சேதுபதி மன்னர் வரலாறு

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

சேதுபதி மன்னர்
வரலாறு




ஆசிரியர்

Dr. எஸ். எம். கமால்






சர்மிளா பதிப்பகம்

21 - ஈசா பள்ளிவாசல் தெரு,
இராமநாதபுரம் - 623501

Bibliographical Data
Title of the Book : Sethupathy Manner Varalaru
Author : Dr.S.M.Kamal
Language : Tamil
Edition : First Edition
December,2003
Publishers : Sharmila Publishers,
Ramanathapuram - 623 501
Copy Right : Author
Paper used for Text : Map Litho
Size of the Book : 21.5 X 14cms
Type used for text : 11 point
Pages : 208
No. of. Copies : 1,000
Price : Rs. 75.00
Subject : History of the Sethu Pathi Kings,rulers of Marawa country A.d 1414 to A.d 1948,compiled on the Basis of inscriptions and other Historical documents.

பதிப்புரை


தமிழக வரலாற்றின் அங்கமான மறவர் சீமை மகுடபதிகளான சேதுபதி மன்னர்களது ஆன்மீகப் பணி, தமிழ்த்தொண்டு, சமயப் பொறை ஆகிய நிலைகளின் சிறப்பு அம்சங்களையும் தமிழகத்தில் நிலவிய முந்தைய, சமுதாயச் சூழல்களின் தொகுப்பு ஏடாக இந்த நூலினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


- சர்மிளா பதிப்பகம்

இராமநாதபுரம்

முனைவர்
கோ. விசயவேணு கோபால்

முதுநிலை ஆய்வாளர், கல்வெட்டியல் துறை
பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வகம்

பாண்டிச்சேரி
அணிந்துரை

எளிய மக்கள் தங்களது அயராத உழைப்பினாலும் தந்நலமற்ற தொண்டினாலும் பணிவினாலும் படிப்படியாகப் படைவீரர், படைத்தலைவர் என உயர்ந்து இறுதியில் குறுநிலப் பகுதிகளின் மன்னர்களாகவும் ஆக முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் மறவர் சீமையினர். தமிழகச் சிற்றரசர் மரபினர்களில் இவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். வேளிர், மலையமான்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், முத்தரையர், இருக்குவேளிர், வானாதிராயர்கள் எனத் தமிழகம் பல சிற்றரசு மரபினர்களைக் கண்டுள்ளது. இந்திய வரலாற்றில் போர்வழியிலன்றி ஆன்மிக நெறியில் நின்று இந்தியா முழுவதிலும் புகழ்படைத்த மரபினர் சேதுபதி மரபினர். பிற்காலத் தமிழகத்தில் குறிப்பாக ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முந்திய காலகட்டத் தமிழக வரலாற்றில் இவர்களின் பங்கு கொடை ஆகியனபற்றிய விரிவான வரலாறு இன்றும் எழுதப்படவில்லை. குறிப்பாகத் 'தமிழ்ப் புத்தாக்கம்" (Modernization of Tamil) என்ற உயர்ந்த, புதுமையான - இன்றும் மிகத் தேவையான - குறிக்கோள் கோட்பாட்டினை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த முழுமனத்துடன் செயல்பட்ட மரபினர் இவர்கள். இந்தப் பணிபற்றியும் இவர்கள் காலத்தே தமிழ்ப் பண்பாட்டில் நிகழ்ந்த வடநெறியாக்கம் (Sanskritization) மேலைமரபாக்கம் (Westernization) பெருந்தாக்கங்கள் பற்றியும் விரிவாக எழுத இடமுண்டு. இத்தகைய சூழலில் இம்மரபினரின் தொடர்ச்சியான வரலாற்றினையேனும் எழுதவேண்டும் என்ற முனைப்பில் எனது அருமை நண்பர் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் இச்சிறுநூலைப் படைத்துள்ளார்கள். ஏற்கனவே பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் ஆகியோரைச் சிறுசிறு நூல்களாகச் சேதுபதி மன்னர் சிலரைப் பற்றி எழுதிய இவர் இந்நூலை எழுதுவதற்கு முழுத் தகுதியுடையவர். இந்நூலில் இவர் குறிப்பிட்டுள்ள படி இம்மன்னர்களது வரலாற்றினைத் தெளிவாகவும், கோவையாகவும், விளக்கமாகவும் எழுதத் துணைபுரியக் கூடிய முதன்மை ஆதாரங்கள் (Primary Sources) பல கவனக் குறைவாலும், புறக்கணிப்பினாலும், வரலாற்றுணர்வின்மையாலும் மறைந்து போய் விட்டன. எனினும் தாம் அரிதின் முயன்று தொகுத்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், செவிவழிச் செய்திகள், தாமே நேரில் கண்டவை ஆகியவற்றைக் கொண்டு இச்சிறுநூலைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்நூலைச் “சுற்றுலாப் பயணிகட்கான கையேடு” என எளிமையாகவும் இல்லாமல் உயர் ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய ஆய்வேடு போலக் கடினமாகவுமில்லாமல் நடுவணதாகப் படைத்துள்ளார். சான்றுகளைக் காட்டி எழுதும் உத்தியினை ஆங்காங்கே ஒல்லுமிடமெல்லாம் பின்பற்றியுள்ளார். சேதுபதி மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத் திற்காற்றியுள்ள பணி, அவர்தம் ஆன்மீகப் பணி, தமிழ்மொழிப் பணி என்ற மூன்று இலக்குகளைக் கருத்திற்கொண்டு ஆசிரியர் நூலைப் படைத்துள்ளார். தமக்குக் கிடைத்த சான்றுகள், ஆவணங்கள், முதலானவற்றைப் பட்டியலிட்டு நூலின் பின்னிணைப்புகளாகத் தமது நூலை முழுமைப்படுத்தியுள்ளார்.

கண்பார்வை மங்கிய நிலை, உடல் நலக்குறைவு முதலான தடைகள் இருந்தபோதும் தளராது அரிதின் முயன்று இந்நூலைப் படைத்துள்ளார். இவரது வாழ்வும் பணியும் இன்றைய இளைஞர்கட்கு வழிகாட்டிகளாக விளங்குவனவாகும். நூல் அளவிற் சிறிதாயினும் கிடைத்தவற்றைக் கொண்டு சரளமான நடையில் சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் நம் பாராட்டுதலுக்குரியதாகிறது. சேதுநாட்டு வரலாற்றை அறியத் துணைபுரியும் நல்ல தொடக்க நூல் இது. தமிழ் மக்கள் இந்நூலை வாங்கிப் படித்துப் பயன் கொள்வார்களாக.

ஆசிரியர் நீடு வாழ்ந்து மேலும் பல நல்ல நூல்களைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோ. விசயவேணு கோபால்

புதுச்சேரி

20.11.03


நூலினைப் பற்றி

தமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை.

இதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை.

இந்தக் குறைபாட்டினை நீக்கும் வகையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்ற சேதுநாட்டு மன்னர்களைப் பற்றிய முழுமையான நூலாக இது வெளியிடப்படுகிறது.

பாண்டிய நாட்டில் கிழக்குக் கடற்கரையினை ஆட்சிக்களமாகக் கொண்ட இந்த மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழர்களது ஆன்மீக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் செழுமைக்கும் தளராது பணியாற்றியவர்கள் ஆவர். ஆதலால் இவர்களது வரலாற்றைத் தமிழக வரலாற்றின் ஒரு சிறப்புப் பகுதியாகக் கொள்ளலாம்.

இதுவரை இந்த மன்னர்களைப் பற்றி வெளிவந்த ஆங்கில, தமிழ் நூல்களில் இடம் பெறாத பல செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த வரலாற்றுத் தொகுப்பினை வரைவதற்கு சேதுபதி மன்னர்களது கல்வெட்டுக்கள், செப்பேடுகள். ஒலை முறிகள், ஆவணங்கள் ஆகிய வற்றைத் தந்து உதவிய அன்பர்கள் பலருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

மற்றும் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தளராத தொண்டுசெய்து இறவாப் புகழ் கொண்ட சேது மன்னர்களின் வரலாற்றினை வெளியிட வேண்டும் என்ற பெரு விருப்புடன் என்னைப் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்ததுடன் இந்த வெளியீட்டிற்கு பல்லாற்றானும் உதவியும் ஒத்தாசையும் நல்கிய தஞ்சாவூர்த் தமிழ்ப் பேராசிரியர் திரு மது.ச. விமலானந்தம் அவர்களுக்கு எனது ஆழிய நன்றி.

இந்த நூலின் மெய்ப்புக்களைப் பொறுமையுடன் இரவு பகலாக மூலப் பிரதியுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துச் செம்மை செய்துதவிய இராமநாதபுரம் அரசினர் சேதுபதி கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு. மை. அப்துல்சலாம் அவர்களுக்கும் எனது ஆழிய நன்றி.

எஸ்.எம். கமால்
நூலாசிரியர்


இந்த நூல் எழுதுவதற்குத் துணையாக அமைந்த நூல்களும் ஆவணங்களும்


1. Raja Ram Rao. T - The Manual of Ramnad Samasthanam (1891).

2. Nelson. A - The Manual of Madura Country (1861).

3. Ramaswamy. Dr. A. - District Gazetteer Ramanathapuram District (1978).

4. Francis. A - Madura District Gazetteer (1907).

5. Tamil Nadu Archives Records

   a) Military Consultations
   b) Revenue Consultations
   c) Boards Misc. Register Vol. No.2.
   d) Diary of Rajah Baskara Sethupathi (1893)

6. Seshatri. Dr.S - Sethupathi's of Ramnad (1974) - Unpublished Ph. D thesis

7. Viswanathan.K - Fort Town of Thirumayyam (1976) - unpublished M.phil thesis

8. Pudukkottai inscriptions

9. Archealogical Report Volume IV & VIII (1876 & 1881)

10. இராமநாதபுரம் நிலமான்ய ஓலைக் கணக்கு

11. கமால். Dr.S.M. - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994).

12. இராமநாதபுரம் சமஸ்தான கோயில்கள் பதிவேடு.

13. இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள்

14. திருப்புல்லாணித் தல புராணம்

15. Taylor - Old Historical Manuscripts Vol III (1831)

16. General patterson Diary - 1796 - Unpublished records/available in the London Museum

17. Sathya Natha Ayyar - The History of Madurai Nayaks (1928)

18. Kathirvel - Dr.S.- The Marawas (1700 – 1800)

19. K.B. Rangachariya-Topographical list of inscriptions in Madras Presidency - Volume I-III (1909)

20. கமால் Dr. S.M.சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)

21. இராமப் பையன் அம்மானை - சரசுவதி மஹால் பதிப்பு

22. Rajayan Dr.K. History of Madura (1974)

23. Concise history of ceylon (1954) - Dr. Parunavittana & Nicholson.

24. Dutch Records in the Kalonial Archives in The Hague, Holland.

25. Dr.S. கந்தசாமி - சேதுபதிகளின் தமிழ்ப்பணி

26. James Fergusseon - History of India & the great Eastern Architecture - 1910

பொருளடக்கம்


1. இயல் I தொன்மையும், தோற்றமும். 13 - 18
2. இயல் II போகலூரில் வாழ்ந்த சேதுபதிகள்.
19
i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் 19 - 23
ii. கூத்தன் சேதுபதி 23 - 28
iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி 28 - 30
3. இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி 31 - 39
4. இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி
40
5. இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி 41 - 49
6. இயல் VI
i. முத்து வயிரவநாத சேதுபதி
50
ii. முத்து விஜயரகுநாத சேதுபதி 51 - 55
iii. பவானி சங்கர சேதுபதி
55
iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி 55 - 57
v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி 57 - 58
vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி 58 - 59
இயல் VII
i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 59 - 67
ii. இராமன் இல்லாத அயோத்தி 67 - 70
iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு 70 - 72
iv. சேது மன்னர்களது நிர்வாகம் 72 - 76
இயல் VIII
i. சேதுபதி மன்னரது நடைமுறைகள் 77 - 78
ii. அரண்மனையும் ஆவணங்களும் 78 - 83
iii. அரண்மனை நடைமுறைகள் 84 - 86
iv. இராமலிங்க விலாசம் அரண்மனை 87 - 90
v. மூலக் கொத்தளம் 90 - 92
இயல் IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை 93 - 95
i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் 95 - 96
ii. அண்ணாசாமி சேதுபதி 96
iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி 97
iv. ராணி முத்து வீராயி நாச்சியார் 97 - 99
v. ராணி பர்வதவர்த்தனி நாச்சியார் 97 - 99
vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி 99 - 100
vii. பாஸ்கர சேதுபதி 101 - 104
viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி 104 - 105
ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி 105 - 106
10. இயல் X
i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள் 107 - 108
ii. சில முக்கிய நிகழ்வுகள் 108 - 110
11. இயல் XI என்றும் நிலைத்து நிற்க... 111 - 112
i. திருக்கோயில்கள் 113 - 133
ii. திருமடங்கள் 134 - 138
iii. அன்ன சத்திரங்கள் 138 - 145
iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் 145 - 148
v. தமிழ்ப் புலவர்கள் 149 - 152
vi. தனியார்கள் 152 - 167
vii. இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படி
இணைப்பு - அ 168 - 169
இணைப்பு - ஆ 170 - 184
இணைப்பு - இ 185 - 189
இணைப்பு - ஈ
i. போகலூர் சேதுபதிகள் 190
ii. இராமநாதபுரம் சேதுபதிகள் 191
iii. ஜமீன்தார் கொடி வழி 192
iv. பிற்சேர்க்கை
i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் 193
ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு 201

"https://ta.wikisource.org/w/index.php?title=சேதுபதி_மன்னர்_வரலாறு&oldid=1517761" இலிருந்து மீள்விக்கப்பட்டது