தந்தையும் மகளும்/118
118அப்பா! பாத்திரங்கள் பழுதாய்ப் போனால் ஈயப்பற்று வைப்பதாகச் சொல்லுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! பித்தளைப் பாத்திரம் ஓட்டையாய் விட்டால் அந்த ஓட்டையளவாக ஒரு பித்தளைத் துண்டை அதில் வைத்து ஒட்டவைத்து விட்டால் ஒட்டையை அடைத்து விடலாம் அல்லவா? ஆனால் பித்தளைத் துண்டை அதில் ஒட்டவைப்பது எப்படி?ஒட்டவைக்காவிட்டால் கீழே விழுந்து விடுமல்லவா?
அதற்காகச் செம்பும் நாகமும் சேர்ந்த உலோகக் கலவையை உபயோகிக்கிறார்கள். இது இளகி பித்தளைத் துண்டையும் சட்டியையும் சேர்த்து விடும். இவ்வாறு பலவித உலோகக் கலவைகளைப் பயன் படுத்துகிறார்கள். நகைகள் செய்வோர் வெள்ளியும் செம்பும் சேர்ந்த கலவையையும் தகர வேலை செய்வோர் காரீயம் வெள்ளீயம் சேர்ந்த கலவையையும் உபயோகிப்பார்கள்.