். அவருடைய வரலாற்றைத் தனியே பேசும்போது அவன் பாழில், சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 425 உழிஞம் முதலான ஊர்களில் வெற்றி கொண்டவன், நெல்வேலி வென்றவன் என்றெல்லாம் கல்வெட்டு களில் காணப்படுகின்ற அவனுடைய வெற்றிச் செய்தியை எடுத்துப் பேசுகின்றார். ஆனால் இந்த அளவு கல்வெட்டுகளைக் கற்றறிந்து அவருடைய புராணத்திலே பேசுகின்ற பெருமான் என்ன காரணத்தினாலோ இராஜசிம்மன் கட்டிய கைலாசநாதர் கோயிலைப் பற்றிச் சொல்லவே விட்டுவிடுகிறார். சேக்கிழார் காலத்திற்கு முன்னரே அது நடந்தது என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஏன் என்று ஆராய்ந்தால் சில உண்மைகள் வெளிப்படும். சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திற்கு முன்னரே கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. சுந்தர மூர்த்திகள் ஒவ்வொரு தலமாகச் சென்று வழிபட்டுக் கொண்டு வருகின்றவர் காஞ்சியில் வந்து பல திருக்கோயில்களையும் வழிபட்டு பிறகு கச்சி அநேகதங்காவதம் என்ற இடத்திற்குச் செல்கிறார். அது சிறிய கோயில், ஏறத்தாழ ஒரு விநாயகர் கோவில் அளவுக்குத் தான் அது இருந்திருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் நின்று மேற்குப் புறமாகத் திரும்பினால் கைலாசநாதர் கோயில் கண்ணில்படும். மாபெரும் சிறப்பு வாய்ந்த அந்தக் கைலாசநாதர் கோயில் சுந்தரர் காலத்தில இருந்ததுதான் அவருக்கு முன்னரே கட்டப்பட்டது தான். ஆனாலும் கச்சி அநேகதங்காவதத்தைப் பாடுகின்ற சுந்தரர் கைலாச நாதர் கோயிலைப் பாட 426 சேக்கிழார் தந்த செல்வம் மறுத்துவிடுகிறார். இந்தக் கைலாசநாதர் கோயில் கட்டிய இராஜசிம்மன் தான் பூசலார் வரலாற்றில் வருகின்ற காஞ்சி மன்னன் ஆவான். கச்சி கற்றழி எடுத்து இறைவனிடம் அசரீரி கேட்டவன் என்றெல்லாம் அவனுடைய கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகள் சொல்கின்றன. ஆதலால் இவன்தான் என்பது நன்றாகத் தெரிகிறது. அந்தச் சிறப்புகளை எல்லாம் தெரிந்திருந்தும் சுந்தரர் அவனுடைய கோயிலைப் பாடவில்லை என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அந்தக் கோயில் இறைவனுக்காகச் செய்யப்பட்டது என்பதை விட அவனுடைய வெற்றிச் சிறப்புகளை காட்டுவதற்கு எடுத்துக் கட்டப்பட்டது என்கிற அடிப்படை இருப்பதனால்தான் சுந்தரர் அதனைப் போற்றாமல் விட்டுவிடுகிறார். அதை அப்படியே / சேக்கிழார் பெருமானும் பின்பற்றுகிறார். ஆகவே சேக்கிழார் சில செய்திகளைச் சொல்லாமல் விட்டார் என்றால் அதை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உதாரணமாக இராஜராஜனைப்பற்றி இன்றைக்கு ஓஹோ என்று எல்லாரும் பேசுகிறார்கள். ஏதோ அவன் தமிழுக்கு மாபெரும் தொண்டு செய்தான் என்றும், திருமுறைகள் வருவதற்கு அவன்தான் பாடுபட்டான் என்றும் பைத்தியக்காரத்தனமாக கதைகள் பல வழங்குகின்றன. அவன் திருமுறை கண்டபுராணம் என்று பதினேழாம் நூற்றாண்டு அல்லது பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் யாரோ சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 427 ஒருவர் பாடி அதை உமாபதிசிவம் அருளியது என்று தலையில் எழுதிவிட்டார். ஆகவே அது இன்றைக்கு செலாவணி ஆகிக் கொண்டு வருகிறது. அந்த அத்தைப் பாட்டிக் கதையைத் தவிர வேறு எந்த விதமான சான்றும் இல்லை, இராஜராஜன் திருமுறைகளுக்குத் தொண்டு செய்தான் என்பதற்கு. இன்னும் சொல்லப்போனால் இராஜராஜனுக்கு 79 ஆண்டுக்கு முற்பட்டவனாகிய வைரமேகன் என்ற பல்லவ மன்னன் திருத்தவத் துறை கல்வெட்டில் பதிகம் பாடுகின்றவர்களுடைய பட்டியலை தந்து இருக்கிறான். . . . . . . - ஆகவே இராஜராஜன் ஒன்றும் புதியதாகச் செய்துவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த இராஜராஜன் தமிழ்ப் பற்றுக்கூட உள்ளவன் என்று சொல்வதற்கில்லை. பல்லவர்கள் எப்படி வடநாட்டில் இருந்து குருமார்களை வரவழைத்து யாகம் முதலியவற்றைச் செய்தார்களோ அதே போல இந்த இராஜராஜன்-சைவசமயத்து ஆறேழு பிரிவுகளில்ேகோளகீசைவம் என்கிற சைவப் பிரிவைச் சேர்ந்த சதுரானன பண்டிதன் என்ற பிராமணனைவடநாட்டு-பீகாரிலிருந்து வரவழைத்து அவனைத் தான் தம் குருவாக வைத்துக் கொண்டிருந்தான். அதனாலே இவனுக்குத் தமிழ்ப் பற்றோ, தேவாரங்களிலோ ஈடுபாடோ இருப்பதாகச் சொல்வதற்கில்லை. - . „ ~ . . . ." 428 சேக்கிழார் தந்த செல்வம் அந்தச் சதுரானன பண்டிதன் தேவாரம் பாடுவதற்குக் கூட இங்கு இருக்கிறவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு தீட்சை செய்வித்து பிறகுதான் தேவாரம் பாட வைக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டும் இருக்கிறான் இராஜராஜன். கேட்டது மட்டுமல்ல. அவனுடைய பதிகம் பாடுவோர் கல்வெட்டில் பார்த்தோமேயானால் பதிகம் பாடுகின்றவர்கள் பெயர்ப் பட்டியல் வரும். அதிலே திருஞான சம்பந்தன் என்கிற அகோரசிவன், திருநாவுக்கரையன் என்கின்ற வாமதேவன் என்று வருவதைப் பார்த்தால் அகோரசிவன், வாமதேவன் எல்லாம் தீட்சா நாமங்கள். இந்தத் தீட்சா நாமத்தை ஏன் செய்தான் என்றால் சாதாரண தமிழர்களாக இருந்தவர்களுக்கு இந்தத் தேவாரம் பாடத் தகுதியில்லை. ஆகவே தீட்சை பண்ணி வைத்துத்தான் அவர்களைப் பாட வைக்க வேண்டுமென்று சதுரானன பண்டிதன் செய்திருக்கிறான். அதற்கு இந்த இராஜராஜன் தலையாட்டி பொம்மைபோல செய்திருக்கிறான் என்றால்-இவன் ஒன்றும் தமிழுக்குச் செய்யவில்லை என்பதும், அப்படி தமிழ்ப்பற்று உடையவன் அல்லன் என்பதற்கும் இதுவே சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இதனாலேதான் சேக்கிழார் பெருமான் சோழர்கள் என்று சொன்னாலேயே மிகுந்த ஈடுபாட்டோடு அவர்கள் பெருமையைப்பாடி வந்த அந்தப் பெருமான்-இந்த இராஜராஜனைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. எவ்வளவு பெரிய சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 429 இராஜராஜேச்வரம் உடையார் கோயிலைக் கட்டியவனான இராஜராஜனை எங்காவது ஓரிடத்திலாவது சொல்லியிருக்கலாமே? காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்தான் என இராஜசிம்மனுடைய கைலாசநாதர் கோயிலை போகிறபோக்கில் குறிப்பிடுகின்ற சேக்கிழார், சோழர்களுக்குள்ளே மிகச் சிறந்தவனாகிய இராஜராஜன் இந்தத் தஞ்சை பெருவிடையார் கோயிலைக் கட்டியிருக்கிறான் என்று ஏன் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல. தேவாரப் பதிகங்களை யாரோ சிதம்பரத்தில் மூடி வைத்து இருந்தார்கள், இவன்தான் போய் அதை திறந்து எடுத்து வந்தான் என்ற திருமுறைகண்ட புராணத்து உளறலை சேக்கிழார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனாலேதான் இதைப் பற்றிச் சொல்லவேயில்லை. அது உண்மை என்று நம்பியிருப்பாரேயானால் நூறு பாடல்களாவது பாடியிருப்பார் திருமுறைகள் வெளிவந்ததற்கு அதைப்பற்றிக் குறிப்பிடவே இல்லை என்றால் அவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது நன்கு தெளியப்படும். இன்று தமிழ்நாட்டு வரலாற்றை அதாவது சோழர்காலத்து வரலாற்றைப் பற்றிச் சிந்திக்கின்றவர்கள் இந்த சேக்கிழாரையும் ஒரு சான்றாக எடுத்துக் கொண்டு அவர் எப்படி எப்படி எல்லாம் செய்திருக்கிறார், எந்த அடிப்படையில் சோழர் வரலாற்றைப் பேசுகிறார் என்பதைத் தெரிந்துக் கொள்வோமேயானால் உண்மையான வரலாற்றை எழுதுவதற்கு அது பெரும் உதவியாக 430 சேக்கிழார் தந்த செல்வம் தெரிந்துக் கொள்வோமேயானால் உண்மையான வரலாற்றை எழுதுவதற்கு அது பெரும் உதவியாக இருக்கும் ஆக பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடியவர் ஆயினும் வரலாற்று அறிவு நிறைந்து இருந்தவர் ஆதலால் சேக்கிழாருடைய பெரிய புராணம் தமிழக வரலாற்றை அறிய பெரிதும் உதவுகிறது. இதுவரை கண்டவற்றை அமைதியாக இருந்து சிந்தித்தால் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். ஏனைய சமய நூல்கள்போல அதாவது தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், அஷ்டப்பிரபந்தம் முதலிய நூல்களைப் போல சமய அடிப்படையில், குறிப்பிட்ட சமயத்தை வளர்ப்பதற் காகவும், அதனுடைய பெருமையைச் சொல்வதற் காகவும், அதை நம்புகிறவர்கள் இறைவனுடைய திருவடியைச் சேர்வதற்குரிய வழியைக் காட்டுவதற் காகவும் அந்தச் சமய நூல்கள் பணிபுரிந்ததுபோல சேக்கிழார் நூல் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடியும் என்ன காரணத்தினாலோ பின்னால் வந்தவர்கள் இதை பன்னிரண்டாம் திருமுறை என்று சைவத் திருமுறைகளிலே சேர்த்தார்களே தவிர பெரியபுராணத்தின் அடிநாதமாக விளங்குவது, அதனுடைய குறிக்கோளாக விளங்குவது 6Ծ):9-6)յ சமயத்தை வளர்ப்பது என்பது முக்கியமாகத் தெரியவில்லை. சைவ சமய கொள்கையின் அடிப் சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 431 படையில் வாழ்ந்த அடியார்களைச் சொல்வது தான் பெரியபுராணம் என்பதை மறுப்பதற்கில்லை. சைவத்தின் பெருமையையும் பெரியபுராணம் பேசுகின்றது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அதைவிட முக்கியமாக பெரியபுராணம் எதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்றால் இந்தத் தமிழகத்தில் வாழுகின்ற மக்களைத் திருத்துவதுதான் அதனுடைய முக்கிய குறிக்கோளாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழினம் கீழே விழுகின்ற நிலையை அடைந்துவிட்டது. சோழர்கள் மறையப் போகின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதை அறிந்த சேக்கிழார் இந்தத் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்ட வேண்டும், குறிக்கோள், இறையன்பு, தொண்டு ஆகியவற்றை அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டத்தான் பெரியபுராணத்தை இயற்றின்ார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே சமய நோக்கத்தைவிட சமுதாய நோக்கம் தான் அவருடைய முக்கிய குறிக்கோளாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்வோமேயானால் தவறு ஒன்றும் இல்லை. இவ்வாறு சொல்வதனால் பெரிய புராணத்தினுடைய dßFLDIL] அடிப்படையையோ, நோக்கத்தையோ குறை கூறுவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். சேக்கிழாரைப் பொறுத்த மட்டில் தேவார திருவாசகங்களை நன்கு பயின்றிருந்தார். ஆதலால், சமயத்தை வளர்ப்பதற்கு இவை போதுமானவை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். புதியதாக ஒரு காப்பியத்தை இயற்றி, அந்தச் சமயத்தை வளர்க்க வேண்டுமென்ற சூழ்நிலை தேவையே இல்லை. அது உருவாகவில்லை. ஆகவேதான், அவர் மக்களை நல்வழிப்படுத்தி ஒரு சிறந்த வாழ்க்கை உடையவர்களாகச் செய்தால், அது சமய வாழ்க்கைத் தானே அதனைத் தொடர்ந்து வரும் என்பதனை அறிந்திருந்தார். ஆகையால், பெரிய புராணத்தின் குறிக்கோளாக சமுதாய வளர்ச்சி—சமுதாயம் சிறந்த முறையில் முன்னேறிச் செல்வதைத் தம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதனை அறிந்து கொள்வோமேயானால், அது பெரிய புராணத்தை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.