தந்தையும் மகளும்/145
145அப்பா! தட்டார் தங்கத்தைக் காயவைக்கவும், கொல்லர் இரும்பைக் காயவைக்கவும் விறகை எரிக்காமல் கரியை எரிக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! விறகில் கரியும் இருக்கிறது. அத்துடன் வேறு பல பொருள்களும சேர்ந்திருக்கின்றன. அதனால் விறகு எரியும்போது கரியும் எரிகிறது, அந்தப் பொருள்களும் ஆவியாக மாறி எரிகின்றன. கரிசுடர் விடாது, அவை சுடர் விடும். அத்துடன் அவற்றால் உண்டாகும் வாயுக்கள் கரி பிடிக்கும்படியும் செய்யும்.
அதனால் தங்கத்தையோ, இரும்பையோ காய்ச்சுவதற்கு விறகை எரித்தால் தங்கமும் இரும்பும் கறுப்பாகிவிடும். அத்துடன் அவை நன்றாகக் காய்ந்து விட்டனவா இல்லையா என்று பார்க்க வொட்டாதபடி சுடரும் தடுத்து விடும். அதனால்தான் தட்டாரும் கொல்லரும் விறகை உபயோகியாமல் கரியை உபயோகிக்கிறார்கள்.