தந்தையும் மகளும்/104
104அப்பா! சில பவுண்டன் பேனாக்களில் மை அடைப்பதற்கு வேண்டிய கருவி அதிலேயே இருக்கிறது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
ஆமாம் அம்மா! பவுண்டன் பேனாக்களில் மையை நிரப்புவதற்கு நாம் உபயோகிக்கும் ரப்பர் நிப்பிள் உள்ள கண்ணாடிக் குழாய் சில வகைப் பேனாக்களுக்குத் தேவையில்லை.
சில பேனாக்களில் கையில் பிடித்து எழுதும் முனையிலுள்ள திருக்கைக் கழற்றினால் ஒரு சிறிய தண்டு நீட்டிக் கொண்டிருப்பது தெரியும். அதை உள்ளே அழுத்தினால் பேனாவினுள் உள்ள காற்று வெளியே போய் விடுகிறது. அதன் பின் பேனாவின் நிப் முனையை மைக்குள் வைத்துக் கொண்டு விரல்களை அழுத்தாமல் தளர்த்தினால் வெளியே உள்ள காற்று மையின்மேல் அழுத்தி அதைக் குழாயில் ஏறும்படி செய்து விடுகிறது.
வேறுவிதமான சில பேனாக்களில் உள்ளே ஒரு நீண்ட ரப்பர் குழாயும் அடுத்து ஒரு மெல்லிய தகரமும் இருக்கும்.