தந்தையும் மகளும்/121
121 அப்பா! மண்ணெண்ணெய் எரிக்கும் விளக்கில் பெட்ரோல் ஊற்றி எரிக்கக்கூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றியதும் அந்த உஷ்ணத்தால் திரியில் ஏறி நிற்கும் மண்ணெண்ணெய் ஆவியாக மாறி எரிய ஆரம்பிக்கிறது. அதனால் எவ்வித அபாயமும் உண்டாவதில்லை.
ஆனால் பெட்ரோல் ஆவியாக மாறுவதற்கு அதிக உஷ்ணம் தேவையில்லை. மண்ணெண்ணெய்யைவிட எளிதில் ஆவியாக மாறிவிடும். அதனால் அதை ஊற்றினால் அப்பொழுதே, விளக்குப் பாத்திரத்துக்குள்ளாக ஆவியாக மாற ஆரம்பித்து மாத்திரத்திலுள்ள காற்றுடன் கலந்து நிற்கிறது. அதனால் விளக்கை ஏற்றியதும் பெட்ரோல் ஆவியும் காற்றும் கலந்த கலவைப் பொருளில் உஷ்ணம் பட்டதும் அது வெடித்து அபாயம் உண்டாக்கி விடுகிறது. அதனால் மண்ணெண்ணெய் விளக்கில் பெட்ரோல் ஊற்றி எரிக்கக்கூடாது. அம்மா! நீ எப்போதும் பெட்ரோல் அருகே செல்லாதே. அது அபாயகரமான பொருள்.