சேதுபதி மன்னர் வரலாறு/v. தமிழ்ப் புலவர்கள்

V. தமிழ்ப் புலவர்கள்

தமிழ்ப் புலவர் பெருமக்களை ஆதரித்துப் போற்றி வந்த தமிழ் மன்னர்களைப் பற்றி இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழ்ச் சமுதாயத்தின் வடவரின் ஆதிக்கம் மிகுந்து தமிழ் மொழியையும் தமிழ்ப் புலவர்களையும் புறக்கணித்து வந்த அவல நிலை கி.பி.15.16ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது பிற மொழி ஆதிக்கம், செல்வாக்குப் பெறுவதற்கு அந்நியரது ஆட்சி உதவி புரிந்தது. தமிழ்ப் புலவர் பெருமக்கள் வறுமையாலும் வாழ்க்கைச் சிறுமையாலும் நலிந்து நைந்து வாடும் நிலை ஏற்பட்டது. இதனை மாற்றித் தமிழ் மொழியின் செல்வாக்கினை உயர்த்துவதற்கு சேதுபதி மன்னர்கள் தான் துணை நின்றனர்

கி.பி 17 ம் நூற்றாண்டில் இராமநாதபுரம் திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சியில் மதுரை நாயக்கப் பேரரசுக்கு ஈடாக நிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்த மன்னர் தமிழ்ப் புலவர்களைத் தமது அரசவைக்கு வரவழைத்து அவர்களுக்குப் பொன்னும் பொருளும் ஈந்து பேற்றினர். தமிழ்ப் புலவர்களும் பல புதிய இலக்கியப் படைப்புகளை இயற்றி தமிழன்னைக்கு அணிவித்து மகிழ்ந்தனர். இதனால் இந்த மன்னரைப் புலவர் ஒருவர்.”...பஞ்சாகப் பறக்கயிலே தேவேந்திர தாருவொத்தாய் ஜெயதுங்கனே’[1] என்றும் ‘பால்வாய்ப் பசுந்தமிழ் வாசம் பறந்த வையைக் கால்வாய்த்த கறந்தையர் கோன்’ என்றும் போற்றிப் பாடினர். இந்த மன்னர், நாணிக்கண் புதைத்தல் என்ற துறையில் புதுமையாக ‘ஒரு துறைக் கோவை’ என்ற இலக்கியத்தைப் படைத்த அமிர்த கவிராயருக்குப் பதினாயிரம் பொன் கொடுத்து அவரது சொந்த ஊரான பொன்னன் கால் என்ற ஊரினையும் முற்றுட்டாக வழங்கி மகிழ்ந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. இன்னொரு புலவரான மல்லை அழகிய சிற்றம்பலக் கவிராயருக்குத் தள சிங்க மாலை என்ற இலக்கியத்தைப் பாடியதற்காக மிதிலைப்பட்டி என்ற ஊரினை வழங்கி அங்கிருந்து இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து செல்ல பல்லக்கு வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். மற்றுமொரு புலவரான அனந்த கவிராயருக்கு மானுார் கலையூர் என்ற ஊரினை வழங்கி ஆதரித்ததும் தெரிய வருகிறது.

இந்த மன்னரது பின்னவரான கிழவன் ரெகுநாத சேதுபதி அழகிய சிற்றம்பலக் கவிராயரை ஆதரித்து மகிழ்ந்ததுடன் மருதூர் அந்தாதி பாடிய தலமலைகண்ட தேவரையும் போற்றி வந்தார் எனவும் தெரிகிறது. இந்த மன்னரையடுத்துச் சேதுபதிப் பட்டம் பெற்ற முத்து வயிரவநாத சேதுபதி மன்னர் சிறப்பாகக் கம்ப ராமாயணப் பிரசங்கம் செய்து மக்களை மகிழ்வித்து வந்த சர்க்கரைப் புலவருக்குக் கோடாகுடி, உளக்குடி என்ற இரு கிராமங்களை நிலக்கொடைகளாக வழங்கியதை அந்த மன்னரது செப்பேடுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னருக்குப் பிறகு சேது மன்னரான முத்து விஜய ரகுநாத சேதுபதி சக்கரைப் புலவரைப் போற்றிப் புரந்ததுடன் மதுரை சொக்கநாதப் புலவரையும் ஆதரித்துப் பாராட்டி வந்தார்.

இவ்விதம் சேதுபதி மன்னர்கள் கி.பி.19ம் நூற்றாண்டு வரை தமிழ்ப்புலவர்களை ஆதரித்து மகிழ்ந்ததையும் அதன் காரணமாகத் தமிழ் மொழிக்குப் பல புதிய படைப்புகள் கிடைக்குமாறு செய்தனர். தமிழ் மன்னர்கள் தமிழ்ப்புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து ஆதரித்ததையும் தம்மோடு அருகே அமரச்செய்து அமுதுாட்டியதையும் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம்.

ஆனால் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களைப் போல தமிழ்ப் புலவர்களுக்கு ஊரும் பேரும் கொடுத்து ஆதரித்ததற்கு ஒப்பான நிகழ்ச்சி எதுவும் இல்லை என்பதை வரலாறு மூலம் அறிய முடிகிறது. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள், செப்பேடுகளின்படி இந்த மன்னர்கள் 9 புலவர்களுக்கு 12 ஊர்களை இறையிலியாக வழங்கியதை மட்டும் அறியமுடிகிறது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேதுநாட்டில் பிறந்து செந்தமிழுக்குப் புத்தம் புது அணிகலன்களான இலக்கியங்களைப் படைத்து இறவாப் புகழ் கொண்ட சேது நாட்டுப் புலவர்களது பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய
நிலக்கொடைகளின் பட்டியல்

செப்பேடுகளின் படி

தமிழ்ப்புலவர்களுக்கு
தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்

I திருமலை சேதுபதி

1. பொன்னான்கால் அமுத கவிராயர்

பொன்னான்கால் கிராமம்
(ஒருதுறைக் கோவை இலக்கியம் பாடியதற்காக) அழகிய

2. சிற்றம்பலக் கவிராயர்

மிதிலைப்பட்டி
இராமநாதமடை

3. அனந்த கவிராயர்

கலையூர்
மானுர்

II ரெகுநாத கிழவன் சேதுபதி

1. தலமலைகண்ட தேவர் காரடர்ந்தகுடி

III முத்து வயிரவநாத சேதுபதி

1. மேலச்செல்வனுர் சர்க்கரைப்புலவர்

உளக்குடி கிராமம் கோடாகுடி, கொந்தலான் வயல் சகம் 1633 (கி.பி.1711) கர கார்த்திகை

IV முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. மதுரை நாவலர் சொக்கநாதப் புலவர் பணம் விடு துது, தேவை உலா பாடியதற்காக

V முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

1. எம்னேஸ்வரம் மீர் ஜவ்வாது புலவர்

சுவாத்தன்
வண்ண வயல்

2. கமுதி மன்னா ரெட்டியார்

வடகரை, தென்கரை கிராமங்கள்

VI ராணி மங்களேஸ்வரி நாச்சியார்

1. கவிக்குஞ்சர பாரதியார்

பெருங்கரை (அழகர் குறவஞ்சி பாடியதற்காக)

2. சங்குப்புலவர்

ஊக்குடி - சகம் 1960 (கி.பி.1767) சர்வசித்து மாசி 16 3.

3.முத்தையா புலவர்

ஊரணிக் கோட்டை - சகம்


  1. பெருந்தொகை - பாடல் எண் 1285
    'மூவேந்தருமற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றெட்டுக் கோவேந்தருமற்று மற்றொரு வேந்தன் கொடையுமற்றுப் பாவேந்தர் காற்றிலிலவம்பஞ் சாகப் பறக்கையிலே தேவேந்தர தாருவொத் தாய்ரகுநாத செயதுங்கனே."