தந்தையும் மகளும்/19
19அப்பா! வட துருவத்திலும் தென் துருவத்திலும் பொறுக்க முடியாத குளிராக இருக்கும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நாம் பூமியின் நடுவேயுள்ள பூமத்திய ரேகைக்கு அருகே இருக்கிறோம். நாம் வடக்கே போகப் போகக் குளிர் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அது போல் தெற்கே போகும் பொழுதும் அப்படியே குளிர் அதிகரிக்கும். வட துருவத்திலும் தென் துருவத்திலும் பொறுக்க முடியாத குளிராக இருக்கும். அதற்குக் காரணம் யாது?
சூரியனுடைய கிரணங்கள் பூமத்திய ரேகை உள்ள இடத்தில் நேராகவும் மற்ற இடங்களில் சாய்வாகவும் வந்துசேர்கின்றன . ஒரே அளவான கிரணங்கள் நேராக வந்து சேருமிடத்தை விடச் சாய்வாக வந்து சேரும் இடம் அதிகப் பரப்புள்ளதாக இருக்கும் அதனால் நேராக வருமிடத்தில் உஷ்ணம் அதிகமாகவும் சாய்வாக வருமிடத்தில் உஷ்ணம் குறைவாகவும் இருக்கும். இந்தக் காரணத்தால்தான் துருவங்கள் அதிகக் குளிர் உடையனவாக இருக்கின்றன.