தந்தையும் மகளும்/136
136அப்பா! ஐஸ் எப்படிச் செய்கிறார்கள்?
அம்மா! காற்றை அமுக்கினால் அது தன்னிடமுள்ள உஷ்ணத்தைக் கக்கிச் சுற்றுப்புறத்தைச் சூடாக்குகிறது. அப்படி அமுக்குவதை நீக்காவிட்டால் அது உடனே உஷ்ணத்தைக் கிரகித்து சுற்றுப்புறத்தைக் குளிர்ந்து விடச் செய்கிறது இந்தக் குணம் காற்றுக்கு இருப்பது போலவே இதர வாயுக்களுக்கும் உண்டு. அம்மா! இந்தப் படத்தைப் பார். இதுதான் ஐஸ் செய்யும் இயந்திரம். இடது பக்கமுள்ள பாத்திரத்தில் உள்ள அமோனியா வாயுவை அமுக்கினால் அது அடுத்துள்ள வளைவுக் குழாயில் போய் திரவமாக மாறுகிறது. அப்பொழுது அமோனியா கக்கும் உஷ்ணத்தை அதன் மீது விழுந்து கொண்டிருக்கும் தண்ணீர் கிரகித்துக்
கொள்கிறது. இவ்விதம் குளிராய்விட்ட அமோனியா திரவம் மெதுவாக அடுத்துள்ள வளைவுக் குழாய்க்குள் செல்கிறது. அங்கே அதன் மீதுள்ள அழுத்தத்தைக் குறைத்து விடுவார்கள். அதனால் அமோனியா திரவம் மறுபடியும் வாயுவாக மாறிவிடுகிறது. அப்படி மாறும் பொழுது அந்தத் தொட்டியில் உப்பு ஜலத்தில் வைத்துள்ள பாட்டில்களிலுள்ள சுத்த ஜலத்திலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்து விடுகிறது. அதனால் அந்த சுத்த ஜலம் ஐஸாக உறைந்து விடுகிறது. தொட்டியிலுள்ள ஜலத்தில் உப்புக் கரைந்திருப்பதால் அந்த ஜலம் மாறாது. அமோனியா வாயு அங்கிருந்து இடது பக்கத்துக்குப் பாத்திரத்துக்குச் சென்று மறுபடியும் அமுக்கப்படும். இவ்விதமாக முதலில் எடுத்துக் கொண்ட அமோனியா வாயுவைக் கொண்டே இடை விடாமல் ஐஸ் செய்து வருகிறார்கள்.