சேக்கிழார் தந்த செல்வம்/மனுநீதி என்னும் வழிகாட்டி
மனுநீதிக் கதை பற்றிய சிந்தனை : சுந்தரர் குறிக்காதது
பெரிய புராணத்தில், யார், யாருடைய வரலாறுகளைச் சேக்கிழார் பாட எடுத்துக் கொண்டார் என்று பார்த்தால், ஓர் உண்மை விளங்கும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தில் உள்ள 11 பாடல்களில், யார் யார் பெயர் இடம் பெற்றுள்ளனவோ, அவர்களுடைய வரலாறுகளையே — அப்பாடல்களில் கண்ட வரிசைப்படியே, முன்பின் மாறாமல் பாடியுள்ளார். மாபெரும் காப்பியப் புலவராகிய சேக்கிழார், சுந்தரர் பாடிய முதல் நூலுக்கும், நம்பியாண்டார் நம்பிகள் பாடிய வழி நூலுக்கும் பெருமரியாதை செய்து, அவற்றிலிருந்து மாறுபடாமலேயே, தம் காப்பியத்தை அமைத்து உள்ளார். என்றாலும், பாயிரம் என்ற பெயரில் 10 பாடல்களும், திருமலை சிறப்பு என்ற பெயரில் 40 பாடல்களும், திருநாட்டுச் சிறப்பு என்ற பெயரில் முப்பத்தைந்து பாடல்களும், திருந்கரச் சிறப்பு, மனு நீதி கண்ட புராணம்-ஆறுமுக நாவலர் பதிப்பில் மட்டும் என்ற பெயரில் ஒரு வரலாற்றை ஐம்பது பாடல்களிலும், திருக்கூட்டச் சிறப்பு என்ற பெயரில் 11 பாடல்களும் விரிவாகப் பாடியுள்ளார் சேக்கிழார். 78 சேக்கிழார் தந்த செல்வம் இந்த வரலாறு சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் இடம் பெறாத ஒன்றாகும். திருவாரூர்க் கோவிலில் உள்ள ஒரு பழைய கல்வெட்டில் இக்கதைச் சுருக்கம் காணப்படுகிறது. ஆனால், சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் "ஆவின் உகுநீர் நெஞ்சு சுட தான்த் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்ப்பெயர்ப் புகார் என்பதியே ஆகி" என்று கண்ணகி கூற்றாக வரும் தொடரில் இவ்வரலாறு புகார் நகரத்தில் நடந்ததாகப் பேசப்படுகிறது. அந்நாளில், அதாவது முற்காலச் சோழர் ஆட்சியில் புகார் நகரமே தலைநகராக இருந்துவந்தது. இடைக்காலச் சோழர் வரலாற்றில் உறையூர் தலைநகராக இருந்தது. பிற்காலச் சோழர் காலத்தில் தஞ்சை, பழையாறை முதலியவை ! தலைநகர்களாக இருந்தன. திருவாரூர் எப்பொழுது சோழர் தலைநகராக இருந்தது என்பதோ மனுநீதி அரசன் வரலாறோ இன்றுவரை வரலாற்று அடிப்படையில் அறியப்படவில்லை. ஆனால், இக்கதை சிலப்பதிகார காலத்திலேயே பழமையான கதையாக, செவிவழிச் செய்தியாக இருந்தது என்று நின்ைப்பதில் தவறில்லை. செவிவழிச் செய்தியாக இருந்த ஒரு பழங்கதையைத் திருவாரூரில் நடந்ததாகச் சொல்வது சரியா என்றால், அக்கோயில் கல்வெட்டுச் சேக்கிழாருக்குக் கைகொடுத்து உதவியுள்ளது. . மனுநீதி என்னும் வழிகாட்டி 79 திருத்தொண்டத்தொகையில் வரும் அடியார்கள் அனைவரும் குறிப்பிட்ட கால கட்டத்தில், தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்த வரலாற்று நாயகர்கள் ஆவார்கள். இவர்களுள் 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாவரசருக்கும் முற்பட்டவர்கள் - கண்ணப்பரும், . காரைக்கால் அம்மையாரும். எனவே, வரலாற்று நாயகர்களின் வரலாறுகளைப் பாடவந்த சேக்கிழார் செவிவழிக் கதையாக வழங்கும் மனுநீதிச் சோழன் கதையை எவ்வாறு தம் நூலுள் புகுத்தினார் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். . - : : ஏன் இந்தக் கதை? ஆறுமுக நாவலர் பதிப்பில் இப்பகுதி மனு நீதி கண்ட புராணம்’ என்ற தலைப்பில் அச்சிடப் பெற்றுள்ளது. அவ்வாறு பெயர் வைப்பது பின்னே வரும் புராணங்களோடு சேர்த்து மனுநீதிச் சோழனும் சுந்தரரால் பாடப்பெற்ற ஓர் அடியார் போலும் என்ற குழப்பம் கற்பவர் மனத்தில் ஏற்பட இடமுண்டு. அது கருதியே பின்னர் வெளிவந்த சைவசித்தாந்த மகாசமாஜப் பதிப்புக்களில் இப்பகுதி திருநகரச் சிறப்பு என்ற தலைப்பில் அடக்கப் பெற்றுள்ளது. எது எவ்வாறாயினும், பெரியபுராண அடியார்களோடு ஒரு சிறிதும் தொடர்பில்லாத மனுநீதிச் சோழன் கதையைச் சேக்கிழார் ஏன் இங்கே 80 சேக்கிழார் தந்த செல்வம் பாடினார் என்ற வினாவை எழுப்பினால், ஒரு சிறந்த விடையைக் காண முடியும். இந்த நூலின் முதல் கட்டுரையில், தமிழ் மக்களிடையே குறிக்கோளும், தொண்டுணர்ச்சியும் இல்லாமல் போய்விட்டதை அறிந்து அவற்றைத் தட்டி எழுப்பவே இந்நூலை எழுதினார் என்று கூறப்பெறுதலை நினைவுக்குக் கொண்டுவருதல் நலம். அப்படியானால், மனுநீதிக் கதையிலும், குறிக்கோள், தொண்டு என்பவை இடம் பெற்றுள்ளனவா என்ற வினாத் தோன்றின், இல்லை என்றே பதில் கூற வேண்டும். வேறு என்ன கருத்தில் இக் கதையைச் சேக்கிழார் இங்கே புகுத்தினார் என்று சிந்திக்கும்பொழுது இரண்டொரு பின்னணி களை நினைவில் கொள்வது நலம், 12ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை கற்பனைக்கடங்காத அளவில் உயர்ந்திருந்தது உண்மைதான். அந்த நிலையில், அதாவது, நிதி எல்லையற்று வளர்ந்த நிலையில் நீதி, அரச நீதி, தனிமனித வாழ்வு நீதி என்பவை எங்கோ சென்று மறைந்துவிடும். அரசர்கள் வாழ்வில் நீதி அல்லது அறம் என்பது மறைந்தால் விளைவு என்னவாகும் என்று சொல்லத் தேவை யில்லை. இந்த அடியார்களின் வரலாற்றை அறிந்து கொண்டதால் அரசர்கள் அரசநீதியை நிலை நாட்டுவர் என்று கூற முடியாது. எனவே, அரசர்கள், மிகப் பெரிய பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் மனுநீதி என்னும் வழிகாட்டி 81 எவ்வாறு நீதி வழங்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட இக் கதையைச் சேக்கிழார் பயன்படுத்தினார். இந்த ஒரு கருத்தின் விரிவே மனுநீதிச் சோழன் கதை ஆகும். கதை கதை மிகச் சுருக்கமானது தான், திருவாருரில் சோழன் ஒருவன் ஆட்சி செய்துவந்தான். அவன் மகன் தேரில் ஏறி ஒரு நாள் படைகள் புடைசூழ அகன்ற பெரிய வீதியில் உலாச் சென்றான் அப்பொழுது இளைய பசுங்கன்று ஒன்று தேர்ச் சக்கரத்தில் மாட்டி, உயிரை விட்டது. கன்றை இழந்தத் தாய்ப்பசு அரண்மனை சென்று தன் கொம்பால் அங்கு இருந்த மணியை அடித்தது. மணிச் சத்தம் கேட்டு வெளியே வந்த அரசன் பசுமாடு ஒன்று கண்ணிருடன் நிற்பதைக் கண்டான். அமைச்சர்கள் மூலம் நடந்ததை அறிந்த மன்னன், பசுங்கன்றை எழுப்பித் தரமுடியாத காரணத்தால் அப்பசுவின் துயர் துடைக்க முடியாமல் போயிற்று. அது இயலாமல் போனபொழுது பசுவின் துயரத்தைத் தானும் அனுபவிக்க வேண்டும் என்று கூறி. தன் மகனைக் கீழேகிடத்தித் தேரை அவன் நெஞ்சின்மேல் செலுத்தினான். இறைவன் * :. காட்சி தந்தான் என்று கதை முடிகிறது. . . . . . 82 சேக்கிழார் தந்த செல்வம் கதையால்- அடிப்படை அறங்கள் தமிழர் அறம் இக் கதையின் ஒவ்வொரு பகுதியும் அன்று மட்டும் அல்ல. எக்காலத்தும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய பல அடிப்படை அறங்களை எடுத்துரைப்பதாதலின் இக்கதையைச் சோழப் பேரரசின் தலைமை அமைச்சரான சேக்கிழார், பெரியபுராணத்துள் வைத்தார். இதில் மற்றொன்றும் நம் சிந்தனைக்குரியதாகும். மகனைத் தேர்க் காலிலிட்டுக் கொல்வதுதான் தொல்மனுவின் நீதி என்று புராணத்தில் கூறப்பட்டிருப்பினும் எந்த மனுநீதியும் இவ்வாறு கூறவில்லை. பசுக் கொலைக்குக் கழுவாய் (பிராயச் சித்தம்) கூறப் பட்டுள்ளதே தவிர, இப்படியொரு நீதியை எந்த மனுவும் கூறவில்லை. அப்படி இருந்தும் மனுவின் பெயரைச் சேக்கிழார் பயன்படுத்தியதன் காரணம், அக்காலத்தில் அறிந்தோ அறியாமலோ நீதிநூல் இயற்றிய மனுவிற்கு ஒரு மிகப் பெரிய மரியாதை செலுத்திவந்தனர். அதனால்தான் சேக்கிழார் மனுவின் பெயரை இங்கே பயன்படுத்தினாரே அன்றி, வேறு காரணமில்லை. இங்குக் கூறப்பட்ட நீதி அல்லது அறம் என்பது மனுவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இத்தமிழர் கண்ட் அறமாகும் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். மனுநீதி என்னும் வழிகாட்டி 83 அமைச்சரை இகழ்ந்து நோக்கி பசுவின் கன்று இறந்தவுடன் அத் தாய்ப்பசு கண்ணிருடன் வந்து அரண்மனை மணி அடித்தது என்பதைக் கூறவந்த சேக்கிழார், "மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி, 'என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி, முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் - முதிர்ந்த கேள்வித் தொல்நெறி அமைச்சன், மன்னன் தாள்.இணை தொழுது சொல்வான்" (பெ, பு-15) என்று பாடுகிறார். இப்பாடலில் வரும் அமைச்சரை இகழ்ந்து நோக்கி என்ற மூன்று சொற்கள் சிந்தனைக்குரியன. அமைச்சரைப்பற்றிக் கூறவந்த வள்ளுவப் பேராசான், சூழ்வார் கண்ணுக ஒழுகலான் மன்னவன் து.ழ்வாரைச் சூழ்ந்து கொளல். குறள்-445) என்று கூறிப்போனான். அரண்மனையின் உள்ளே இருக்கும் அரசன் நாட்டின் பல பகுதிகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தானே நேரில் காண்பது 84 சேக்கிழார் தந்த செல்வம் என்பது இயலாத காரியம். எனவேதான், அமைச்சர் களையும் அவர்கள் கீழ்ப் பணி புரிபவர்களையும் கண்களாக உருவகிக்கின்றார் நீதி நூல் ஆசிரியர் எந்த மூலையில் எது நடந்தாலும் அதனைக் காண்பவர்கள் தமக்கு மேலே உள்ளவர்களிடம் கூற, அவர்கள் அவர்களுக்கு மேலே உள்ளவர்களிடம் கூற, சில நாழிகைப் பொழுதில் இச்செய்தி அமைச்சரிடம் வந்து சேர்ந்துவிடுகிறது. செய்தியின் தகுதிக் கேற்ப உடனேயோ, அல்லது உரிய காலத்திலோ அமைச்சர்கள் மன்னரிடம் அதனை அறிவிக் கின்றனர். இந்த அறிவிப்பு முறை அன்றும், இன்றும், என்றும் உண்டு. துயருற்ற ஒரு பசுமாடு தானே வந்து அரண்மனை மணி அடித்ததென்றால், வாயில்லா அப் பிராணி பெருந்துயரத்தை அனுபவித்திருக்க வேண்டும். அதாவது, அப் பிராணிக்கு யாரோ பெருந்தீங்கு இழைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அப் பசு இக் காரியத்தைச் செய்திருக்காது. பசுவுக்கு யார், எப்பொழுது இப் பெருந்தீங்கை விளைத்தனர் என்பதை அரசனுக்குக் கண்களாக உள்ள அமைச்சர்கள் இதற்குள் அறிந்திருக்க வேண்டும் அறிந்திருந்தால் தன்னிடம் அதனைக் கூறியிருக்க வேண்டும். கூறாத காரணத்தால் அவர்கள் இத் தீங்கை அறியவில்லைபோலும், அதனை அறியாதவர்கள் அமைச்சர்களா என்ற வினாவை, மன்னன் бигтиитsi) கூறாமல் மனுநீதி என்னும் வழிகாட்டி 85 கண்களாலேயே கூறிவிட்டானாம். இப்படி ஒரு துயரம் நிகழ்ந்திருக்க அதுபற்றி அறியாத நீங்கள் அமைச்சர்களா? என்று கூறும் இகழ்ச்சிப் பார்வையை அவர்கள்மேல் வீசினான் மன்னன். அமைச்சர்கள் கூறாதது ஏன்? அக்காலத்து அமைச்சர்கள் உண்மையிலேயே குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த மன்னனின் அமைச்சர்களும் அவ்வாறே என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி அறிவிக்கின்றது. நடைபெற்ற நிகழ்ச்சி அதற்குள் ஓர் அமைச்சனுக்கு எட்ட, அவன் எல்லா அமைச்சர் களையும் கூட்டி நடந்ததை விவரித்து விட்டான். அப்படி இருக்க, அவர்கள் ஏன் இதனை மன்னன் காதுக்கு எட்டவிடவில்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மூன்று காரணங்களால் அமைச்சர்கள் இதனை அரசனிடம் கூறாது விட்டனர். முதலாவது, இறந்தவன் சோழ நாட்டுக் குடிமகன் அல்லன் இறந்தது ஒரு சாதாரண விலங்காகிய பசுங்கன்றுதான். இரண்டாவது, அந்தக் கன்றும் தானே வந்து தேர்க்காலில் விழுந்து இறந்தது. எனவே, இதில் யார்மேலும் குற்றம் சுமத்துவதற்கு ஒன்றும் இல்லை. மூன்றாவது, தேரில் ஏறிச் சென்றவன் அரசனது ஒரே குமாரன். இக் காரணங்களால்தான் அமைச்சர்கள் இதனைச் 86 சேக்கிழார் தந்த செல்வம் சாதாரண நிகழ்ச்சி என்று நினைத்து அரசனிடம் சொல்லாது விட்டனர். இது இவ்வாறுதான் நடைபெற்றது என்பதைப் பின்னர் வரும் பாடல் நன்கு விளக்குகிறது. முதிய அமைச்சர் விளக்கம் 'நடந்தவற்றைக் கூறுக’ என்று மன்னன் ஆணையிட்டவுடன் அமைச்சர்களுள் ஆண்டாலும் அனுபவத்தாலும் மிக முதிர்ந்த கிழட்டு அமைச்சன் ஒருவன் மிக அற்புதமான முறையில் நடந்தவற்றை ஒரே பாடலில் எடுத்துக் கூறுகிறான். உலகப் பிரசித்தி பெற்ற எந்தவொரு வழக்கறிஞனும்கூட நான்கே வரிகளில் அடுத்த வினாவிற்கு இடமின்றி இந்த முறையில் தன் வழக்கை முன்வைக்க முடியாது. இதோ அவன் பேசுகிறான். "வளவ! நின் புதல்வன் ஆங்கு ஓர் மணிநெடுந் தேர்மேல் ஏறி, அளவுஇல் தேர்ச் சேனன் சூழ அரசுஉலாந் தெருவில் போங்கால் இளைய ஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்தது ஆகத் தளர்வு உறும் இத்தாய் வந்து - விளைத்தது இத் தன்மை என்றான்' o . (பெ. பு-16) மனுநீதி என்னும் வழிகாட்டி 87 இப்பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிக ஆழமான பொருளைக் கொண்டிருக்கிறது. சோழருக்குப் பல பெயர்கள் இருப்பினும், வளவ' என்று அவனை விளிப்பதால், எல்லா வளங்களையும் பெற்றுள்ள நீ, ஒரு பசுங்கன்றின் இழப்புக்கு வருந்த வேண்டா என்பது குறிப்பு. குற்றத்தைச் செய்தவன் யாரோ ஒருவன் என்று நினைக்கும்பொழுது தோன்றும் சினம், தன்பிள்ளை என்று நினைக்கும்பொழுது தோன்றாதாகலின், நின் புதல்வன்' என்று கூறினான். ஒரு கொடுமை கண்ணெதிரே நடைபெற்றால் அது தோற்றுவிக்கும் உணர்ச்சிப் பெருக்கை, அதே கொடுமை எங்கோ கண் காணாத இடத்தில் நடைபெற்றது என்றறியும் பொழுது, அதே உணர்ச்சியைப் பெற முடியாது. எனவே, ஆங்கு என்று கூறினான். அரச குமாரன் தேரை வருணிப்பதற்காகமட்டும், ஓர் மணிநெடும் தேர்' என்று கூறவில்லை. ஓர் உயரமான தேரில் வருபவன், கீழே நடப்பதைக் காண முடியாது. காண முடியாவிட்டாலும், பசுங் கன்று அம்மா என்ற கூப்பிட்டுக்கொண்டுதானே வரும், அது காதில் விழவில்லையா என்ற வினாவிற்கு விடை அளிப்பது போல், தேரில் கட்டிய மணிச் சத்தம் அடக்கி விட்டது என்ற கருத்தையும் கூறினான். அளவில் தேர்ச் சேனை சூழ’ என்று அமைச்சன் கூறுவதால், குறுக்கே வந்த பசுங்கன்றைச் சூழ இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் அவ்வாறு 88 சேக்கிழார் தந்த செல்வம் நிறுத்தாதது அவர்கள் குற்றம் என்றும் கூறினான். அடுத்து, அரசு உலாம் தெரு’ என்று கூறியதால், அந்தத் தெருவில் வர உரிமையில்லை என்றும் சமாதானம் கூறினான். அடுத்து, தேர்க்கால் இடைப் புகுந்து இறந்தது என்று அமைச்சன் கூறுவது சிந்திக்க வேண்டியது. சுழலும் சக்கரத்தில் கன்று அகப்பட்டுக் கொள்வதானால் அது சக்கரத்தின் விளிம்பில்தான் (rim) அகப்பட முடியும். ஆனால், இந்தப் பசுங் கன்று, தேர்க்காலின் இடையில் புகுந்தது என்று கூறுவதால் சக்கரத்தில் காணப்படும் நடுப்பகுதிக்கும், வெளி வளையத்திற்கும் இடையே உள்ள செருகுகோல் (spokes) இரண்டிற்கிடையே தலையை விட்டது என்று கூறுகிறான் அமைச்சன். உருளும் சக்கரத்தில் இரண்டு செருகுகோல்களுக்கிடையே எதனையும் நுழைக்க முடியாது. ஆனால், இந்தக் கன்று தேர்க் கால் இடைப்புகுந்து என்றதால், இரண்டு செருகு கோல்களுக்கு இடையே தலையை விட்டது என்று கூறுவதால், நடக்க முடியாத ஒன்று நடந்துவிட்டது என்றும் கூறுகிறான். அதாவது, அது உயிரை விடவேண்டும் என்றே இவ்வாறு செய்தது என்று கூறுவதால், இதில் அரசகுமாரன் தவறு ஒருசிறிதும் இல்லை என்பதை ஈடுஇணையற்ற வழக்கறிஞனாக நின்று அந்த அமைச்சன் கூறி முடிக்கிறான். மனுநீதி என்னும் வழிகாட்டி 89 சேக்கிழாரின் மனு நீதி எத்துணை அன்பும் கருணையும் இரக்கமும் கண்ணோட்டமும் உடையனாயினும் அந்தப் பசுவின் துயரத்தை அரசன் எவ்வாறு போக்க முடியும்? அரச குமாரனுக்குப் பாவம் சேராதிருக்கக் கழுவாய் செய்யலாம் என்று அமைச்சர்கள் அறவுரை பகர்கின்றனர். ஆனால், அத்தமிழ் மன்னன் அவர்கள் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை எள்ளி நகையாடுகிறான். காரணம், ஒரு திருக்குறள்தான். அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை (குறள்-35) பிற உயிருக்கு வரும் துன்பத்தைத் தன்னுயிர்க்கு வந்ததுபோலக் கருதிக் குறிக்கொண்டு காவா விட்டால் அறிவு என்ற ஒன்றைப் பெற்று இருப்பதால் பயன்தான் என்ன என்பதே இதன் பொருள். பிற உயிருக்கு வந்த துயரத்தைப் போக்க முடியாதவன் அத்துயரைத் தானும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டும். இதனையே குறள் போற்றி என்கிறது. அப்பொழுதுதான் வருந்தும் அந்த உயிரின் 90 சேக்கிழார் தந்த செல்வம் துயரைத் தானும் பங்கிட்டு அனுபவிப் பதாக முடியும். இந்தக் குறளுக்குச் சேக்கிழார் பெருமான் கண்ட உரையாகும் இது: பிறிதின் நோய் போக்க முடியாததாயின், அத்தகைய போக்க முடியாத நோயைத் தானும் வரவழைத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டும். எனவே, சேக்கிழாரின் மனுநீதி இதோ பேசுகிறான்: எனமொழிந்து "மற்றிதனுக்கு இனிஇதுவே செயல்; இவ்ஆன் மனம்அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும்இது தனதுஉறு பேர்இடர் யானும் தாங்குவதே தருமம்' என அனகன் அரும்பொருள் துணிந்தான் (பெ. பு-127) மன்னனின் தருக்க முறை அச்சத்தை விளைவிப்ப தாகும். ஆனால், மிக எளிய முறையில் நியாயத்தை எடுத்துக் கூறுகிறான். கன்றை இழந்த தாய்ப் பசுவின் நிலையை மன்னன் எவ்வாறு பெற முடியும்? மகனை இழப்பதன்மூலமே பெற முடியும். இத்தகைய நினைத்தற்கரிய முடிவுக்கு அத்தமில் மன்னன் விரைவில் வந்துவிட்டான். அடுத்துத் தான் கண்ட முடிவை இதோ செயல்படுத்துகிறான். அதனை, மனுநீதி என்னும் வழிகாட்டி 91 "ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான்என்பதும் 'உணரான் 'தருமம் தன் வழிச்செல்கை கடன்' என்று - தன்மைந்தன் மருமம் தன் தேர்ஆழி உற ஊர்ந்தான் மனுவேந்தன்.” (பெ. பு-129) எனச் சேக்கிழார் கூறுகிறார். நிகழ்ச்சி ஒன்று காட்சி வெவ்வேறு எதிர்பாராத ஒரு தீமை நிகழ்ந்துவிட்டது. அதனை மன்னன், அமைச்சர்கள் ஆகிய இரு திறத்தாரும் அறிகின்றனர். எனினும், அமைச்சர்கள் அத் தீமையைக் காணும் விதம் வேறு மன்னன் அதனைக் காணும் விதமே வேறு. சட்டம் மக்கட்குச் செய்யப் பெறும் தீங்குகள்பற்றியே வகுக்கப்பெற்றுள்ளது. ஆனால், இங்குத் தீங்குற்றது மனித உயிரன்று. ஒரு பசுங் கன்றேயாகும். GTopёбтиш உயிர்கட்கு இழைக்கப்டும் தீங்கைக் காட்டிலும் பசுவுக்கு இழைக்கப்படும் தீங்கு கொடுமையானது என்பதை அந்நாளைய தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தனர். எனினும், மனித உயிருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பசுவின் உயிர் சமமாக வைத்து எண்ணப் படுவதொன்றன்று. அப் பசுங்கன்றையும் வேண்டு மென்றே அரசகுமாரன் வதைசெய்யவில்லை. 92 சேக்கிழார் தந்த செல்வம் எதிர்பாராமல் நடைபெற்ற நிகழ்ச்சியாகும் இது. மூன்றாவதாக, குற்றம் நடைபெற்ற இடமும் ஆராயற்பாலது. அரசகுமாரன் உலாவருதற்குரிய வீதியாகும் அது; பசுங்கன்று அங்கே வர உரிமையே இல்லை எனலாம். நான்காவதாக, அப்பசுங்கன்றை அரசகுமாரன் கவனித்துத் தேரை நிறுத்த வாய்ப்பே இல்லை. மிக உயர்ந்த தேரின்மேல் வரும் அவன், பசுங்கன்றைக் கவனிக்கவே முடியாது. ஆகலின், கவனக்குறை என்ற குற்றத்தையும் அவன்மேல் சுமத்த முடியாது. ஐந்தாவதாக, அரசகுமரனின் தேரைச் சுற்றி நால்வகைப் படையும் செல்கின்றன. எனவே, இடையே புகுந்த கன்றைப் பிடித்து நிறுத்தும் கடமை அவர்களையே சாரும். இந்த ஐந்து காரணங்களால் அரசகுமரன்மேல் குற்றமே இல்லை 6 TGÖT அமைச்சர்கள் கருதுகின்றனர். இவை அனைத்தையும் மனத்துட் கொண்ட அமைச்சர், அரச குமரன்மேல் குற்றமே இல்லை’ என்ற முடிவுடன், அவனை அறியாமல் நிகழ்ந்த பாவத்திற்குமட்டும் பிராயச்சித்தம் செய்ய வேண்டு மெனக் கூறுகின்றனர். மனிதன் இயற்றிய சட்டப்படி அவர்கள் கூற்றுச் சரியானதே. ஆனால், அறச் சட்டத்தின்படி பார்த்தால் இறந்தது மனித உயிரா, அன்றிப் பசுங்கன்றா என்ற வினாவுக்கு இடமே இல்லை. இறந்தது ஓர் உயிர். இறைவனால் மனுநீதி என்னும் வழிகாட்டி 93 படைக்கப்பட்ட உயிர்களுள் மனித உயிர், பசுவின் உயிர் என்ற வேறுபாடு கற்பிப்பது அறியாமையாகும். எனவே, ஓர் உயிர் கொல்லப்பட்டது; கொன்றவன் ஒரு மனிதன்; கொல்லப்பட்ட உயிரை நினைத்து அதன் தாய் வருந்துகிறது. இதற்குத் தீர்வு யாது’ என்ற முறையில் மன்னன் மனம் ஆய்கிறது. கொல்லப்பட்ட உயிரை எழுப்பினால்தான் தாயின் வருத்தத்தைத் தணிக்க முடியும். ஆனால், இது நடைபெற முடியாத ஒரு செயலாகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு அறச் சட்டம் என்ன விடை இறுக்கிறது? மனிதன் இயற்றிய சட்டத்திற்கும் அறச் சட்டத்திற்கும் மாறுபாடு காணப்பெற்றால் அந் நிலையில் எதனை ஏற்றுக் கொள்வது? முன் நிகழ்ச்சிக்கு (precedent) மதிப்புத் தருகிறது மனிதச் சட்டம். ஆனால், முன்னிகழ்ச்சி என்ற ஒன்று இல்லாதவிடத்து என் செய்வது? இதை ஒத்த நிகழ்ச்சி நடைபெற்றிருப்பின் அந்த அடிப்படையைக் கொண்டே மனிதச் சட்டம் இயற்றப்பெறுகிறது. பசுங்கன்று அரசகுமரன் தேர்க்காலில் பட்டு இறந்த நிகழ்ச்சி முன்னர் இல்லை எனினும் மனிதன் தவறுதலாகப் பசுவதை செய்த நிகழ்ச்சி உண்டு. அதற்குக் கழுவாய் என்ன என்று மனிதச் சட்டம் உண்டு. இதனை மனத்தில் கொண்டு அமைச்சர்கள் பேசுகின்றனர். இதோ சேக்கிழார் கூறுகிறார்: 94 சேக்கிழார் தந்த செல்வம் என்றுஅரசன் இகழ்ந்துஉரைப்ப எதிர்நின்ற மதி - <945@LD于母町 “நின்றநெறி உலகின்கண் இதுபோல்முன் நிகழ்ந்ததால் பொன்றுவித்தல் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல் தொன்றுதொடும் நெறியன்றோ? தொல்நிலங்காவல!” என்றார். (பெபு:123) இவ்வாறு செய்வதே பழைய முறை என்றும் அதுவே சட்டம் எனறும் அதுவே வழக்கு என்றும் மரபு என்றும் சட்டங்கற்ற மதிஅமைச்சர் பேசுகின்றனர். அதிலும் மரபுக்கு (custom அதிக மதிப்புத் தந்து பேசுகின்றனர். இன்றும் சட்ட முறையில் எழுத்துச் சட்டத்தினும் வலிமையுடையது ւDITւլ என்பதை அறிதல் வேண்டும். மானிடச் சட்டத்துடன் அறச் சட்டத்தையும் அறிந்திருந்த அரசன் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். "நீங்கள் இதுபோல் முன்னர் நடை பெற்ற குற்றத்திற்கு இதுவே முறை என்று கூறுகிறீர்கள். ஆனால், இதே குற்றம் முன்னர் எப் பொழுது நடைபெற்றது? மனிதச் சட்டத்தை அறியாது பேசுகிறீர்கள். எந்த உலகத்தில், எந்தப் பசு, இப்படி ஒரு துயரை அடைந்து, இப்படி வந்து கதறிக்கொண்டு ஆராய்ச்சி மணியை அடித்தது? இத்தகைய ஒரு நிகழ்ச்சி முன்னர் நடைபெற வில்லையாகலின் நீங்கள் கூறும் மனிதச் சட்டத்தில் மனுநீதி என்னும் வழிகாட்டி 95 இதனைத் சுேடிப் பயனில்லை’ என்ற கருத்தில் அரசன் பேசுகிறான். சேக்கிழார் கூற்றைப் பாருங்கள்: "அவ்வுரையில் வருநெறிகள் அவைநிற்க. அறநெறியின் செவ்விய உண்மைத் திறம் நீர்சிந்தைசெயாது உரைக்கின்றீர் எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித்தாம் இடரால் வெவ்வுயிர்த்துக் கதறிமணி எறிந்துவிழுந்தது” விளம்பீர். - (பெ. பு-25) இந்த இடத்தில் சற்று நின்று ஆராய வேண்டும். நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள்முக்கியத் துவம் கொடுக்கும் இடம் வேறு: மன்னன் முக்கியத் துவம் கொடுக்கும் இடம் வேறு. அமைச்சர்களைப் பொறுத்த மட்டில் பசுமாடு மணி அடித்துக் கதறுவது ஒரு பொருட்டாகவே கருதப் பெறவில்லை. பசுக் கொலைதான் அவர்கள் கவனத்தில் இருக்கிறது. இதுபோன்ற பசுக்கொலை முன்னரும் நிகழ்ந்த துண்டு. எனவே, பசுக்கொலை செய்தால் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற குறிக் கோளிலேயே அவர்கள் நின்றுவிட்டனர். - பிறந்த உயிர்கள் அனைத்தும் இறந்தே தீரல் வேண்டு மாகலின் பசுங்கன்றின் இறப்பை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இயல்பான «5FfГ6/FT&96 இல்லாமல் கொலை நடைபெற்றதாகலின் கொலைக்குத் தண்டனை வழங்க வேண்டும். 96 சேக்கிழார் தந்த செல்வம் ஆனால், கொலை செய்யப்பெற்றது மனித உயிர் இல்லாமல் பசுங்கன்ாறக இருத்தலின், கொலைக்குத் தண்டனையாகக் கொன்றவன் உயிரை வாங்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், பசுவதைப் பாவம் நீங்க அவன் பிராயச்சித்தம் செய்தல் போதுமானது. அமைச்சர்களின் இந்த வாதத்தில் பசுங்கன்று, அதன் இறப்பு, அதற்குக் காரணமான அரசகுமரன், அவன் தவற்றுக்குப் பிராயச்சித்தம் என்பவை இடம் பெறுகின்றனவே தவிரக் கன்றை இழந்து வருந்தும் தாய்ப்பசு அதில் இடம் பெறவே இல்லை. ஆனால், மன்னனுடைய மனத்தில் இறந்த கன்றைக் காட்டிலும்-அதனை இறக்கச் செய்த அரசகுமரன், அவன் செய்த பாவம் என்பவற்றைக் காட்டிலும், கன்றை இழந்து வருந்தி வந்து மணியடித்துக் கதறும் தாய்ப் பசுவின் மாற்ற முடியாத துயரந்தான் முன்னே நிற்கிறது. மன்னனுடைய சிந்தனையில் அரசகுமரனுக்குத் தண்டனை தரவேண்டும் எனற எண்ணத்தைவிடப் பசுவின் துயரத்தை எவ்வாறு போக்குவது என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. ஒரளவு ஆழ்ந்து சிந்தித்தால்தான் இதன் உண்மையை அறியமுடியும். அரசனின் முடிவு மனுநீதி என்னும் வழிகாட்டி 97 அமைச்சர்கள் அஞ்சியது போலவேதான் அமைந்தது. அதாவது அரசகுமரனைத் தேர்க்காலில் கிடத்தித் தேரை அவன்மீது ஒட்டிவிட்டான். ஆனால், அரசகுமரனின்மேல் தேரைச் செலுத்திய செயலுக்கு, அரசன் அமைச்சர் என்ற இருவரும் கற்பித்த காரணம் வெவ்வேறாகும். மனிதச் சட்டத்தின்படி பசுவதை செய்தவனைக் கொல்லவேண்டிய தேவை இல்லை. அதனால்தான் அமைச்சர்கள் பொன்று வித்தல் மரபன்று என்று திரும்பத் திரும்பக் கூறினர். ஆனால் மன்னன் அவ்வாறு ஏன் மைந்தனைக் கொன்றான்? அவன் கண்ட அறச் சட்டம் மைந்தனைக் கொல்லவேண்டும் என்று கட்டளை இட்டதா? அதுவும் இல்லை. பின்னர் ஏன் அவ்வாறு செய்தான் அறச் சட்டமும் பசுங் கன்றுக்குப் பதிலாக மைந்தன் உயிரை வெளவ வேண்டும் என்று கூறவில்லைதான். ஆனால், வேறு ஒன்றை விதித்தது அவ் அறச்சட்டம். பிறிதின் நோய் தன் நோய் போல் . 'எவ்வாறாயினும் பசுவின் துயரத்தைப் போக்க வேண்டும்; இன்றேல் அப்பசுவின் துயரைத் தன் துயர்போல் போற்ற வேண்டும் என்று அறச்சட்டம் கூறிற்று. துயரத்தைப் போக்க முடியாத மன்னன் அத்துயரைத் தன் துயர்போல் போற்றி அனுபவிக்க முற்பட்டு விட்டான். அது எவ்வாறு இயலும் 98 சேக்கிழார் தந்த செல்வம் துயரைப் பங்கிடுவதற்காகவும், அறச்சட்டத்தின் வழிநிற்பதற்காகவும் மைந்தனைத் தேர்க்காலில் கிடத்தினான் மன்னன். இதுவே அவன் முடிவுக்குக் காரணம் என்பதை . "-இனி இதுவே செயல்; இவ்ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும்இது தனதுறு பேரிடர் யானும் தாங்குவதே தருமம்' என்னும் சேக்கிழாரின் வரிகள் விளக்கமாக அறிவுறுத்துகின்றன. இவ்வுண்மையை அறியாவிடின் சாதாரண மக்கள் பேசுவதுபோல் உயிருக்காக உயிரை வாங்கினான் மனுவேந்தன் என்ற முறையில் மிகச் சாதாரணமான ஒருவனாக அவனை ஆக்கிவிட நேரிடும். சட்டம் என்ற பெயரிலும் தண்டனை என்ற பெயரிலும் ஓர் உயிரை வாங்கும் சாதாரன மனிதனாக மனுவை நினைத்துவிடக் கூடாது என்பதே சேக்கிழாரின் கருத்தாகும். வடநெறிச் செல்வாக்கும் தமிழர் நெறியும் திருத்தொண்டத் தொகையில் காணப்பெறாத இவ்வரலாற்றை பாடுவதன்மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்குமாறு செய்கிறார் சேக்கிழார். நீதிநூல் என்ற பெயரில் மனுவால் வழங்கப்பட்ட மனுநீதி என்னும் வழிகாட்டி 99 சட்டங்கள், வடநாட்டைப் பொறுத்தவரை பொருத்த முடையனவே தவிர, தமிழ்நாட்டார் அதனை ஏற்றுக் கொள்ளவில்ல்ை என்பதை அறிவுறுத்தற்கு, இக் கதையைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு கொள்வது சரியா என்று யாரேனும் நினைத்தால், அது சரியே’ என்பதற்கு ஒரு மேற்கோளையும் எடுத்துக்காட்ட முடியும். ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் (656) என்ற குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக என்னும் அறநூற் பொதுவிதி. அமைச்சர்க்கு எய்தாமை பற்றி இவ்வாறு கூறினார்’ என்று கூறுவதால் மேலே கூறிய கருத்து வலியுறும், சோழ சாம்ராச்சியத்தை நிறுவிய இராசராசன், இராசேந்திரன் முதலியோர் தமிழகத்தில் பிறந்த தமிழராயினும், வடநாட்டில் பிறந்த கோளகி மடத்தைச் சேர்ந்த சதுரானன பண்டிதர் போன்றவர்களையே குருவாகக் கொண்டு இருந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. குருமார்கள் வடவராதலின், அவர்கள் புகட்டிய நீதியும், மனுஸ்மிருதியை அடியொற்றியே இருந் திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த வடவரின் ஆதிக்கத்தால், தேவாரப் பதிகம். பாடுபவர்க்குக்கூட வடவர் முறையில் தீட்சை செய்வித்தே ஒதுவார் களாகப் பணிபுரிய ஆணையிட்டான் இராசராசன். தேவாரப் பதிகம் பாடுவோர் பெயர்ப் பட்டியலைத் 100 சேக்கிழார் தந்த செல்வம் தரும் கல்வெட்டைப் பார்த்தால் வியப்புத் தோன்றாமல் இராது. "திருநாவுக்கரையன் என்ற அகோரசிவனும், திருஞானசம்பந்தன் என்ற ஈசானனும்’ என்று அக்கல் வெட்டுப் பேசுகிறது. அதாவது திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன் என்ற பெயர்களை உடைய ஒதுவார்கள் பெருவுடையார் கோயிற் பணிக்கு நியமிக்கப்படும்பொழுது, வடவர் முறையில் தீட்சை செய்விக்கப்பெற்று, அகோரசிவன், ஈசானானன் என்ற தீட்சா நாமங்களைப் பெற்ற பிறகே, கோயிற் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தமக்கு முற்பட்ட சோழர் வரலாற்றையும், அவர்கள் கல்வெட்டுக்களையும் நன்கு கற்றறிந்த சேக்கிழாருக்கு, ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தோன்றிய மூவர்முதலிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களை, திருக் கோயிலில் ஒதும் தமிழ் ஒதுவார் ஒருவர்கடிட வடவர் கூறும் தீட்சை பெற்று, தீட்சா நாமத்தையும் பெற்ற பின்னரே பாட அனுமதிக்கப்பெற்றனர் என்ற ஒரு செய்தி சேக்கிழாரை உலுக்கியிருக்க வேண்டும். "திசை அனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றுஏற” என்றும், "அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறை வெல்ல' (1927) என்றும் திருஞானசம்பந்தர் புராணத்தில் சேக்கிழார் மனுநீதி என்னும் வழிகாட்டி 101 பாடியது மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அவர் சொல்லிய கருத்துக்களாகும். தமிழர் அல்லாதவர்களும், வைதிக மார்க்கத்தைப் பரப்பியவர்களும் ஆகிய பல்லவர்கள் காலத்திலேயே, ரிக்வேதியும் அந்தணரும் ஆகிய திருஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்திலும் தம் பெயரைத் தமிழொடு சேர்த்துப் பாடியுள்ளார். அவர் காலத்திலும், அவருக்கு ஒரளவு முற்பட்டும் வாழ்ந்த திருநாவுக்கரசர் புறச்சமயத்திலிருந்து சைவத்திற்கு மீண்டபொழுது எவ்விதப் பிராயச்சித்தமோ தீட்சையோ பெறவில்லை என்பதைச் சேக்கிழார் விரிவாகப் பாடியுள்ளார். பல்லவர் காலத்திலேயே தமிழகத்தில் நிகழ்ந்த இம்மாபெரும் புரட்சியை இராசராசன், இராசேந்திரன் முதலிய சோழர்கள் முற்றிலும் மறந்துவிட்டு, சதுரானன பண்டிதர் வலையில் சிக்குண்டது சேக்கிழாரின் அதிர்ச்சிக்குக் காரணம் ஆகும். அவர்கள் அறியாமையை நேரிடையாகச் சாடாமல், மனுநீதிச் சோழன் கதையில் இக்கருத்தை வெளியிடுகிறார். மனுநீதியில் சொல்லப்பட்டபடி, பசுக்கொலைக்குப் பிராயச் சித்தம் என்று கூறும் அமைச்சர்கள், இராசராசன் பரம்பரையின் முன்னோர்போலும். தமிழன் கண்ட அறத்தை, "பிறிதின் நோய் தன்நோய்போல்” போற்றும் அறத்தை வலியுறுத்த மனுநீதிச் சோழன் முன் நிற்கிறான். இராசராசன் பரம்பரையில் வந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு, ‘தமிழன் கண்ட அறம் யாது?’ தமிழருடைய பண்பாடு என்ன, முந்தைய தமிழ் மன்னர்கள் மனு ஸ்மிருதியைப் பின்பற்றவில்லை, தமிழர் கூறும் அறத்தையே பின்பற்றினர் என்பதை எடுத்துக் காட்டவே, திருநகரச் சிறப்பில், இக் கதையைப் பயன்படுத்தினார் சேக்கிழார் என்ற பேருண்மையை அறிந்து கொண்டால், அறுபத்து மூவர் வரலாற்றோடு தொடர்பில்லாத இக்கதையைச் சேக்கிழார் ஏன் பாடினார் என்பதை அறிய முடியும்.
தமிழ்ப் பண்பாடு, தமிழர் கண்ட பக்தி நெறி, தமிழர் கண்ட மறை மொழி (மந்திரங்கள்) என்பவற்றை நிலை நிறுத்த, ஏழாம் நூற்றாண்டில் புரட்சி செய்தார் ஞானசம்பந்தர். அதை முற்றிலும் மறந்து விட்டு, வேற்றார் ஆதிக்கத்தில் புகுந்த இடைக் காலச் சோழர்களை எடுத்துக் காட்டவே, மனு. நீதியின் கதையைச் சேக்கிழார் பயன்படுத்தினார் என்பது உறுதிப்படும்.
※※※※※