தந்தையும் மகளும்/148
148அப்பா! பாத்திரத்தை விறகு அடுப்பில் வைத்தால் கரிப்பிடிக்கிறது, கரி அடுப்பில் வைத்தால் கரி பிடிக்கவில்லை, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! கரியடுப்புக்கு உபயோகிக்கும் கரியை மரத்தைச் சுட்டுத்தான் உண்டாக்குகிறார்கள். ஆயினும் கரியடுப்பில் கரிப்பிடிப்பதில்லை, அதற்குக் காரணம யாது?
அம்மா! விறகில் கரியோடு வேறு பல வஸ்துக்களும் உள. நாம் மரத்தைச் சுட்டுக் கரியாக்கும் போது அந்த வஸ்துக்கள் ஆவியாகி வெளியே போய் விடுகின்றன, கரி மட்டுமே தங்குகிறது.
அதனால் விறகு வைத்து எரிக்கும் போது அதிலுள்ள கரி எரிகிறது; மற்ற வஸ்துக்கள் ஆவியாகி மேலே கிளம்பி பாத்திரத்தைக் கறுப்பாகி விடுகின்றன. ஆனால் பாத்திரத்தைக் கரியடுப்பில் வைத்துச் சமைக்கும் போது, கரி மட்டுமே எரிவதால் கரியமில வாயு மட்டுமே உண்டாகிறது. அது பாத்திரத்தைக் கறுப்பாக்குவதில்லை.