சேக்கிழார் தந்த செல்வம்/இயற்பகையார்

11. இயற் பகையார்

மூன்றில் இரண்டு : இரண்டில் ஒன்று

சராசரி மக்களால் தமக்கு முடியாத ஒன்று என்றும், ஓரளவு நம்ப முடியாதது என்றும் கூறப்படுகின்ற நிகழ்ச்சிகளே பெரிய புராண அடியார்கள் வாழ்க்கையில் அதிகம் காணப்படும். ஓரளவு அறிவு வளர்ச்சியும், உணர்வு வளர்ச்சியும் அடைந்தவர்கள் பல நாயன்மார்கள் வரலாறுகளை, ‘இது இயல்பானதே’ என்ற கருத்தில் ஏற்றுக் கொள்ள முடியும். அத்தகையவர்களும் கூட, ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், கொடுமையானவை என்றும் கூறக் கூடிய இரண்டு வரலாறுகள் பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ளன.

அவை சிறுத்தொண்டர், இயற்பகையார் ஆகிய இருவருடைய வரலாறுகளே ஆகும். இவற்றுள் சிறுத்தொண்டர் வரலாறு, சராசரி மனிதரால் பின்பற்ற முடியாத நிகழ்ச்சிகளைக் கொண்டது என்றுதான் பலரும் கூறுவர். முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் கூடச் சிறுத்தொண்டரைப் போலத் தாம் செய்ய முடியாது என்றுதான் கூறுகிறார். தியாகத்தில் உச்ச கட்டம் என்று சொல்லப்படும் சிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூவர் வரலாறுளையும் 374 சேக்கிழார் தந்த செல்வம் போற்றுகின்றவர்கள்கூட ஏனோ இயற்பகையார் வரலாற்றை எடுத்துப் பேசுவதே இல்லை. ஈதல் புகார் நகரில், வணிகர், குலத்தில் பெரும் செல்வத்துடன் வாழ்ந்தவர் ஒருவர். என்ன காரணத்தாலோ அவரது இயற்பெயரை இவ் உலகத்தார் மறந்துவிட்டனர். சிவனடியார்கள் எது வேண்டும் எனக் கேட்டாலும் அதனை மறுக்காது கொடுக்கும் வழக்கம் உடையவர். தருதல் கொடுத்தல் என்பவை சிந்தித்து, ஆராய்ந்து, செய்யலாமா, வேண்டாமா என்ற சிந்தனைக்குப் பிறகே பலரிடம் நிகழும் செயலாகும். ஆராயாது தருதலைப் பிற் காலத்தில் இந்நாட்டவர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அதனாலேயே ஆற்றில் போட்டாலும் அளந்து போடு', 'பாத்திரமறிந்து பிச்சை இடு’ என்பன போன்ற எச்சரிக்கைகள் பழமொழி என்ற பெயரில் வழங்கத் தொடங்கின. ஈதல் இயல்பாக நிகழ வேண்டும் என்று கூறினார் வள்ளுவர். கொடுப்பதினால் புண்ணியம் கிடைக்கும், மறுமையில் இன்பம் கிடைக்கும் என்ற நினைவோடு கொடுப்பவர்கள் மிகப் பழங்காலத்திலும் இருந்திருப்பார்கள்போலும். அதையும் கடந்து, எதிரே நிற்பவர் யார்? அவர் கேட்கும் பொருள் அவருக்குத் தேவைதானா? அப்பொருளைத் தருவதால் நம்நிலை என்னவாகும்? இயற்பகையார் . 375 என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுப் பின்னர்க் கொடுப்பதை ஈதல் என்று நம்மவர் கொள்ளவில்லை. ஒரு பொருள் கேட்கப்பட்ட பொழுது அதே வினாடியில் அதைத் தருதல்தான் உயர்ந்த வள்ளன்மை என்று இந்நாட்டவர் கருதினர். வேள் பாரி முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தமையின், பரந்து ஓங்கு சிறப்பின் பாரி ஆனான். இத்துணை விரிவாக இதுபற்றி இங்கே பேசப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. கொடுப்பவர் களில் இத்தகைய மனநிலை உடையவர்களும் உண்டு என்பதை அறிந்து கொண்டால், இயற்பகையாரை அறிந்துகொள்ளுதல் ஒரளவு எளிதாக இருக்கும். இவற்றையெல்லாம் மனத்துட் கொண்ட சேக்கிழார் புகாரில் வாழ்ந்த வணிகள் ஒருவன் சிவனடியாருக்கு எதையும் கொடுக்கும் இயல்பைக் கூறும்பொழுதே தேவையில்லாமல் உலகியல் பகையார் என்ற சொற்களைப் பெய்கின்றார். 鐵鑫 மிக்கசீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே இக்கடல்படி நிகழமுன் கொடுக்கும் இயல்பின் நின்றவர்; உலகுஇயற் பகையார்.” . (பெ. பு-405) (கடல் படி : கடல் சூழ்ந்த உலகம் இந்த இரண்டு அடிகளில், மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் என்ற சொற்கள் ஒன்றுக் கொன்று 376 சேக்கிழார் தந்த செல்வம் முரணானவை. அடியார்கள் யாராக இருந்தாலும் என்பது சற்றுக் குழப்பத்தைத் தருவது. அடியார்கள் என்று சொல்லப்படுபவர் ஒரு வகையினர். அவருள் வேறுபாடு இருக்கக் காரணமே இல்லை. வேறுபாடுகள் தோன்றினால் அடியார்கள் தொகுதியில் இருந்து விலக்கப்படும் சூழ்நிலை உருவாகும். இவற்றை யெல்லாம் நன்கு அறிந்த பின்னும் தெய்வச்சேக்கிழார், மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் என்ற சொற்களைப் பெய்வது, வரலாற்றைப் படிக்கும் நம்மை எச்சரிக்கை செய்யவே ஆகும். யாராக இருந்தாலும், அவர் யாரென்ற ஆராய்ச்சியில் புகாமல், அவர்கள் வேண்டுவது எதுவாக இருப்பினும், வேறு வினாவை எழுப்பாமல் தருகின்ற இயல்பினை உடையவர் பெயர் தெரியாத புகார் வணிகர். பார்வையிலேயே இந்த இரண்டடிகளை மறுபடியும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினால் சில அடிப்படை உண்மைகளை மனத்தில் கொள்ள முடியும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான சில இயல்புகள் உண்டு. ஒருவர் நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிரே ஒரு சிவனடியார் வருகிறார். எதிரே ஒருவர் வருகிறார் என்ற பொதுப்பார்வையும், அவருள் இவர் சிவனடியார் என்ற சிறப்புப்பார்வையும், அந்தச் சிவனடியாருக்குள் இன்ன பெயருடைய இவர் இயற்பகையார் , 377 என்ற சிறப்பினுள் சிறப்புப் பார்வையும் நிற்கின்ற வணிகருக்குத் தோன்றிவிடுகின்றன. இம்முறை ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவருக்கும் உரிய ஒன்றாகும். பொதுப்பார்வை தோன்றிய உடனேயே சிறப்புப்பார்வை உடனடியாக வந்துவிடும். மூன்றாவதாக உள்ள சிறப்பினுள் சிறப்புப் பார்வையும் ஒரே வினாடியில் தோன்றிவிடுவதாகும். இந்த மூன்றாவது பார்வையின் முடிவு, இவர் நமக்குத் தெரிந்தவர், இன்ன பெயருடையவர் என்ற முறையிலோ-நமக்கு முன்பின் தெரியாதவர் என்ற முறையிலோ இரண்டின் ஒன்றில் முடிந்துவிடும். ஆகவே, பொதுப்பார்வை, சிறப்புப்பார்வை, சிறப்பினுள் சிறப்புப் பார்வை ஆகிய மூன்றும் எத்தகையோருக்கும் நிகழும் என்பதை இதன்மூலம் அறிகின்றோம். புகார் நகரத்து வணிகரைப்பற்றிக் கூறவந்த சேக்கிழார் இந்த மனிதர் நம்போன்றவர்களிலிருந்து மாறுபட்டவர், பெரிதும் மாறுபட்டவர், முற்றிலும் மாறுபட்டவர் என்பதை நம் கருத்தில் பதிய வைக்கின்றார். அடியார்கள் யார் எனினும், என்றதனால் அடியார்கள் என்ற பொதுப்பார்வை தவிர, ஏனைய இரண்டு பார்வைகளும் இந்த வணிகரிடம் இல்லை என்பதைக் குறிக்கிறார் சேக்கிழார். 378 சேக்கிழார் தந்த செல்வம் அடுத்து, சிவனடியார் வேடத்துடன் எதிரே நிற்கும் ஒருவர் அவர் எவராக இருப்பினும், வேண்டும் என்று கேட்பதை இல்லை’ என்று கூறாமல் தருதலை இயல்பாக உடையவர் என்கிறார் சேக்கிழார். மூன்று அடிப்படைகள் இயற்பகையார் புராணம் பாடவந்த சேக்கிழார். இந்த இரண்டாவது பாடலிலேயே மூன்று முக்கியமான அடிப்படைகளை நிறுவி, அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தில், மனித மனவியலின் ஆழத்தில் சென்று மூன்று எல்லைகளை வகுக்கிறார். ஒன்று, எதிரே வருபவர்களைப் பொதுப்பார்வை, சிறப்புப்பார்வை, சிறப்பினுள் சிறப்புப் பார்வை என்ற மூன்று நிலைகளில் நாம் நிர்ணயிப்பதுபோல நிர்ணயிக்காதவர் பூம்புகார் வணிகர். இரண்டாவது, எதிரே இருப்பவர்களைச் சிறப்புப் பார்வை, சிறப்பினுள் சிறப்புப் பார்வை என்ற முறையில் ஆயாமல் அவர்கள் அனைவரையும் தம்மிடம் ஏதோ ஒன்றைப் பெற வந்த சிவனடியார்கள் என்றே நினைக்கின்றார். அவர்கள் கேட்பதை இல்லை என்று மறுக்காமல் எப்பாடுபட்டாயினும் தேடித்தருவது இந்த வணிகரின் இரண்டாவது நிலையாகும். மூன்றாவது நிலை ஒன்றுண்டு. எந்தச் சராசரி மனிதனும் எதிரே உள்ள ஒன்றைக் கேட்டால் இயற்பகையார் , 379 அந்தச் சராசரி மனிதனின் மனநிலையில் சில மாற்றங்கள் தோன்றியே தீரும், கேட்கப்பட்ட பொருள் யாது? அந்தப் பொருள் தன்னிடம் உள்ளதா, அந்தப் பொருளுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு (சம்பந்தம்) எத்தகையது? அப்பொருளைக் கொடுக்கத் தனக்கு உரிமை உண்டா? அப்படி கொடுக்க வேண்டுமானால் அப் பொருளின் சம்மதத்தைப் பெற வேண்டுமா?- என்ற வினாக்கள் தோன்றவே செய்யும். இந்த வினாக்கள் தோன்றாமல் இருக்க ஒரே வழி அப்பொருள் அஃறிணையாக இருக்க வேண்டும். அதுவும் தனக்கு அதிகம் தொடர்பில்லாததாய் இருக்க வேண்டும். அப்படி இருக்குமானால் அதை யாராவது கேட்கும்பொழுது மூன்றாவது நிலையில் உள்ள பிரச்சினை தோன்றவே தோன்றாது. இப்பொழுது இந்தப் புகார் வணிகர் யார், எது கேட்டாலும் இல்லை என்னாது தருவதை இயல்பாகக் கொண்டிருந்தார் என்கிறார் சேக்கிழார். அதாவது, தருவதைக் கடமையாகக் கொண்டு தானமாக, புகழுக்குரியதாக அவர் கொடுக்க வில்லை. கொடுக்கும் இயல்பினர் என்றால் சிந்தித்துப் பிறகு கொடுக்கும் நிலை அவரிடம் இல்லை. என்பது தெளிவு, நடக்கப் பழகிவிட்ட கால்களும், கொடுக்கப் பழகிவிட்ட கைகளும் ஒவ்வொரு முறையும் தம் தலைவன் நடக்கச் சொல்கிறானா? கொடுக்கச் சொல்கிறானா? என்று ஆராய்வதே இல்லை. 380 சேக்கிழார் தந்த செல்வம் நடப்பதும், கொடுப்பதும் அவற்றுடைய இயல்பாக மாறிவிடுகின்றன. எந்த ஒன்றும் இயல்பாக மாறிவிட்டால் அங்கே நின்று நிலைத்து ஆராய்வதற்கு இடமே கிடையாது. இந்த அடிப்படையை நன்கு புரிந்துகொண்டால் லொழியக் கொடுப்பதையே இயல்பாகக் கொண்ட புகார் வணிகரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வது கடினம். உடல் உணர்வும் தீண்டாத நிலை அப்படிப் புரிந்துகொள்வதிலும் சில நுணுக்கங்கள் உண்டு என்று எச்சரிக்க வருகிறார் தெய்வச் சேக்கிழார். முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர், என்று கூறிவிட்ட பிறகு, உலகியற் பகையார் என்று ஏன் சொல்ல வேண்டும் என்ற வினாவை எழுப்பினால் ஓர் உண்மை விளங்கும். முன்னர்க் கூறப்பட்ட மூன்று நிலைகளில் மூன்றாவது நிலையை விட்டு நீங்குவது மிகப் பெரிய செயலாகும். அகப் பற்று, புறப்பற்று ஆகியவற்றைத் துறந்தவர்கட்கும் இந்த மூன்றாவது நிலை வருவது கடினம். இதைப் புரிந்துகொள்ள ஒரு சிறு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறுவர் இந்நாட்டவர். வைணவ சமயத்தைச் சேர்ந்த ஒரு பெருஞ்செல்வர், எல்லா வற்றையும் விட்டுத் துறவியாக மாறி ஒரு மடாலயத்தின் தலைவராகவும் ஆகிவிட்டார். அவர் இயற்பகையார் 381 பட்டம் ஏற்கும் விழாவைப் பெரிதாகக் கொண்டாடிய அன்பர்கள், பக்தர்கள், தொண்டர்கள் ஆகியவர்கள் அவரை ஒரு பல்லக்கில் ஏற்றுவித்துத் தாங்களே சுமந்து சென்றனர். பல்லக்கில் அமர்ந்த சுவாமிகள் வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பித் தெருவில் இருக்கும் மாட மாளிகைகளைப் பார்த்துக்கொண்டே புன்முறுவலுடன் சென்றார். அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அணுக்கத் தொண்டர் ஒருவர், சுவாமிகள் என்ன பார்க்கிறீர்கள்? என்று வினயத்தோடு கேட்டார். ஜீயர் சுவாமிகள் மந்தகாசத்துடன் இந்த வீடுகள், தோட்டங்கள், காலிமனைகள் ஆகிய அனைத்தும் பூர்வாசிரமத்தில் நம்முடையவை என்று சொன்னாராம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை மனத்துட்கொண்டுதான் வியாக்கியான கர்த்தாவாகிய பெரியவாச்சான்பிள்ளை, எல்லாவற்றையும் விட்டுக் கடைசியாக, விட்டேன் என்ற எண்ணத்தையும் விட்டு வாழ்வதே அகப்புறத் துறவு அடைந்தவர் களின் வாழ்க்கையாகும், என்று கூறுகிறார். இந்த முழுத்துறவை அடைந்தவர்கள்கூட உடம்பு உணர்விலிருந்து (தேகப்பிரக்ஞை) விடுபடுவது கடினம். இந்தத் துறைவு நிலை அடைந்தவர்கள். உடம்பு படும் துன்பத்தைப் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்வார் களே தவிர, அந்த உடம்பு படும் துன்பத்தை அறியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை இவர்களிடம் இராது அண்மைக்காலத்தில் 382 சேக்கிழார் தந்த செல்வம் திருவண்ணுமலையில் வாழ்ந்த சேஷாத்திரிசுவாமிகள் பல நேரங்களில் பலருடைய உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அந்த மகான் என்ன செய்கிறார் என்பதை அறியாத அப்பாவி மக்கள் அவரை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். அவர் உடம்பில் எத்தனை அடி விழுந்தாலும், அடி விழுவது தம்முடைய உடம்பில் என்ற எண்ணமே இல்லாமல் அதை வேடிக்கை பார்த்துச்சிரித்துக் கொண்டிருப்பாராம். இதுதான் மேலே கூறிய மூன்றாவது நிலைக்கும் பல படிகள் மேலே உள்ள தேகப்பிரக்ஞை இழந்த நிலை ஆகும். இப்படிப்பட்டவர்கள் ஏனைய மக்களைப் போலவே உண்டு, உடுத்தி, ஏனைய மக்களோடு தொடர்பு கொண்டு, பேசி, தம் காலத்தைக் கழிப்பர். என்றாலும், என்ன நிகழ்ச்சி நடைபெற்றாலும், யாருடன் பேசினாலும் இவர்கள் பேச்சு வேறு எங்கிருந்தோ யாரிடமிருந்தோ வருகிறது என்ற எண்ணத்தை உண்டாக்கும். சராசரியர் வழி அன்று மேலே கூறப்பட்ட கருத்துக்களை ஒரு முறைக்கு, இரு முறையாகப் படித்துச் சிந்தித்து தெளிந்த பிறகு இயற்பகையார் வரலாற்றைச் சேக்கிழார் கூறும் முறையில் பார்த்தால் அதில் வியப்பதற்கோ, வெறுப்பதற்கோ, எள்ளி நகையாடுவதற்கோ எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும் நூற்றுக் இயற்பகையார் 383 கணக்கான ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான மக்களிடையே ஒரு சேஷாத்திரி சுவாமிகள்தான் தோன்றினார். அதேபோலப் புகார் நகர வணிகப் பெருமக்களிடையே ஒருவர் தோன்றினார். ஏனையவர்களைப்போல அவரும் வாணிகம் செய்தார், திருமணம் செய்துகொண்டார்; ஏனையவர்கள் போல வாழ்ந்து வந்தார். ஆனால் தொடக்கத்திலிருந்தே அவருடைய வாழ்க்கை சராசரி மனிதர்கள் செல்லும் வழியில் செல்லவில்லை. பெருவணிகர் ஆதலால் அவர் எதிரே சென்று அவர் வாழ்க்கை சரியாக நடைபெறவில்லை என்று கூற யாருக்கும் துணிவில்லை. ஆனால் அவர்களுடைய மனத்தில் இயற்பகையை பைத்தியம் என்றே முடிவு கட்டியிருந்தனர். சந்தர்ப்பம் வரும் பொழுது அவர்கள் அதனைச் சொல்லிக் காட்டுகின்றனர். இம்மூன்றாவது நிலையையும் தாண்டி தேகப் பிரக்ஞை இல்லாமல் இருக்கின்ற பெரியவர்களை இவ் உலகம் தவறாமல் பைத்தியம் என்றே கூறி வந்துள்ளது. பெரியபுராணத்தில் வரும் அறுபத்து மூன்று அடியார்களில் கண்ணப்பர், இயற்பகையார் என்ற இருவர்மட்டுமே இந்நிலை அடைந்தவர்கள். கண்ணப்பர் இந்நிலை அடைந்தது காளத்தி மலையைக் கண்டதிலிருந்துதான். அதன்பிறகு அவர் வாழ்ந்த காலம் ஆறே நாட்கள்தான். ஏழாவது நாள் பரசிவம் என்ற பெரிய அன்பில் கண்ணப்பன் என்ற சிறிய அன்பு முழுவதுமாகக் கரைந்து விடுகிறது. 384 சேக்கிழார் தந்த செல்வம் அந்த ஆறு நாட்களில் அவர் தேகப் பிரக்ஞை இல்லாமல் வாழ்ந்தார் என்பதைத் தெய்வச் சேக்கிழார் நேரடியாகக் கூறாமல் நிகழ்ச்சிகளாகக் கூறுகிறார். அது இந்நூலில் முன்னர்க் கூறப் பெற்றுள்ளது. இயற்பகையாரைப் பொறுத்தமட்டில் ஒரளவு வித்தியாசமான வாழ்க்கை வணிகரான தாலும் திருமணம் ஆனவர் ஆனதாலும் அன்றாட மக்களோடு கலந்து உறவாட வேண்டிய கட்டாயம் இயற்பகைக்கு இருந்தது. இவையெல்லாம் அவருடைய உடம்பு வாழ்க்கையின் புற வாழ்க்கைப் பகுதிகளே ஆகும். அகங்கார, மமகாரம் கடந்து தேகப் பிரக்ஞை அற்று வாழ்கின்ற ஒருவர் எதிரே உள்ளவர்களை அறிந்துகொள்வதும் அடையாளம் கண்டு கொள்வதும் இயலாத காரியம். பல்லாண்டுகள் பழகிய காரணத்தால் கேட்ட கேள்விக்கு விடை அளிப்பதும் சில சொற்களைக் கூறுவதும் இயல்பாக அமைந்து விட்டன . குறித்து வேண்டிய மூன்றாவது நிலையின் முதிர்ந்த படியில் உள்ள இயற்பகையாரிடம் ஓர் அந்தணன் வருகிறான். அவனுடைய வேடம் தூர்த்தவேடம் என்று சேக்கிழாரே கூறுகிறார். அவனை ஏன் இயற்பகை கண்டு கொள்ளவில்லை? வணிகனாக இருக்கின்ற ஒருவனுக்கு ஒருவரைப் பார்த்தமாத்திரத்தில் எடைபோடும் சக்தி இருப்பது இயல்பே ஆகும். காரைக்கால் அம்மையார் கணவன் விஷயத்தில் இதனைக் கண்டோம் எதிரே நிற்பவன் தூர்த்தனா, தூயவனா, சிவனடியானா என்று பகுத்து உணரும் நிலையில் இயற்பகை இல்லை. தெளிவான இந்த முடிவை முதலில் அறிந்துகொள்வது பெரும் பயனை விளைக்கும். இந்த வேடத்துடன் வந்த மறையவன் இயற்பகையாரை நோக்கி அவரைச் சிக்க வைக்கும் ஒரே நோக்கத்துடன் எவ்வளவு சாமார்த்தியமாக பேசுகிறான் என்பதைத் தெய்வச் சேக்கிழார் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டு கிறார். "கொன்றைவார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டிய குணம்எனக் கொண்ட ஒன்றும் நீர்எதிர் மறாதுஉவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும் பால்ஒன்று வேண்டி இன்று நான்இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்' என்றான். (பெ. பு-409) இப்பாடலிலிருந்து ஒன்றை நாம் அறிய முடிகிறது. கேட்கத் தகாத ஒன்றுக்கு வந்தவன் அடி போடுகிறான் என்பதை நாம்கூட எளிதாக அறிந்து கொள்ள முடியும். இப்பொழுது அவன் கேட்டவற்றை விரிவாகச் சிந்தித்துப் பார்க்கலாம். அடியார்கள் வேண்டிய ஒன்று என்று சொல்லி இருந்தாலே அது போதுமானதாகும். வேண்டிய ஒன்று என்றுமட்டும் குறிப்பிட்டுவிட்டால் 386 சேக்கிழார் தந்த செல்வம் ...” தன்னிடம் இல்லாமல் போனாலும், அடுத்தவரிடம் உள்ளது பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவிடலாம் அல்லவா? இந்த நிலையைப் போக்குவதற்காகவே, 'குறித்து வேண்டிய' என்று கூறுகிறான் வந்தவன். இங்கே குறித்து’ என்ற சொல் இயற்பகையினிடம் முன்னரே உள்ள ஒரு பொருளைச் சுட்டி நிற்கின்றதாகும். உன்னிடத்தில் உள்ள இந்தப் பொருளை வேண்டி வந்தனம்’ என்றால், மன்னிக்க வேண்டும், அதனைத் தர முடியாது’ என்று இயற்பகை கூறிவிடலா மல்லவா? تزي (ت 6 كي மாற்றுவதற்காக, இன்னது என்று குறிப்பிடாமல் 'குறித்து வேண்டிய' என்றுமட்டும் கூறிவிட்டான். இவ்வளவு விரிவாக வந்தவன் பேசியிருக்கத் தேவையே இல்லை. அவனுடைய பேச்சில் உள்ள துணுக்கத்தையும் மறைபொருளையும் அறிந்து கொள்ளும் நிலையில் இயற்பகை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் அவர் சஞ்சரித்துக் கொண்டிருக் கின்ற உலகத்தில் இந்தச் சொற்கள் காதில் சென்று விழுகின்றன. - எனவே, மிக எளிதாக இயற்பகையார் விடை கூறி விடுகிறார். வந்தவன் குறித்துவேண்டிய என்று கூறியதால், “தாங்கள் எதனைக் குறிப்பாக வேண்டுகிறீர்கள் என்று கேட்டிருக்கலாம். சாதாரண நிலையில் உள்ள எந்த மனிதனும் இதனைத்தான் இயற்பகையார் 387 செய்வான். ஆனால், முன்னர்க் குறிப்பிடப்பட்ட நாலாவது நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இயற்பகையாருக்கு, நின்பால் உள்ள ஒன்றை வேண்டி வந்தனம். அதனை நீ கொடுக்க முடியும் என்றால் மேலே சொல்லலாம் என்றான். விரும்பி வந்தது இன்னது என்று கூறாமலேயே இவரைச் சிக்க வைக்கப் பார்க்கிறான். மிகச் சாதாரணமான சராசரி மனிதன் கூட, 'உனக்கு என்ன வேண்டும் என்று சொல். அது முடியுமா என்று பார்க்கிறேன்’ என்றுதானே விடை கூறி இருப்பான்? -உண்டாயின் அடியவர் உடைமை இப்பொழுது, இயற்பகையார் கூறிய விடையைப் பின்வரும் பாடலில் காணலாம். என்ன, அவ்உரை கேட்டுஇயற் பகையார் 'யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை; ஐயம் இல்லைநீர் அருள்செயும் என்ன, 'மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு'என அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுதுஉரை செய்வார். - (பெ. பு-410) 388 சேக்கிழார் தந்த செல்வம் இயற்பகையார் இப்பாடலில் பயன்படுத்திய சொற்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். 'யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்'- எந்த ஒரு பொருளாக இருப்பினும் என்னிடத்து இருக்கிறது என்றால், அது சிவனடியார்களின் உடைமை என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என்னிடம் உள்ள எல்லாவற்றிற்கும் உடைமையாளர்கள் சிவனடியார்களே ஆவர். 'உடைமை என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டதால், சிவனடியார் களுக்குச் சொந்தம், சிவனடியார்களே உரிமை யாளர்கள் என்ற பொருளையெல்லாம் விட்டுவிட்டு, என்பால் உள்ள நிலையியற் பொருள், இயங்கியற் பொருள், உயர்திணைப் பொருள், அஃறிணைப் பொருள் ஆகிய எதுவாக இருப்பினும் அவை என்பால் இருக்கின்றன என்பதால் நான் அவற்றின் உரிமையாளன் என்று தயவுசெய்து யாரும் நினைந்துவிட வேண்டாம். உடைமையாளர்கள் என்பவர்கள், மாதவன்தன் அடியார்கள். மேலே கூறப்பெற்ற நால்வகைப் பொருளில் எதுவாக இருப்பினும், அவை அவர்தம் உடைமைகள், @oujjī)(5 (p(up 2 famoud (absolute ownership) பெற்றவர்கள் சிவனடியார்களே ஆவர் என்பது கருத்து. அப்படியானால் இயற்பகையாரின் நிலை என்ன ? மிக அழகாக இயற்பகையே விடை கூறுகிறார். 'யாதும் ஒன்றும் என்பக்கல் உண்டாகில்’ என்று கூறுவதால், தம்பால் இருக்கின்ற பொருள் களைக்கூட அவர் அறிந்துவைத்தவராகத் தெரிய இயற்பகையார் , 389 வில்லை. உண்டாகில்’ என்ற சொல், என்பால் இருக்குமேயானால், என்ற பொருளையே தரும். சிவனடியார்களின் இந்த உடைமைக்குக் காவலராகவோ பாதுகாவலராகவோ முகவராகவோ கூடத் தாம் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. இம் மூன்று முறைகளில் எந்த முறையிலாவது இயற்பகையார் இருந்திருந்தால் தம் அதிகார எல்லைக்குள் இருக்கும் நால்வகைப் பொருளையும் அவர் கணக்கிட்டு அறிந்திருக்க வேண்டும். இந்தப் பொறுப்பைக்கூட அவர் ஏற்றுக்கொள்ளாமையின், 'யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் என்று கூறிவிட்டார். நம்மிடம் அளவுகருவி இல்லை தொடக்கத்திலிருந்து இதுவரை நடந்தவற்றைக் கவனித்தாலே இயற்பகை, இந்த உலகிடை வாழும் எந்த மனிதரையும்போன்றவர் அல்லர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியும். வேறு ஈடு இணை சொல்ல முடியாத, தேகப்பிரக்ஞைகூட இல்லாமல் சுற்றிவரும் ஒரு மனிதரையோ அவர் செய்யும் செயல்களையோ நம்முடைய எல்லைக்குட்பட்டு, நாம் பயன்படுத்தும் அளவுகோள்களைக் கொண்டு அளவிட்டு அறிய முற்படுவது பெருந்தவறாக முடியும். நாம் அளவிட முற்படும் எந்த அளவு கருவியும் நம்மால் கண்டு, கேட்டு, உற்று அறியும் உலகியல் எல்லைக்குள் இயங்குவனவாகவே இருக்கும். எனவே, 390 சேக்கிழார் தந்த செல்வம் இயற்பகையாரை நினைக்கும் பொழுதோ அவர் செய்த செயல்களைப்பற்றி ஆராய முற்படும் பொழுதோ அவர் இந்த உலகியலுக்கு முற்றிலும் வேறானவர் என்ற கருத்தை நாம் மறந்து விடக்கூடாது அதற்காகவே முதற் பாட்டிலேயே, இவர் உலகியல் பகையார் என்று சேக்கிழார் எச்சரிக்கை தந்துள்ளார். அதை மறந்துவிட்டு'மனைவியை ஒருவன் கேட்டால் கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் புகுவது அறியாமையின் எல்லை ஆகும். இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படையே, ஒருவனுக்கு உரிமை உடைய மனைவி என்பவளைப்பற்றியதே ஆகும். ஐம்பொறிகளும் ஐந்து புலன்களும் நான்கு அந்தக்கரணங்களும் பஞ்ச பூதங்களால் ஆன உடம்பும் சேர்ந்துள்ள ஒரு சராசரி மனிதனை எடுத்துக்கொண்டால் அவனுடைய அகங்காரத்தின் விளைவாக உள்ள 'அவன்’ எண்ணிக்கையில் முதலாவதாக நிற்பவன். அந்த ஒன்று என்ற எண்ணிக்கையின்பின் வரும் அவன் மனைவி மக்கள், உறவுகள், அவனுடைய சொத்துக்கள் ஆகிய அனைத்தும் பூஜ்யங்களாக நின்று அந்த ஒன்றை வலிமைப்படுத்தும் உரிமைப் பொருள்களாகும். மனைவி, மக்கள் என்ற உறவுகள்-அவற்றுக்குரிய முறைமைகள், கடமைகள் என்பவையெல்லாம் ஒன்று என்று எண்ணப்படும் அந்தத் தலைவன் இருக்கின்ற வரையில்தான். அவன் என்ற ஒருவன் இருந்தால் இயற்பகையார் 391 தானே, அவன் மனைவி, அவன் மக்கள் என்ற உறவுகள் விரியும். அந்த ஒருவன் இறந்துவிட்டாலோ, உயிரோடு இருந்தும் நீண்ட நாட்களாக நினைவிழந்த நிலையில் (deep coma) இருந்துவிட்டாலோ, மனம் பேதலித்த நிலையில் இருந்தாலோ இவை அனைத்தையும் கடந்து வேறு எங்கோ அவனது மன நிலை பதிந்துவிட்டாலோ அப்பொழுது அவனுடைய மனைவி, மக்கள், பொருள் என்ற சொற்கள் அவனைப் பொறுத்தமட்டில் அர்த்தமற்ற சொற்களாகும். இந்த மனநிலையில் உள்ளவனுக்கு மனைவி என்ற சொல்லும், மக்கள் என்ற சொல்லும் தரையில் கிடக்கும் கற்கள் என்ற சொல்லும், புல் கட்டு என்ற சொல்லும் வேறுபாடற்ற சொற் கூட்டங்களாகும். இந்த நிலையில் உள்ள ஒரு மனிதனை, மனைவியைப் பிறருக்கு ஈந்தவன் என்று பேசுவதோ, எள்ளி நகையாடுவதோ அறிவினம். மேலே உள்ள வாக்கியத்தில் மனைவி என்ற சொல்லை எடுத்து விட்டு, மடியில் இருந்த கூழாங்கற்களை, தன் இடையில் கட்டியிருந்த துணியை, தான் உண்டு கொண்டிருந்த உணவை என்ற சொற்களைப் பொருத்திச் சொன்னாலும் அதே பொருளைத்தான் தரும். காரணம், இயற்பகையைப் பொறுத்தமட்டில் கட்டிய மனைவிக்கும் வீட்டில் இருந்த சாமான்களுக்கும் வாணிகம் செய்ய வைத்திருந்த 392 சேக்கிழார் தந்த செல்வம் பொருட்களுக்கும் அவர் எந்த வேறுபாடும் கண்டதில்லை. இத்தகைய மனநிலையைத்தான் கண்ணப்பர் புராணத்தில் யாக்கைத் தன் பரிசும், வினை இரண்டும் என்ற பாடல் வரிகள் மூலம் (பெ.பு-803) சேக்கிழார் பேசுகிறார். ஆழ்மனத்தைத் தட்டி எழுப்பிட வந்தவன் என்ன கேட்டான் என்று கூறவந்த சேக்கிழார் மிக அழகாகப் பின்வரும் பாடலில் கூறுகிறார். மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து துய தொண்டனார் தொழுதுஉரை செய்வார். • (பெ. பு-410) இந்த இரண்டு அடிகளில் இயற்பகை மனநிலையை நுணுக்கமாக விளக்குவதற்குரிய பல சொற்கள் பெய்யப்பட்டுள்ன. மன்னு காதல் உன் மனைவியை’ என்று வந்தவன் சொல்வது, இயற்கையின் மனத்தின் ஆழத்தில் எங்காவது ஒரு மூலையில் தான் என்ற அகங்காரமோ, தன்னுடைய அழகிய இளம் மனைவி இயற்பகையார் 393 என்ற மமகாரமோ ஒளிந்துகொண்டிருந்தால் அதனைத் தட்டி எழுப்பவேயாகும். . ஒளிவு மறைவின்றி இதற்கடுத்தபடியாக, எதிரே சொன்ன போதிலும் என்ற சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சாதாரணமானவனும் அறிவு விளக்கம் பெறாதவனும் கல்வி கேள்விகளில் அதிகம் தோயாதவனும் ஆகிய ஒரு சராசரி மனிதனின் எதிரே உன் மனைவியை வேண்டி வந்தேன்’ என்று கூறியிருப்பானேயாகில், கூறினவன் கதி என்னவாகும் என்பதை நாம் நன்கு அறிவோம். எனவேதான் சேக்கிழார்-எதிரே சொன்ன போதிலும், ஒளிவு மறைவாகக்கூட இல்லாமல் இயற்பகையின் முகத்துக்கெதிரே கூறிய போதிலும் என்று கூறுகிறார். - எதிரே நிற்கும் அந்தணன் இவ்வாறு கூறியவுடன் இயற்பகை என்ன செய்தர்ர் என்பதைப் பின்வரும் வரிகளில் சேக்கிழார் கூறுகிறார். "-முன்னையின் மகிழ்ந்து - தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்.” - (பெ. பு-410) "இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு." - (பெ. பு-41) 394 சேக்கிழார் தந்த செல்வம் எந்த ஒரு சராசரி மனிதனும் எந்தச் சொல்லைக் கேட்டால் சினத்தின் உச்சிக்குச் சென்றுவிடுவானோ, அத்தகைய சொல்லை, இயற்பகையின் எதிரே அந்தணன் சொல்லியபொழுது, தூய தொண்டனார் ஆகிய இயற்பகை மகிழ்ந்தாராம். மகிழ்வதற்குரிய காரணம் யாது? மூன்றாவது, நான்காவது நிலைகளில் உள்ள பக்தர்கள், அடியார்கள், தொண்டர்கள் எதிரே உள்ள சிவனடியார்கள் எதை விரும்பிக் கேட்டாலும் அதைக் கொடுப்பதுதான் தம் வாழ்வின் குறிக்கோள் என்று கருதி வாழ்ந்தவர்கள். கேட்கப்பட்ட பொருள் மணமகளின் கூந்தலாக இருப்பினும் (மானக்கஞ்சாறனார்) பெற்ற பிள்ளையை அறுத்துக் கறி சமைப்பதற்காக இருப்பினும் (சிறுத் தொண்டர்) ஒரு சிறிதும் மனம் துளங்காமல் அதனைத் தருவதுதான் இவ் வடியார்களின் வாழ்க்கைக் குறிக்கோளாகும். இந்த வரிசையில் இவர்களைவிட ஒரு படி முன்னே நிற்பவர் இயற்ப்கை நாயனார் ஆவார். - - - - “மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என்ற சொற்கள் எதிரே நிற்பவன் வாயிலிருந்து வந்தாலும்-உன் மனைவி, அவளை வேண்டி வந்தேன்’ என்ற இரண்டு கருத்துக்கள்தான் இயற்பகை செவியில் படுகின்றன. இயற்பகையார் 395 'எனக்கு உள்ளதே! இப்பொழுது இயற்பகை கொடுத்த விடையை பார்க்க வேண்டும். இது எனக்கு முன்பு உள்ளதே, வேண்டி எம்பிரான் செய்த பேறு. இவ்வாறு இயற்பகை கூறக்காரணம் என்ன? எம்பிரான் (எதிரே நிற்கும் அந்தணன்) எனக்குச் செய்த பேறு-எனக்குச் செய்த பேருபகாரம் என்று இயற்பகை மகிழ்ந்து கூறியது எதனை? எதிரே நிற்கும் அந்தணன் இவரிடம் ஒன்றை வேண்டிக் கேட்டானே தவிர, எந்த உபகாரமும் செய்யவில்லையே? அப்படி இருக்க, எம்பிரான் செய்த பேறு என்று இயற்பகை எதனைக் குறிக்கிறார்: சிவனடியார்கள் ஒன்றை கேட்டு விட்டால், அதனைக் கொடாமலோ கொடுக்க முடியாமலோ இருப்பது மாபெரும் பாதகம் என்று நினைக்கின்றவர்கள் இந்த அடியார்கள். குறித்து வேண்டியது' என்று எதிரே உள்ள அந்தணன் கூறிய பொழுது, தன்னிடம் இல்லாத ஒன்றை கேட்டு விடுவானோ என்ற ஐயம் இயற்பகை மனத்தில் இருந்திருக்கக் கூடும். அதனால்தான் அந்தணன் அவரிடம் இருக்கின்ற பொருளாகிய மனைவியை வேண்டி வந்தனென் என்று சொன்னவுடன் இயற்பகையார் மகிழ்ச்சி அடைகின்றார். மகிழ்ச்சிக்குக் காரணம், தன்னிடம் உள்ள பொருளை எதிரே உள்ள அந்தணர் கேட்டார் என்ற மகிழ்ச்சியே ஆகும். 396 சேக்கிழார் தந்த செல்வம் கலக்கமும் தெளிவும் இதன்பிறகு நடந்தவற்றைச் சேக்கிழார் சொல்லிக் கொண்டு செல்வதில் அன்றைய சமுதாய நிலையை நாம் அறியமுடிகிறது. வீட்டினுள் இருக்கும் மனைவியிடம் சென்று, இயற்பகை, 鲨蝶 இன்று உனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன்' என்ன மதுமலர்க்குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்தபின், மற்று இது மொழிவார். (பெ. பு-41) மேற்கண்ட அடிகளில் இயற்பகையாரின் மனைவியைப் பற்றிடக கவிஞர் ஒரு விளக்கம் தருகிறார். எவ்விதமான மனமாறுபாடும், குழப்பமும் இல்லாமல் தம்மிடம் உள்ள சாமான்களை எடுத்துக் கொடுக்கும் அதே மனநிலையில், பெண்னே! இந்தத் தவவேடம் பூண்ட அந்தணனுக்கு உன்னை நான் தந்துவிட்டேன். இவ்வாறு கூறும் இயற்பகையினிடம் எவ்விதக் குழப்பமும் இல்லை. - இச்சொற்களைக் கேட்ட அந்த அம்மையாரின் எதிர்ச் செயல் என்ன என்பதைக் கவிஞர் ஒன்றரை அடிகளில் கூறிவிடுகிறார். எந்தக் கணவனும் சொல்லத் துணியாத சொற்களைத் தம் கணவர் பேசி விட்டதை அம்மையார் காதால் கேட்டுவிட்டார். இத்தனை நாட்கள் அவரோடு வாழ்க்கை நடத்திய இயற்பகையார் . 397 அம்மையாருக்குக் கணவரின் மனநிலை எத்தகையது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே ஆகும். தம் கணவர் ஏனைய வாணிகர்களைப் போன்று ஒரு சராசரி வணிகர் அல்லர், உயர்ந்த மனநிலையில் உள்ள சிவனடியார் என்பதை அம்மையார் அறிவார். அந்த அம்மையார்கட்ட இயற்பகை இந்த அளவுக்குச் செல்வார் என்பதைக் கற்பனை செய்துகடப் பார்த்ததில்லை. ஆனாலும் ஒரு வினாடி நேரத்தில் அதுவும் நடந்துவிட்டது. அந்த வினாடியில் அம்மையாரின் உள்ளக்கிடக்கை யாது என்பதைக் கூறவந்த சேக்கிழார், கலங்கி’ என்ற ஒரே சொல்லில் அவரது மனநிலையைக் கூறிவிட்டு, அந்த ஒரு வினாடிநேரக் குழப்பத்திற்குப் பிறகு அவருக்குத் தெளிவு ஏற்பட்டது என்பதையும் குறிக்கிறார். கலக்கமும், தெளிவும் அடுத்தடுத்து வருவதால் இயல்பான மனித மன நிலையில் உள்ளவர் என்பதைக் கவிஞர் காட்டுகிறார். கணவர் எந்த நிலையிலும் கலக்கமடையாத தெளிவான மனநிலையில் உள்ளவர். மனைவியார் ஒரு வினாடி மனங்கலங்கி, பின் தாமே தெளிவடையக் கூடிய நிலையில் உள்ளவர் என்பதை அறிகின்றோம். சுற்றத்தார் செயல் அம்மையாரை அழைத்துக்கொண்டு அவ்வூர்த் தெருவழியே வருகின்றார் அந்தணர். இதற்குள் செய்தி ஊர்முழுதும் பரவிவிட்டது. இயற்பகை 398 சேக்கிழார் தந்த செல்வம் பெருவணிகன் ஆதலாலும் அவரது இனத்தார் ஊரைச் சுற்றியிருப்பதாலும் ஒரு சூழ்நிலை உருவாகிறது. சிவனடியார் எதை விரும்பினாலும் தர வேண்டும் என்ற குறிக்கோள் சுற்றத்தாரிடை இல்லை. அப்படியே ஏதாவது தருவதானாலும் பொன், பொருள், பசிக்கு உணவு என்ற முறையில் இருக்க வேண்டுமே.தவிர ஒருவன் தன் #: @L_6ö) LDôolif அதாவது மனைவி போன்றவர்களைக் கொடுப்பது அடாத செயலாகும். ஆகவே, நடந்தவற்றைக் கேள்விப்பட்ட இயற்பகையின் சுற்றத்தார் அந்தணனை வளைத்துக் கொண்டு, பேசுவது சமுதாய, மக்களுக்குப் பொருத்தமானது என்பதைச் சேக்கிழார் காட்டுகிறார். மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் -- இனையது ஒன்று யாரே செய்தார்? இயற்பகை பித்தன் ஆனால் புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன்' என்று துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார். (பெ. பு-416) இப்பாடலின்படி பார்த்தால், இயற்பகையின் கற்றத் தாரும் அவர் மனைவியின் சுற்றத்தாரும் இயற்கைக்கு மாறான இயற்பகையின் வாழ்க்கைமுறையைக் இயற்பகையார் 399 கண்டு அவரைப் பயித்தியம் என்று முத்திரை குத்திவைத்து விட்டார்கள் என்று அறியமுடிகிறது. அவர்களுடைய அகராதியில் அகங்கார, மமகாரமற்ற சிவனடியார் ஒருவர் பைத்தியம் என்றே கருதப்பட்டார். அவர்களால் பைத்திய்மென்று கருதப்பெற்ற இயற்பகையார் தனிப்பட்ட முறையில் என்ன செய்தாலும் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை. ஆனால், அவருடைய மனைவி என்று சமுதாயம் குறித்துவைத்துள்ள ஒருவரை இயற்பகையார் வேறொருவருக்குக் கொடுத்துவிட்டார் என்றால்-அந்தச் சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இயற்பகையார் தம் மனைவிபற்றி என்ன நினைத்தார்-அவர் மனைவி, கணவரைப்பற்றியும் அவருடைய செயல்கள்பற்றியும் என்ன . நினைத்தார் என்பவைபற்றியெல்லாம் அந்தச் சமுதாயம் கவலைப் படவில்லை. மனைவியை ஒருவர்க்கு ஈவதனால் ஏற்படும் அவமானம் கணவனுக்குமட்டுமே என்று நினைக்கின்ற இற்றைநாள் சமுதாயத்திலும் முற்றிலும் மாறுபட்டதாகும் அன்றைய சமுதாயம். இயற்பகைக்கும் அவர் மனைவிக்கும் இடையே நடந்த இந்த விவகாரம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும். அதை எப்படியாவது போக்க வேண்டும் என்ற கருத்தால் போர்க் கருவிகளோடு சுற்றத்தார். அந்தணனை இடைமறித்தார்கள். ...,' 400 சேக்கிழார் தந்த செல்வம் இயற்பகையார் வெற்றி அந்தணர் வேடத்தில் வந்த இறைவன் சுற்றத்தார் கோபாவேசத்தைக் கண்டு அஞ்சினவன்போலப் பாசாங்கு செய்ய, இயற்பகை தாம் ஒருவராகவே நின்று, எதிர்த்தவர்கள் பலரையும் ட்ெட்டிச் சாய்த்தார். இங்கேயும் ஓர் உண்மையை நாம் அறிய வேண்டும். படைக்கலங்களோடு எதிர்த்து நின்ற சுற்றத்தார் பலரையும் இயற்பகை ஒருவராகவே வென்றார் என்றால், அது எவ்வாறு முடிந்தது? சமுதாயப் பழி என்ற ஒன்றைப் போக்குவதற்காகவே போரிட வந்தனர் சுற்றத்தார். சிவனடியார் வேண்டுவதைச் செய்துதருவதே தம் வாழ்க்கைக் குறிக்கோள் என்ற கருத்துடன் போரிட்டவர் இயற்பகையார். எனவே, அவர் வெல்வது என்பது இயற்கை யாகிவிட்டது. - அந்தணன் கணிப்பு : 'பொய்தரும் உள்ளம் இல்லான் _ ، ‘‘ ۔ ۔ ۔ இதன்பிறகு ஒரு நிகழ்ச்சியைப் பேசுகிறார் சேக்கிழார், திருச்சாய்க்காட்டின் எல்லைவரை அந்தணனை அழைத்துச் சென்றார் இயற்பகையார். இப்பொழுது அந்தணன் இயற்பகையாரைப் பார்த்து இனி நானே போய்க்கொள்ளுகிறேன், நீ மீண்டு செல்வாயாக' என்று கூறினான். அதனைக் கேட்ட இயற்பகையார், அந்தணன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் புகாரை நோக்கி மீளப் போனார். அவர் சில நூறு அடிகள் இயற்பகையார் 401 சென்றபொழுது அந்தணனாகி நின்றவன் என்ன பேசினான் என்பதைத் தெய்வச் சேக்கிழார் இதோ கூறுகிறார்: 'பொய்தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான்' என்று மெய்தரு சிந்தை யானை மீளவும் அழைக்கல் உற்றான்.

- (டெ பு-43)

"இயற்பகை முனிவா ஒலம் ஈண்டு நீ வருவாய் ஒலம்! அயர்ப்பு இலாதானே ஒலம்! அன்பனே ஒலம்! ஒலம்! செயற்கு அருஞ் செய்கை செய்த தீரனே ஒலம்' என்றான். (பெ. பு-432) இந்த அடிகளில் அந்தணனாகி நின்ற இறைவனே. இயற்பகையாரை எடை போட்டதுபோல் சில சொற்கள் வெளிவருகின்றன. பொய்தரும் உள்ளம் இல்லான், பார்க்கிலன் போனான்’ என்று அந்தணன் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்வதாக இத் தொடரை அமைக்கின்றார் சேக்கிழார். பொய்தரும் உள்ளம் இல்லான்' என்பதால் இயற்பகையாருடைய புறமனம், அகமணம் இரண்டிலும் வாய்மையே 402 சேக்கிழார் தந்த செல்வம் நிறைந்திருக்கிறது என்பதும் ஒரு வினாடிகூடப் பொய் அதனுள் நுழைந்ததில்லை என்பதும் கூறினாராயிற்று. 'பார்க்கிலன் போனான்’ இனி பார்க்கிலன் போனான்’ என்ற சொற்கள், மனிதனாகப் பிறந்து அந்த வினாடிவரை மனிதனாகவே வளர்ந்துவிட்ட இயற்பகையார், மனிதனாக வாழ்கின்றவர்கள், கற்பனையில்கூடக் கடக்க முடியாத ஓர் எல்லையைக் கடந்துவிட்டார் என்பதை அறிவுறுத்தினாராயிற்று. எந்தச் சராசரி மனிதனும்-ஏன் மிக உயர்ந்த ஞானியும்கூடபல்காலம் தன்னிட்மிருந்த ஒரு பொருளை ஓரிடத்தில் விட்டுச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அந்தப் பொருளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்லும் பழக்கம் உண்டு என்பதை நாம் அறிவோம். இடுகாட்டில் தீமூட்டிச் செல்கின்றவர்கள்கூடக் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுதலை பெறுவது கடினம். ஆகவே, திரும்பிப் பார்க்காமல் பேர்'என்று காட்டில் உடனிருப்பவர்கள் கூறும் பழக்கம் இன்றும் நம்மில் உண்டு. பழகிய பொருளை விட்டுச் செல்லும்போது, திரும்பிப் பார்க்காமல் போவது என்பது எந்த மனிதனுக்கும் இயலாத ஒரு காரியமாகும். இப்பொழுது தம்மோடு பல்லாண்டுகள் பழகியதோடு, மனைவி என்ற நிலையிலும் இருந்த ஒருத்தியை இயற்பகையார் 403 விட்டுச் செல்கின்ற ஒருவர் திரும்பிக்கூடப் பாராமல் செல்கின்றார் என்றால், (பார்க்கிலன் போனான்) அது மனித நிலைக்கு அப்பாற்பட்டு மிக மிக உயர்ந்து நிற்கும் நிலையாகும். இயற்பகை அந்த அதீத நிலையை எளிதாக அடைந்துவிட்டார் என்பதை அந்தணன் கூற்றாக, பார்க்கிலன் போனான்’ என்று பேச வைக்கிறார் சேக்கிழார். 'இயற்பகை முனிவர்" இதனை அடுத்தபடியாக, அந்தணன் திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் இயற்பகையைப் பார்த்து மீண்டு வருமாறு அழைக்கின்றான். என்ன சொல்லி அழைக்கின்றான்? இயற்பகை முனிவா ஒலம்! சில மணி நேரங்களுக்குமுன்வரை மனைவியுடன் வாழ்ந்த இயற்பகையை முனிவா! என்று அந்தணனே இறைவனே) அழைக்கின்றான் என்றால், இயற்பகையைப் பற்றி இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் சொல்லியது எத்துணை உண்மையானது என்பது விளங்கும். இயற்பகை என்ற புகார் நகர வணிகன் பெருஞ்செல்வனாக வாழ்ந்தான், வாணிகம் செய்தான், அழகிய மனைவியை மணந்தான் என்றாலும், அவன் வேண்டுதல் வேண்டாமை என்பவற்றைத் துறந்த மாமனிதன் என்பதை அறிதல் வேண்டும். ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டு ஆண்டுவந்த சனகன்கூட ஞானி என்றும், கர்மயோகி என்றும் 404 சேக்கிழார் தந்த செல்வம் அழைக்கப்பட்டான். ஞானியாக இருந்தும்கூட ஒரு பெண்ணை சீதை எடுத்து வளர்த்த காரணத்தால் அவளுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டான் சனகன். அப்படிப்பட்ட ᏧjöᏊᎣl6Ꮱ6ajᏧᏂ.L_. இயற்பகைக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்பதைக் குறிக்கவே இயற்பகை முனிவா ஒலம் என்று குறிப்பிடுகிறார் கவிஞர். 'அயிர்ப்பிலாதான் மனிதருக்குள்ள இயல்பான மற்றொரு குணம் இங்குச் சிந்திக்கத்தக்க தாகும். நமக்குரிய ஒரு பொருளை ஒருவர் கேட்டு, நாம் தந்துவிட்டால் அந்தப் பொருளை அவர் எவ்வாறு பயன் படுத்துகிறார் என்பதை அறியவேண்டும் என்ற அவா மனத்தில் தோன்றுவது இயல்பே ஆகும். அப் பொருளை அவருக்கே உரிமையாகக் கொடுத்து விட்டால்கூட, என்ன செய்வாரோ: தக்கபடி பயன்படுத்துவாரோ என்ற ஐயம் மனத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இது மனிதருக்குள்ள இயல்பு. இதனையும் இயற்பகை வென்றுவிட்டார். என்பதைக் குறிக்கவே, அயிர்ப்பு இலாதானே ஒலம் என்று கூறுகிறார். அயிர்ப்பு என்ற சொல்லுக்குச் சந்தேகம் என்ற பொருள் உண்டு. இதற்கு முந்தைய பாட்டில் திரும்பிப் பார்க்காமல் போகிறான் என்று கூறிய அந்தணன், அதற்கு விளக்கம் தருபவன் போல அயிர்ப்பிலன் என்று பேசுகிறான். திரும்பிப் பாராமல் போதல் இயற்பகையார் : 405 உடம்பின் செயலாகும். மனத்துள் சந்தேகத்தை வைத்துக்கொண்டு, ஊரார் மெச்சுவதற்காக திரும்பிப் பாராமல் போகிறவர்கள் உண்டு. இயற்பகையும் இந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற் காகவே அயிர்ப்பு இலாதானே ஒலம்-ஒரு கடுகளவு சந்தேகமும் இல்லாதவனாகச் செல்கிறான் என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். இந்த அடியில் வரும் 'அயிர்ப்பு என்ற சொல்லுக்கு மாறுபட்டு அயர்ப்பு என்னும் சொல்லைப் பாடமாகக் கொண்ட இறைவனை மறவாதவர் என்று சிலர் பொருள் கூறியுள்ளனர். இவ்வளவு தூரம் வரலாற்றைக் கூறிய பிறகு, இயற்பகை இறைவனை மறவாதவர் என்று சொன்னால் அவை பொருளற்ற சொற்களாக முடியும். அயிர்ப்பு என்பதே சிறந்த பாடமாகும். செயற்கருஞ் செய்கை செய்த தீரன்’ இவ்வளவும் கூறிய பிறகும், இயற்பகையின் செயலின் நுணுக்கத்தை, தத்துவத்தைப் புரியாதவர்கள் பலர் இருப்பார்கள் என்பதை அறிந்த அந்தணன், புரியாதவர்களுக்கும் புரியும்படியாக ஒரு தொடரைப் பயன்படுத்துகிறான். அதுதான், செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஒலம்! என்பதாகும். மனிதன் உள்பட உயிர்கள் அனைத்தையும் படைத்த பரம்பொருள், தன்னுடைய படைப்பில் ஒவ்வோர் உயிரின் ஆற்றலுக்கும் ஒர் எல்லை வகுத்திருக்கும் அல்லவா? ஏதாவது ஓர் ஆன்மா அந்த எல்லையைக் கடந்து சென்றால், படைத்த இறைவனே மகிழ்ச்சி அடைவான். உலகியல் முறையில் மனம் ஒப்பி மனைவியை வழங்குதல், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயலாகும். அதை ஒருவன், தான் செய்யும் தொண்டில் ஒரு பகுதி என்று கருதிச் செய்கின்ற பொழுது, அவன் செயற்கருஞ் செயல் செய்தவனாகி விடுகிறான். அவனைப் பொறுத்த மட்டில் அது சாதாரணச் செயல். எதிர் நின்று, அதனைக் காணுகின்ற அந்தணன் உள்பட, நம்மைப் பொறுத்த மட்டில் அது செயற்கருஞ் செயலே ஆகும்.

ஐந்தாம் நிலை அடியவர்கள்

இனி, இயற்பகை வரலாற்றைக் கற்கப் போகின்றவர்கள் முன்னர்க் கூறப் பெற்ற நால்வகை நிலைகளையும் மனத்துட் கொள்வதோடு, இந்த நான்கு நிலைகளையும் கடந்து, ஐந்தாவது நிலையில், அதாவது தேகப் பிரக்ஞை அற்ற நிலையில் இருவர் பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பதையும் அறிதல் வேண்டும். இந்த நுட்பத்தை அறிந்து இவர்,கள் வரலாற்றைப் பாடத் தெய்வச் சேக்கிழாரை அல்லாமல், வேறு யாருக்கும் இது இயல்வது ஒன்றன்று என்பதையும் அறிதல் வேண்டும்.