தந்தையும் மகளும்/176
176அப்பா குதிரையும் ஆடுமாடுகள் மாதிரி புல் தின்னும் பிராணியாயிருந்தும் அவைகளைப் போல் அசை போடுவதில்லையே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! குதிரையும் புல் முதலிய தழைகளைத் தான் தின்னுகிறது. ஆனால் அதன் கால்கள் நீளமாகவும் இருக்கின்றன. விரைவாகவும் ஒடமுடியும். ஆதலால் ஏதேனும் எதிரி வந்தால் அது வேகமாய் ஒடித் தப்பித்துக் கொள்ள முடியும். அதனால் எதிரி வரும் வரை மெதுவாக மேய்ந்து நன்றாக மென்று தின்ன முடியும், ஆடு மாடுகளைப் போல் அவசர அவசரமாக அரை குறையாக மென்று விழுங்கி விட்டுப் பிறகு அசைபோட வேண்டிய அவசியமில்லை.
அதனால்தான் ஆடுமாடுகளுக்கு மேல் வாயில் மட்டும் முன்பற்கள் இருக்க, குதிரைக்கு முன்பற்கள் மேல் வாயிலும் கீழ்வாயிலும் இருக்கின்றன. அது போலவே குதிரை அசைபோட வேண்டிய அவசியமில்லாததால் ஆடு மாடுகளுக்கு நான்கு அறைகளுள்ள வயிறு இருப்பது போலக் குதிரைக்குக் கிடையாது. குதிரைக்கு நமக்கு இருப்பது போன்ற ஒரே வயிறு தான் இருக்கிறது.