தந்தையும் மகளும்/201
201அப்பா! மகரந்தச் சேர்க்கையில்லாமலும் விதை உண்டாகும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! பூக்களிலுள்ள கேசரங்களில் உள்ள மகரந்தப்பொடி சூல் முடியில் போய்ச் சேர்ந்து பின் சூல் பையிலுள்ள அண்டங்களுடன் சேர்ந்து விதை உண்டாவதையே மகரந்தச் சேர்க்கை என்று கூறுகிறோம்.
மகரந்தமானது அண்டத்துடன் சேர்ந்தால் தான் அண்டம் விதையாக ஆகும். மரஞ்செடிகளில் விதை உண்டாகும் விதம் இதுதான்.
ஆனால் டான்டலியன் என்னும் செடியில் மட்டும் மகந்தம் சேராமலே விதை உண்டாகிறது. அந்தச் செடியில் கேசரங்களும் சூல் தண்டுகளும் உண்டாகவே செய்கின்றன. ஆனால் பூவிரிந்து மகரந்தப் பை வெடித்து மகரந்தம் சிந்துவதற்கு முன் முகையாயிருக்கும் போதே விதை உண்டாகிவிடுகிறது. அதன் பின்னரே பூ விரிந்து மகரத்தம் சிந்துகிறது.
அப்படியானால் அந்தச் செடியில் மகரந்தம் உண்டாக வேண்டிய காரணம் என்ன என்று கேட்பாய். அதை யாராலும் கூறமுடியவில்லை. ஒரு காலத்தில் அதவும் மகரந்தச் சேர்க்கையாலேயே விதையை உண்டாக்கியிருக்கும். இப்பொழுது அந்தப் பழைய வாசனையால் மகரந்தத்தை உபயோகியாவிட்டாலும் உண்டாக்கிக் கொண்டு வருகிறது என்று தாவர நூல் புலவர்கள் கருதுகிறார்கள்.