தந்தையும் மகளும்/162
162அப்பா! மிருகங்கள் பல் விளக்காவிட்டாலும் அவைகளின் பற்கள் வெண்மையாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒவ்வொரு விதமான உணவே ஏற்றது. பசு புல்லைத் தின்னும் மாமிசம் தின்னாது புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது. மாமிசத்தையே தின்னும் அப்படி மிருகங்கள் தத்தமக்குரிய உணவையே உணணுகின்றன. அதனால் அவைகளுடைய பற்களுக்கு வேண்டிய போஷணை கிடைத்து விடுகிறது.
அத்துடன் மிருகங்கள் தம்முடைய உணவைச் சமைத்து மிருதுவாகச் செய்துவிடுவதில்லை. உணவு மிருதுவாய் விட்டால் அப்பொழுது பற்களுக்கு வேலையில்லாமல் போகிறது. நன்றாக மெல்லும் பொழுதுதான் இரத்தம்
பற்களின் வேர்களுக்கு வந்து சேர்ந்து பற்களைப் போஷிப்பிக்கும். நன்றாக மெல்லுவதால் உணவுத் துண்டுகள் பற்களைத் தேய்த்து சுத்தம் செய்துவிடவும் செய்யும். கரும்பைக் கடித்துத் தின்னும்போது பார்த் தால் பற்கள் எல்லாம் நன்றாகப் பல் விளக்கிய மாதிரி வெண்மையாக இருக்கும். அதுபோல் தான் மிருகங்கள் பற்களை விளக்கா விட்டாலும் வெண்மையாக இருக்கின்றன.
ஆனால் நாமோ நம்முடைய உணவுப் பொருள்களை நன்கு வேகவைத்து மிருதுவாக்கி விடுகிறோம். அதனால் நம்முடைய பற்களுக்கு வேலை ல்லாமல் செய்து விடுகிறோம். அதனால்தான் நாம் உண்ணும் பொழுது இறுதியில் நெல்லிக்காய், சீனிக் கிழங்கு,வெள்ளரிக்காய், காரட் கிழங்கு போன்றவைகளைப் பச்சையாக மென்று தின்பது நல்லது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.அத்துடன் நம்முடைய பற்களுக்கு வேண்டிய கால்ஷியம் முதலிய உப்புச் சத்துக்களும் ஏ, ஸி, டி உயிர்ச்சத்துக்களும் போதுமான அளவு கிடையாமல் போகின்றன. அதனால்தான் நாம் நம்முடைய பற்களை விளக்கியே சுத்தமாகவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.