157அப்பா! உலகத்தில் முதன் முதல் உயிர் உண்டானது எப்படி?

அம்மா! நம்முடைய பூமி சூரியனிடமிருந்தே பிரிந்து வந்ததென்றும் அப்பொழுது நெருப்புப் பிழம்பாயிருந்து பின்னாலேயே குளிர்ந்து மண்ணும் நீரும் ஆயிற்று என்றும் கேட்டிருக்கிறாய். அப்படி மண்ணும் நீரும் மட்டுமிருந்த இடத்தில் உயிர் எப்படி வந்து சேர்ந்தது என்று கேட்கிறாயா?

ஆம், அம்மா! இப்பொழுது பார்த்தால் உயிரிலிருந்து தான் உயிர் உண்டாகிறது, உயிரில்லாததிலிருந்து உயிர் உண்டாவதில்லை. இதை பாஸ்டியர் எவ்வித சந்தேகத்துக்குமிடமில்லாதபடி நிரூபித்துக் காட்டிவிட்டார்.

அப்படியானால் உயிரானது எங்கிருந்தேனும் பூமிக்கு வந்து சேர்ந்திருக்கவேண்டும் என்று எண்ணுவாய். ஆம் அம்மா, அப்படித்தான் அறிஞர்கள்

சிலர் எண்ணுகிறார்கள். அம்மா! இரவில் சில வேளைகளில் நட்சத்திரம் எரிந்து விழுகிறது என்று கூறுகிறாய் அல்லவா! அது நட்சத்திர மன்று. சூரியனைச் சுற்றிவரும் வால் நட்சத்திரத்திலிருந்து பிரிந்து விழும் ஒரு துண்டாகும். அதுதான் ஆதியில் உயிருள்ளவற்றைப் பூமிக்குக்கொண்டு வந்திருக்க வேண்டும் என அந்த அறிஞர்கள் கருதுகிறார்கள்

ஆனால் அறிஞர்களுள் வேறு சிலர் பூமியிலேயே தான் உயிர் உண்டானதாக எண்ணுகிறார்கள். பூமி குளிர்ந்த பின் ரசாயனப் பொருள்கள் உண்டாகி அதிலிருந்து உயிர்ப் பொருளாகிய புரோட்டோபிளாஸம் என்பது உண்டாயிற்று என்று சொல்லுகிறார்கள்.

புரோட்டோபிளாஸம் என்பது புரதம் என்னும் ரசாயனப் பொருளால் ஆனது. வைரஸ் என்ற மிக நுண்ணிய வஸது ஒன்று இருக்கிறது. அதைச் சாதாரண

பூதக் கண்ணாடியால் பார்க்க முடியாது. எலக்டிரான் பூதக் கண்ணாடியினால்தான் பார்க்க முடியும். பாக்டீரியாவைவிடக் கூடப் பத்து லட்சம் மடங்கு சிறியது. அந்தப் புரத வஸ்து உயிரணுக்களுக்குள் செல் லுமானா அங்கே அது உயிருள்ள பிராணிபோலவே பல்கிப் பெருகுகின்றது.

உயிர்ப் பிராணிகள் மட்டும்தானே பல்கிப் பெருகும் தன்மை உடையன, அந்தத் தன்மை உயிரில்லாத இந்த வைரஸுக்கு இருக்கிறதே, அதனால் ஆதியில் உயிரில்லாத வஸ்துவிலிருந்து உயிர் உண்டாயிருக்க முடியும் என் கருதுகிறார்கள்.

ஆனால் இவர்கள் கருத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு என்று கருதமுடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/157&oldid=1538433" இலிருந்து மீள்விக்கப்பட்டது